Friday, December 31, 2010

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - 2 ஆனந்தம்:

      கடவுள் இருக்கிறார் என்று யாரோ சொன்னதற்க்காக நம்புவதோ, கடவுள் இல்லை என்று யாரோ சொன்னதற்க்காக மறுதலிப்பதோ எப்படி புத்திசாலித்தனம் ஆகும்?
       கடவுளை நம்புவதும் நம்பாததும் கடவுளின் பிரச்சனை இல்லை அது முழுக்க முழுக்க உங்கள் பிரச்சனை.
       ராமர் இருந்தாரா, கிருஷ்ணர் வந்தாரா, ஜீஸஸ் இருந்தாரா, நபிகள் வந்தாரா என்பதா பிரச்சனை?
       உங்கள் அனுபவம் என்ன?
       யூதர்கள் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்பவர்கள். அவர்களைப் பற்றி ஒரு வேடிக்கைக் கதை.....
       யூதர்களின் தலைவரான ஜோஷ்வா கோல்டுபெர்க் வருடத்திற்கொரு தடவை சொர்கத்திற்குப் போய் கடவுளுடன் அமர்ந்து விருந்து உண்ணும் உரிமை பெற்றிருந்தான்.
       அப்படி ஒருமுறை கடவுளுடன் விருந்துக்கு அமர்ந்திருந்த நேரம்.... வருடா வருடம் மாற்றமில்லாமல் வறட்டு ரொட்டிகள் தான் பரிமாரப்படுவது தான் வழக்கம்.
       'கடவுளே ஒரு சந்தேகம் என் மனதை அரித்துக் கொண்டிருக்கிறது' என்று கேட்டு விட்டு ரொட்டியை கஷ்டப்பட்டு மென்றான் ஜோஷ்வா.
       'கேள்,மகனே!'
       'உங்கள் சாம்ரஜ்ஜியத்தில் உங்களுக்கு நெருக்கமானவர்கள் நாங்கள் மட்டும் தானா? வேறு யாராவது உண்டா?' என்று அடுத்த ரொட்டித் துண்டை விழுங்கித் தண்ணீரைத் தொண்டையில் சரித்துக் கொண்டான்.
       'சந்தேகமே வேண்டாம். வேறு யாருக்கும் அந்த சிறப்புரிமை இல்லை. அதனால் தான் உன்னை மட்டும் விருந்துக்கு அழைத்தேன்...'
       ஜோஷ்வா கையில் எடுத்த ரொட்டித்துண்டை கீழே போட்டுவிட்டு எழுந்து, 'எத்தனை நாட்களுக்கு எங்களுக்கே இந்த அவஸ்த்தை? வேறு யாரையாவது உங்களுக்கு நெருக்கமானவர்களாக தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான் கோபமாக.
       இப்படிக் கடவுளுக்கு நெருக்கமானவர்களாக சொல்லிக் கொள்பவர்களுக்குத் தானே அதிக வேதனை?
       இவர்கள் கடவுள் என்பதன் உன்னதத்தை புரிந்து கொள்ளவில்லை. கடவுளைப் பற்றிய உண்மையான அனுபவத்தை பெற்றதில்லை.
       ஆனாலும் கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் இடைத்தரகர்களாக இருந்து ஆதாயம் தேட, இவர்கள் போடும் நாடகங்கள் சகிக்க முடியாதவை.
       கடவுளை நீங்கள் முழுமையாக நம்பி வாழ்ந்திருக்கிறீர்களா?
       சிலர் இருக்கிறார்கள்... நெருக்கமானவர்களுக்கு உடல்னிலை மோசமாக இருந்தால் கடவுளிடம் வேண்டிக்கொள்வார்கள்.
       அப்படியும் அவர்கள் பிழைக்கவில்லை என்றால் 'கடவுள் என்பதெல்லாம் பொய்' என்று வீட்டில் இருக்கும் படங்களை எல்லாம் கழற்றி விட்டெறிவார்கள்.
       தனக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று கேட்டு நடக்கவில்லை என்றால், கடவுளே இல்லை என்று சொல்வார்கள்.
       வளர்க்கப்பட்ட விதத்திலும், விதைக்கப்பட்ட் விதத்திலும் தானே உங்களுக்கு கடவுளை நம்பத் தெரிந்திருக்கிறது?
       கடவுள் இருக்கிறார் என்பது ஒரு நம்பிக்கை. இல்லை என்பது இன்னொரு நம்பிக்கை. இருக்கிறாரா? இல்லையா? என்பது உஙளுக்குத் தெரியாது என்பதே பட்டவர்த்தனமான உண்மை.
       எனக்குத் தெரியாது என்று எப்பொது தைரியமாக ஒப்புக்கொள்கிறோமோ, அப்போது தானே எதைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்க்கான வாய்ப்பு முழுமையாகக் கிடைக்கும்!
       வெறும் நம்பிக்கைகளை வைத்துப் பின்னப்படும் கற்பனைகளை எதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்?
       கடவுளைப் பற்றி அறிந்துகொள்ளும் பற்றி அறிந்துகொள்ளும் தாகம் உண்மையிலேயே உங்களுக்கு இருந்தால், மற்ற‌வர்கள் சொல்லிக் கொடுத்ததை குருட்டுத்தனமாக நம்புவதை முதலில் விட்டுவிடுங்கள்.
       கடவுள் இருக்கிறாரா? என்று நீங்களே தேடுங்கள்,
       உங்கள் தேடலை உங்களிடமே ஆரம்பியுங்கள்.
       எல்லையற்ற கடவுள் என்றொருவன் எல்லா இடங்களிலும் இருப்பது உண்மையாக இருந்தால், அந்தத் தன்மை உங்களிலும் இருக்கவேண்டுமே?
       உருவமாகத் தேடாமல் கடவுள் தன்மை என்பதை முதலில் உங்களில் தேடிப் பாருங்கள்.
       உங்களுக்குள் கடவுளைக் கவனித்து அனுபவமாகப் பெற்றுவிட்டால். அப்புறம் அவன் எங்கும் இருப்பதை உணர்ந்து கொள்ளலாம், கடவுள் இருப்பதாக ஒப்புக்கொள்ளலாம்.
       ஒரு விசயத்தை முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள்.
       உங்களுக்குப் புத்திசாலித்தனமாக வாழ்க்கையை நடத்தத் தெரிந்திருந்தால், கடவுள் இல்லாமலும் சுகமாக வாழலாம்.
       வாழ்க்கையைப் பற்றி புரிந்து கொள்ளாமல், மூடத்தனமாக வாழ்பவராக இருந்தால் பூஜை அறையில் எத்தனை கடவுள் படங்களைத் தொங்க விட்டிருந்தாலும் புண்ணியமில்லை......

வாழ்க வளமுடன்!

Thursday, December 30, 2010

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? - 1 ஆனந்தம்:

      "கடவுள் இருக்கிறாரா? இல்லையா?"
       ஆதி மனிதன் பயத்தால் ஆட்டுவிக்கப்பட்டான்...
திடீரென்று வானில் வெளிச்சக்கீற்றுகள், தடதடவென்று ஓசை, பொத்துக் கொண்டு கொட்டும் தண்ணீர், அள்விடமுடியாத வான் பரப்பு, கணக்கிட முடியாத நட்சத்திரங்கள், எல்லைகள் புரியாத அலைகடல்.... எதற்கும் காரணம் புரியாமல் மனிதன் மிரண்டான்.
       இந்த பிரபஞ்சத்தின் பிரம்மாண்டம் முன் தன்னை ஒரு தூசு போல உணர்ந்தான்.
       தனக்கு புரிபடத சக்திக்கு முன் பணிந்து தன்னை பாதுகாக்க வேண்டினான்.
       மழையை கும்பிட்டான், சூரியனை வணங்கினான்.
       அன்றிலிருந்தே அச்சத்தின் காரணமாக ஏற்றுக்கொள்ளப் பட்டவரானார் கடவுள்!
       பிறந்ததில்லிருந்தே உங்கள் தாயும் தந்தையும் சமூகமும் கட்வுள் உண்டு என்று சொல்லி வந்திருப்பதனால் தான், நீங்களும் கடவுள் உண்டு என்று நம்புகிறீர்கள்!?
       உங்கள் குடும்பத்தினர் எந்தக் கடவுள் கட்சியை சேர்ந்தவரோ, அந்தக் கட்வுளை மட்டும் தான் உங்க‌ளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது.
       உங்களூக்கு பழக்கமான ஜ‌ரிகையிட்ட உடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து தானே உங்களுக்கு கடவுள் அருள்புரிவார்?
       காலண்டரில் அச்சிட்ட தோற்றங்களீல் வராமல் வித்தியாசமாக ஜீன்ஸும், ஜிப்பாவும் அணிந்து வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
       யானைகள் உலகத்துக்குப் போய் கடவுள் எப்படி இருப்பார் என்று கேளுங்கள், "எங்களைவிட பெரிய உருவத்துடன், நான்கு தும்பிக்கைகளுடன் இருப்பது தான் கடவுள்" என்று சொல்லும்.
       எறும்புகளிடம் கேட்டால்' "ஆறங்குளம் உள்ள பிரம்மாண்ட எறும்பு தான் தங்கள் கடவுள்" என்று சொல்லும்.
       இந்த பிரபஞ்சத்தில் மனிதனை விட பரினாம வளர்ச்சி கண்டிட்ட வேறு எதாவது உயிரிணம் இருக்கக்கூடும், அதனிடம் சென்று உங்கள் கடவுள்களைக் காட்டினால், 'சீச்சீ!' கேவலம் மனிதனின் தோற்றத்தையா கடவுள் கொண்டிருப்பார், அவர் எங்களைப் போலல்லவா இருப்பார்' என்று கைகொட்டி சிரிக்கலாம்.
       தங்களுடைய பிரச்சனனைகளை தீர்க்கத் தெரியாத சிலர், மற்றவர்களின் பிரச்சனைகளை தீர்த்துவைக்கப் புறப்பட்டு விடுகின்றனர்.
        கடவுளைப் பற்றி உங்களுக்கு நேரடி அனுபவங்கள் கிடையாது.
       அதனால் அடுத்தவர் சொன்னதை ஏற்று அப்படியே நம்பிக்கை வைத்தீர்கள்.
       கோயிலுக்கு எதற்காக போகிறீர்கள்?
கடவுளை உண்ர்வதற்காகவா?
       'அதைக் கொடுப்பா, இதைக் கொடுப்பா, கப்பாற்றுப்பா என்று வேண்டிக் கொள்ளத்தானே?
       உங்கள் கடவுள் நம்பிக்கைகள் பெரும்பாலும் பேராசை மற்றும் பயத்தின் அடிப்படையில் தானே வளர்க்கப்பட்டிருக்கின்றன?
       உங்கள் வீட்டில் டஜன் கணக்கில் கடவுளரின் படங்களை மாட்டி வைதிருக்கின்றீர்களே அதனால் உங்கள் வாழ்கையைப் பற்றிய பயம் உங்களுக்கு நீங்கிவிட்டதா?
       கடவுளைகளையும் சேர்த்து அல்லவா வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு போகவேண்டியிருக்கிறது?
       கடவுள் என்பதே உங்கள் அச்சத்தின் அடையாளமாக அல்லவா இருக்கிறது, அதனால் தான் பயபக்தி என்ற வார்த்தையை ரசிக்கிறீர்கள்.
       கடவுள் அன்பானவர் என்றால், பயம் என்ற வார்த்தை எதற்கு? பக்தி மட்டும் போதாதா?
       கடவுளை உணராதவர்கள் தான் இன்றைக்கு பக்தியை பற்றி அதிகம் பேசுகிறார்கள்....
       அப்படியானல் கடவுள் என்பவர் கற்பனைப்பாத்திரம் தானா?
       அவரைப் பற்றிக் கவலைப் படவேண்டாமா? அவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?
       ஒரு சிறு விதை பூமிக்குள் விழுந்ததும் மிகப்பெரிய விருட்சமாக வளர்கிறதே, எப்படி?
       இந்த விதையிலிருந்து, இப்படிப் பட்ட மரம் தான் வளரும், இந்த அளவு வளரும், இந்த மாதிரியான பூ மல‌ரும் என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறதே இந்த விதிகளை அமைத்தது யார்?
       உங்களை மீறிய சக்தியை கடவுள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்லுவது?
       ஆக தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டோம் கடவுள் இருக்கிறாரா? இல்லையா?
       இதை அறியும் ஆவல் உங்களுக்கு வந்து விட்டால்? இதைப் பற்றி நீங்கள் யாரிடம் கேட்டு அறிய முடியும்...............

வாழ்க வளமுடன்! 

Wednesday, December 29, 2010

தவறுகளை ஒப்புக்கொள்ளுங்கள் ஆனந்தம்:

       மனிதனாக பிறந்தவர் எவருமே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் தவறு என்று உணர்ந்த பின், அந்த தவற்றை ஒப்புகொள்ளத் தயாராக இருக்கிறீர்களா என்பது தான், உங்களை மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுத்தும்.
       செய்தது தவறா, தவறில்லையா என்பது கூட பிரச்சனையல்ல.. அதை ஒப்புக்கொள்கிற அகங்கார நினைப்புதான் பிரச்சனனை!
       குழந்தையாக இருந்தபோது எவ்வளவு வளைந்து கொடுத்தீர்கள்? உங்களை அடிதவரிடமே கூட எந்த வண்மமும் இல்லாமல் திரும்ப அவ்ர்களிடம் செல்வீர்களே... அப்போது அந்த சந்தோசம் எப்படி இருந்தது?
       வளர வளர உடல் அளவிலும் மனதளவிலும் இருகிவிட்டீர்கள்.
       சமூகத்தில் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டீர்கள்.
       அந்த அடையாளத்தின் கெளரவத்தை நிலைநிறுத்தும் முயற்சியில், உங்கள் நேர்மையையே பலி கொடுக்கத் தயாராகிவிட்டீர்கள். அதனால் தான் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் அடிப்படை குணத்தைக் கூட இழந்துவிட்டீர்கள்!
       "மன்னித்துவிடு! தெரியாமல் நடந்துவிட்டது, அறியாமல் செய்துவிட்டேன்! அடுத்த தடவை திருத்திக்கொள்கிறேன்!" என்று பணிந்து சொல்வதால், என்ன குறைந்துவிடுவீர்கள்.
       தவற்றை உணர்ந்த பின்னும், வெளிப்படையாக ஏற்கத் துணிவில்லாமல், மேலும் அதை நியாயப்படுத்திகொண்டு இருப்பது தான் தவறு.
       ஒரு முறை சங்கரன்பிள்ளை, இன்னொருவர் தோட்டத்தில் கனிந்த பழங்கள் தொங்குவதைக் கண்டார். ஒரு கோணிப்பை எடுத்து வந்தார், வேலி தான்டிக் குதித்தார்.
       மரத்திலிருந்து பழங்களைப் பறித்தார். கோணிப்பையை நிர‌ப்பித் தோளில் போட்டுக்கொண்டார். வேலி தாண்டி வெளியேறப் பார்த்த போது தோட்டத்தின் சொந்தக்காரன் கையில் வசமாக சிக்கிக் கொண்டார்.
       "யார் அனுமதியுடன் இவற்றைப் பரித்தாய்?"
       "நான் பறிக்கவில்லையே, பலமான காற்று அடித்தது, அவற்றில் இவை எல்லாம் உதிர்ந்தன!" என்றார் சங்கரன்பிள்ளை.
       "அப்படியானால், இந்தக் கோணியை எதற்காக எடுத்து வந்தாய்?"
       "ஓ... இதுவா? இதுவும் காற்றில் காற்றில் எங்கிருந்தோ பற‌ந்து வந்தது!"
       காற்றிலே பழங்கள் உதிர்ந்திருக்கட்டும்.... கோணியும் பறந்து வந்திருக்கட்டும்! பழங்களைக் கோணியில் நிர‌ப்பியது யார்?" என்று சொந்தக்காரன் உறுமினான்.
       சங்கரன்பிள்ளை அதற்கும் கலங்காமல், அப்பாவி போல் தன் முகத்தை வைத்துக்கொண்டு, "அது தான் எனக்கும் ஆச்சரியமாக இருக்கிறது!" என்றார்.
       தவறு செய்பவர்கள் பலரும் சங்கரன்பிள்ளை போலத் தான்.... கையும்கள‌வுமாகப் பிடிபட்டாலும், தன் தவற்றை ஒப்புக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த மேலும் மேலும் வார்த்தைகளை அடுக்கிக் கொண்டே போவார்கள்.
       இந்த மனப்பான்மை மிகவும் அபாயகரமானது!
நண்பர்களிடம், சக ஊழியர்களிடம், மேலதிகாரியிடம், உங்க‌ளுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் என்று பாகுபாடு பார்க்காதீர்கள்.
       என்ன தவறு செய்தாலும் அதை நேர்மையாக ஒப்புக்கொள்ளுங்கள். அது உங்களைப் பற்றிய நன்மதிப்பைத் தான் கூட்டும்.
       தவறு என்றே உணராமல், சிலர் வார்த்தைகளாலும், செயல்களாலும் அடுத்தவரைக் காயப்படுத்தி விடுவார்கள். அதைச் சுட்டிக் காட்டினால் உனக்கு வேதனை ஏற்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல என்பார்கள்.
       பழைய ஜோக் ஒன்று...
       பஸ்ஸில் ஒருவன் தனக்கு பக்கத்தில் நின்றவனின் காலை அழுத்தமாக மிதித்துவிட்டான். பின்பு கவனிக்கலே என்று சொல்லி, காலை எடுத்துக் கொண்டான்
       மிதிபட்டவன் தன் காலைப் பார்த்து, "ஏ...காலே! அவர் தான் காரணத்தை சொல்லி விட்டாரே! இன்னும் ஏன் வலிக்கிறாய்?" என்று அதட்டினாய்.
       வேண்டும் என்றே மிதித்தாலும், தெரியாமல் மிதித்தாலும் வலி, வலி தானே?
       மன்னிப்புக் கேட்பதை விடுத்து, "வேண்டுமென்றா மிதித்தேன்?" என்று விவாதிப்பது எப்படி நியாயமாகும்.
       கவனமற்று இருப்பதே ஒரு தவறு என்பதை புரிந்து கொள்ள மறுக்கலாமா?
       கவனிக்காதவரை, அதே வேதனையை இன்னும் பல நூறு பேர்களுக்கு கொடுக்க நேரலாம் அல்லவா?
       கவனமில்லாமல் ஒரு முறை தவறு செய்யலாம். ஆனால், தவறு பற்றிய கவனமில்லாமல் தான் தொடர்ந்து இயங்குவேன் என்பது வளர்ச்சிக்கு எதிரானது.
       சிலர் உங்கள் தவறுகளை பூதக்கண்ணாடியால் பார்க்கக்கூடும், பார்த்துவிட்டு தான் போகட்டுமே!
       நீங்கள் மன்னிப்பு கேட்டால், உங்கள் யுத்தம் அங்கேயே முடிந்து, குற்றம் சுமத்தியவர் அல்லவா குற்ற உணர்வை சுமப்பார்?
       புரிந்துகொள்ளுங்கள்.. இது விட்டுக் கொடுப்பதோ, தோற்றுப் போவதோ அல்ல! உங்கள் மனம் பக்குவப்பட்டிருக்கிறது என்று அர்த்தம்....
       வியாபாரம் செய்தாலும், விளையாட்டாக இருந்தாலும், உங்கள் தவறுகளை எற்றுக்கொள்ளப்வதைப் பொறுத்து் தான் வாழ்க்கையில் உங்கள் வெற்றி அமைகிறது.
      தவற்றை ஒப்புக்கொள்ளாதவரை, மனதிற்க்குள் சிலுவை போல் உங்கள் குற்ற உணர்வைத் தேவையின்றி சுமக்க நேரிடும்.
       உங்கள் அலட்சியமான குணத்தினால் அதைப் பற்றி அப்போது (தவறிழைக்கும் போது) உணர்ந்தாலும், கவலைப்படாமல் செயல்பட்டாலும், காலம் வரும்போது அந்தக் குற்றஉணர்வு உங்களைத் துரத்தும்.
       தவறுகளை ஒப்புக்கொள்வது என்பது, எதிரிகளையும் நண்பர்களாக்கித் தரும் பலம். எதிர்த்து விழ்த்த முடியாத பலம். வாழ்க்கையில் உங்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் பலம்!

வாழ்க வளமுடன்! 

Friday, December 24, 2010

மண் தொட்டியை உடைத்துப் போடுங்கள்-ஆனந்தம்:

    பல திறமையானவர்களை நீங்கள் கவனித்திருக்கலாம். கிடுகிடுவென உயர்ந்து வருவார்கள். சடாரென்று ஒரு கட்டத்தில் நிலைகுத்தி நின்றுவிடுவார்கள். அதன் பின் புதிதாக அவர்களிடம் எதையும் எதிர்பார்க்க முடியாது!
       ஏன்?
       அதற்க்குப் பிறகும் வளர வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கு இருக்காதா என்ன? இருக்கும்.. ஆனால் கிடைத்திருப்பதை விட்டுவிடக் கூடாது என்று அச்சத்துடன் கெட்டியாக பிடித்துக்கொண்டு விடுவார்கள்.
       அதற்கு அப்புறம் எப்படி வளர்ச்சி இருக்கும்?
    குட்டி மண்தொட்டியில் வேரோடு வைத்து விற்க்கப்பட்ட ஒரு செடியை வாங்குகிறீர்கள்.
       பத்திரமாக நிழலில் வைத்து பார்த்துக்கொண்டால், தொட்டியில் செடி ஓரளவிற்கு வேகமாக வளரும். பிறகு ஒரு கட்டத்தில் போதிய இடமின்றி அது தன் வளர்ச்சியை குறுக்கிக்கொள்ளும்.
       அதே செடியை பூமியில் எடுத்து நட்டிருந்தால் அது பெரிய விருட்சமாக வளர்ந்திருக்கும். புதிது புதிதாக எல்லா திசைகளிலும் கிளைகளை அனுப்பிக்கொண்டிருக்கும்.
       உங்கள் வாழ்கையும் அப்படித்தான்!
       வளர வேண்டும் என்ற முனைப்பு உங்களுக்குள் தகதகத்துக்கொண்டு இருக்கிறது.
       இப்போதிருக்கும் மண் தொட்டியை உடைத்து போட தயங்குவதால், வளர முடியாமல் தவிக்கிறது.
       உங்க‌ளைச் சுற்றி நீங்களே பின்னிக் கொண்டிருக்கும் வலைகளிருந்து விடுபட்டால் தான் வளர்ச்சி என்பது சாத்தியம்!
       அரசனைத்தேடி அவ்வப்போது ஓர் இளைஞன் அரண்மனைக்கு வருவான். அவனுக்கு ராஜமரியாதை தந்து நிறைய செல்வங்கள் கொடுத்த‌னுப்புவான் அரசன்.
       அத்தனையும் தொலைத்துவிட்டு அவன் மீண்டும் வந்து நிற்பான். அரசனும் முகம் கோணாமல் மீண்டும் அவனுக்கு வாரி வழங்குவான்.
       ஒரு முறை தலைமை அமைச்சர் அரசனிடம் மெல்லக் கேட்டார்...
       "மன்னா, இவன் நீங்கள் வழங்கும் செல்வங்களை பொறுப்பில்லாமல் தவறான நண்பர்களோடு சேர்ந்து தொலைத்து விட்டு, வீணடித்துவிட்டு வருகிறான். எதற்காக அவனுக்கு மீண்டும் மீண்டும் செல்வத்தை வாரி வழங்குகிறீர்கள்?"
       "அமைச்சரே நான் பிறந்தபோதே என் தாய் இறந்துபோனாள். அரண்மனைப் பணியில் இருந்த இவன் தாய்தான் இவனுடன் சேர்த்து எனக்கும் தாய்ப்பால் கொடுத்து வளர்த்தாள். அதனால், இவனை என் சகோதரனாகவே நினைக்கிறேன்" என்றான் அரசன்.
       அடுத்த முறை அந்த முட்டாள் பையன் வந்த போது வேறு ஒரு விபரீத கோரிக்கையை முன் வைத்தான்.
       "உன்னைச் சுற்றி புத்திசாலிகள் இருப்பதால் என்னை விட மேன்மையாக இருக்கிறாய். உன் அமைச்சர் என்னுடன் இருந்தால் என்னாலும் ராஜ்ஜியத்தை ஆளமுடியும். அவரை என்னுடன் அனுப்பு!" என்று மன்னனிடம் கேட்டான் அவன்.
       என்ன செய்வது என்று புரியாமல் மன்னன் தினறினான்.
       "மன்னா... உஙளுடன் பால்குடித்து வளர்ந்த சகோதரனுக்கு உதவ என்னுடன் பால்குடித்து வளர்ந்த என் சகோதரனை அனுப்புகிறேனே" என்றார் அமைச்சர்.
       மறு நாள் அரசவைக்கு அமைச்சர் வந்த போது ஒரு எருமைக்கடாவை கயிறு கட்டி இழுத்து வந்தார்.
       ஏன் சிரிக்கிறீர்கள் இவனும் நானும் ஒரே எருமைத்தாயின் பாலைக்குடித்து தான் வளர்ந்தோம். மன்னனின் சகோதரனுக்கு அமைச்சராக இருக்க இந்த என் சகோதரனை அனுப்புகிறேன்" என்றார்.
       நாம் ஒரே தாயிடம் பால்குடித்து வளர்ந்திருக்கலாம். ஆனால் நம் உடலை, மனதை, உண்ர்ச்சிகளை, சக்தியை எப்படி திறம்பட பயண்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்து தானே நம் வளர்ச்சி அமையும்!
       பொதுவாக உங்கள் நண்பர்களைச் சந்திக்கும் போது என்னவெல்லாம் பேசுவீர்கள்?
       பட்ஜெட்டில் வரிகளை எப்படி விதிக்க வேண்டும், எந்ததெந்த கட்சிகள் கூட்டணி வைத்துக்கொண்டால் வெற்றி பெற முடியும்... அரசாங்கம் எப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்றெல்லாம் விவாதிப்பீர்கள்.
       முஷாரப் பற்றியும், ஜார்ஜ்புஷ் பற்றியும், பின்லேடன் பற்றியும் எல்லா விவரங்களும் வைதிருப்பீர்கள்.
       இப்படி உலக விவரங்களை எல்லாம் விரல் நுனியில் வைத்திருக்கிறீர்களே, உங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?
       உங்களுடைய திறமையின் வீச்சு பற்றி உங்க‌ளுக்கு முழுமையாகத் தெரியுமா?
       கண்ணாடி அணிபவர்களுக்கு முதன்முதலாக அதை அணிபவர்களுக்கு அணியும்போது அது வேண்டாத பாரமாகத் தெரியும். பழக்கமான பின் அதைப்பற்றியே கவனமிருக்காது. கவனிக்கப்படவிட்டாலும் அது தன் வேலையை திறம்பட செய்துகொண்டிருக்கும்.
       அதே போலத்தான் உங்கள் திறமையும்!
       இருபத்தி நாண்கு மணிநேரமும் அதனைக் கூர்மையாக வைத்திருக்க முதலில் கவனத்துடன் பயிற்சி செய்யுங்கள். பழக்கவசத்தால் அது உங்கள் இயல்பான குணமாகிவிடும். பிறகு எந்த சந்தர்ப்பத்திலும் அது பயண் படத்தயாராக இருக்கும்.
       சாலையில் வண்டி ஓட்டிப் பழகும் போது, உங்கள் மொத்த கவனமும் அதிலேயே இருக்கும். நல்ல பயிற்சி பெற்ற பிறகு, அது பற்றிய பயமோ, பதற்றாமோ இல்லாமல், மிக இயல்பாக வண்டியில் பயணம் செல்ல ஆரம்பித்திருப்பீர்களே, அது போல்!
       மோட்டார் வாகனத் தொழிலில் பெரும் சாதனை புரிந்த ஹென்றிபோர்டு ஒரு முறை...
       "நீங்கள் பெரிய ஜீனியஸ்" என்று புகழப்பட்ட போது அவர் என்ன சொன்னார் தெரியுமா?
       "அதிமேதவித்தனமாவது, மண்ணாங்கட்டியாவது! உங்களிடம் இருக்கும் அதே புத்திசாலித்தனம் தான் என்னிடமும் இருக்கிறது. விடாமுயற்ச்சியுடன் உழைத்து, நான் அதைப் பயண்படுத்தினேன் அவ்வளவு தான்!" என்றார்.
       கிடங்கில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் தானியம் விநியோகம் செய்யப்படதவரை, யாருக்கும் உபயோகம் இல்லை. வீணாகி மக்கி குப்பைக்கு தான் போய் சேரும்.
       திறமைகளைத் தேக்கி வைக்காதீர்கள், அவற்றைப் பயண்படுத்தி கொண்டே இருந்தால் தான் பலன்!
       புதிய வாய்புகளை திறமையோடு எதிர்கொள்ள பழகினால் தான், உங்கள் திரமையும் முழுதாக பரிமளிக்கும். அது உங்களை அடுத்தடுத்த தளங்களுக்கு உயர்த்திக் கொண்டே இருக்கும்!

வாழ்க வளமுடன்! 

Monday, December 20, 2010

நன்றியுணர்வு – ஆனந்தம்:

       பிறக்கும் போதே சித்தார்தர் புத்தராகப் பிறக்கவில்லை. ஒரு காலத்தில் அவரும் உங்களைப் போல் சாதாரண மனிதர் தான். சாதாரண சித்தார்த்தனால் புத்தனாக முடியும் போது உங்களால் முடியாதா?
       ஒரு சூஃபி ஞானி தினமும் ஒவ்வொரு தடவையும் இறைவனுக்கு நன்றி சொல்வதை வழக்கமாக வைத்திருந்தார். பிரார்த்தணை செய்யமாட்டார், இறைவனுக்கு நன்றி மட்டும் தான் சொல்வார். அவ்வளவுதான்.
       "இறைவா ஒரு நாள் முழுவதும் என்னை கவனத்தில் எடுத்துக் காத்துக் கொண்டாயே! நன்றி"
       இன்று கண் திற‌ந்தேன்! அற்புதமான நாள்! நன்றி"
       "இன்னும் சுவாசிக்கிறேன்! நன்றி"
       இப்படி ஒவ்வொரு விசயத்திற்கும் சூஃபி ஞானி நன்றி சொல்ல சொல்ல, சீடர்களும் நன்றி சொன்னார்கள். வழக்கம் போல சீடர்கள் அவர்களின் குருவோடு சேர்ந்து யாத்திரையை தொடர்ந்தார்கள்.
       இஸ்லாமியத்தின் ஒரு பகுதி தான் சூஃபித் தத்துவம் என்றாலும், அந்த காலத்தில் சூஃபி ஞானிகளுக்கு பெரிய மரியாதை கிடைக்காது. உணவு தரமாட்டார்கள்.
       ஒரு நாள் ஒரு ஊரில் சாப்பாடு கிடைக்கவே இல்லை. மறுநாள் அடுத்த ஊருக்கு சென்றார்கள். அந்த ஊரிலும் உணவு கிடைக்கவே இல்லை. மூன்றாவது நாளும் அதே நிலை நீடித்தது, உணவு கிடைக்கவேஇல்லை.
       ஆனால் அந்த ஞானி தங்களை பகல் முழுவதும் வழிந‌டத்தியதற்கும், நன்றாக பொழுது விடிந்ததற்கும் நன்றி சொல்லாமல் விடவில்லை.
       நான்காவது நாளும் அவர்களை ஒரு ஊரில் கூட தங்க விடாமல் விரட்டி அடித்துக் கொண்டிருக்கின்றனர். அன்று வேறு வழியில்லாமல் ஒரு சுடுகாட்டில் படுத்துக்கொண்டனர்.
       நான்கு நாள் பட்ட அவஸ்தைகளால் சீடர்கள் நொந்து போயினர். பசியின் கோரம் அவர்களைத் தூங்க விடவில்லை.
       ஐந்தாம் நாள் காலையும் சூஃபி ஞானி கடவுளுக்கு நன்றி சொல்ல ஆரம்பிதார். ஆனால் சீடர்களோ... நன்றி சொல்ல மறுத்தனர். மறுத்ததோடு நில்லாமல், தங்களுடைய வெறுப்பை உமிழ ஆரம்பித்தனர்.
       "மூன்று நாட்களாக உணவு இல்லை, நான்காம் நாள் தங்க இடமில்லை. இன்று என்ன ஆகுமோ தெரியவில்லை. ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்?" என்று கேட்டனர்.
       ஞானி சிரித்துக் கொண்டே சொன்னார்: " மூன்று நாள் இறைவன் உணவு வழங்காததற்காக இவ்வளவு கவலைப் படுகிறீர்களே, நமக்கு முப்பது வருடங்களாக இறைவன் உணவு வழங்கி வருகிறாரே!
       ஒரே ஒரு நாள் தங்க இடம் தரவில்லை ஆனால், முப்பது வருடமாக இந்த உலகத்தில் தங்கியிருக்கிறோம்.
முப்பது வருடம் நம்மைக்காத்தவருக்கு இந்த மூன்று நாட்கள் பற்றித் தெரியாதா என்ன?
       முப்பது வருடம் நம்மைக் காத்ததற்க்கு இன்றிலிருந்து நன்றி சொல்ல ஆரம்பித்தாலே. நம் நன்றிக்கடன் தீர முப்பது வருடமாகும். நடுவில் எங்கிருந்து வந்தது இவ்வளவு வெறுப்பும், கோபமும்?" எனக் கேட்டார்.
       வாழ்க்கையில் இயற்கை நமக்கு எல்லாமும் கொடுத்திருந்தாலும் அதிருப்தியே நம்மில் பலரிடம் காணப்படுகிறது.
       அதிருப்தி பிறந்ததற்கான காரணம் நன்றியுணர்வு என்ற பெரிய தியான முறையை மனிதன் மறந்து போனதுதான்.
       நம் வாழ்வில் சரியாக யோசித்துப் பார்த்தால் புரியும் இந்த வாழும் வாழ்க்கையே நமக்கு ஒரு பரிசு போலத்தான்.
       ரமண மக‌ரிஷி அற்புதமான ஒரு சுலோகம் சொல்வார்....
       "கிடைக்கும் முன் கடுகேயானாலும் மலையாக்கி காண்பித்து
       கிடைத்த பின் மலையேயானாலும் கடுகாக்கி காண்பிக்கும் -
       மடமனம்!"
       நம்முடைய மனதின் இயல்பே, எவ்வளவு கிடைத்தாலும், அதை அனுபவிக்காமல் அடுத்து, அடுத்து என்று பெரிய பெரிய விசய‌ங்களை நோக்கியே ஆசையை திசை திருப்பி விடும்.
திருப்தியோடு வாழ அதற்க்கான காரணங்களை கண்டுபிடித்து, அதனோடு ஒன்றி நன்றியுணர்வு கொண்டு வாழ ஆரம்பிதீர்கள் என்றால் ஆனந்தமே உஙள் வாழ்வில் பொங்கும். நன்றியுணர்வே ஆனந்தத்தை கொண்டுவரும் சக்தி....

வாழ்க வளமுடன்!

Sunday, December 19, 2010

விதியை நீங்களே தீர்மானியுங்கள்- ஆனந்தம்:

       உங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அரசியல்வாதிகள் மட்டுமல்ல.... ஜோசியர்களும், சாமியார்களும் கூட ஆசைப்படுகிறார்கள்.
       த‌ங்கள் அன்பினால் உங்களைக் கவராமல், உங்க‌ளுக்கு ஒரு பயத்தையும், குற்றஉணர்ச்சியையும் உண்டு பண்ண, பாவம்‍‍‍‍‍‍‍‍‍ - புண்ணியம், நல்லது - கெட்டது என்றெல்லாம் சொல்லி குழப்புகிறார்கள்.
       உங்கள் வெற்றியையும், தோல்வியையும் நிர்ணயிப்பது உங்கள் தலையெழுத்து தான்! என்று அடித்துச் சொல்லி, உங்களை நம்பவைதிருக்கிறார்கள்.
       விரும்பியது கிடைக்கவில்லை என்றால். முழுக்காரணம் நீங்கள் தான். வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் கவனமில்லாமல் தீர்மானித்திருக்கிறீர்கள். ஆசைப்பட்டதற்க்கு உரியவராக நீங்கள் உங்களை தயார்படுத்திக் கொள்ளவில்லை. அது உங்கள் த்வறு தானே தவிர விதியின் விளையாட்டல்ல.
       தன் கம்பியூட்டர் முன் அமர்ந்து உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் திட்டமிட்டுக் கொண்டிருப்பதைத் தவிர கடவுளுக்கு வேறு வேலையே இல்லையா? இல்லை இந்தக்கதைகளை எல்லாம் நம்ப இன்னும் நீங்கள் குழ‌ந்தைகளா?
பிறப்பின் காரணமாக, வளர்ப்பின் மூலமாக, சில அடிப்படைக் குணங்களை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ பெற்று விட்டீர்கள். அந்த குணாதிசியங்கள் தான் உங்கள் பாதையை தீர்மானிக்கின்றன. அது கூட ஒரளவுக்குத் தான். மற்றபடி தலையெழுத்து என்று ஒன்று இருந்தால், மிககவனத்தோடு செயல்பட்டால் அதை உங்கள் விருப்பப்படி திருத்தி எழுதிக்கொள்ள முடியும்.
       தனக்கு எல்லாமே தெரியும் என்று சொல்லிக்கொண்ட ஓர் அறிவு ஜீவியிடம் சங்கரன்பிள்ளை வந்திருந்தார்.
       "எனக்கு அழகான மகள் இருக்கிறாள். எல்லாவற்றிலும் சிற‌ந்து விளங்குகிறாள். ஆனால் அவளுக்கு ஒரு பிரச்சனை. தினமும் காலையில் எழுந்ததும் மந்தமாக இருக்கிறாள். சாப்பிட்டதை எல்லாம் வாந்தி எடித்து விடுகிறாள். இதற்கு காரணம் என்ன?" என்று கேட்டார் சங்கரன்பிள்ளை.
       அறிவுஜீவி சற்று நேரம் கண்மூடி யோசித்துவிட்டு கேட்டார்..." உன் மகள் பால் குடிப்பதுண்டா?"
       "உண்டு, சிறந்த பசுவிடமிருந்து சுத்தமாக கறந்த பாலை மட்டும் தான் அவளுக்கு கொடுக்கிறோம்" என்றார்.
       "அங்கே தான் பிரச்சனை" என்றார் அறிவுஜீவி.
       "வயிற்றுக்குள் போனதும் பால் தயிராகிவிடும், இரவு படுக்கையில் உன்மகள் புரளும் போது அந்ததயிர் கடையப்பட்டு வெண்ணெய் திரளும், உடம்பு சூட்டில் அந்த வெண்ணெய் உருகி நெய்யாகி விடும். அந்த நெய் ரசாயன மாற்றத்தால் சக்கரையாகி விடும். அந்த சக்கரை ரத்தத்தில் கலக்கும் போது ஒரு போதை பிறக்கும். காலையில் அந்த போதை தெளிவதற்குள் எழுந்திருப்பதால் தான், உன் மகளுக்கு அந்த பிரச்சனை!"
       புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலைகளுக்கெல்லாம் விதியின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்வதும், இந்த அறிவுஜீவி சொன்ன காரணத்தைப் போல் அர்த்தமில்லாதது தான்.
எல்லாமே விதிப்படி தான் நடக்கும் என்று சில பெரியவர்கள் சொல்வதை நம்பி உங்கள் பார்வையை குறுக்கிக்கொள்வீர்களா? உங்கள் உறிதியை மழுங்கடித்துக் கொள்வீர்களா?
       யாருக்கும் வெளிச்சூழ் நிலைகள் அவர்கள் விரும்பியபடி நூறு சதவிகிதம் அமைந்து விடுவது இல்லை. மாற்ற முடியாத சூழ்நிலைகளை எதிர்த்து நின்றால் உங்கள் அமைதி காணாமல் போகும். மூளை ஸ்தம்பித்து நிற்கும்....
       மாறாக அதை உள்ளபடி ஏற்றுக்கொண்டுவிட்டால், அடுத்து என்ன செய்வது என்று புத்திசாலித்தனமாக யோசிக்க முடியும். இதற்காகத்தான் விதி என்று சொல்லி வைத்தார்கள்.
       ஆனால் விதி என்றால் எதையும் சகித்து செயலற்று இருப்பது என்று தவறாக‌ புரிந்து கொண்டுவிட்டீர்கள். எந்த சூழ்நிலைகளையும் சகித்து கொண்டு இருக்க வேண்டியது இல்லை. சகித்துக் கொள்வது விருப்பத்தோடு செய்வதல்ல. கட்டாயத்தால் செய்வது.
       எனவே அதைவிடுத்து, எதையும் அமைதியாக ஏற்றுக்கொண்டு, அந்த விதியை உங்களுக்கேற்ப்ப மாற்றிக்கொள்வதெப்படி என்று யோசித்துச் செயலாற்றுங்கள்.
       நீங்கள் வளர வேண்டுமானால் விதி பற்றிய பயத்திலிருந்து முதலில் வெளியே வரவேண்டும்.
       'கடவுளே வந்து சொன்னாலும் என்விதியை நான் தான் தீர்மானிப்பேன்' என்ற உறுதி உங்களூக்கு வரவில்லையென்றால், உங்கள் வாழ்க்கை அதன் போக்கில் தான் நடக்கும்.
விரும்பியதை அடையவேண்டும் என்ற வேட்கை உங்களுக்கு இருந்தால், அந்த விதியை கடவுளிடமிருந்து பறித்து நீங்களே அதைக் கையாள ஆரம்பித்தால், நீங்கள் தேடிக்கொண்டிருக்கும் ஆனந்ததை ருசிப்பீர்கள். உங்கள் வாழ்வே ஆனந்தமயமாகிவிடும்....

வாழ்க வளமுடன்!

Saturday, December 18, 2010

கரை அருகிலேயே கப்பல் ஓட்டாதீர்கள்‍ - ஆனந்தம்:

       நீங்கள் ஆசைப்பட்ட எத்தனையோ விஷயங்களை, கிடைக்குமோ கிடைக்காதோ என்ற அச்சத்தால் கைநழுவவிட்டிருப்பீர்கள்.
       புதிய முயற்ச்சிகளில் பங்கு கொள்ள துணிச்சலின்றி, வாய்ப்புகளை இழந்து தவிக்கிறர்கள்.
       இசை, ஓவியம் போன்ற இனிமையான களைகளைச் சொல்லித்தரும் கல்லூரிகளை வலைவீசித் தேடவேண்டியிருக்கிறது.
       ஆனால் தெருவுக்குத் தெரு ஒரு பொறியியல் கல்லூரி என்ற நிலை விரைவிலேயே வந்துவிடும் போலிருக்கிறது.
       வருடத்திற்கு வருடம் லட்சக்கணக்கில் வெளியே அனுப்பப்படும் இஞ்சினியர்களுக்கு வேலை கிடைக்கிறதோ இல்லையோ, அந்தப் படிப்பை பெற்றோர் தங்கள் மகனுக்கும், மகளுக்கும் கொடுத்துவிட வேண்டும் என்று பெற்றோர் தவிக்கிறார்கள்.
       ஏன் இப்படி?
       ஒரு காலகட்டத்தில் அந்தப் படிப்பு முடிந்ததும் வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. உடனே அது தான் பத்திரமான பந்தயம் என்று தங்கள் பிள்ளைகளை பகடைக்காய்களாக பெற்றோர் உருட்ட ஆரம்பித்துவிடார்கள்.
       அவர்களை பொறுத்தவரை, மனித உடல் கிடைத்துவிட்டாலும், மனதளவில் பரிணாம வளர்ச்சி செம்மறி ஆட்டின் தன்மையோடு ந்ன்றுவிட்டது போலத்தான்!
       ஆயிரம் பேர் செய்வதைத் தான் செய்வார்கள். சுயமாக எந்த முடிவும் எடுக்கவும் துணியமாட்டார்கள்.
       ராத்திரி பகலாக இதையே சொல்லி சொல்லி த்ங்கள் பிள்ளைகளின் மன‌தையும் மந்தமாக்கி வைத்திருப்பார்கள்.
நான் பொறியியல் துறையை மட்டும் சொல்லவில்லை, எந்தத் துறையாக இருந்தாலும் அதை நீங்கள் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்திருந்தால், வரவேற்கலாம். பிழைப்புக்காக தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் வாழ்கையை அல்லவா வீணடித்து விடுவீர்கள்?
       இது தனக்குத் தேவையா? உலகத்துக்குத் தேவையா? என்றெல்லாம் மனதளவில் யோசிக்காமல், எல்லோரும் குதிக்கும் மலை முகட்டிலிருந்து குதிப்பதற்க்காகவா இத்தனை படிகளில் ஏறிவந்தீர்கள்?
       அதற்கு ஒரு கதை....
       யாரோ ஒரு ஜோசியர் அரசனுக்கு கண்டம் என்று சொல்லிவிட்டார்.
       உடனே அரசன், எந்த பீரங்கியாலும் துளைக்கமுடியாத கோட்டைச் சுவர்களை நான்கு அடி தடிமனுக்கு கட்டிக் கொண்டான். கோட்டையைச்சுற்றி அகழியை ஆழமாக்கினான்.
ஒன்றிரண்டு ஜன்னல்களைத்தவிர மற்ற திறப்புகளையெல்லாம் அடைத்துவிட்டான்.
       மிகவும் நம்பிக்கைக்குறிய சிப்பாய்களை நூறு பேரை தன் கதவருகிலேயே நிறுத்திக் கொண்டான். அந்தக் கதவைத்தாண்டி அரசன் வெளியே போகவே இல்லை.
       ஒருமுறை தற்செயலாக அரசன் ஜன்னல் வழியே வெளியே பார்த்த போது அங்கிருந்த பிச்சைக்காரன் அரசனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான். அரசன் கடும் கோபம் கொண்டு, அவனை இழுத்து வரச்சொன்னான்.
       கோட்டையின் அத்தனை காவல்களையும் தாண்டி பிச்சைக்காரன் உள்ளே கொண்டுவரப்பட்டான். அப்போதும் அவன் சிரிப்பு அடங்கவேஇல்லை....
       "எதற்காக சிரிக்கிறாய், சொல் இல்லாவிட்டால் உன்தலை துண்டிக்கப்படும்" என்றான் அரசன்.
       "ஒன்றிரண்டு ஜன்னல்களை மட்டும் ஏன் திறந்து வைத்திருக்கிறாய்... அதையும் அடைத்து விடுவது தானே? கதவையும் பூட்டிக் கொண்டுவிட்டால் எந்த ஆபத்தும் உள்ளே வரமுடியாதே?" என்று பிச்சைக்காரன் தொடர்ந்து சிரிக்கத் தொடங்கினான்.....
       "முட்டாளே எல்லவற்றையும் அடைத்துவிட்டால் நான் மூச்சு முட்டி உள்ளேயே செத்துவிடுவேன்" என்றான் அரசன்.
       "இப்போது மட்டுமென்ன! நீ கல்லறையில் தானே வாழ்ந்து கொண்டு இருக்கிறாய். என்ன வித்தியாசம், இந்தக் கல்லறைக்கு கதவு இருக்கிறது, காவலுக்கு ஆள் இருக்கிறது, அவ்வளவு தான்..." என்று சிரித்தான் பிச்சைக்காரன்.
       உங்களுக்கும் அதுதான்! புதிதாக எதையும் முயற்ச்சித்துப் பார்க்கும் தைரியம் இல்லையென்றால், நமது வாழ்க்கைக்கு என்ன அர்த்தம்?
       எந்த ஆபத்தும் இல்லாத ஒரு இடம் வேண்டும் என்றால் பேசாமல் கல்லறைக்கு செல்ல வேண்டியாதுதான்.
பாதுகாப்பான வாழ்க்கை என்று நம்மைச் சுற்றி சுவர்கள் எழுப்பிக்கொண்டால், நம்மால் உயிர்ப்போடு, ஆனந்த்தோடு வாழமுடியாது. அப்படி உயிரைப் பறிகொடுத்துவிட்டு உடல் மட்டும் எதற்காக அறுபது, எழுபது வருடங்கள் வரை அல்லாடிக் கொண்டு இருக்கவேண்டும்?
      கரையை விட்டு விலகத் தைரியமில்லாமல் கரையோரமாகவே கப்பலைச் செலுத்திக்கொண்டிருந்தால், எந்த ஊருக்கும் போய்ச் சேரமுடியாது. கப்பல் த‌ரை தட்டித் தான் போகும்.
       நீங்கள் எதிர்பார்த்தபடி அமையாமல் பக்கத்துக்கு பக்கம் திகைக்க வைக்கும் திடுக்கிடும் திருப்பங்கள் வந்தால் தானே ஒரு சஸ்பென்ஸ் கதையை மிகப்பிரமாதம் என்று பாரட்டுவீர்கள்.
       ஆனால் வாழ்க்கையை மட்டும் திருப்பங்கள் இல்லாமல் சலிப்புடன் அமைத்துக் கொள்ள விரும்புகிறீர்களே ஏன்?
இளைஞனாக இருப்பதற்குறிய தகுதி வலுவான உடல் மட்டுமல்ல! உறுதியான மனமும் கூட!
       எதிர்பாரதையும் துணிச்சலோடு எதிர்கொள்ளுங்கள். ஆனந்தம் மட்டுமே கிடைக்கும். ஆனந்தத்தை மட்டுமே அடைவீர்கள்.......

வாழ்க வளமுடன்!

Wednesday, December 15, 2010

அனுப‌வ‌மே ஆன‌ந்த‌ம்

       நமது மனதின் உள்ள விஷயங்கள் அனைத்தும் சமுதாயம் மற்றும் சுற்றியுள்ள சகமனிதர்களின் கட்டுதிட்டத்தினாலும் திட்டமிடுதலாலும் உருவாக்கப்பட்டவைதான். நாம் கடந்த காலம் முழுவதும் இது போன்ற வகையில்தான் வாழ்ந்து வந்திருக்கிறோம். ஓர் உதார‌ணக் கதை....
        அப்படி எதுவும் இல்லாத போதும் மற்றவர்களால் அது உருவாக்கப் படுகிறது என்ற கருத்தை எனது பேராசிரியர்களில் ஒருவர் ஏற்றுக் கொள்ள வில்லை. நான் இதை நிருபிப்பதாக கூறினேன்.. அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும், அவரது மனைவியும் என்னிடம் மிகவும் அன்பாக இருப்பார். நான் அவரது மனைவியிடம் சென்று, நாளை காலை பேராசிரியர் எழுந்தவுடன், நீங்கள் அதிர்ச்சியடைந்தது போல காட்டிக் கொண்டு அவரிடம் சென்று, என்னாயிற்று உங்களுக்கு? இரவு படுக்கைக்கு செல்லும்போது நன்றாகத்தானே இருந்தீர்கள்! இப்போது உங்களது முகம் வெளுத்தாற்ப்போல இருக்கிறதே, உடம்பு சரியில்லையா உங்களுக்கு? எனக் கேட்க வேண்டும் எனக் கூறினேன்.
       அடுத்த நாள் காலை பேராசிரியர் இதை உடனே மறுத்து விட்டார். அவர் "என்ன உளருகிறாய்? நான் நன்றாகத்தான் இருக்கிறேன்". என்று கூறி விட்டார்.
       நான் அடுத்ததாக அவரது தோட்டக்காரரிடம், "அவர் தோட்டத்துக்கு வந்தவுடன் நீங்கள், என்னவாயிற்று? கடவுளே! என்ன நிகழ்ந்தது? உங்களால் நடக்க முடிய வில்லை, நீங்கள் நடுங்குகிறீர்கள். உங்களுக்கு என்னவோ நடந்து விட்டது, உள்ளே சென்று உட்கார்ந்து ஓய்வு எடுங்கள். நான் போய் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று கூற வேண்டும்." என்று கூறினேன்.
மேலும் நான் இவர்கள் இருவரிடமும் அவர் என்ன கூறினாரோ அதை அப்படியே அவரது வார்த்தைகளிலேயே எழுதி வையுங்கள். நான் வந்து பெற்றுக் கொள்கிறேன். என்று கூறினேன்.
       அவர் தோட்டக்காரரிடம், "ஆமாம், என்னவோ போல இருக்கிறது, நான் ஓய்வு எடுக்க வேண்டும், என்னால் பல்கலைகழகத்துக்கு போக முடியாது. ஆனால் டாக்டரை கூப்பிட வேண்டிய அவசியம் இல்லை." என்றார். அவர் முழு ஆரோக்கியத்துடன் இருந்தார். எந்த பிரச்னையும் இல்லை. அதனால் அவர் பல்கலைகழகத்துக்கு அரை மணி நேரமோ ஒரு மணி நேரமோ போவதாக முடிவெடுத்தார்.
       அவர் செல்லும் வழியில் நான் நம்பும் பலரிடமும் சொல்லி வைத்தேன்.... அடுத்ததாக வழியில் ஒரு போஸ்ட் மாஸ்டர் இருந்தார், நான் அவரிடம், "நீங்கள் மிகவும் வேலையாக இருந்தால் கூட தவற விட்டு விடாதீர்கள். பேராசிரியர் உங்களை கடந்து செல்லும் போது எங்கே செல்கிறீர்கள்?, என்ன செய்கிறீர்கள்?, உங்களுக்கு பயித்தியமா? உங்களுக்கு உடம்பு சரியில்லை, நீங்கள் என் வீட்டிற்கு வந்து ஓய்வு எடுங்கள், நான் டாக்டரை கூப்பிடுகிறேன் என்று சொல்லுங்கள். அவர் கூறுவதை குறித்துக் கொள்ளுங்கள்." என்றேன். நான் குறிப்புகளை சேகரித்து கொள்கிறேன் என்று கூறினேன்.
       பேராசிரியர், "ஆமாம், நேற்று இரவிலிருந்து என்னவோ தவறாகிப் போனது போல ஒரு உணர்வு. என்ன தவறாகிப் போனது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் என்னவோ சரியில்லை. நான் இன்னும் நெடுநாள் வாழப் போவதில்லை என்பது போன்ற ஒரு அச்சம், ஒரு நடுக்கம் உள்ளே ஓடுகிறது." என்றார்.
       அவரது வீடும் பல்கலைகழகமும் கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும். அவர் எப்போதும் நடந்துதான் போவார். ஆனால் அன்று அவர் வழியில் வந்த மற்றொரு பேராசிரியரின் காரை நிறுத்தி, "என்னால் நடந்து பல்கலைகழகத்தை வந்தடைய முடியுமா என்று தெரியவில்லை". என்றார்.
பல்கலைகழகம் இருந்த இடம் மலைப்பகுதி, மேடும் பள்ளமுமானது.
பேராசிரியர், "எனக்கு மூச்சு வாங்குகிறது... உடம்பு நடுங்குகிறது. எனக்கு காய்ச்சல் என்று நான் நினைக்கிறேன். என்ன என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. எனக்கு என்னமோ போல் இருக்கிறது". எனக் கூறி லிப்ட் கேட்டார்.
        அவரை கடந்து போன பேராசிரியரும் என்னால் அனுப்பி வைக்கப்பட்டவரே. அவர் மிக மோசமான நிலையில் இருப்பதைப் போல நீங்கள் காரை நிறுத்தி, என்ன பிரச்னை என கேட்க வேண்டும் என்று கூறியிருந்தேன்..
       காருக்குள் இவர், "நீங்கள் வந்திருக்கக் கூடாது, நீங்கள் டாக்டரிடம் போயிருக்க வேண்டும். உங்களது கண்கள் பஞ்சடைத்துப் போயிருக்கிறது, உங்களது முகம் வெளுத்துப் போயிருக்கிறது, பழுதாகிப்போன ஓவியம் போல இருக்கிறீர்கள். ஒரே நாள் இரவு என்னவாயிற்று? இரவில் ஹார்ட் அட்டாக் வந்ததா என்ன? அது மிகவும் மோசமாக பாதித்திருக்கும் போலிருக்கிறதே." என்று கூறினார்.
       அதற்கு அவர், "நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஹார்ட் அட்டாக் வந்திருக்கும்போல இருக்கிறது. அப்போது எனக்குத் தெரியவில்லை, இப்போது என்னால் உணர முடிகிறது. எல்லா விதமான அறிகுறிகளும் எனது வாழ்வு முடிவுக்கு வந்து விட்டது போல காட்டுகிறது". என்றார்.
       அவர், தத்துவ பிரிவுக்குள் நுழையும் போது அங்கு வாசலில் உட்கார்ந்திருக்கும் பியூனிடம் நான், அவர் வந்தவுடன் நீ உடனே எழுந்து அவரை தாங்கிப் பிடித்துக் கொள் என்று கூறியிருந்தேன்.
       அவன், "ஆனால் அவர் மிகவும் கோபப்படுவாரே, நீங்கள் என்ன கேட்கிறீர்கள் என்றே எனக்குப் புரியவில்லை. நீங்கள் இதுபோல இதற்கு முன் கேட்டதே இல்லையே." என்றான்.
       அதற்கு நான், "நானும் பேராசிரியரும் ஒருவிதமான பரிட்சார்த்தமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறோம். நீ, நான் சொல்வதை மட்டும் செய். குறுக்கிடாதே. நீ அவரை பிடித்துக் கொண்டு, நீங்கள் விழ இருந்தீர்கள் என்று சொல்." என்றேன்.
       அவனும் அப்படியே செய்தான். பேராசிரியர் அவனுக்கு நன்றி கூறினார். அநத பியூன் அவரிடம் நீங்கள் கீழே விழ இருந்தீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அவரே அவனிடம்,"நீ இங்கில்லையென்றால் நான் கீழே விழுந்திருப்பேன்!" என்று கூறினார்.
பிரிவினுள்ளே நான் அவருக்காக காத்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப் பார்த்தவுடன்,"கடவுளே, நீங்கள் ஆவி போல காணப்படுகிறீர்கள், உங்களுக்கு என்ன நடந்தது?" என்று கேட்டேன். அவரைப் பிடித்து, ஒரு சாய்வான நாற்காலியில் உட்கார வைத்தேன்.
       அவர், "ஒரு விஷயம் நான் உன்னிடம் சொல்ல வேண்டும். என்னுடைய குழந்தைகள் மிகவும் சிறியவர்கள். – அவருக்கு இரண்டு குழந்தைகள் – என்னுடைய மனைவி அனுபவமற்ற சிறிய பெண். என் தாயும் தந்தையும் இறந்து விட்டனர். வேறு யாரும் எனக்கு கிடையாது. நான் போய் விட்டால் அவர்களை காப்பாற்ற கூடிய வேறு யாரையும் எனக்குத் தெரியாது. நான் உன்னைத்தான் நினைத்தேன்" என்றார்.
       நான், “நீங்கள் கவலைப்படாதீர்கள். நான் உங்கள் குழந்தைகள் மற்றும் உங்கள் மனைவி ஆகியோரை உங்களை விட நன்றாக வைத்துக் காப்பாற்றுவேன். ஆனால் நீங்கள் இந்த உலகத்தை விட்டு போவதற்கு முன் நான் உங்களிடம் சில குறிப்புகளை காண்பிக்க விரும்புகிறேன்." என்றேன்.
       அவர், "சில குறிப்புகளா என்ன?" என்றார்.
       "நான் போய் அவற்றை சேகரித்துக் கொண்டு வருகிறேன்" என்றேன்.
       அவர், "யாரிடமிருந்து?" என்று கேட்டார்.
       நான், "உங்கள் மனைவி, உங்கள் தோட்டக்காரர், போஸ்ட் மாஸ்டர், உங்களை இங்கே இறக்கி விட்ட பேராசிரியர், நீங்கள் விழாமல் உங்களை பிடித்த பியூன்." என்றேன்.
       அவர், "இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டார்.
       நான், "இதெல்லாமே ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். இல்லாத ஒன்றை வைத்து மனிதனை ஏமாற்ற முடியாது என நீங்கள் சொல்ல வில்லை?" என்றேன்.
       நான் சென்று எல்லா குறிப்புகளையும் பெற்று வந்தேன். அதை ஒவ்வொன்றாக அவரிடம் காண்பித்தேன். மேலும் நான் அவரிடம், "எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்று நீங்களே பாருங்கள். ஒன்றுமில்லை என்பதை உங்கள் மனைவியிடம் முற்றிலுமாக மறுத்தீர்கள். தோட்டக்காரரிடம், ஒரு வேளை ஏதாவது இருக்கலாம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் அது ஒருவேளை என்றுதான் இருக்கிறது. அதில் உங்களுக்கு உறுதி இல்லை. ஆனால் அந்த எண்ணம் வந்து விட்டது. போஸ்ட் மாஸ்டரிடம், ஆமாம், ஏதோ ஆகி விட்டது. காலையிலிருந்து ஏனோ நான் மிகவும் நன்றாக இல்லாமல்தான் இருக்கிறேன், மிகவும் சோர்வாக இருக்கிறது என்று கூறி இருக்கிறீர்கள். பேராசிரியரிடம் காரில் வரும்போது நீங்களே தூங்கும்போது ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாக ஒத்துக் கொண்டு இருக்கிறீர்கள். மிகவும் சோர்வாக உணர்ந்திருக்கிறீர்கள் – அவர் மிகவும் வலிமையுள்ள மனிதர் – தத்துவ பிரிவு வரை நடந்து வர முடியாது என நீங்களே நினைத்தீர்கள். மேலும் அந்த பியூன் குதித்து உங்களை தாவிப் பிடித்துபோது, நீங்கள் நான் விழ இருந்தேன், பிடித்துவிட்டாய், மிகவும் நன்றி என்று கூறியிருக்கிறீர்கள். இது உங்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு கருத்து. அவ்வளவுதான்." என்று கூறினேன்.
என்ன நிகழ்ந்தது பார்த்தீர்களா? இதை தொடர்ந்து நிகழ்த்தியிருந்தால் இந்த மனிதன் இறந்து போகக்கூடும். ஒரு தர்க்க வாதத்தில் அவர் ஒத்துக் கொள்ளாத ஒரு நிலையை நான் நிரூபிக்க முயன்றேன், அவ்வளவுதான். அவர் இறந்து போவதை நான் விரும்ப வில்லை. இல்லாவிடில் டாக்டரிடம் பேசி, அவர், “உனது நாட்கள் எண்ணப்படுகின்றன, அதனால் என்ன செய்ய விரும்புகிறாயோ – உயில் எழுதுவது மற்றும் வேறு ஏதாவது – அதை செய். நான் உதவக்கூடியது எதுவுமே இல்லை, உனது இதயத்தின் வாழ்நாள் முடிந்து விட்டது. அது எந்த நிமிடமும் ஓய்வெடுத்துக் கொள்ளக்கூடும்.” என்று அவரை சொல்ல சொல்லியிருக்கலாம். நான் அவரை ஒரு கருத்தின் மூலமாக கொன்றிருக்க முடியும். இந்த குறிப்புகளை பார்த்த உடனேயே அவர் சரியாகி விட்டார், மிகவும் ஆரோக்கியமாகி விட்டார். அவர் சிரித்துக் கொண்டே பியூனைப்பார்த்து, "அவர் சொல்வதை கேட்காதே, அவர் மிகவும் அபாயகரமான மனிதர், அவர் கிட்டதட்ட என்னை கொன்று விட்டார்," என்றார், மேலும் அவர் அந்த மற்றொரு பேராசிரியரிடம், "இது சரியல்ல, நீ எனக்கு ஹார்ட் அட்டாக் என்று பரிந்துரை செய்தாய்" என்று கூறினார். போஸ்ட் மாஸ்டரிடம், "நீங்கள் எனது பக்கத்து வீட்டுக்காரர், என்னை மரணம் வரை தள்ளுவது சரியா" என்று கேட்டார்,
       அவர் மிகவும் கோபமடைந்தது தனது மனைவியிடம்தான். அவர், "அவன் மற்ற எல்லோரையும் சரி கட்டிவிட்டான். – அவர் எல்லோருடைய மதிப்பையும் பெற்றிருந்தார் – ஆனால் என்னுடைய மனைவியே என்னை ஏமாற்றி விட்டாள், அவன் பேச்சைக் கேட்டாள் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. நாங்கள் ஒரு வாத போட்டியில் இருந்தோம், அது என்னுடைய மதிப்பு மரியாதை சம்பந்தப்பட்டது, நீ அதை கெடுத்துவிட்டாய்" எனக் குற்றஞ்சாட்டினார்.
       ஆனால் அவரது மனைவி, "நீங்கள் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும், இல்லாத ஒன்றிற்காக மனிதனை கட்டுதிட்டம் செய்ய முடியும் என அவர் உங்களுக்கு நிரூபித்ததற்காக நீங்கள்தான் நன்றி சொல்ல வேண்டும்." என்றார்.
       நீங்கள் இந்து அல்லது கிறுஸ்துவன் என உங்களைப் பற்றி நினைக்கிறீர்களா? அது உங்கள் மேல் திணிக்கப்பட்டது. நீங்கள் உங்களைக் கடவுள் என நினைக்கிறீர்களா? ஒரு கருத்து உங்கள் மேல் திணிக்கப்பட்டது. சொர்க்கம் நரகம் என்பது உண்டென்று நினைக்கிறீர்களா? அது வேறொன்றுமில்லை, அதுவும் திணிக்கப்பட்டது தான். உங்களுள் உள்ள அனைத்தும் திணிக்கப்ப‌ட்டதுதான். எதையுமே நீங்களே அனுபவப்படும் வரை எற்றுக் கொள்ளாதீர்கள்! ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு மாதிரியாக‌ இருந்தாலும் அது முடிவில்லாத ஆன‌ந்த‌ நிலைக்கு அழைத்துச் செல்லும். அனுப‌வ‌மே ஆன‌ந்த‌ம்...........

Monday, December 13, 2010

தன்ன‌ம்பிக்கையே ஆனந்தம்:

       ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், ஒரு உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன் வந்தான். "சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்" என்று கேட்டான். "என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்" என்றார் சாமியார்.
       கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே கூட்டம், ஒருவர் வந்து "சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான்", என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
       சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன் கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், "அதன் ரகசியம் என்ன? எனக்குக் கற்றுத்தரக் கூடாதா?" என்றார் சாமியார்.
       சீடன் சொன்னான், "உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி! வேறேதும் ரகசியமில்லை" என்றான். அதற்குள் கூடியிருந்தவர்கள், "சீடனுக்கே இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும் நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி" என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று "தொப்" என்று விழுந்தார் சாமியார்.
       சீடனை அழைத்துச் சொன்னார், "ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் உண்ணை இந்த ஊரை ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை" என்றார்.
    
       ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்.
       ஒவ்வொரு சின்ன விஷயத்திலிருந்து, பெரிய சாதனைகள் வரையிலான அனைத்திற்குமே ஆனந்தமாய், அமைதியாய், தன்நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் உள்சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
       வெற்றி பெற விரும்புகிறவர்கள், முதலில் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது காலங்காலமாய் வலியுறுத்தப்படும் கருத்து.
       "தன்னுடன் பொருந்திவாழ முடியாதவனால் பிறருடன் பொருந்தி வாழ முடியாது. தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் பிறரை ஏமாற்றுவதும் பிறரிடம் ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறும். இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவை எல்லாம் முகமூடிகளே தவிர முகங்களல்ல. தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள்"
       "வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்" என்ப‌தன் உட்பொருள், மனிதன் சோகங்களுக்குள்ளும், குற்ற உணர்வுகளுக்குள்ளும் அழுந்திவிடாமல், தன்னை உணர்ந்து, தன் இயல்பான தன்மையான ஆனந்தத்தோடு வாழ‌ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனந்தமாக வாழுங்கள்..........

நல்லவராக அல்ல ஆனந்தமானவராக‌:

       எது நல்லது? எது கெட்டது?
       உண்மையில் இதை உங்கள் உள்ளுணர்வுதான் முடிவு செய்யவேண்டும்.
       ஆனால் இன்றைக்கு யார் முடிவுசெய்கிறார்கள்?
       உங்கள் மீது...சமூகத்தாலும், குடும்பத்தாலும் சுற்றியுள்ளவர்களாலும் நிறைய எதிர்பார்ப்புகள் வைக்கப்படுகிறது. அவற்றை நிறைவேற்றினால் நீங்கள் நல்லவராகவும், நிறைவேற்றாவிடில் கெட்டவராகவும் கருதப்படுகிறீர்கள்.
       சூதாடுவது கெட்ட பழக்கம் என்று சிறு வயதிலிருந்தே கற்பிக்கப்பட்டிருந்தால், வீட்டில் அதைப் பற்றிப் பேசுவது கூடக் குற்றமாகத் தோன்றும். அதே சமயம் நீங்கள் சூதாட்டக் கிளப்பில் போய் உட்கார்ந்து கொண்டால், அந்தக் குற்றஉணர்வு மாயமாய் மறைந்துவிடும்.அங்கே சூதாடாமல் இருந்தால் தான் பலவீனமானவர்களாக கருதப்படுவீர்கள்.
       சில கொள்ளைக்கார சமூகங்களில் சிறு வயதிலிருந்தே திருடுவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் சொல்லித்தரப்படுகிறது.
அந்தக் கலையில் மேன்மை பெற, அதற்கென்று இருக்கும் கடவுள்களை வேண்டிக்கொள்ளும் பழக்கம் கூட அங்கே இருக்கிறது.
       அங்கு பிறந்து வளர்ந்தவராயிருந்தால், திருட்டுத் தொழிலில் மேன்மையானவராக இருந்தால் தான் நீங்கள் வல்லவர், நல்லவர்....
       வளர்க்கப்பட்ட விதத்தில், மறுபடி மறுபடி சொல்லிக் கொடுக்கப்பட்டதை வைத்து தான் நல்லது, கெட்டது என்று பிரித்துக்கொண்டீர்கள்.
       சமூகத்தில் உங்களை நல்லவராக காட்டிக்கொள்ள, இயல்பை மறைத்து வாழத்துவங்கினால் தான் பிரச்சனை!
       இப்படித்தான் நல்லது செய்பவனே சொர்கத்துக்குப் போவான் என்று மற்றவர்கள் சொல்லி சொல்லி மிகக் கவனமாக வாழ்ந்தார் சங்கரன்பிள்ளை. ஒரு நாள் அவர் வாழ்க்கை முடிந்து போனது.
அடுத்த காட்சி சொர்கத்தின் வாசலில் அறங்கேறியது. அவரைக் காக்க வைத்துவிட்டு அங்கிருந்த தேவதைகள் கூடி கூடி பேசினர். பின்பு அவரிடம் வந்தனர்.
       "ஒரே ஒரு கெட்டது செய்திருந்தால் முதல் மாடி. இரண்டு கெட்டகாரியங்கள் செய்திருந்தால் இரண்டாவது மாடி என்று சொர்கத்தில் வெவ்வேறு மாடிகள் இருக்கின்றன. ஒரு பாவமும் செய்யாமல் உங்களைப் போல் இதுவரை யாரும் இங்கே வந்தது இல்லை. உங்களை எங்கே அனுப்புவது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது!" என்றனர்.
       சங்கரன்பிள்ளை அதிர்ந்தார்."என்னது நல்லவனாயிருந்ததால் பூமியில் தான் என்னை யாரும் சேர்த்துக் கொள்ளவில்லை. இங்கேயுமா?"
       "ஆமாம் மிஸ்டர் பிள்ளை! அடுத்த மூன்று மணி நேரத்திற்க்கு உங்கள் உயிரைத் திரும்பத் தருகிறோம், சீக்கிரம் போய் ஏதாவது தப்பை செய்து விட்டு வாருங்கள்."
       பூமியில் சங்கரன்பிள்ளையின் உடல் எழுந்தது. அவசரத்துக்கு என்ன பாவம் செய்வது? என்று யோசித்தார்.
       பக்கத்துத் தெருவில் இருக்கும் முதிர்கன்னி எப்போதும் அவரைப் பார்த்தால் கண்ணால் அழைப்பாள்.
       மனைவி இருக்கும் போது அடுத்த பெண்னைப் பார்ப்பதே பாவம் என்று அவளைத் தவிர்த்து வந்தார்.
       இப்போது அங்கே விரைந்தார்.
       "உன்னோடு சந்தோசமாக இருக்கவே வந்தேன்" என்றார். அவளும் ஆச்சர்யமாகி விருப்பத்தோடு இண‌ங்கினாள்.
       எல்லாம் முடிந்து புறப்பட்ட போது,"அப்பாடா! ஒரு கெட்ட காரியம் செய்துவிட்டேன். சொர்க்கத்தில் ஈடம் உண்டு" என்று சங்கரன்பிள்ளை நிம்மதியானார்.
       அவளோ, அவரது கரங்களைப் பற்றிக் கொண்டு நன்றியுடன் சொன்னாள்..." இன்பத்தையே அனுபவிதிராத ஒரு பெண்ணுக்கு நீங்கள் எப்பேர்பட்ட நல்லகாரியம் செய்திருக்கிறீர்கள் தெரியுமா?"
       சொர்க்கத்தின் கதவுகள் அறைந்து மூடப்படும் சத்தம் இங்கேயே சங்கரன்பிள்ளையின் காதுகளில் விழுந்தது.
       நல்லவர்களாக் தங்களை நினைத்துக்கொள்பவர்கள் இப்படித்தான் இங்கேயும் வாழாமல், அங்கேயும் இடமில்லாமல் அல்லாடுகிறார்கள்.
       உலகில் பெரும்பாலான துன்பங்கள் தங்களை நல்லவர்கள் என்று நினைத்துக் கொள்பவர்களால்தான் நிகழ்கின்றன.
       உண்மையில் நல்லது, கெட்டது என்பது செயலில் இல்லை. எண்ணத்தில் இருக்கிறது.
       இதைப் பற்றி ராமகிருஷ்ண பரமஹம்சர் வழக்கமாக சொல்லும் ஒரு கதை......
       வாரக்கடைசியில் விலைமகளைத் தேடிப்போகும் இரு நபர்கள் இருந்தார்கள்.
       ஒருமுறை பகவத் கீதை சொற்ப்பொழிவு அங்கே வாரக் கடைசியில் நடந்தது. ஒருவன் அதற்குப் போவது என்று முடிவு செய்தான். அடுத்தவனோ வழக்கம் பொல் விலைமகளைத் தேடிப் போனான்.
       சொற்பொழிவில் இருந்தவனுக்கோ மனதில் "முட்டாள்த் தனமாக இங்கே வந்து சிக்கிக் கொண்டுவிட்டோமே, அங்கே நமது நண்பன் ஜாலியாக இருப்பானே" என்று எண்ணிக்கொண்டிருந்தான்.
       விலைமகளிடம் போனவனோ, " அடடா, வாழ்க்கையில் வளர்ச்சிக்கு முக்கியமான தேவை பகவத்கீதையல்லவா! நண்பனுக்கு இருந்த தெளிவு நமக்கில்லையே?" என்று வருந்தினான்.
       இதில் யார் நல்லவன்... யார் கெட்டவன்?
       கீதையைக் கேட்டாலே புண்ணியம் என்று தன்னை ஏமாற்றிக்கொண்டு, விலைமகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தவனை விட, விலைமகளுடன் இருந்தாலும் கீதையை நினைத்தவன் மேலல்லவா?
       வஞ்சமோ, வேதனையோ இன்றி, அன்போடு செய்யும் எந்தக் காரியமும், ஆனந்தத்தை (உங்களுக்கும், பிறருக்கும்) வழங்கும் எந்தக் காரியமும் நல்லகாரியம் தான்.
       ஒரு மானை புலி வேட்டையாடுவது அதன் மீதுள்ள வஞ்சத்தால் அல்ல... பசியால்! சக மனிதனை மனதாலும் உடலாலும் வருந்தச் செய்யும் பாவமல்லவா முற்றிலும் கொடியது?
       மற்றவர்கள் கண்களீல் நல்லவராகத் தெரிய வேண்டும் என்று முயற்சிப்பதை விட்டுவிட்டு, உண்மையானவராக, அன்பானவராக, ஆனந்தமானவராக, தூய்மையானவராக் வாழப்பழகுங்கள்...

வாழ்க வளமுடன்!