Wednesday, May 30, 2012

ஒழுக்கம் என்றால் என்ன? ஆனந்தம்


      ஒழுக்கத்தை உருவாக்கவேண்டும் என்கிற தவிப்பு தலைமை நிலையில் இருக்கும் பலருக்குஏற்படுகிறது. ஒழுக்கம் என்றால் என்ன என்கிற புரிதலை முதலில் ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
      வேலை பார்க்கும் சூழ்நிலையில் ஒரு ஒழுங்குநிலையைக் கொண்டுவருவது தான் ஒழுக்கம் என்று பலரும் கருதுகிறார்கள்.
      இதற்க்கு பெரிதாக முயற்ச்சிகள் எதுவும் தேவையில்லை. ஒழுக்கம் குறித்து ஒன்றும் பேசாமல் உரிய சூழ்நிலையை உருவாக்கினாலே நிலமை கட்டுக்குள் இருக்கும்.
      இதில் சிலருக்கு வழிகாட்டுதல்கள் தேவைப்படக்கூடும். ஆனாலும் கூட ஒரு நிறுவணத்திலோ பணியிடத்திலோ இந்த்ச் சூழலை உருவக்குவது எளிதான விஷயம் தான்.
      ஆனால் துரதிருஷ்ட வசமாக என்ன நடக்கிறது தெரியுமா? நீங்கள் விரும்பும் ஒன்றை யாரையாவது செய்ய வைப்பதற்க்காக நிர்பந்திப்பது என்று தான் பலரும் கருதிக்கொண்டிருக்கிறார்கள்.
எனவே ஒழுக்கம் என்றாலே யாரையாவது கட்டுப்படுத்துவது, கண்டிப்பது, தண்டிப்பது, தட்டிவைப்பது, என்றெல்லாம் தவறான புரிதல்கள் உலவுகின்றன. இதுவல்ல ஒழுக்கம்.
      ஒருவர் புதியதாக ஒன்றை கற்றுக் கொள்வதற்காக திறந்த மனதுடன் இருப்பாரேயானால் அதன் பெயர் தான் ஒழுக்கம். கற்றுக் கொள்வதன் அம்சமே ஒழுக்கம் என்பது. எவெரெவர் எந்த நிலையில் இருந்தாலும் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இயல்பு எப்போதும் அவசியம். இதற்க்கு என்ன தேவை என்றால் செய்கின்ற வேலைகளில் முழு ஈடுபாடும் அர்ப்பணிப்பும் தான்.
      ஈடுபாடு இல்லாமலேயே வேலை செய்தால் செய்வதையே திரும்பத்திரும்ப செய்து கொண்டு இருப்பார்களே தவிர புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள்.
      புதிய சிந்தனைகள் யோசனைகள் எல்லாம் உருவாவது கற்றுக்கொள்வதற்கான திறந்த மனம் இருக்கின்ற போதுதான்.
      ஒரே வேலையை ஒரே மாதிரி பலர் செய்து கொண்டிருப்பார்கள். அதில் ஏதாவது எளிய‌ ஒரு யோசனையை யாரவது சொன்னால் "அடேடே இத்தனை நாட்கள் இதை கவணிக்காமல் விட்டு விட்டோமே" என்று தோன்றும்.
      உதாரணமாக தரையை தூய்மை செய்கிர வேலையை ஆண்டாண்டு காலமாய் செய்து வருகிறோம். அதி சின்னதாய் ஒரு புதுமையை ஒருவர் புகுத்திய பிறகு அதன் அடிப்படையே மாறிவிட்டது.
      அதே நேரம் கற்றுக்கொள்ளும் மனநிலையை உடையவர்களிடம் தான் புதிதாக ஏதவாது யோசனைகள் தோன்றும். அந்த மாதிரியானவர்களை தொடர்ந்து நீங்கள் ஊக்குவிக்க வேண்டும்.
      அதே நேரம் பலரையும் நீங்கள் அந்த மாதிரி ஊக்குவிக்கும் போது பலவிதமான யோசனைகள் வரும். அது நூறு எண்ணிக்கை கூட வரலாம். அதில் உருப்படியான இர‌ண்டு அற்புதமான பலன் தருவதைக் காணலாம்.
      உங்கள் நிறுவணத்தில் இத்தகைய கற்றுக்கொள்ளல் நிகழ்கிறதா என்பதை கண்காணிக்க வேடியது அவசியம். அப்படி செய்யும் போது அது வளர்ச்சிக்குத் தானே என்றும் சந்தேகப்பட்டு அல்ல என்பதை நீங்கள் தெளிவு படுத்த வேண்டியது அவசியம்.
      இத்தகைய திறந்த நிலை ஏற்பட்டால், ஒழுக்கம் என்பது எல்லோரும் விரும்பிக்கொண்டு வரும் விசயமாகும்.
      மாறாக ஒருவர் மற்றவர் மீது ஒழுக்கத்தை திணிக்க முற்ப்பட்டால். அது சர்வாதிகாரத்தில் போய் முடியும்.
      எனவே ஒரு குழுவிலோ ஒரு நிறுவணத்திலோ ஒழுக்கத்தை கொண்டு வர ஒரே வழி ஈடுபட்டைக் கொண்டு வரவேண்டியதுதான். ஈடுபாடு இல்லாத இடத்தில் ஒழுக்கத்தை கொண்டு வர முயற்ச்சித்தால் அதை உடைப்பதற்க்கு ஆயிரமாயிரம் வழிகளைக் க‌ண்டறிவார்கள். பணிச்சூழலில் ஈடுபாட்டைக் கொண்டு வாருங்கள், நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா ஒழுக்கங்களும் தாமாக வரும்.
...........................................................வாழ்க வளமுடன்...........................................................

Tuesday, May 29, 2012

பரிட்சையில் தோல்வியா? ஆனந்தம்!


      பரிட்சையில் தோல்வியா? அதனால் விரக்தியா? விரக்தி என்பது மிகவும் மோசமான ஆரம்பம். முதலில் விரக்தி வரும், அப்புறம் மனச்சோர்வு வரும், அப்புறம் மனத்தளர்வு வரும்.
      உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஒருமுறை சாத்தான், தன் வியாபாரத்தை நிறுத்திவிட நினைத்தார். எனவே தான் இதுவரை உபயோகித்து வந்த அத்தனை கருவிகளையும் விற்று விட விற்பனைக்கு வைத்தார். கோபம், காமம், பேராசை, பொறாமை, அகங்காரம் ஆகிய அனைத்தையும் அவர் விற்பனைக்கு வைத்தார்.  மக்கள் அவை அனைத்தையும் வாங்கிவிட்டனர். அப்படியும், அவருடைய பையில் ஏதோ கொஞ்சம் மிச்சமிருப்பதை ஒருவர் பார்த்துவிட்டார். எனவே பையில் இன்னும் என்ன இருக்கிறது என்று கேட்டனர்?' அதற்க்கு சாத்தான் 'இவையெல்லாம் மிகத்திறமையான கருவிகள். ஒருவேளை நான் மீண்டும் வியாபாரத்தில் இறங்கினால், இவை எனக்குத் தேவைப்படும். எனவே இவற்றை விற்ப்பனைக்கு வைக்கப் போவதில்லை. அனைத்திற்க்கும் மேலே இவை மிகவும் விலை உயர்ந்தவை.  ஏனென்றால் இவை உயிரை அழிப்பதற்க்கான மிகச்சிறந்த கருவிகள் என்றார்.' அவை என்ன என்று கேட்டனர் மக்கள். அதற்க்கு சாத்தான் அவைகள் " மனத்தளர்வு மற்றும் மன அழுத்தம்" என்றார்.
      உங்களுக்குள் உற்ச்சாகம் இல்லாமல் போனால், மன அழுத்தம் வந்து விட்டால், நீங்கள் உயிரோட்டத்தையே இழந்து விடுவீர்கள். விரக்தி தான் மனாழுத்ததிற்க்கும், மனச்சோர்வுக்கும் முதல் படி.
      சரி எப்படி விரக்தியை எப்படி விரட்டி அடிப்பது? அதை நீங்கள் விலைக்கு வாங்காமல் இருந்தாலே போதும்! விரக்தி தானக உங்களுக்குள் வராது. ஏனென்றால் உயிர் என்பதும் உற்ச்சாகம் என்பதும் வேறு வேறு அல்ல. ஒரு எறும்பு எப்படி செயல் படுகிறது என்று பாருங்கள்! அதை நீங்கள் நிறுத்த முயற்ச்சி செய்தால் அது எப்பொதாவது விரக்தி அடைகிறதா? அல்லது நம்பிக்கை இழக்கிறதா? அது சாகும் வரை தன்னுடைய முயற்ச்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
      ஒரு கூரையில் வளரும் சிறு செடியை பாருங்கள்! கூரையில் கொஞ்ம் மண் மட்டும் கிடைத்தால் போது சில சமயம் 25அடி வரை கூட தன்ன்னுடைய கிளையை நீட்டிக்கிறது. அந்தச் செடி எபோதாவது விரக்தி அடைகிறதா? ஏனெனில் விரக்தி என்பது உயிருக்கு கிடையாது. மனதிற்க்கு மட்டும் தான்.
      வரயரைகளுக்கு உட்பட்ட மனம் எப்பொழுதும் பொய்யான எதிர்பார்ப்புகளுடன் வேலை செய்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் வாழ்க்கை நிஜங்களுடன் ஒத்துப்போகாதபோது, உங்கள் எதிர்பார்ப்புகள் வெறும் ஆடம்பர ரீதியாக அமையும் போது, பின்னர் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது, உலகத்தின் முடிவுக்கே வந்து விட்டதை போன்று உங்கள் மனம் உணர்கிறது.
      மாணவர்கள் பலர் தேர்வுகளில் தோல்வி அடையும் போது தற்கொலை செய்து கொள்கிறார்கள் இல்லையா? ஏனென்றால் தன் வாழ்க்கையே அந்த தேர்வுகளில் தான் அடங்கியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், நீங்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்க்காக வழிபடும் ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு ஆகியோர் எந்தத் தேர்விலும் வெற்றி பெறவில்லை. தெரியுமா உங்களுக்கு? ஒரு பரிட்சையில் தேர்வு பெறக்கூட அவர்கள் ஆர்வம் காட்டியதில்லை தெரியுமா?
      ஆகவே பரிட்சையில் தேர்வு என்பது ஒரு பெரிய விசயமே இல்லை இல்லையா? சமூக சூழ்னிலைகளுக்காக ஒரு தேர்வில் தேர்வு பெற விரும்புகிறீர்கள் என்பது சரிதான். ஆனால் அதற்க்காக தெர்ச்சி பெறாமல் போனால் விரக்திஅடைவது என்பது முழுக்க மனம் சம்பத்தபட்ட விசயம். உயிர் சம்பத்தப்பட்டதல்ல. நீங்கள் விரக்தியில் இருக்கும் போது உங்கள் மனம் "இது என்ன வாழ்க்கை? செத்துவிடு' என்று உங்க‌ள் மனம் தான் சொல்லும், உயிர் சொல்லாது."  உங்கள் வாயையும், மூக்கையும் இரண்டு நிமிடங்களுக்கு பிடித்து வைத்து இருந்து அடைத்துப் பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் உயிர் அய்யோ என்னை வாழவிடு என்று சொல்லும்.
      நீங்கள் விரக்தியில் ஏதாவது செய்கிறீர்கள் என்றால் அது அறியாமை, முட்டாள்த்தனம். ஒரு முட்டாள் தான் தன்னௌடைய உயிருக்கு எதிராக செயல்படுவான். ஆனால் உங்களுக்கு வரும் விரக்தி, மனச்சோர்வு, மனாழுத்தம் எல்லாம் நீங்கள் உங்கள் உயிருக்கு எதிரான வேலைதான். ந்னிங்கள் முட்டாளாக இருந்தால் மட்டுமே இப்படி செய்வீர்கள். புத்திசாலியாக இருந்தால் எப்படி விரக்தி வரும்? உங்கள் புத்திசாலித்தனத்தை செயல்படாமல் தடுத்து விட்டீர்கள். உற்ச்சாகமாக இருங்கள்! பிடித்ததை மட்டுமே செய்யுங்கள், ஒவ்வொரு செயலிலும் ஆனந்தத்தை மட்டுமே நாடுங்கள்! உங்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
...........................வாழ்க வளமுடன்!............................

Thursday, May 24, 2012

குழந்தையின் எதிர்காலம் நன்றாக அமைய? ஆனந்தம்


      குழந்தையின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். முதலில் உங்களுடைய எண்ணங்களை உங்கள் குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் இறந்தகாலம் சார்ந்தவை.  உங்களுடைய முட்டாள் தனமான எண்ணங்களை குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். குழந்தையே தன்னுடைய வாழ்க்கையை அதன் சொந்த வழியில், சொந்தப் புரிதலில், சொந்த அறிவுணர்ச்சியோடு உணர்ந்து,  உள்வாங்கிக் கொள்ளட்டும்.
      குழந்தை பிறந்த நாள் முதல் நம்முடைய மதம், ஒழுக்க விதிகள், கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகள் என்று எல்லா முட்டாள்தனங்களையும் அதன் மீது சுமத்தி வருகிறோம். இல்லையா? குழந்தை மலர ஆரம்பிப்பத்ற்கு முன்பாகவே அதை அழித்து விட முனைகிறீர்கள். இந்த உலகில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்கள், தொழிலாளிகளோ, பெண்களோ அல்லது விலங்குகளோ அல்ல. குழந்தைகள் தான் மிகவும் சுரண்டப்படுபவர்கள்.
      நீங்கள் தான் தனக்கு மிகவும் நம்பகமானவர் என்று நினைத்து குழந்தை உங்களிடமிருந்தே ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால் நீங்களோ அதன் வாழ்க்கையை மிக மோசமாக சீர்குலைக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் துன்பப்படுமாறு எப்படியும் பார்த்துக் கொள்கிறீர்கள்.
      அன்பை மட்டும் கொடுங்கள்....போதும்..... வாழ்க வளமுடன்

Tuesday, May 22, 2012

தலைவராக விரும்புகிறீர்களா? ஆனந்தம்



      இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவிதமான மக்கள் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்பவர்கள். இன்னொரு விதமான மக்கள் இருக்கிறார்கள் இவர்களை  வேறு யாராவது தள்ளி விட்டுக்க்கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் எப்பொழுதும் அடிமைகளாகவும், வேலையாள் போலவும் தான் இருப்பார்கள். ஆனால் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்ளும் மக்கள் எப்பொழுதும் தலைவர்களாக இருப்பார்கள்.
      நீங்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையை கையாள வேண்டும் என்று விரும்பினால், அது வீடோ அல்லது அலுவலகமோ, அந்த சூழ்நிலைக்கு முழுமையாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லைகளைக் கடந்து அந்த சூழ்நிலைக்கான தீர்வுக்காக பணி புரியத்தயாராக இருக்க வேண்டும். இப்படித் தயாராகும் போது உங்களை வேறு யாரும் இயக்கத் தேவையில்லை. உங்களை நீங்களே இயக்கிக் கொள்வீர்கள். தேவையான சுதந்திரமும் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு தாலைவராக ஏற்றுக் கொள்ளபடுவீர்கள்.
      எனக்கு அது வராது, என்னால் அது முடியாது, நான் இவ்வளவு தான் செய்யமுடியும் என்று எப்பொழுதும் தன்னைத் தானே குறுக்கிக் கொள்பவர்கள் என்றென்றும் அடிமைகளாகவும், மற்றவர்களால் விரட்டப்படும் நிலையில் தான் இருப்பார்கள். எனவே தலைவராக விரும்புகிறீர்களா? அல்லது அடிமையாகவே காலத்தை கழிக்க விரும்புகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

.....................................................வாழ்க வளமுடன்...........................................................................