Wednesday, November 17, 2010

வாழ்க்கை என்பதே ஆனந்தம் தான்:

      பாதி வேலையில் இருக்கும் போது எதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறோம் என்று சில சமயம் களைத்துப் போகிறேன். எதை சாதிக்க நான் பிறந்தேன்? என் வாழ்கையின் உண்மையான நோக்கம் என்ன?
      சங்கரன்பிள்ளை தன் மனைவியிடம் சொன்னார்....
            "இந்த பேட்டரி என் வாழ்க்கையை விட உன்னதமானது!"
            "எப்படி சொல்கிறீர்கள்?"
            “இதில் பாசிடிவ் பக்கம் என்று ஒன்று இருக்கிறதே!"
      நம்பிக்கை இழந்து, இதேபோல் துவண்டிருக்கும் சோகமான மனங்களில் தான், வாழ்கைக்கு என்ன நோக்கம் என்ற கேள்வி சுழலும். நீங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் போது, இந்த கேள்வி வந்து இருக்கிறதா?
      வாழ்கையின் நோக்கம் என்ன? புகழும் பெருமையும் சேர்ப்பதற்கு தான் என்பார் ஒருவர். மற்றவர்களுக்கு உதவியாக இருந்து விட்டு போவது தான் என்பார் அடுத்தவர். அன்பையும் காதலையும் பிறருக்கு அள்ளிக்கொடுப்பது தான் என்று அடித்துச் சொல்லுவர் இன்னொருவர். இல்லையில்லை, கடவுளை அறிந்துகொள்வது தான் என்று போதனை செய்வார் மதகுரு.
      இப்படி நூறு பேர், நூறு தத்துவங்கள் சொன்னாலும், வாழ்க்கை அவற்றை அடித்து நொறுக்கி விடும். வாழ்க்கை மறந்தாலும் மரணம் அவற்றை தகர்த்து தூள்தூளாக்கி விடும்.
      சங்கரன்பிள்ளை ராணுவப் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருந்தார்.
"அதிகாரி வந்தார் இன்று துப்பாக்கி சுடும் பயிற்ச்சி கொடுக்க வேண்டியவர் வரவில்லை, நேரத்தை வீணடிக்காமல், கிரவுண்டைச்சுற்றி பத்துமுறை ஓடுங்கள்." என்றார்
      "எதிரிகளை சுட்டுத்தள்ளத் தெரியாவிட்டால் பரவாயில்லை... ஓடித் தப்பிக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லித்தருகிறார், நம் அதிகாரி" என்றார் சங்கரன்பிள்ளை.
      இப்படித்தான் நீங்களும், வாழ்க்கையின் முதன்மையான நோக்கத்தை விட்டு, வேறு எதிலோ கவனத்தை திசை திருப்பி இருக்கிறீர்கள்.
      அப்படியானால், வாழ்க்கையின் முதன்மையான நோக்கம் தான் என்ன? வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம் தான். அதை ஆனந்தமாக, உயிர்ப்போடு வைத்திருப்பதைவிட‌ வேறு என்ன முதன்மையான நோக்கம் வேண்டும் வாழ்க்கைக்கு? இதைப் புரிந்து கொள்ளாமல் இது கிட்டவில்லை, அது கிடைக்கவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை முட்டாள் தனம்? குறைபாடு கொண்ட மனம் தான் வாழ்க்கைகு  வேறு நோக்கங்கள் தேடுகிறது. 
      இந்த வாழ்கையை ப்ற்றி நீங்கள் புரிந்து கொண்டதைவிட சற்றே கூடுதலாக புரிந்து கொள்ளும் முயற்சியில் தானே பணம், இன்பம், காதல், கடவுள், சொர்க்கம் என எதன்னெதன் பின்னாலோ ஓடுகிறீகள்.
      ஒரு சிறு சாவித்துவரத்தி வ்ழியே, வானத்தின் முழுமையை பார்க்க முயல்வது போன்றது உங்கள் முயற்சி. அந்த அறியாமையை உங்கள் பலம் என்று நினைத்திருப்பது கொடுமை.
அமெரிக்காவில், புழக்கத்தில் இருக்கும் ஒரு ஜோக்,
      ஜார்ஜ் புஷ் ஒரு முறை, பள்ளிக்கூடத்திற்க்கு சென்று குழந்தைகளை சந்திதார்.
            "பெரும் துயரம் என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு தரமுடியுமா?" என்று கேட்டார்.
            "விளையாடிக்கொண்டிருக்கும் தோழன் மீது ஒரு கார் வந்து மோதி, அவனைச் சாகடித்தால், அது தான் துயரம்!"
            "அது தான் துயரமல்ல, விபத்து!" என்றார் புஷ்.
      அடுத்த மாணவி எழுந்தாள்...., "பள்ளிக் குழந்தைகள் பயணம் செய்யும் பஸ், மலையிலிருந்து உருண்டு விழுந்து சிதறிப் போனால், அது துயரம்!"
           "அது பேரிழப்பு, துயரமல்ல!"
      கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஜோ எழுந்தான்....
நீங்கள் பயணம் செய்யும் விமானம், ஒரு ராக்கெட் தாக்கி சிதறி எரிந்து நீங்கள் இறந்து போனால், அது துயரம்!"
      புஷ் அமோதித்து புன்னகைத்து, " எப்படி சரியாக சொன்னாய்?"
      உங்கள் விமனத்தை ராக்கெட் மோதினால், அது விபத்தாக இருக்கவும் முடியாது, ஏந்த விதத்திலும் பேரிழப்பாக இருக்க முடியாது, அதனால் தான், சொன்னேன்" என்றான் ஜோ.
      வாழ்க்கைக்கு நோக்கம் கற்பிப்பவர்கள், இப்படித்தான் அறியாமையில் இருந்து கொண்டே, தங்களை புத்திசாலிகள் என்று தீவிரமாக‌ நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
      வாழ்க்கையின் முழு ஆழத்தையும், அகழத்தையும் அதன் வேர்கள் வரை ஊடுருவி மனம் புரிந்து கொண்டதே இல்லை. அதனால்தான் வாழ்க்கைக்கு ஏதாவது மேலோட்டமான நோக்கத்தை தேடிக்கொண்டே இருக்கிறது.
      தத்துவங்கள், கோட்பாடுகள், விவாதங்கள், விளக்கங்கள், புராணங்கள், மறைநூல்கள் எல்லாமே, கேள்வி கேட்கும் மனத்தை சிறிது காலத்துக்கு பயன் படுமே தவிர, அடிப்படை கேள்வி காணாமல் போய் விடாது. மீண்டும் அது தலை நிமிர்ந்தும்.
      ஒரு சிறு மணல் துகளை, முழுமையாக பார்க்க முடிகிறதா என்று பாருங்கள். அதன் ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு புரட்டினால் தானே மறுபக்கத்தை பார்க்கமுடிகிறது? இப்படி பகுதி பகுதியாக ஐம்புலன்களால் சேகரித்த துண்டுதுண்டான தகவல்களை, கொண்டு முழுமையாக பார்த்துக் விட்டதாக எடை போடமுடியாது.
வாழ்க்கையின் முழுபரிணாமத்தையும் புரிந்து கொள்ள, ஐம்புலன்களின் எல்லையையும் தான்டி போக வேண்டும். ‌
வாழ்க்கையின்  உண்மையான நோக்கம் அதை முழுமையாக வாழ்வது தான். அதை ஒழுங்காகச் செய்யாமல், அதற்கு பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும் தான்.
      பிரேக்கை அழித்திக்கொண்டே காரை செலுத்தப்பார்த்தால் என்ன ஆகும்? கார் தினறும், நகந்தாலும் கடினமாகத் தோன்றும். தேய்மானம் அதிகமாகும். அப்படிப்பட்ட பிரேக்காக நீங்களே இருக்கிறீர்கள்.
      உஙளைக் கரைத்து விட்டால் வாழ்க்கை அதன் முழுமையை நோக்கி, ஆனந்த்தை நோக்கி அதுவே பயணிக்கும், இயல்பாக மலரும். அதற்குத் தான் யோகா....
வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment