Saturday, November 6, 2010

ஆனந்தத்திற்கான வழி‍ - சக்திமாற்றம்:

      உலகில் சக்தியற்றவர்கள், பாதகங்கள் செய்வதில்லை. சக்திசாலிகளே பாபம் செய்கின்றனர், அவர்களுடைய அபரீதமான சக்தி அவ்வாறு அவர்களை செய்ய வைக்கின்றது. பலசாலிகளே தீயசெயல்களில் இறங்குகின்றனர். ஏனெனில் சக்தியை சரியான வழியில் உபயோகிக்கும் முறை அவர்களுக்கு தெரியவில்லை. அவர்கள் குற்றவாளிகள், பாவிகள் ஆகிவிட்டனர். அவர்களுக்கு சரியான வழி காட்டப்பட்டால் அவர்களும் ஆனந்தத்தை அடைவார்கள். அங்குலிமாலன்  கதை…….
      அங்குலிமாலன் எத்தனை கொலைகள் செய்தான். ஆயிரம் பேர்களை கொல்வதாக சபதம் செய்திருந்தான். தொள்ளயிரத்து தொண்ணூற்று ஒன்பது பேர்களை கொன்று விரல்களை மாலையாக அனிந்திருந்தான்.கடைசி ஆள் தேவை.   
     அங்குலிமாலன் வருவதாக செய்தி கிடைத்தாலே அந்த இடம் ஜனசஞ்சாரம் அற்றுபோய்விடும். சிறிதும் யோசனையின்றி யார் வந்தாலும் கொன்று வந்தான். அரசனும் நடுங்கினான், பெரிய சேனையை அனுப்பி வைத்தும் அவனை பிடிக்கமுடியவில்லை.

      புத்தர் ஒரு கிராமத்தின் வழி வந்தபோது, மக்கள் அவரை எச்சரித்து தடுத்தனர். அந்த வழி போகாதீர்கள் அங்குலிமாலன் வருகிறான் உங்களைக் கூட கொல்லத் துணிவான் என்று சொன்னனர்! ஆனால் புத்தர் நாம் யார் பொருட்டும் பாதை மாறவேண்டாம், மேலும் நாம், அங்குலிமாலன் அங்கே இருந்தால் அந்த வழி செல்ல வேண்டியது அவசியமாகிறது என்று தொடர்ந்தார்..அவன் என்னை அழிக்கிறானா? நான் அவனை அழிக்கிறேனா? என்று பார்ப்போம் என்றார்!
      தங்களிடம் தான் ஆயுதம் ஏதும் இல்லையே நீங்கள் எப்படி அவனை அழிக்கமுடியும்? என்றனர். இவ்வாறு சொன்ன புத்தர் அங்குலிமாலனை எதிர்பாராமல் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தற்காக மிகவும் மகிழ்ந்தார்.
      புத்தர் அந்த‌ வழியே சென்றார். அங்குலிமாலன் அவரை தொலைவில் இருந்தே கண்டுகொண்டான். அயுதமற்ற ஒரு பிட்சு அமைதியாக வந்துகொண்டிருப்பதை கண்டான். உடனே அவன் உரத்த குரலில் "இங்கே வராதே நீ ஒரு சன்யாசி என்பதனால் எச்சரிக்கிறேன் கிட்டே வந்தால் உன்னைக் கொன்று விடுவேன் திரும்பிப்போ, நான் யாருக்கும் கருணை காட்டமாட்டேன்" என்றான்!

      புத்தர், "நானும் யாருக்ககவும் திரும்பிப்போக மாட்டேன், ஒரு சன்யாசி எப்போதும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டான். நீயும் முன்னே வா நானும் வருகிறேன்" என்று கூறினார்.
அங்குலிமாலனுக்கு ஆச்சரியமாகியது, தன் கோடாரியை எடுத்துக்கொண்டு நேரே புத்தரிடம் வந்தான். இருவரும் ஒரு மரத்தடியில் சந்தித்துக்கொண்டனர். அங்குலிமாலன் அவரிடம் " நீ வலிய வந்து மரணத்தை ஏற்கிறாய்" என்றான்.
      புத்தர். "என்னை வெட்டும் முன் இந்த மரத்தினில் இருந்து நான்கு இலைகளை பறித்துத் தரமுடியுமா?" என்று கேட்டார்.
உடனே அங்குலிமாலன் தன் கோடாரியை வீசினான் அதில் மரத்தின் ஒரு கிளையே வெட்டப்பட்டு விழுந்தது. அங்குலிமாலன் "நான்கு என்ன நாலாயிரம் இலைகள் இதோ" என்றான்.
புத்தர்' "மற்றுமொரு வேலைசெய் என்னைக் கொல்லும் முன் இந்த கிளையை முன்போலவே மறுபடியும் இணைத்துவிடு" என்றார்.
      அவன் விழித்தான்! அது கஷ்டம், இயலாத காரியம்" என்றான்.
புத்தர் "பறிப்பதும், வெட்டுவதும் குழந்தைகள் கூட செய்ய முடியும். இணைக்க முடிந்தவன் தான் சக்தியுள்ளவன், பலசாலி. நீ மிகவும் பலமற்றவன். உன்னால் பறிக்க மட்டுமே முடியும். இனி நீ பலசாலி என்ற எண்ணத்தை இத்துடன் விட்டுவிடு. ஒரு இலையை கூட இணைக்க முடியாதவன்!" என்றார்.
      அவனது சுய அபிமானத்திற்கு முதன் முறையாக அடி விழுந்தது, ஒரு கணம் தீவிரமாக யோசித்தான். பிறரைக் கொல்வதும், அழிப்பதும் எந்த பலவீனனும் செய்ய முடியும் என்பது அவனுக்கு உறைத்தது. நான் பலவீனன் அல்ல?
சரி தான்! "இந்த இலையை இணைக்கவும் ஏதாவது வழியிருக்கிறதா? என்று கேட்டான்.
      ஆம்! நாங்கள் அந்த வழியிலேயே சென்றுகொண்டிருக்கிறோம்! என்றார் புன்னகையுடன்.      அவன் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான். நீயும் வா என் பின்னே என்றார்! அங்குலிமாலனும் அவர் பின்னே கோடாரியை வீசிவிட்டு நடக்கலானான்! பிட்சுவானான்! ஆனந்த‌த்தை அடைந்தான்... புத்தர் அங்குலிமாலனுக்கு அவனுள் இருந்த அபரீதமான சக்தியை மாற்ற‌மடைய செய்து ஆனந்தத்தை அடையச் செய்தார்

No comments:

Post a Comment