Saturday, November 20, 2010

ஆரோக்கியமே ஆனந்தம்:

    ஆரோக்கியத்திற்க்கு உடலும், மனமும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். உடலில் நேருவது மனதில் நேரும், மனதில் நேருவது உடலில் பிரதிபலிக்கும்.
    உடலாரோக்கியத்திற்க்கு முதலில், உணவு அளவுக்க‌திகமாக இருக்கக்கூடாது, உடலை அசதியில் தள்ளும் அளவுக்கு இருக்கக்கூடாது. அதிக அளவு உணவு உட்கொண்டால், உடலின் சக்தி முழுவதும் அதை ஜீரணிப்பதிலேயே செலவாகிவிடும், உடல் அசதி அடையும்..... சோம்பேரித்த‌னம் வந்துவிடும்....
    அதே நேரம் உணவு மிகவும் உத்வேகம் அளிக்கும் படியும் இருக்ககூடாது. அந்த அதிக சக்தி வேறு தேவையற்ற உணர்ச்சிகளை எல்லாம் தூண்டிவிடும்.
    உணவு திருப்தியும் சுறுசுறுப்பும் அளிக்கவேண்டும். அந்த மாதிரி உணவே நல்லது. சமமான உணவு.
    உடலாரோக்கியத்திற்க்கு சிறிதளவு உடற்ப்பயிற்ச்சி அவசியம். உடற்பயிற்ச்சி உங்கள் உடளில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், கற்றோட்டம் இவை அனைத்தையும் சீராக வைத்திருப்பதற்க்கு உதவுகிறது.
    உடற்பயிற்ச்சி உங்கள் உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்க்கு உதவும். அப்படி கழிவுகள் வெளியேறி, எல்லா ஓட்டங்களும் சீராகும் போது,  உங்களின் ஆரோக்கியத்தின் ஆழத்தை உணருவீர்கள்.
    உடற்பயிற்ச்சி கூட மிக அசதி தரும் அளவுக்கு இருக்கக்கூடாது. அதிக பயிற்சியும் பாதகம் விளைவிக்கிறது. ஆரோக்கியத்தை அறிந்து கொள்ளும் அளவு போதுமான பயிற்சி செய்ய வேண்டும்.
    உடற்பயிற்சி செய்வதைப் போல், ஓய்வும் தேவை. உடல் அசதி நீங்கி புத்துணர்சி பெறும் அளவு ஓய்வு வேண்டும். காலையில் எழும்போது புத்துணர்வு இன்றி எழுந்தால் விவகரங்கள் எதுவும் சரியாக இருக்காது கவனித்திருக்கிறீர்களா?
    இரவு சரியானபடி உறக்கம் இல்லாவிட்டால், காலையில் வரும் பிச்சைக்காரனுக்கு எதுவும் கொடுப்பீர்கள் என்பது சாத்தியமில்லை.
    தற்காலத்தில் உடற்பயிற்சியுமில்லை, ஓய்வுமில்லை, நாம் ஒரு விசித்திரமான நிலையில் இருந்து கொண்டுஇருக்கிறோம். உடலை சரியான முறையில் பராமரித்தால், சாத்வீகமான உணவு, சரியான அளவு உடற்பயிற்சி, சரியான அளவு ஓய்வு கிடைத்தால் உங்கள் நடவடிக்கையே மாறிவிடும் கவனியுங்கள். உடலாரோக்கியமே ஆனந்தம் என்பதை புரிந்து கொள்வீர்கள்……

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment