கெளதம புத்தர் ஒரு கிராமத்தில் இருந்தபோது, " நீங்கள் தினமும் கூறுகிறீர்கள் ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடையமுடியும் என்று! ஆனால் ஒவ்வொரு மனிதனும் ஏன் மோட்சத்தை அடைவதில்லை? என்று கேட்டான்.
புத்தர்,"நண்பனே! ஒரு வேலை செய்! மாலை கிரமத்தினுள் சென்று எல்லோரும் அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்று தெரிந்து வா. ஒரு பட்டியல் தயார் செய்!" என்றார். "ஒவ்வொருவருடைய பெயரையும் எழுது அதற்கு எதிரே அவர்கள் எதை அடைய விரும்புகிறார்கள் என்று எழுது!"
அவன் சென்று ஒவ்வொருவராக விசாரித்தான். அனைவரும் பதிலளித்தனர். இரவு அவன் புத்தரிடம் திரும்பி வந்து தனது குரியீட்டை அளித்தான். புத்தர்," இதில் எத்தனை பேர் மோட்சத்தை அடைய விரும்புகிறார்கள்?" என்று கேட்டார்.
அவன் ஆச்சரியம் அடைந்தான். அந்த பட்டியலில் ஒருவர் கூட தமது விருப்பம் மோட்சத்தை அடைவது என்று எழுதவில்லை. புத்தர், "ஒவ்வொரு மனிதனும் மோட்சத்தை அடைய முடியும் என்று தான் நான் கூறினேன், ஆனால் ஒவ்வொருவரும் மோட்சத்தை அடைய விரும்புகிறவர்கள் என்று கூறவில்லை" என்றார்.
ஒவ்வொரு அடைய முடியும் என்பது வேறு விஷயம், ஆனால் ஒவ்வொருவரும் அடைய விரும்புகிறனரா என்பது வேறு விஷயம். உண்மையில் நீங்கள் அடைய விரும்பினால், உங்களை இந்த உலகில் வேறு எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த திறமை கொண்டதல்ல!
நீங்கள் அடைய விரும்பாவிட்டால், உங்களுக்கு இந்த உலகில் வேறு எந்த சக்தியும் அளிக்கத் திறமை கொண்டதல்ல! உண்மையில் உங்களுக்கு ஆனந்தத்தை, அமைதியை அடையும் விருப்பம் இருக்கிறதா?
இல்லை என்றால், நீங்கள் எது செய்தாலும் அதில் உயிர் இருக்காது, உயிரின்றி செய்யும் எந்த செயலுக்கும் பயன் இருக்காது, பலனின்றி செய்யும் எந்த செயலுக்கும் செயல் பொறுப்பல்ல! நீங்களே பொறுப்பு...............
No comments:
Post a Comment