Showing posts with label உயிர். Show all posts
Showing posts with label உயிர். Show all posts

Sunday, October 20, 2013

ஞானமடைந்தவர் உடலோடு இருக்க முடியுமா? ஆனந்தம்

      


      ஞானோதயம் அடைந்த மனிதர், உயிர் விடாமல் தன் உடலை தக்க வைத்துக் கொள்வது சிரமம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உயிரை தக்க வைத்துக் கொள்ள அவர் என்னென்ன தந்திரங்கள் செய்கிறார் என்று சொல்ல முடியுமா?

சத்குரு:

      ஒரு மனிதர் ஞானமடையும் வரை எல்லா பிறவிகளிலும் தன் கர்மவினையை கரைப்பதற்காக முயல்கிறார்; ஞானமடைந்த பிறகு. விழிப்புணர்வோடு கர்மவினைகளை உருவாக்குகிறார். ஏனென்றால் போதிய கர்மவினை இல்லையென்றால், அவருடைய பக்கம் சமநிலையாக இல்லையென்றால், இந்த உடலில் அவரால் இருக்கமுடியாது.

      90 சதவிதம் பார்த்தால், ஞானமடைகிற நேரமும் உடலை விடுகிற நேரமும் ஒன்றாகவே இருந்திருக்கிறது. இந்த உடல் இயக்கம் குறித்து நிபுணத்துவம் இருக்கிற மனிதர்கள்தான் உடலிலே தொடர்ந்திருக்கிறார்கள். பிறரால் முடிவதில்லை. இதற்கென்று பல வழிகள் உண்டு. உங்கள் இயக்கத்தின் மேல் உங்களுக்கு நிபுணத்துவம் இல்லையென்றால் இன்னொரு வழி, விழிப்புணர்வோடு கர்மவினைகளை ஏற்படுத்திக்கொண்டே போவது. நான் இங்கே என்ன செய்கிறேன் என்பது குறித்து இந்த நேரத்தில் நான் பேச விரும்பவில்லை.

      இராமகிருஷ்ண பரமஹம்சரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அவர் தெளிந்த விழிப்புணர்வில் இருந்தவர். மிக அற்புதமான ஒரு உயிர். பல எல்லைகளையும் கடந்தவர். ஆனால் உணவின் மீது அவருக்கு ஒரு வெறியே இருந்தது. சீடர்களோடு பேசிக்கொண்டே இருப்பார். “கொஞ்சம் இருங்கள்”’ என்று சொல்லிவிட்டு சமையலறைக்குச் சென்று சாரதா தேவியாரைப் பார்த்து, “இன்று என்ன சமையல்?” என்று கேட்பார். சாரதாதேவிக்கு வெட்கமாக இருக்கும். இந்த மனிதர் கடவுளைப் போல் இருக்கிறார். எல்லோரும் இவரை வணங்குகிறார்கள். ஆனால் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறாரே என்று.

      புராணங்கள் எல்லாம் என்ன சொல்கின்றன? நீங்கள் ஆன்மீகவாதியாகிக் கொண்டிருந்தால் உணவிலே நாட்டம் குறையவேண்டும் என்று, இல்லையா? ஆனால் இங்கே கடவுளாகவே கருதி வழிபடக்கூடிய ஒரு மனிதர், உணவின் மீது இவ்வளவு பிரியத்துடன் இருக்கிறார். பலவிதங்களில் அவரை சாரதாதேவி கேட்பார். ஆனால் இவர் பதில் எதையும் சொல்லமாட்டார். ஒவ்வொரு நாளும் சாரதாதேவி உணவு பரிமாறுவார். இவர் ஒரு ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு சாப்பிடுவார்.

      ஒருநாள் மிகவும் கோபம் வந்து சாரதாதேவி சொன்னார். “உங்களை நினைத்தாலே எனக்கு மிகவும் வெட்கமாக இருக்கிறது. உணவின் மீது ஏன் இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள்? பலர் உங்களைத் தேடி வருகிறார்கள். அவர்கள் உணவைப்பற்றி நினைப்பதே இல்லை. உணவே இல்லாமல் உங்கள் முன் அமர்ந்திருக்க விரும்புகிறார்கள். நீங்கள் உணவின் மீது இவ்வளவு பைத்தியமாக இருக்கிறீர்கள், ஏன்?” என்று. அப்போது இராமகிருஷ்ணர் சொன்னார், “சாரதா, நீ என்னிடம் உணவு கொண்டு வந்து, நான் அந்த நாளில் அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றால், அன்று தொடங்கி 3 நாட்கள் வரையே நான் உயிரோடு இருப்பேன் என்று தெரிந்து கொள்,” என்றார்.

      ஏழு ஆண்டுகள் கழித்து சாரதாதேவி உணவு கொண்டுவந்து அந்த ஊஞ்சலில் வழக்கமான இடத்தில் வைத்தபோது, ராமகிருஷ்ணர் உணவில் நாட்டம் கொள்ளவில்லை. நேரம் வந்துவிட்டது என்று தெரிந்து சாரதாதேவி அழத்தொடங்கினார். ராமகிருஷ்ணர் சொன்னார், “இப்போது அழுது எந்தப் பயனும் இல்லை. நேரம் வந்துவிட்டது, அது எல்லோருக்கும் வரும்,” என்றார்.

      இது கர்மவினையை உருவாக்குகிற முறை. தெரிந்தே உணவில் ஒரு விருப்பத்தை வளர்த்துக்கொள்வது. விழிப்புணர்வோடு வேண்டுமென்றே எப்போதும் உணவை விரும்புவது. இந்த விருப்பம் இல்லை என்றால் அவரால் அந்த உடலில் இருந்திருக்க முடியாது. நான் இந்த உடலில் தொடர்ந்து இருக்க என்னென்ன தந்திரங்கள் செய்கிறேன் என்று எனக்கு நெருக்கமாக இருப்பவர்களுக்குத் தெரியும்.

      நீங்கள் விழிப்புணர்வோடு இத்தகைய கர்மவினையை ஏற்படுத்தவில்லை என்றால் உடலில் இருப்பது என்பது முடியாது. கர்மவினையின் கட்டமைப்பு இல்லாமல் உங்களுக்கும் உங்கள் உடம்புக்கும் ஒன்றுக்கொன்று செய்துகொள்ள ஒன்றுமே இல்லை.
................வாழ்க வளமுடன்!

Saturday, October 12, 2013

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? ஆனந்தம்




ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?

      இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
      மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
      இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
      எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
      மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

Wednesday, May 22, 2013

இறந்த உடலை ஏன் எரிக்கிறோம்? ஆனந்தம்


நமது கலாசாரத்தில், இறந்தவர் உடலை எரிக்க வேண்டும் என்ற பழக்கம் எப்படி வந்தது?

      நமது கலாசாரத்தில் இறந்தவர் உடலைப் பாதுகாக்கும் வழக்கம் இல்லை. இந்தத் தேசத்தின் கலாசாரம், வாழ்க்கையின் ஒவ்வோர் அம்சமும் மனிதனை மேல்நோக்கிக் கொண்டுசெல்வதாக அமைய வேண்டும் என்றே நினைக்கிறது. உடலை எரிப்பது என்ற சடங்கும் அந்த நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.

      உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும்.

      இறந்தவர் இந்த உடல்தான் தனது உயிர் என்று வாழ்ந்திருப்பார். அந்த உடலோடு மிகவும் ஆழமான தொடர்போடு வாழ்ந்திருப்பார். உங்களைப் பொறுத்தவரையில் அவர் இறந்துவிட்டார். ஆனால் அந்த உயிரைப் பொறுத்தவரையில் உடலைவிட்டு நழுவிவிட்டதாகத்தான் நினைத்துக்கொண்டு இருக்கும். எனவே மீண்டும் அந்த உடலுக்குள் நுழைந்துவிடலாம் என்றே அந்த உயிர் துடிக்கும். எனவே, வாய்ப்பை எதிர்நோக்கி அந்த உடலைச் சுற்றியே உயிர் சுற்றிக்கொண்டு இருக்கும். உடல் முழுமையாக இருக்கும் வரை அந்த உயிரால் அங்கிருந்து நகர முடியாது. அந்த மனிதர் ஞானம் அடைந்திருந்தால், அந்த உடலைவிட்டு நீங்கிய கணத்திலேயே அந்த உயிர் மகிழ்ச்சியாக அங்கிருந்து வெளியேறிவிடும். ஆனால், சரியான புரிதல் இல்லாத உயிர் அந்த உடலையே சுற்றிவரும். இது அந்த உயிருக்கும் நல்லதல்ல. இறந்தவருடன் பழகியவர்க்கும் அந்த உடலைப் பார்த்துப் பார்த்து பல நினைவுகளால் வருத்தம் அதிகமாகியே போகும்.

      உயிரை விட்டவரும் சரி, உறவினர்களும் சரி, உடல் அங்கிருக்கும் வரை, வேதனையோடு இருப்பர். எனவே விடைபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதை அந்த உயிர் உணர வேண்டும் என்பதால், அந்த உடலை முழுமையாகவும் விரைவாகவும் அழிக்க வேண்டும் என்னும் நடைமுறை உண்டாக்கப்பட்டது. எனவேதான் இறந்த ஒன்றரை மணி நேரத்துக்குள் உடலை எரிக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டது. அவசரத்திலும் பதற்றத்திலும் தவறான முடிவெடுத்து உயிருடன் இருக்கக்கூடியவரையும் தவறுதலாக எரிக்கப்பட்டுவிடலாம் என்பதால், அதை நான்கு மணிநேரம் என பிற்பாடு மாற்றி அமைத்தார்கள்.

      தாம் அறிந்த அந்த உடல் இனி இல்லை, அடையாளமற்று எரிந்து கையளவு சாம்பலாகிவிட்டது என்னும் உண்மையை அறியும்போது, இறந்த உயிரும் அந்த இடத்திலேயே பரிதவித்துக்கொண்டு இருக்காது. இங்கு உயிருடன் இருப்பவர்களும் மாண்டவன் இனி மீளப்போவதில்லை என்று ஒருவித அமைதி கொள்வார்கள். எனவேதான் ஒருவர் இறந்துவிட்டால் அவரை உடனடியாக எரிப்பது நமது கலாசாரத்தில் இருந்து வருகிறது.

      போதிய விறகு இல்லாத பாலைவனங்களிலும், நெருப்பு நின்று எரியாத குளிர்ப் பிரதேசங்களிலும் எரிப்பதைவிட புதைப்பது சுலபமாக இருந்தது. எனவே அத்தகைய நாடுகளில் அதுவே அவர்களது நடைமுறையாக மாறிவிட்டது!

Sunday, June 17, 2012

குட்டிக்கதை! கடவுளுக்கு ஓய்வு? ஆனந்தம்


      தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்க்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.
      அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங்கள்!

Monday, May 23, 2011

மரணத்திற்க்குப் பின்? ஆனந்தம்


      "மரணத்துக்குப் பின் எங்கேதான் போகிறோம்?"

      "சங்கரன் பிள்ளை ஒரு முறை தன் நண்பரிடம் சொன்னார், "செத்துப்போனால், மற்றதெல்லாம் இல்லாமல்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், மேல் உலகத்தில் கிரிக்கெட் இல்லை என்றால், போரடிக்குமே. அங்கே கிரிக்கெட் இருக்குமா?"
      நண்பர் சொன்னார், "நீ முதலில் போனால், நீ பார்த்துச் சொல். நான் முதலில் போனால், நான் பார்த்துத் தெரிவிக்கிறேன்".
      அந்த நண்பர்தான் முதலில் இறந்தார். அவர் இறந்த மூன்றாவது நாள் சங்கரன் பிள்ளைக்கு மேலே இருந்து அவர் குரல் மட்டும் கேட்டது.
       "கிரிக்கெட் பற்றிக் கேட்டாயே, ஒரு நல்ல செய்தி, ஒரு கெட்ட செய்தி. எது முதலில் வேண்டும்?"
      "ஐயோ, நல்ல செய்தியை முதலில் சொல்."
      "இங்கே கிரிக்கெட் இருக்கிறது."
      "கெட்ட சேதி?'"
      "திங்கள்கிழமை நடக்கும் மேட்ச்சில் நீதான் ஓப்பனிங் பேட்ஸ்மேன்!"
      ஏதோ சங்கரன்பிள்ளைக்கு வருகிறது என்றவுடன் உங்களால் சிரிக்க முடிகிறது. ஆனால், எந்த ஒரு மனிதனும் இதில் இருந்து தப்பிக்க முடியாது.
      உங்கள் உயிர் எங்கே இருக்கிறது என்று கவனித்திருக்கிறீர்களா? மூச்சு உள்ளே வருகிறது. வெளியே போகிறது. வெளியே போன மூச்சு திரும்பவும் உள்ளே வராவிட்டால், மரணம் நிகழ்கிறது. அதாவது, ஒவ்வொரு சுவாசத்திலும் உயிர் வெளியே போய்விட்டு உடல்கூட்டுக்குள் திரும்புகிறது. அப்படித் திரும்பும் போது, அதை ஏற்கும் நிலையில் உடல் இருந்தாக வேண்டியிருக்கிறது.
      அப்படியானால், நம் உயிருக்கு அடிப்படையானது நமக்கு உள்ளே மட்டும் இல்லை. வெளியேயும் இருக்கிறது என்று புரிகிறதா? உங்கள் உயிர் இங்கேதான் இருக்கிறது என்றோ, அங்கேதான் இருக்கிறது என்றோ சொல்ல முடியவில்லை என்றால், என்ன அர்த்தம்? அது எல்லை இல்லாமல் இருக்கிறது.
      நம் கற்பனைதான் இது ஒரு தனி உயிர், அது ஒரு தனி உயிர் என்றெல்லாம் பிரித்துப் பார்க்கிறது. எப்படி இருந்தாலும், மரணத்தில் இருந்து தப்பிக்க முடியாது. அப்புறம் எப்படி வாழ்ந்தால் என்ன என்று வாழப்பார்த்தால், வாழ்க்கை பலவிதமாகப் புரட்டிப் போட்டுவிடும்.
      அப்படி இல்லாமல், ஆனந்தமாக வாழ வேண்டும், ஆனந்தமாக முடிய வேண்டும் என்றால், அதற்கு விழிப்பு உணர்வு தேவைப்படுகிறது. விழிப்பு உணர்வு இல்லாதவர்கள் உடல் கீழே விழுகையில் மட்டும்தான் இறப்பைப் பார்க்கிறார்கள். விழிப்பு உணர்வோடு இருப்பவர்கள் வாழும் ஒவ்வொரு கணத் திலும் மரணத்தையும் சேர்த்துப் பார்க்கிறார்கள். அப்படி மரணத்தை வாழ்வின் ஓர் அங்கமாகக் கவனித்துவிட்டால், அப்புறம் மரணத்தால், நம்மைத் தளையிட முடியாது.
      ஆனால், இந்தப் புரிதல் இல்லாமல், மரணமற்ற ஒரு வாழ்க்கை வேண்டும் என்ற வெறி புராண காலத்திலேயே இருந்திருக்கிறது. ஆயிரம் நிபந்தனைகள் போட்டு ஹிரண்யகசிபு வரம் வாங்கினான். அவன் உயிரை எடுப்பதற்கு கடவுளே தந்திரமாக மனிதனும் அல்லாத, மிருகமும் அல்லாத நரசிம்ம அவதாரம் எடுக்க வேண்டியிருந்தது.
      பஞ்சதந்திரத்தில் ஒரு கதை இருக்கிறது. குரங்கு ஒன்று குடுவையில் இருக்கும் கடலைகளை அள்ளி எடுக்கப் பார்த்தது. கை நிறையக் கடலைகளை எடுத்து விட்டால், குடுவையின் சிறு கழுத்துப்பகுதியைத் தாண்டி கையை வெளியே எடுக்க முடியவில்லை. கடலைகளை விட்டால்தான் கை வெளியே வரும். ஆனால், ஆசையோடு அள்ளிய கடலைகளை விட குரங்குக்கு
மனம் வரவில்லை. கையை வெளியே எடுக்கவும் முடியாமல், கடலைகளை விடவும் முடியாமல் குரங்கு அல்லாடியதைப் போல்தான் அல்லாடுகிறது மரணத்தை மறுக்க நினைக்கும் மனது.
      மரணம் என்பது இல்லாமல் போனால் என்ன ஆகும்?
      ஓர் இளைஞன் இமயத்தில் இருந்த யோகிகளைச் சந்தித்து சில அபூர்வ சக்திகளைப் பெற்று தன் ஊருக்குத் திரும்பினான். தன் தெருவில் முக்காடு போட்டபடி, முகமே இல்லாத ஓர் உருவம் தன் வீட்டுக்குள் நுழையப் பார்ப்பதைக் கவனித்து அதை வழி மறித்தான். 'வழிவிடு. நான் மரணதேவன். உன் தாயின் மரண நாள் வந்துவிட்டது' என்றது அந்த உருவம். இளைஞன் தன் சக்தியைப் பிரயோகித்து மரணதேவனைப் பிடித்து தன் கமண்டலத்தில் அடைத்தான். கமண்டலத்தைப் பூமியில் புதைத்துவிட்டு, வீட்டுக்குப் போனான்.
      அவனுடைய அம்மா வுக்குப் பல வருடங்கள் கழித்து மகனைப் பார்த்ததும், அளவற்ற மகிழ்ச்சி. அவனுக்குப் பிடித்த கோழிக்கறி யைச் சமைத்துப் போட விரும்பினாள்.
      கோழியைப் பிடித்துக் கழுத்தை வெட்டினாள். எத்தனை தடவை வெட்டினாலும், வெட்டுப் பட்ட கழுத்து மறுபடி சேர்ந்துகொண்டது. கோழி சாக மறுத்தது. இது என்னடா அதிசயம்?
      ஒரு வேளை மகன் பூரண சைவத்துக்கு மாறிவிட்டானோ என்று குழப்பம் வந்தது. தோட்டத்துக்குப் போய் கீரையைப் பிடுங்கினாள். கீரை வரவில்லை. காய்களைப் பறித்தால், அவை மறுபடி செடியில் போய் ஒட்டிக்கொண்டன. அம்மா மிரண்டுபோய் மகனிடம் வந்தாள். நடந்ததைச் சொன்னாள்.
      "ஏதோ மந்திர தந்திரம் எல்லாம் கற்று வந்திருக் கிறாயே! என்னடா செய்தாய்?" என்று கேட்டாள். மகன் அவளைத் தேடி வந்த மரண தேவனைப் பிடித்து புதைத்துவிட்டதைச் சொன்னான்.
      "வேண்டாமடா இந்த விபரீதம்! முதலில் அவனை விடுவித்துவிடு. அவனுடைய வேலையை அவன் செய்யட்டும். நம் வேலையை நாம் செய்வோம். இல்லை என்றால், உலகத்தில் யாரும் உண்ண முடியாது. எதுவும் செய்ய முடியாது" என்றாள், அவன் அம்மா.
      மரணத்தை நிறுத்தினால், அப்படித்தான் ஆகி விடும். ஏனென்றால், உயிர் என்பதோ, மரணம் என்பதோ தனித்தனியாக வரவில்லை. இரண்டும் சேர்ந்துதான் வந்திருக்கின்றன.
      இதை நீக்கினால், அது நடக்காது. அதை நீக்கினால், இது நடக்காது.
      ஓர் அறைக்குள் நீங்கள் உள்ளே போக முடி யும்; வெளியேயும் வர முடியும் என்றால், அதை உங்கள் குடியிருப்பு என்கிறீர்கள். உள்ளே போனீர்கள், வெளியே வர முடியவில்லை என்றால், அது அரண்மனையாகவே இருந்தாலும், அதைச் சிறை என்கிறீர்கள். ஆக, வெளியே வந்துவிட்டு உள்ளே போக முடியாது என்றாலும் பிரச்னைதான். இங்கே வந்தால் இங்கே
சிக்கிப்போவீர்கள். அங்கே போனால், அங்கே சிக்கிவிடுவீர்கள் என்றால், அதைச் சுதந்திரம் என்று எப்படிச் சொல்ல முடியும்?
      வாழ்ந்தாலும் ஒருவிதச் சிறை. செத்தாலும் ஒரு விதச் சிறை என்பதை எப்போது நாம் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொள்கிறோமோ, அப்போது இதைத் தாண்டிப் போக வேண்டும் என்ற ஆர்வம் நமக்கு வந்துவிடும். உயிரின் தன்மையைப் புரிந்துகொள்ளும் தேடுதல் துவங்கிவிடும். முக்திக்கான முதல் அடிஎடுத்து வைத்துவிடுவோம்.
      விழிப்பு உணர்வோடு இருந்தால், உங்களுக்குள்ளேயே ஒரு பகுதியில் பிறப்பு நிகழ்வதும், இன்னொரு பகுதியில் மரணம் நிகழ்வதையும் பார்க்க முடியும். இதை முழுமையாக உணர்ந்து, அடுத்த கணத்தில் உயிர் பிரியும் என்று தெரிந்தாலும் ஒரு மனிதன் ஆனந்தமாக இருக்க முடிந்தால், அதுவே அவன் மேன்மையான நிலையை எட்டிவிட்டதற்கு அடையாளம். ஆனந்த வாழ்வே மேண்மையான நிலை....
      மரணத்துக்குப் பின் எங்கே போவோம் என்ற கேள்வி இன்னும் உங்கள் மனதில் தொக்கி நின்றால், அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும் என்று சொல்வேன்!

Wednesday, November 17, 2010

வாழ்க்கை என்பதே ஆனந்தம் தான்:

      பாதி வேலையில் இருக்கும் போது எதற்காக இதைச் செய்துகொண்டிருக்கிறோம் என்று சில சமயம் களைத்துப் போகிறேன். எதை சாதிக்க நான் பிறந்தேன்? என் வாழ்கையின் உண்மையான நோக்கம் என்ன?
      சங்கரன்பிள்ளை தன் மனைவியிடம் சொன்னார்....
            "இந்த பேட்டரி என் வாழ்க்கையை விட உன்னதமானது!"
            "எப்படி சொல்கிறீர்கள்?"
            “இதில் பாசிடிவ் பக்கம் என்று ஒன்று இருக்கிறதே!"
      நம்பிக்கை இழந்து, இதேபோல் துவண்டிருக்கும் சோகமான மனங்களில் தான், வாழ்கைக்கு என்ன நோக்கம் என்ற கேள்வி சுழலும். நீங்கள் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும் போது, இந்த கேள்வி வந்து இருக்கிறதா?
      வாழ்கையின் நோக்கம் என்ன? புகழும் பெருமையும் சேர்ப்பதற்கு தான் என்பார் ஒருவர். மற்றவர்களுக்கு உதவியாக இருந்து விட்டு போவது தான் என்பார் அடுத்தவர். அன்பையும் காதலையும் பிறருக்கு அள்ளிக்கொடுப்பது தான் என்று அடித்துச் சொல்லுவர் இன்னொருவர். இல்லையில்லை, கடவுளை அறிந்துகொள்வது தான் என்று போதனை செய்வார் மதகுரு.
      இப்படி நூறு பேர், நூறு தத்துவங்கள் சொன்னாலும், வாழ்க்கை அவற்றை அடித்து நொறுக்கி விடும். வாழ்க்கை மறந்தாலும் மரணம் அவற்றை தகர்த்து தூள்தூளாக்கி விடும்.
      சங்கரன்பிள்ளை ராணுவப் பயிற்ச்சியில் ஈடுபட்டு இருந்தார்.
"அதிகாரி வந்தார் இன்று துப்பாக்கி சுடும் பயிற்ச்சி கொடுக்க வேண்டியவர் வரவில்லை, நேரத்தை வீணடிக்காமல், கிரவுண்டைச்சுற்றி பத்துமுறை ஓடுங்கள்." என்றார்
      "எதிரிகளை சுட்டுத்தள்ளத் தெரியாவிட்டால் பரவாயில்லை... ஓடித் தப்பிக்கத் தெரிந்திருக்கவேண்டும் என்பதை எவ்வளவு நாசூக்காக சொல்லித்தருகிறார், நம் அதிகாரி" என்றார் சங்கரன்பிள்ளை.
      இப்படித்தான் நீங்களும், வாழ்க்கையின் முதன்மையான நோக்கத்தை விட்டு, வேறு எதிலோ கவனத்தை திசை திருப்பி இருக்கிறீர்கள்.
      அப்படியானால், வாழ்க்கையின் முதன்மையான நோக்கம் தான் என்ன? வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம் தான். அதை ஆனந்தமாக, உயிர்ப்போடு வைத்திருப்பதைவிட‌ வேறு என்ன முதன்மையான நோக்கம் வேண்டும் வாழ்க்கைக்கு? இதைப் புரிந்து கொள்ளாமல் இது கிட்டவில்லை, அது கிடைக்கவில்லை என்று குறைபட்டுக் கொள்வது எத்தனை முட்டாள் தனம்? குறைபாடு கொண்ட மனம் தான் வாழ்க்கைகு  வேறு நோக்கங்கள் தேடுகிறது. 
      இந்த வாழ்கையை ப்ற்றி நீங்கள் புரிந்து கொண்டதைவிட சற்றே கூடுதலாக புரிந்து கொள்ளும் முயற்சியில் தானே பணம், இன்பம், காதல், கடவுள், சொர்க்கம் என எதன்னெதன் பின்னாலோ ஓடுகிறீகள்.
      ஒரு சிறு சாவித்துவரத்தி வ்ழியே, வானத்தின் முழுமையை பார்க்க முயல்வது போன்றது உங்கள் முயற்சி. அந்த அறியாமையை உங்கள் பலம் என்று நினைத்திருப்பது கொடுமை.
அமெரிக்காவில், புழக்கத்தில் இருக்கும் ஒரு ஜோக்,
      ஜார்ஜ் புஷ் ஒரு முறை, பள்ளிக்கூடத்திற்க்கு சென்று குழந்தைகளை சந்திதார்.
            "பெரும் துயரம் என்பதற்க்கு ஒரு எடுத்துக்காட்டு தரமுடியுமா?" என்று கேட்டார்.
            "விளையாடிக்கொண்டிருக்கும் தோழன் மீது ஒரு கார் வந்து மோதி, அவனைச் சாகடித்தால், அது தான் துயரம்!"
            "அது தான் துயரமல்ல, விபத்து!" என்றார் புஷ்.
      அடுத்த மாணவி எழுந்தாள்...., "பள்ளிக் குழந்தைகள் பயணம் செய்யும் பஸ், மலையிலிருந்து உருண்டு விழுந்து சிதறிப் போனால், அது துயரம்!"
           "அது பேரிழப்பு, துயரமல்ல!"
      கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த ஜோ எழுந்தான்....
நீங்கள் பயணம் செய்யும் விமானம், ஒரு ராக்கெட் தாக்கி சிதறி எரிந்து நீங்கள் இறந்து போனால், அது துயரம்!"
      புஷ் அமோதித்து புன்னகைத்து, " எப்படி சரியாக சொன்னாய்?"
      உங்கள் விமனத்தை ராக்கெட் மோதினால், அது விபத்தாக இருக்கவும் முடியாது, ஏந்த விதத்திலும் பேரிழப்பாக இருக்க முடியாது, அதனால் தான், சொன்னேன்" என்றான் ஜோ.
      வாழ்க்கைக்கு நோக்கம் கற்பிப்பவர்கள், இப்படித்தான் அறியாமையில் இருந்து கொண்டே, தங்களை புத்திசாலிகள் என்று தீவிரமாக‌ நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
      வாழ்க்கையின் முழு ஆழத்தையும், அகழத்தையும் அதன் வேர்கள் வரை ஊடுருவி மனம் புரிந்து கொண்டதே இல்லை. அதனால்தான் வாழ்க்கைக்கு ஏதாவது மேலோட்டமான நோக்கத்தை தேடிக்கொண்டே இருக்கிறது.
      தத்துவங்கள், கோட்பாடுகள், விவாதங்கள், விளக்கங்கள், புராணங்கள், மறைநூல்கள் எல்லாமே, கேள்வி கேட்கும் மனத்தை சிறிது காலத்துக்கு பயன் படுமே தவிர, அடிப்படை கேள்வி காணாமல் போய் விடாது. மீண்டும் அது தலை நிமிர்ந்தும்.
      ஒரு சிறு மணல் துகளை, முழுமையாக பார்க்க முடிகிறதா என்று பாருங்கள். அதன் ஒரு பக்கத்தை பார்த்துவிட்டு புரட்டினால் தானே மறுபக்கத்தை பார்க்கமுடிகிறது? இப்படி பகுதி பகுதியாக ஐம்புலன்களால் சேகரித்த துண்டுதுண்டான தகவல்களை, கொண்டு முழுமையாக பார்த்துக் விட்டதாக எடை போடமுடியாது.
வாழ்க்கையின் முழுபரிணாமத்தையும் புரிந்து கொள்ள, ஐம்புலன்களின் எல்லையையும் தான்டி போக வேண்டும். ‌
வாழ்க்கையின்  உண்மையான நோக்கம் அதை முழுமையாக வாழ்வது தான். அதை ஒழுங்காகச் செய்யாமல், அதற்கு பெரும் தடையாக இருப்பது நீங்கள் மட்டும் தான்.
      பிரேக்கை அழித்திக்கொண்டே காரை செலுத்தப்பார்த்தால் என்ன ஆகும்? கார் தினறும், நகந்தாலும் கடினமாகத் தோன்றும். தேய்மானம் அதிகமாகும். அப்படிப்பட்ட பிரேக்காக நீங்களே இருக்கிறீர்கள்.
      உஙளைக் கரைத்து விட்டால் வாழ்க்கை அதன் முழுமையை நோக்கி, ஆனந்த்தை நோக்கி அதுவே பயணிக்கும், இயல்பாக மலரும். அதற்குத் தான் யோகா....
வாழ்க வளமுடன்!

Wednesday, October 27, 2010

சித்தார்தன் புத்தர் ஆனார்:

புத்தர் இன்றைக்கு நேபாளம்  என்று சொல்லப்படும் நாட்டின், லும்பினி என்கிற  இடத்தில் கபிலவஸ்து என்கிற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சாக்கிய அரச வம்சத்தை சார்ந்த ராஜா சுதோதனாவுக்கும், ராணி மகாமயாவுக்கும் கி.மு.563  ஆண்டில் பிள்ளையாக பிறந்தார். கௌதமர் என்பது அவர்களின் குடும்பப் பெயராகும் . ராணி மகாமயா சித்தார்த்தர் பிறந்தவுடனே இறந்து விட்டார். அக்குழந்தையின் ஜாதகத்தை கணித்த ஜோசியர்கள் இப்பிள்ளை பிற்காலத்தில் மிகப் பெரிய‌ பேரரசனாக விளங்குவார் அல்லது மனித ஆசைகளை ஒதுக்கி தள்ளி அரச சுக போகங்களை வெறுத்து மக்கள் போற்றும் மகானாக விளங்குவான் என தெளிந்தனர். அது கேட்டு நடுங்கிப் போன தந்தை சுதோதன தன் மகனை அவ்வாறு செல்ல தான் விட்டு விட மாட்டேன் என்றும், தன்  மகனுக்கு அவன் பிறந்த முதலே, உலக சுகங்களை காட்டி ராஜ போகத்தில் வாழ வைப்பேன் என்றும் சபதம் பூண்டான்.

தந்தை சுதோதனா தன் மகனுக்காக அகண்ட நிலப்பரப்பில் மிகப் பெரிய அரண்மனை கட்டினான். அதன் மதில் சுவர்களை வானளாவ கட்டினான். வெளியுலம் என்பதே தன் மகன் அறியா வண்ணம் அவனை உள்ளுக்குள் வைத்து அவனை கவனித்துக் கொள்ள, அவன் சித்தியாகிய ராணி மஹாபஜபதி மேற்பார்வையில் பத்து ஈரத்தாய்களை நியமித்தான், தன் பிள்ளை நினைத்த நேரத்தில் பிடித்த தாயிடம் பாலருந்த. அவன் விளையாட அனைத்தும் வைத்தான். புறாக்கள், கிளிகள், மயில்கள், பூனைக்  குட்டிகள், ஆனைக் குட்டிகள், மான் குட்டிகள், சிங்கக் குட்டிகள், புலிப் போந்துகள் என அன்டிது பறவை மிருக வகைகளையும் ஆங்கே வைத்தான். அனைத்து பழத் தோட்டங்களும், மலர் தோட்டங்களும், நீச்சல் குளங்களும் செய்தான். அவன் கூட சேர்ந்து விளையாட தோழர்களும் தோழியரும் (இளமையனவர்கள் மட்டுமே)ஏற்பாடு செய்யப்பட்டனர். வெளியுலகத்தை சித்தார்த்தனின் கண்களிலிருந்து முழுவதுமாக மறைத்தான் அரசன். சித்தார்த்தனுக்கு மனிதனுக்கு வயதாகும், பூக்கள் வாடிவிடும் என்பது கூட தெரியாது

சித்தார்த்தா தான் இருந்த அரண்மனையையும் அதன் சுற்று சுவரையுமே மொத்த உலகம் என நினைத்து வாழ்ந்து வந்தான். இவ்வாறு இருக்கும் வேளைகளில் சித்தார்த்தா தன் நண்பர்கள்வேலைகாரர்கள், தன் தேரோட்டியாய் இருக்கக்கூடிய சன்னா என்பவனும் கூட சில வேளைகளில் தன் கூட இருந்து விட்டு பல வேளைகளில் எங்கோ மறைந்து விடுவதை உணர்ந்தான். தான் மட்டுமே இந்த அரண்மனையில் எந்த நேரமும் இருந்துக் கொண்டு இருப்பதை போலவும் உணர்ந்தான். மற்ற அனனைவரும் குறிப்பிட நேரங்களில் மட்டுமே தன் முன்னே வந்து நிற்பதை கவனிக்கலானான். இப்படியாக அவன் வாழ்ந்து தன் பதினாறு வயதினை அடைந்தவுடம் அவன் தந்தை ராஜா சுதோதனா அவனுக்கு தன் தங்கை மகள் யசோதராவை மணமுடித்து வைத்தான். அவர்கள் இன்பமாக கூடி வாழ்ந்து ஒரு மகனையும் பெற்று ரஹூலா எனவும் பெயரிட்டார்கள். இத்தனை  சந்தோஷமான வாழக்கையின் ஊடே சமயத்தில் தன் தந்தை. அவ்வளவு ஏன், தன்  மனைவியும் கூட தன் மகனை தூக்கி கொண்டு அவ்வபோது எங்கோ போய் விடுவதை உணர்ந்து அவன் கலங்கி வானைத்தை பார்க்கும் வேளைகளிலே மேலே உயரத்தில் பல பறவைகள், தன் அரண்மனையில் இருந்த இறக்கை கத்தரிக்கப்பட்ட பறவைகள் போலே அல்லாத வேறு பறவைகள், உயரே பறந்து பறந்து தன் அரண்மனையின் சுற்று சுவரை தாண்டி அதற்கும் அப்பால் எங்கோ சென்று இறங்குவதை கண்டான். இது பற்றி அவன் தன் தேரோட்டி சன்னாவிடம் கேட்கிறபோது அவன் எதையோ சொல்லி மழுப்புவதை கவனித்தான். பல வேளைகளில்  யாருமற்ற  பொழுதுகளில் அவன் அந்த சுற்று சுவரின் பக்கத்தில் நின்று கூர்ந்து கவனித்த போது அதற்கு அப்பாலும் மனித குரல்கள் ஒலித்ததை கேட்டான்.

ஒரு நாள் தன் தேரோட்டியை மடக்கினான் சித்தார்த்தன். "சென்னா, நீ எங்கே அடிக்கடி காணமல் போய் விடுகிறாய்? நேற்றுக் கூட உன்னைத் தேடினேனே,எங்கே போய் விடுகிறாய், சொல்" என்றான். அதற்கு தேரோட்டியோ, " நான் எங்கே போய் விட போகிறேன், இங்கே தான் இருக்கிறேன்" என்றான். " இல்லை நீ பொய் சொல்லாதே, நான் சின்ன குழந்தையல்ல, நீ சொல்வதை கேட்டுக் கொள்ள, எனக்கு தெரியும், நீ எங்கோ இந்த உலகுக்கு அப்பால் போய் வருகிறாய்." என்றான். "உலகுக்கு அப்பாலா!" தேரோட்டிக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். இளவரசர் இந்த அரண்மனையும் இந்த சின்ன வெளியையுமா உலகம் என நம்பிக் கொண்டு இருக்கிறார், கடவுளே, சித்தார்த்தன் விடவில்லை, "சென்னா, அதோ அந்த பறவைகளை பார், அவை எங்கோ அந்த சுவருக்கு பின்னால் சென்று மறைகின்றன, அங்கே என்ன இருக்கிறது, நீயும் அங்கே தான் சென்று வருகிறாய், சொல், அங்கே என்ன இருக்கிறது, என்னையும் அங்கே கூட்டி செல்" என்றான். சென்னாவும் சம்மதித்தான்.

மறுநாள் சித்தார்த்தன் தேரோட்டி சின்னாவின் உதவியுடன் அரண்மனைக்கு வெளியே வந்தான். வந்தவன் எங்கெங்கும் விரவிக் கிடந்த பெருநிலத்தை கண்டான். தேங்காமல் ஓடி வந்த தென்றற்காற்றை உணர்ந்தான். விரைந்து சென்றுக் கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம். விரிந்து கிடக்கும் பச்சை பசேல் வயல்கள், நெடுநெடு ஏரிகள், வாத்துக் கூட்டங்களை, வானத்தை முகர்ந்து நிற்கும் மலை முகடுகள். திறந்த கண்ணும் வாயும் மூடாமல் பார்த்தது பார்த்தப்படி தேரில் முனையில் நின்றுக் கொண்டு '' என்று பார்த்துக் கொண்டு வந்தான். தேரோட்டி சென்னா சொன்னான். " போதுமா இளவரசே, திரும்பி விடலாமா?", "இல்லை, இன்னும் போ, அந்த கடைசி மரத்தை வரை பாப்போம்." தேர் விரைந்தது. அந்த கடைசி மரம் கடைசியில்லை, அதற்கு அப்பாலும் மரங்கள் வந்துக் கொண்டே இருந்தன. சித்தார்த்தன் வியந்தான். "இன்னும் போ, இன்னும் போ, " என்றான். தேரோட்டி "போதும் இளவரசே, குதிரைகள் களைத்து விட்டன, திரும்புவோம்." என்றான். அப்படியானால் குதிரைகளை கொஞ்சம் களைப்பாற்று. நான் சிறிது தூரம் நடந்து செல்கிறேன்" என்று சொல்லி தேரை விட்டு இறங்கியே விட்டான் சித்தார்த்தன். குதிரைகளை அவிழ்த்து விட்டு புல் மேய விட்ட சின்னா பின்னாலையே ஓடி வந்தான். சிறிது தூரத்தில்;. ஒருவர் மரத்தடியே அமர்ந்துக் கொண்டு பிட்சைக்காக கை ஏந்திக் கொண்டு இருந்தார். அதுக கண்ட சித்தார்த்தன் சின்னாவிடம் கேட்டான், "இவர் யார், இங்கே ஏன் அமர்ந்துக் கொண்டு ஏதோ கேட்பவர் போல் இருக்கிறார்?", "இளவரசே, இவன் ஒரு பிச்சைக் காரன், சிலர் இவனை ஞானி என்றும் சொல்கிறார்கள், இவன் மற்றவர் தருவதை உண்டு உயிர் வாழ்கிறார்" என்றான். அந்த உலகம் அறிய இளவரசு, மேலும் கேட்டான், "இவர் சொந்தங்கள், சொத்துக்கள் மாளிகைகள் எல்லாம் எங்கே இருக்கின்றன, இவர் இங்கு இருக்க காரணம் என்ன?" , இவனுக்கு அப்படியெல்லாம் ஏதும் இல்லை, இளவரசே, இவன் ஒரு தனிக்கட்டை" ,.
" இவர் எங்கே தங்குவார்?" , "இவன் இங்கேயே தங்குவான் இளவரசே" என்றான் சென்னார். சித்தார்த்தன் தன வாழ்க்கையில் முதல் முறையாக முகம்மாறி விழிக்க ஆரம்பித்தான்.

இவ்வாறு சித்தார்த்தன் வெளியே அடிக்கடி வர ஆரம்பித்தான். தந்தைக்கும் விசயம் தெரிந்தது. ஆனால் ஜோசியர்கள் குறித்த காலம் தாண்டிவிட்டதே என்று அவரே அனுமதித்தார். ஓரு நாள் தன் தேரோட்டி சின்னாவுடன் பக்கத்து கிராமத்துக்கு ஒரு விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.

ஆப்போது அவ்வ‌ழியே ஒரு மிகவும் முதிய‌வ‌ர் க‌ம்பு ஊன்றிக்கொண்டு சென்றார், அதை பார்த்த‌ சித்தார்த்தன் யார் இவ‌ர்? இப்ப‌டியும் ம‌னித‌ர்க‌ள் உண்டா? என்று கேட்டான். அத‌ற்க்கு சின்னா, இளவரசே, இவர் ஒரு முதிய‌வ‌ர் வ‌ய‌து தொண்ணூற்றுக்கு மேல் என்றான்? இதே போல் நாமும் ஒரு நாள் முதுமை அடைவோம் என்றான். உட‌னே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே முதுமை அடைந்துவிட்டேன் என்றான். இல்லை அர‌சே ந‌ம‌க்காக விழாவில் ப‌ல‌ர் காத்துக்கொண்டு இருக்கிறார்க‌ள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.

மேலும் சிறிது தூர‌ம் சென்ற‌வுட‌ன் ஒருவ‌ரை ப‌டுக்க‌வைத்து நான்கு பேர் தூக்கிகொண்டு செல்வ‌தை பார்த்தார். யார் அது? ஏன் ஒரு ம‌னித‌ரை படுக்க‌வைத்து தூக்கி செல்கின்ற‌ன‌ர் என்று கேட்டார்? அத‌ற்க்கு சின்னா, இளவரசே, இது ஒரு சவம், உயிர் பிரிந்த பின் இந்த உடலுக்கு பெயர் சவம். இயங்காது இதே போல் நாமும் ஒரு நாள் மரணமடைவோம் என்றான். உட‌னே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே மரணமடைந்துவிட்டேன் என்றான். இல்லை அர‌சே ந‌ம‌க்காக விழாவில் ப‌ல‌ர் காத்துக்கொண்டு இருக்கிறார்க‌ள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.

க‌டைசியில் அந்த‌ விழாவுக்கு சென்று திரும்பின‌ர். திரும்பி வ‌ந்த‌பின் அர‌ண்ம‌ணையில் உள்ள‌ ம‌ற்றும் நாட்டிலுள்ள‌ அனைத்து ம‌கான்க‌ளிட‌மும் அறிவாளிக‌ளிட‌மும் அந்த சில‌ கேள்விக‌ளை சித்தார்த்தன் கேட்டான் யாரும் அவ‌ருக்கு திருப்தியாக‌ ப‌திள் அளிக்க‌வில்லை. ஓரு நாள் அர‌ண்ம‌ணையை விட்டு அந்த‌ கேள்விகளுட‌ன் புற‌ப்ப‌ட்டான், காடு, மேடெல்லாம் அலைந்தான். தீட்சை பெற்றான், போதி ம‌ர‌த்த‌டியில் அம‌ர்ந்து அந்த‌ கேள்விக‌ளுக்கு விடைக‌ண்டுபிடித்தான். ஞான‌ம் பிற‌ந்த‌து.............. அந்த‌ கேள்விக‌ள்


1) உயிர் என்ப‌து என்ன‌? அல்ல‌து எது?
2) முதுமை ஏன் வ‌ருகிற‌து?
3) ம‌ர‌ண‌ம் ஏன் வ‌ருகிற‌து? அல்ல‌து என்ன‌?
4? க‌ட‌வுள் என்ப‌து யார்? அல்ல‌து எது?