Thursday, June 2, 2011

கட‍-உள் ஆனந்தம்


      ஒருவன் ஞானியிடம் சென்று,  கடவுள் எல்லா இடத்திலும் இருப்பது  உண்மை எனில் ஏன் காண முடிவதில்லை என்று கேட்டான்.

ஞானி : (கொஞ்சம் உப்பை எடுத்து) "உப்பு தெரிகிறதா"

அவன்: "தெரிகிறது"

ஞானி : (பிறகு அதை தண்ணீரில் கரைத்து) "இப்போது உப்பு தெரிகிறதா"

அவன்: "இல்லை"

ஞானி : உப்பு இல்லையா, அல்லது உன்னால் காணமுடியவில்லையா,  நீரை அருந்திப்பார்.

அவன்: (நீரை அருந்திவிட்டு) உப்பு இருக்கிறது, அதனை என்னால் உணரமுடிகிறது, ஆனால் உப்பு கரைந்துவிட்டதனால் என்னால் பார்க்க முடியவில்லை.

அப்போது ஞானி கூறினார்  "அது போலதான் கடவுளும்". காண முடியல்லை என்பதால் இல்லை என்று பொருள் கொள்ளக்கூடாது. காண வேண்டி அலையாதே, உணர்ந்து கொள், கட-உள் என்றார்.

1 comment:

ஷர்புதீன் said...

கடவுள் மற்றும் நம்பிக்கைகள் குறித்த விவாதத்திருக்கு உங்களை எனது இடுக்கை காண அழைக்கிறேன்

Post a Comment