நேசத்திலிருந்து சந்தோஷம் பிறக்கிறது. அதுதான் ஒரே சந்தோஷம். நீ எப்போதெல்லாம் நேசிக்கிறாயோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்கிறாய். எப்போதெல்லாம் நேசமாக இருக்க முடிவதில்லையோ, அப்போதெல்லாம் நீ சந்தோஷமாக இருக்க முடிவதில்லை. சந்தோஷம் நேசத்தின் விளைவு, நேசத்தின் நிழல். அது நேசத்தை பின்தொடரும். நீ மேலும் மேலும் நேசமாக இருக்க இருக்க நீ மேலும் மேலும் சந்தோஷப்படுவாய்.
உன்னுடைய நேசம் திரும்ப வருகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்படாதே. அது முக்கியமல்ல. அது திரும்ப வருகிறதோ இல்லையோ, மற்றவர்கள் பெற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நீ நேசித்தால் சந்தோஷம் நேசத்தை தானாகவே பின்தொடரும்.
நீ சந்தோஷமாயிருப்பாய், அதுவே போதும். ஒருவர் எதிர்பார்ப்பதை விட போதும். அதுதான் நேசத்தின் அழகு – அதன் விளைவு – அதன் அர்த்தம் - அது அடுத்தவரின் எதிர்விளைவை பொறுத்ததல்ல, அது முழுமையாக உன்னுடையது.
மக்கள் எப்போதும் திரும்ப எதையாவது எதிர்பார்கிறார்கள். அவர்களது நேசம் நிபந்தனைக்குரியது. அவர்கள் என்னை சந்தோஷப்படுத்து, பின் நான் உன்னை நேசிக்கிறேன் என்கின்றனர். அவர்களது நேசத்தில் கட்டுப்பாடு உள்ளது, அதில் பேரம் உள்ளது. அவர்கள் முழுமையான குருடர்களாக உள்ளனர். நேசிப்பதன் மூலம் சநேதோஷம் தானாகவே மலரும் என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. அது ஒரு தொடரும் பின்விளைவு. அதனால் நேசி, நீ யாரை அல்லது எதை நேசிக்கிறாய் என்பது முக்கியமல்ல – பூனை, நாய், மரம், பாறை எதுவாக இருந்தாலும் சரி, ஒரு பாறையின் அருகில் உட்கார்ந்து அதை நேசி! அதனுடன் பேசு! அதை முத்தமிடு.
அந்த பாறை மீது படுத்துக்கொள். அந்த பாறையுடன் ஒன்றாக உணர்ந்து பார்! திடீரென ஒரு சக்திபிரவாகம், ஒரு சக்தி வெள்ளம் வருவதை உணர்வாய். நீ அளவற்ற மகிழ்ச்சியடைவாய். அந்தப் பாறை திரும்ப எதுவும் கொடுக்காமல் இருக்கலாம், கொடுக்கலாம் – ஆனால் அது முக்கியமல்ல! நீ நேசிப்பதன் மூலம் நீ மகிழ்ச்சியடைகிறாய்.
யார் நேசிக்கிறார்களோ அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஒருமுறை உனக்கு இந்த சாவி கிடைத்துவிட்டால், உன்னால் இருபத்திநான்கு மணி நேரமும் சந்தோஷமாக இருக்க முடியும். நீ இருபத்திநான்கு மணி நேரமும் நேசமாக இருந்தால் பின் நேசிக்க பொருளை தேட மாட்டாய். மேலும் மேலும் நீ விடுதலை பெற்றவனாக இருப்பாய். ஏனெனில் உன்னால் நேசிக்க முடியும் என்பதை மேலும் மேலும் அதிகமாக அறிந்து கொள்வாய் – அங்கு யாரும் இல்லையென்றால் கூட உன்னைச் சுற்றியுள்ள அந்த வெறுமையை நேசிப்பாய். உன்னுடைய அறையில் தனிமையில் அமர்ந்திருக்கும்போதுகூட அந்த அறையை உனது அன்பால் நிறைத்துவிடுவாய். நீ சிறையில் இருக்கலாம், நீ அதை கோவிலாக ஒரு வினாடிக்குள் மாற்றி விடுவாய். நீ அதை நேசத்தால் நிறைக்கும்போது அது ஒரு சிறையாக இருக்காது!
மரங்கள், பாறைகள், அன்னியர்கள், மக்கள், நண்பர்கள் ஆகிய எல்லோரையும் நேசிக்க ஆரம்பி.
ஒரு பாறை மேல் உட்கார்ந்து அதை நீ காதலிப்பதுபோல உணர்ந்து தொட்டுப்பார்! நீ உடனடியாக பதில்விளைவை உணர்வாய்! ஒரு மரத்தை ஆழ்ந்த நேசத்துடன் தொட்டுப்பார்! திடீரென அது ஒரு வழிப்பாதையல்ல என்பதை உணர்வாய்! உணவை சாப்பிடும்போது, உணவை அன்புடன் மெல்லு! குளிக்கும்போது தண்ணீரை தெய்வீகம் போன்று ஆழ்ந்த அன்புடன் நன்றியுடன் பெற்றுக் கொள்! ஏனெனில் தெய்வீகம் எல்லாவற்றிலும் எல்லா இடத்திலும் உள்ளது.
ஒருமுறை எல்லாமும் தெய்வீகம் என்று உணர ஆரம்பித்துவிட்டால் பின் நீ நேசத்திற்காக ஏங்க மாட்டாய், ஏனெனில் எல்லா இடங்களிலும் அது நிறைந்திருப்பதை நீ உணர்வாய். அது தான் ஆனந்தம் என்பதை உணர்வாய்........ ..................................................................ஓஷோ.................................................................................
"வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல" விருப்பு, வெறுப்பற்ற நிலையை அடைந்தவர்க்கு எப்போதும் துன்பம் இல்லை....... ஆனந்தமே.....
Showing posts with label சந்தோசம். Show all posts
Showing posts with label சந்தோசம். Show all posts
Monday, January 3, 2011
Tuesday, November 23, 2010
நம்பிக்கை வெளிச்சம்1:
அந்த சிறுவனுக்கு பன்னிரெண்டு வயதாகும் போது, மோசமான போலியோ தாக்கியது...
"உங்கள் மகன் இந்த இரவைத் தாண்டுவது கஷ்டம்" என்று தன் பெற்றோரிடம் மருத்துவர் சொல்வதைக் அவன் கேட்டான். அவன் அம்மா அழுகையின் உச்சத்துக்கு போனாள். அந்த இரவைக் கடந்து விட்டால் அம்மாவின் துயரம் சற்றே தீரும் என்று அவன் நம்பினான், இரவு முழுக்க தூங்காமல் விழித்திருந்தான்.
விடிந்ததும் அம்மாவை எழுப்பி, "அம்மா, பாருங்கள் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன்! என்று அம்மாவைக் கட்டிக்கொண்டான்.
அம்மாவின் சந்தோசக் கண்னீர், அவன் மனதில் ஓர் வைராக்கியத்தை எற்படுத்தியது. அடுத்து வரும் ஒவ்வொர் இரவையும் இதே போல் கடக்க வேண்டும் என்று உறுதி பூண்டான். அவ்வாறே கடந்தான்……..
கடைசியாக அவனை மரணம் வென்ற போது அவன் வயது எழுபத்திஐந்து.
அந்த சிறுவன் - மில்டன் எரிக்சன்.
மனிதனுக்கு அவனே தான் தடை என்பது பற்றிய அவர் எழுதிய பல புத்தகங்கள் இன்றைக்கும் பிரபலம். மனநல சிகிச்சைகளில் பல புதிய முறைகளை அறிமுகப்படுத்தி, உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர்.
பன்னிரெண்டு வயதோடு முடிந்து போயிருந்தால், உலகம் மில்டன் எரிக்சனை இழந்திருக்கும்.
புரிந்து கொள்ளுங்கள்.... உலகில் எந்த உயிரும் அர்தமில்லாமல் இவ்வுலகுக்கு வருவதில்லை.....
Labels:
சந்தோசம்,
மரணம்,
மனநலம்,
மில்டன் எரிக்சன்,
வைராக்கியம்
Sunday, November 14, 2010
கவலைகளை களைந்தால் –ஆனந்தம்:
மனம் உற்சாகமாக இருந்தால், புல் கூட ஆயுதமாக தோன்றும், தோல்வியும் கூட குருவாக தோன்றும். சாத்தியம் இல்லாததிலும் சாத்தியம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் மனக்கண்ணில் தெளிவாகத் தெரியும்.
மனம் சோர்வுற்றிருந்தால் படையே உடன் இருந்தால் பயம் இருக்கும். வெற்றி கூட இப்போதைக்கு ஒ.கே. அடுத்த தோல்வி எப்போது வருமோ? என்று யோசிக்கத் தோன்றும். மிகச்சிறிய சாத்தியமின்மைகள் கூட பெரியதாகத் தெரியும்.
"இந்த நூற்றாண்டில் மனிதனை மிகாதிகம் பாதித்த வியாதி எது என்று கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அது எயிட்ஸ், கேன்சர், ரத்தக்கொதிப்பு, சர்கரைவியாதி, வறுமை போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்ற ரீதியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு. கருத்துக்கணிப்பின் முடிவு சற்றும் எதிர்பாராதது..
மனிதனை அதிகம் பாதிப்பது துக்கம், மனச்சோர்வு ( Depression) தான் காரணம் என்பது தான் அது.
ஒரு கிராமத்தில், ஒரு பெண்மணி நகரத்தில் வாழும் தன் மகன்களையே நினைத்து எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்தார். பக்கத்து ஊருக்கு ஒரு ஞானி வந்திருப்பதாகவும், அவர் மக்களின் கஷ்டங்களை தீர்த்து வைப்பதாகவும் பெண்மணியின் காதுகளுக்கு எட்டியது. பெண்மணி ஞானியை தரிசிக்க கிளம்பினார்.
"என் பையன்களைப் பற்றிய கவலை தான் எப்போதும்! என் பையன்களுக்கு நல்ல காலம் பிறக்க வேணடும் அதற்கு ஏதாவது வழி சொல்லுங்க" என்றார் ஞானியிடம்.
ஞானி, "அப்படியாம்மா.. சரி.. ஏன் எப்போதும் உங்கள் மகன்களை நினைத்தே கவலைப் படுகிறீர்கள்?" என்று கேட்டார்.
பெண்மணி, " என்னுடய மூத்த மகன் உப்பு வியாபாரம் செய்கிறான். மழைகாலத்தில் மழையில் உப்பு எல்லாம் நனைந்து விடுமே. வெய்யில் முழுமையாக இல்லாததால் உப்பளம் கட்டமுடியாதே. அவன் வியாபாரம் மழைகாலத்தில் சரியாக நடக்காதே. என்னுடய இளைய மகன் குல்லா, கம்பளி வியாபாரம் செய்கிறான். வெய்யில் காலத்தில் இளையவனுக்கு வியாபாரம் சரியாக நடக்காதே.
இப்படி மூத்த மகன் பாதி காலத்திலும், இளைய மகன் பாதி காலத்திலும் சரியாக சம்பாதிக்காத போது, நான் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?" என்றார்.
ஞானி, "ஏம்மா இப்படி உங்களை நீங்களே தேவையே இல்லாமல் வருத்திக்கொள்ளுகிறீர்கள்? வெய்யில் காலத்தில் மூத்த மகன் உப்பு வியாபாரம் நன்றாக செய்வதையும், இளைய மகன் மழைகாலத்தில் குல்லா, கம்பளி வியாபாரம் நன்றாக செய்வதையும் நினைத்து சந்தோசப்படுங்கள், இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்" என்றார்.
பலர் இப்படித் தான் எதையாவது நினைத்து கவலைப்பட்டுக் கொண்டே இருப்பர். தொடர்ந்து கவலைப் படும்போது அது துக்கமாக மாறுகிறது. துக்கத்துக்கு காரணம் தேடுவதை நிறுத்துங்கள் கவலையைத் தாண்டி நிம்மதி உணர்ச்சி பெறுவீர்கள்.
"யாருக்காக கவலைப்படுகிறேன்?, எல்லாம் என் குடும்பத்துக்காகவும், ஊருக்காகவும் தானே கவலைப்படுகிறேன். மத்தவங்க மேல இருக்கிற கருனையால் தானே கவலைப்படுகிறேன். மற்றபடி எனக்கு ஒரு கவலையும் இல்லை என்று சுயபச்சதாபம் தேடும் சிலர் சொல்வதுண்டு. நம் கவலைகளை ஒழிக்க நம் எண்ண ஓட்டத்திலும் ஓடும் சில துன்புறுத்தும் வார்த்தைகளை கண்டுபிடித்து நாமே களையவேண்டும்.
நான் பிரயோஜனமில்லாதவன், நான் முட்டாள், நான் துரதிருஷ்டசாலி என்று எண்ண ஓட்டத்தில் ஓடும் வார்த்தைகளை களைய வேண்டும்.
கவலைகளை களைந்தால் வெளிப்படாமல் இருக்கும் ஆனந்த சக்தி வெளிப்பட ஆரம்பிக்கும். ஆனந்தம் பொங்கும்.......
Wednesday, October 27, 2010
சந்தோசம்2:
எனக்கு ஒரு அத்தை இருந்தார். நவீனமானவர். லேடீஸ் கிளப்பில் முக்கியமான உறுப்பினர்.அபாரமாக உடுத்திக்கொண்டு போவார். விமலா என்ற உருப்பினருக்கும் என் அத்தைக்கும் எப்போதும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட நாள் மீட்டிங்கில் இருந்து திரும்பியதும் அத்தை 'ஓ'வென்று அழ ஆரம்பித்தார்.
தலைவருக்கான தேர்தலில் தோற்று விட்டாரா? கார் விபத்துக்குள்ளாகிவிட்டதா? என்னவென்று தெரியவில்லை?
விமலா என்னை நன்றாக பழிவாங்கிவிட்டாள்? என்று ஒரு வழியாக அழுதுகொண்டு விவரித்தார்..
அத்தை ஒரு புதிய நெக்லெஸை அணிந்து கொண்டு போயிருக்கிறார். மற்றவர் விசாரிக்கும் போது அந்த நெக்லெஸை பற்றி என்னவெல்லாம் விவரிக்கவேண்டும் என்று தயார் செய்து வைத்திருந்தார்.ஆனால் ஒரு உறுப்பினர் கூட நெக்லெஸை கவனித்ததாக காட்டிக்கொல்லவில்லை
அத்தையால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. விமலாவின் தூண்டுதலால் தான் எல்லோரும் அப்படி அலட்சியம் செய்தார்கள் என்று அழுது தூற்றினாள்.
அத்தை புதிய நெக்லெஸை வாங்கியது அவருடைய சந்தோசத்துக்காகத்தான், ஆனால் ஒரு விமலவால் எங்கெயோ உட்கார்ந்துகொன்டு மெளனத்தால் அந்த சந்தோசத்தை பறிக்க முடிந்தது.என்ன அபத்தம் இது? உஙகள் வாழ்க்கையில் கூட இப்படி ஏதாவது நிகழலாம்.
உஙகள் ஆசையின் நோக்கம் என்ன ஆனந்தமாயிருப்பது. ஆனால் எங்கே தவறு செய்கிறீகள்?
இவ்வளவு படித்தால் தான் சந்தோசம், இவ்வளவு பணம் இருந்தால் தான், மற்றவர் பொறாமைப்படும்படி நகை அனிந்தால் தான் என்றெல்லாம் நிபந்தனை விதித்தீர்கள்.
வெளி சூழ்நிலைகள் எல்லா நேரங்களிலும் உங்கள் விருப்பப்படி அமையாது. ஆசையின் நோக்கம் புரியாமல், வெளி சூழ்நிலைகளை நூறு விதமாக மாற்றிப் பார்த்தாலும் நிம்மதி கிடைக்காது. அப்படியானால் நெக்லெஸுக்கு காருக்கு ஆசைப்பட்டது தப்பா? கிடையவே கிடையாது. எதன் மீது வேண்டுமானலும் ஆசை வைக்கலாம்.
சந்தோசத்துக்காகத்தான் அந்த ஆசையின் அடிப்படை என்பதை மறந்து விட்டு,அதற்கான கருவிகளான நெக்லஸிலும் காரிலும் சிக்கிக்கொண்டுவிட்டதால் தான் இந்த அவலம்.
உங்கள் சந்தோசத்தை ம்ற்றவர் சொற்களிலும், வெளி சூழ்நிலைகளிலும் அடமானம் வைக்காமல், பயணத்தை தொடருங்கள்.. இந்த உலகையே உங்கள் விருப்பப்படி மாற்ற முடியும்...
சந்தோசம்1:
ஒரு முறை சங்கரன்பிள்ளைக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
உனக்கு முன்று வரங்கள் தருகிரேன் என்றார் கடவுள்.
எது வேண்டுமானாலும் கேட்கலாமா?
கேள்! ஆனால், உனக்கு கிடைப்பது போல் உன் நண்பனுக்கு இரண்டு மடங்கு கிடைக்கும்' என்றார் கடவுள்.
சங்கரன்பிள்ளை சந்தோசத்துடன் வீட்டுக்கு போனார்.
கடவுளே அரண்மணை போல வீடு வேண்டும் என்று கேட்டார், உடனே சாயம் போயிருந்த அவருடைய வீடு அரண்மணை போல மாறியது.
ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார், அவருடைய நண்பனுடைய வீடு இருந்த இடத்தில் இரண்டு அரண்மணை போல வீடு இருந்தது.
சங்கரன்பிள்ளைக்கு சற்றே வலித்தது.
போகட்டும், என்னோடு ஜாலியாக இருப்பதற்க்கு ஒரு உலக அழகி வேண்டும் என்றார். உடனே அவருடைய கட்டிலில் மிக ஒய்யாரமாக ஓர் அழகி படுத்திருந்தாள்
சங்கரன்பிள்ளையால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை, உடனே ஜன்னல் வழியே நண்பர் வீட்டை பார்த்தார்.அங்கே பலகனியில் அவருடைய நண்பணை இரு புறமும் இரு பேரழகிகள் கொஞ்சிக்கொண்டிருந்தனர் அதற்க்கு மேல் சங்கரன்பிள்ளையால் பொறுக்க முடியவில்லை,மிக அவசரமாக மூன்றாவது வரத்தை கேட்டார்.
கடவுளே என்னுடைய ஒரு கண்ணை பிடுங்கிக்கொள், என்றார்.
தன்னிடம் இருப்பது அடுத்தவரிடம் இல்லாதிருந்தால் மட்டுமே சந்தோசப்படுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருப்பதையும் இழந்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள்.
நீங்கள் ஒரு கார் வாங்குகீறீர்கள், சந்தோசப்படுகிறீர்கள் ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் உங்களை விட விலை உயர்ந்த கார் வாங்கினால் உஙகள் சந்தோசம் புஸ்ஸென்று போய்விடும்.
ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் காரை பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் அவன் பசு மாட்டை விட, பக்கத்து குடிலில் இருக்கும் பசு மாடு கொஞ்சம் பால் கூடுதலாக கறந்து விட்டால் போதும் அவன் மனம் வெதும்பிருப்பான்.
மாட்டுக்கு பதிலாக இப்போ கார் வந்துவிட்டதே தவிர, அடிப்படையில் மனித மனம் மாறியிருக்கிறதா இல்லையே?
கடந்த சில நுற்றாண்டுகளாக, மனிதன் தன் சுகத்துக்காக இந்த பூமியின் முகத்தையே மாற்றி விட்டான். மற்ற உயிர்களை பற்றிய பொறுப்புனர்ச்சி இல்லாமல் புழு, பூச்சி, பறவை, மிருகம் என்று அனைத்து உயிர்களின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டான்.
மரம், செடி கொடிகளைக்கூட விட்டு வைக்கவில்லை. நிலம், நீர், காற்று என அனைத்தையும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தி, சுத்தமான சுவாசம் கிடைப்பதற்க்கு கூட போராடும் நிலமைக்கு கொண்டு வந்து விட்டான்.
எல்லாம் எதற்காக தனக்கு சந்தோசம் கிடைக்கும் என்பதற்காகத் தானே? கிடைத்ததா?
ஆனந்தம் கிடைத்து அதைக் கொண்டாடும் மனநிறைவோடு பூமிப்பந்தையே சொக்கப்பனாக எரிக்கட்டும் தப்பில்லை. ஆனால் சந்தோசத்தை சிறிதளவும் ருசிக்கத்தெரியாமல், பூமியை மட்டும் அழித்துக் கொண்டிருக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?
தொடரும்.......
Subscribe to:
Posts (Atom)