Wednesday, October 27, 2010

சந்தோசம்2:

         எனக்கு ஒரு அத்தை இருந்தார். நவீனமானவர். லேடீஸ் கிளப்பில் முக்கியமான உறுப்பினர்.அபாரமாக உடுத்திக்கொண்டு போவார். விமலா என்ற உருப்பினருக்கும் என் அத்தைக்கும் எப்போதும் பிரச்சனை. ஒரு குறிப்பிட்ட‌ நாள் மீட்டிங்கில் இருந்து திரும்பியதும் அத்தை ''வென்று அழ ஆரம்பித்தார்.
                  தலைவருக்கான தேர்தலில் தோற்று விட்டாரா? கார் விபத்துக்குள்ளாகிவிட்டதா? என்னவென்று தெரியவில்லை?
விமலா என்னை நன்றாக பழிவாங்கிவிட்டாள்? என்று ஒரு வழியாக அழுதுகொண்டு விவரித்தார்..
                 அத்தை ஒரு புதிய நெக்லெஸை அணிந்து கொண்டு போயிருக்கிறார். மற்றவர் விசாரிக்கும் போது அந்த நெக்லெஸை பற்றி என்னவெல்லாம் விவரிக்கவேண்டும் என்று தயார் செய்து வைத்திருந்தார்.ஆனால் ஒரு உறுப்பினர் கூட நெக்லெஸை கவனித்ததாக காட்டிக்கொல்லவில்லை
                 அத்தையால் அந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை. விமலாவின் தூண்டுதலால் தான் எல்லோரும் அப்படி அலட்சியம் செய்தார்கள் என்று அழுது தூற்றினாள்.
                 அத்தை புதிய நெக்லெஸை வாங்கியது அவருடைய சந்தோசத்துக்காகத்தான், ஆனால் ஒரு விமலவால் எங்கெயோ உட்கார்ந்துகொன்டு மெளனத்தால் அந்த சந்தோசத்தை பறிக்க முடிந்தது.என்ன அபத்தம் இது? உஙகள் வாழ்க்கையில் கூட இப்படி ஏதாவது நிகழலாம்.
                   உஙகள் ஆசையின் நோக்கம் என்ன ஆனந்தமாயிருப்பது. ஆனால் எங்கே தவறு செய்கிறீகள்?
                   இவ்வளவு படித்தால் தான் சந்தோசம், இவ்வளவு பணம் இருந்தால் தான், மற்றவர் பொறாமைப்படும்படி நகை அனிந்தால் தான் என்றெல்லாம் நிபந்தனை விதித்தீர்கள்.
                    வெளி சூழ்நிலைகள் எல்லா நேரங்களிலும் உங்கள் விருப்பப்படி அமையாது. ஆசையின் நோக்கம் புரியாமல், வெளி சூழ்நிலைகளை நூறு விதமாக மாற்றிப் பார்த்தாலும் நிம்மதி கிடைக்காது. அப்படியானால் நெக்லெஸுக்கு காருக்கு ஆசைப்பட்டது தப்பா? கிடையவே கிடையாது. எதன் மீது வேண்டுமானலும் ஆசை வைக்கலாம்.
                    சந்தோசத்துக்காகத்தான் அந்த ஆசையின் அடிப்படை என்பதை மறந்து விட்டு,அதற்கான கருவிகளான நெக்லஸிலும் காரிலும் சிக்கிக்கொண்டுவிட்டதால் தான் இந்த அவலம்.
                    உங்கள் சந்தோசத்தை ம்ற்றவர் சொற்களிலும், வெளி சூழ்நிலைகளிலும் அடமானம் வைக்காமல், பயணத்தை தொடருங்கள்.. இந்த உலகையே உங்கள் விருப்பப்படி மாற்ற முடியும்...

No comments:

Post a Comment