Wednesday, October 27, 2010

சந்தோசம்1:

          ஒரு முறை சங்கரன்பிள்ளைக்கு கடவுளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
          உனக்கு முன்று வரங்கள் தருகிரேன் என்றார் கடவுள்.
          எது வேண்டுமானாலும் கேட்கலாமா?
          கேள்! ஆனால், உனக்கு கிடைப்பது போல் உன் நண்பனுக்கு இரண்டு மடங்கு கிடைக்கும்' என்றார் கடவுள்.
          சங்கரன்பிள்ளை சந்தோசத்துடன் வீட்டுக்கு போனார்.
கடவுளே அரண்மணை போல வீடு வேண்டும் என்று கேட்டார், உடனே சாயம் போயிருந்த அவருடைய வீடு அரண்மணை போல மாறியது.
          ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தார், அவருடைய நண்பனுடைய வீடு இருந்த இடத்தில் இரண்டு அரண்மணை போல வீடு இருந்தது.
          சங்கரன்பிள்ளைக்கு சற்றே வலித்தது.
                    போகட்டும், என்னோடு ஜாலியாக இருப்பதற்க்கு ஒரு உலக அழகி வேண்டும் என்றார். உடனே அவருடைய கட்டிலில் மிக‌ ஒய்யாரமாக ஓர் அழகி படுத்திருந்தாள்
          சங்கரன்பிள்ளையால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை, உடனே ஜன்னல் வழியே நண்பர் வீட்டை பார்த்தார்.அங்கே பலகனியில் அவருடைய நண்பணை இரு புறமும் இரு பேரழகிகள் கொஞ்சிக்கொண்டிருந்தனர் அதற்க்கு மேல் சங்கரன்பிள்ளையால் பொறுக்க முடியவில்லை,மிக அவசரமாக மூன்றாவது வரத்தை கேட்டார்.
                    கடவுளே என்னுடைய ஒரு கண்ணை பிடுங்கிக்கொள், என்றார்.

தன்னிடம் இருப்பது அடுத்தவரிடம் இல்லாதிருந்தால் மட்டுமே சந்தோசப்படுபவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருப்பதையும் இழந்துவிட்டு பரிதவித்துக் கொண்டிருப்பவர்கள்.
                    நீங்கள் ஒரு கார் வாங்குகீறீர்கள், சந்தோசப்படுகிறீர்கள் ஆனால் பக்கத்துவீட்டுக்காரன் உங்களை விட விலை உயர்ந்த கார் வாங்கினால் உஙகள் சந்தோசம் புஸ்ஸென்று போய்விடும்.
ஆயிரம் வருடங்களுக்கு முன் மனிதன் காரை பற்றி அறிந்திருக்கவில்லை, ஆனால் அவன் பசு மாட்டை விட, பக்கத்து குடிலில் இருக்கும் பசு மாடு கொஞ்சம் பால் கூடுதலாக கறந்து விட்டால் போதும் அவன் மனம் வெதும்பிருப்பான்.
                    மாட்டுக்கு பதிலாக இப்போ கார் வந்துவிட்டதே தவிர, அடிப்படையில் மனித மனம் மாறியிருக்கிறதா இல்லையே?
கடந்த சில நுற்றாண்டுகளாக, மனிதன் தன் சுகத்துக்காக இந்த பூமியின் முகத்தையே மாற்றி விட்டான். மற்ற உயிர்களை பற்றிய பொறுப்புனர்ச்சி இல்லாமல் புழு, பூச்சி, பறவை, மிருகம் என்று அனைத்து உயிர்களின் இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டான்.
                    மரம், செடி கொடிகளைக்கூட விட்டு வைக்கவில்லை. நிலம், நீர், காற்று என அனைத்தையும் சகட்டுமேனிக்கு பயன்படுத்தி, சுத்தமான சுவாசம் கிடைப்பதற்க்கு கூட போராடும் நிலமைக்கு கொண்டு வந்து விட்டான்.
          எல்லாம் எதற்காக தனக்கு சந்தோசம் கிடைக்கும் என்பதற்காகத் தானே? கிடைத்ததா?
                   ஆனந்தம் கிடைத்து அதைக் கொண்டாடும் மனநிறைவோடு பூமிப்பந்தையே சொக்கப்பனாக எரிக்கட்டும் தப்பில்லை. ஆனால் சந்தோசத்தை சிறிதள‌வும் ருசிக்கத்தெரியாமல், பூமியை மட்டும் அழித்துக் கொண்டிருக்க அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது?

தொடரும்.......

No comments:

Post a Comment