Monday, January 23, 2012

யோகா‍-தியானம் ஏன்? ஆனந்தம்


     


      நமது உணவை நாமே சமைக்கிறோம். நம் ஆடைகளை நாமே தூய்மை செய்கிறோம். இவையெல்லாம் உலகியலிலன் அங்கங்கள்தான். இவற்றையெல்லாம் செய்யாமல் இங்கே வாழ இயலாது.
      ஒவ்வொரு மனிதரும், உலகியலில் தான் எந்த வித்ததில் ஈடுபட வேண்டுமென்பதை, சுய விருப்பத்தின் பேரில் தானாகவே தீர்மானிக்கிறார். சிலர் அரசியலில் இருக்கிறார்கள். சிலர் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள். சிலர் தொழிலகங்களை நடத்துகிறார்கள். சிலர் தரை பெருக்குகிறார்கள். இவர்கள் எல்லோருமே உலகியலில் இருப்பவர்கள்தான். எனவே உலகியலில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதான விஷயமல்ல.
      உலகியலில் என்ன செய்ய விரும்புகிறோம். எந்த அளவுக்கு அதனை செய்வது என்பதெல்லாம் ஒவ்வொரு தனி மனிதரும் தன் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்வு செய்து கொள்ள வேண்டியதுதான். அது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள உரிமையும் கூட.
      இதில் சிலர் தானாக எதையும் செய்வதில்லை. பிறர் செய்வதையெல்லாம் பார்த்து அது போல் செய்ய முற்படுகிறார்கள். தான் என்ன செய்ய வேண்டும் என்கிற தெளிவோ, விழிப்புணர்வோ அவர்களிடம் இல்லை.
      இத்தகைய ஒரு சிலர்தான், ஆன்மீக வழியில் செல்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் பொறுப்புகளை உதறிவிட்டுப் போகிறார்கள். உலகிற்காக வாழாமல் தனக்காக வாழ்கிறார்கள்’ என்று புகார் சொல்கிறார்கள்.
      வீட்டிலும் அலுவலகத்திலும் மட்டுமே இயங்குபவரகள் தனக்காக வாழ்பவர்கள். அவர்களுக்குத்தான் உலக நலனில் அக்கறையில்லை. தனது சொந்த நலனுக்காக என்று வந்துவிட்டு அந்த வலையிலிருந்து விடுபட இயலாமல தவிப்பவரகள் ஆன்மீகப் பாதையில் செல்பவர்களைப் பார்த்து “வாழத் தெரியாதவர்கள், உலகத்தை விட்டு ஒதுங்கிவிட்டவர்கள்” என்று சொல்லத் தொடங்குகிறார்கள்.
      ஒரு குடிகாரன் இருந்தான். முழுபோதையில் தள்ளாடியபடியே ஒருபேருந்துக்குள் ஏறியவன், எல்லார் கால்களையும் மிதித்து பெட்டிகளைக் கலைத்து, தட்டுத்தடுமாறி, ஒரு கிழவியின் மீது விழுந்தான். கோபம் கொண்ட அந்தக் கிழவி, ‘ நீ நரகத்திற்குப் போவாய்’ என்று சபித்தாள். உடனே அந்தக் குடிகாரன், ‘அப்படியானால் நான் தவறான பேருந்தில் ஏறிவிட்டேன்’ என்று சொல்லிவிட்டுக் கீழே இறங்க ஆரம்பித்தான்.
      எந்தப் பேருந்து சரியானது, எது தவறானது என்பதெல்லாம் குடிகார்ர்களுக்குத தெரியாது. தங்கள் வாழ்வை விதம் விதமான சிக்கல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு, சூழ்நிலைக் கைதிகளாய் வாழ்ப்பவர்கள், தங்கள் வாழ்வை திறம்பட நிர்வகித்து விரும்பும் திசையில் திட்டமிட்டு பயணம் செய்பவர்களைப் பார்த்து ‘இவர்கள் தவறானவர்கள்’ என்று பேசுகிறார்கள்.
      இன்றைய உலகில் 0.1% பேர்தான் ஆன்மீகப் பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் இருப்பவர்கள். 50% பேர் இயந்திரங்கள் போல் இடையறாமல் செயல்பட்டு, தங்கள் செயல்களாலேயே உலகுக்குக் கேடு விளைவிக்கிறார்கள்.
      மனித சுயநலத்தின் காரணமாய், பூமி, வேண்டாத பாரங்களை சுமந்து கொண்டிருக்கிறது. 50% பேரையாவது ஆன்மீக நெறியில் ஈடுபடுத்தினால் இந்த உலகம் காற்றப்படும்.
      அளவுக்கதிமான செயல்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள் தங்களுக்கோ, சமூகத்திற்கோ, உலகிறகோ சுற்றுச சூழலுக்கோ கேடு விளைவிப்பதில்லை.
      சிறிது கூட விழிப்புணர்வின்றி, தாங்கள் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல், மற்றவர்கள் செய்வதையெல்லாம் தாங்களும் செய்ய முற்பட்டவர்கள் பூமி உருண்டைக்கு போதுமான அளவு சேதம் விளைவிக்கிறார்கள். இத்தகைய செயல்களிலிருந்து விடுபடுவதொன்றும் தவறானதல்ல. அதுவே மனித குலத்திற்கு செய்கிற பெரும் உதவி.
      இந்த உலகம் எப்போதுமே அற்புதமானதாக இருந்து வந்திருக்கிறது. தன்னலம் மிக்க சிலரின் அடாவடி செயல்கள், உலகுக்கு நன்மை செய்வதாய் நினைத்துக் கொண்டு அவர்கள் செய்யும் தீமைகள், இவைதான் உலகிற்கு எதிரான ஒன்றை ஏற்படுத்தி வருகிறது.
      மனிதகுலம் நாகரீகமடைந்து பல்லாயிரம் ஆண்டுகள் ஆன பிறகும் மனிதகுலம் வாழ்வதற்காக எத்தனையோ விலங்குகளை வேட்டையாடி, சில சமயம் மனிதர்களையே வேட்டையாடிய பிறகும் மனித குலம் நன்மையடையவில்லை.
      மனிதன், வெளிச்சூழலை சரி செய்ய விஞ்ஞானம், தொழில் நுட்பம் ஆகியவற்றின் உதவிகொண்டு என்னென்னவோ செய்துவிட்டான். ஆனால் அவன் உள் தன்மையில் நாகரீகமடையவில்லை.
      உள்நிலையில் கவனம் செலுத்தி உரிய மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே மனிதன் உயர்நிலை அடைய இயலும். அத்தகைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக வழியே யோகம் தியானம் ஆகியவை.

1 comment:

vinitha said...

நண்பர் ஒருவர் ஈஷா பற்றி ஒரு கட்டுரை எழுதிஉள்ளார்அதனை நீங்கள் படித்து பாருங்கள்.

நானும் ஈஷா வகுப்பு இல் பல பயிற்சிகளை முடித்துளேன். அதற்கு பல வாரங்கள் சாப்பிடாமல் இருந்திருக்கிறேன். அந்த பணத்தை ஈஷா உண்டியலில் போட்டு உள்ளேன்.

இந்த விளம்பரத்திற்கு( நடிகர் சூரியா) வேறு நடித்து இருந்தர்.

ஒரு நாள் என் சொந்தக் காரரை பார்த்தேன். அவர் ஒரு (வனவாசி) கிராமத்தில் சேலம் மாவட்டம் வசிக்கிறார். அவருடைய பையன் நன்றாக படிக்கிறான் என்றார். ஆனால் இங்கு உள்ள அரசு பள்ளியில் நன்றாக சொல்லித் தரவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை.
http://tamilnanbargal.com/node/35008

Post a Comment