புத்தர் இன்றைக்கு நேபாளம் என்று சொல்லப்படும் நாட்டின், லும்பினி என்கிற இடத்தில் கபிலவஸ்து என்கிற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த சாக்கிய அரச வம்சத்தை சார்ந்த ராஜா சுதோதனாவுக்கும், ராணி மகாமயாவுக்கும் கி.மு.563 ஆண்டில் பிள்ளையாக பிறந்தார். கௌதமர் என்பது அவர்களின் குடும்பப் பெயராகும் . ராணி மகாமயா சித்தார்த்தர் பிறந்தவுடனே இறந்து விட்டார். அக்குழந்தையின் ஜாதகத்தை கணித்த ஜோசியர்கள் இப்பிள்ளை பிற்காலத்தில் மிகப் பெரிய பேரரசனாக விளங்குவார் அல்லது மனித ஆசைகளை ஒதுக்கி தள்ளி அரச சுக போகங்களை வெறுத்து மக்கள் போற்றும் மகானாக விளங்குவான் என தெளிந்தனர். அது கேட்டு நடுங்கிப் போன தந்தை சுதோதன தன் மகனை அவ்வாறு செல்ல தான் விட்டு விட மாட்டேன் என்றும், தன் மகனுக்கு அவன் பிறந்த முதலே, உலக சுகங்களை காட்டி ராஜ போகத்தில் வாழ வைப்பேன் என்றும் சபதம் பூண்டான்.
தந்தை சுதோதனா தன் மகனுக்காக அகண்ட நிலப்பரப்பில் மிகப் பெரிய அரண்மனை கட்டினான். அதன் மதில் சுவர்களை வானளாவ கட்டினான். வெளியுலம் என்பதே தன் மகன் அறியா வண்ணம் அவனை உள்ளுக்குள் வைத்து அவனை கவனித்துக் கொள்ள, அவன் சித்தியாகிய ராணி மஹாபஜபதி மேற்பார்வையில் பத்து ஈரத்தாய்களை நியமித்தான், தன் பிள்ளை நினைத்த நேரத்தில் பிடித்த தாயிடம் பாலருந்த. அவன் விளையாட அனைத்தும் வைத்தான். புறாக்கள், கிளிகள், மயில்கள், பூனைக் குட்டிகள், ஆனைக் குட்டிகள், மான் குட்டிகள், சிங்கக் குட்டிகள், புலிப் போந்துகள் என அன்டிது பறவை மிருக வகைகளையும் ஆங்கே வைத்தான். அனைத்து பழத் தோட்டங்களும், மலர் தோட்டங்களும், நீச்சல் குளங்களும் செய்தான். அவன் கூட சேர்ந்து விளையாட தோழர்களும் தோழியரும் (இளமையனவர்கள் மட்டுமே)ஏற்பாடு செய்யப்பட்டனர். வெளியுலகத்தை சித்தார்த்தனின் கண்களிலிருந்து முழுவதுமாக மறைத்தான் அரசன். சித்தார்த்தனுக்கு மனிதனுக்கு வயதாகும், பூக்கள் வாடிவிடும் என்பது கூட தெரியாது
சித்தார்த்தா தான் இருந்த அரண்மனையையும் அதன் சுற்று சுவரையுமே மொத்த உலகம் என நினைத்து வாழ்ந்து வந்தான். இவ்வாறு இருக்கும் வேளைகளில் சித்தார்த்தா தன் நண்பர்கள், வேலைகாரர்கள், தன் தேரோட்டியாய் இருக்கக்கூடிய சன்னா என்பவனும் கூட சில வேளைகளில் தன் கூட இருந்து விட்டு பல வேளைகளில் எங்கோ மறைந்து விடுவதை உணர்ந்தான். தான் மட்டுமே இந்த அரண்மனையில் எந்த நேரமும் இருந்துக் கொண்டு இருப்பதை போலவும் உணர்ந்தான். மற்ற அனனைவரும் குறிப்பிட நேரங்களில் மட்டுமே தன் முன்னே வந்து நிற்பதை கவனிக்கலானான். இப்படியாக அவன் வாழ்ந்து தன் பதினாறு வயதினை அடைந்தவுடம் அவன் தந்தை ராஜா சுதோதனா அவனுக்கு தன் தங்கை மகள் யசோதராவை மணமுடித்து வைத்தான். அவர்கள் இன்பமாக கூடி வாழ்ந்து ஒரு மகனையும் பெற்று ரஹூலா எனவும் பெயரிட்டார்கள். இத்தனை சந்தோஷமான வாழக்கையின் ஊடே சமயத்தில் தன் தந்தை. அவ்வளவு ஏன், தன் மனைவியும் கூட தன் மகனை தூக்கி கொண்டு அவ்வபோது எங்கோ போய் விடுவதை உணர்ந்து அவன் கலங்கி வானைத்தை பார்க்கும் வேளைகளிலே மேலே உயரத்தில் பல பறவைகள், தன் அரண்மனையில் இருந்த இறக்கை கத்தரிக்கப்பட்ட பறவைகள் போலே அல்லாத வேறு பறவைகள், உயரே பறந்து பறந்து தன் அரண்மனையின் சுற்று சுவரை தாண்டி அதற்கும் அப்பால் எங்கோ சென்று இறங்குவதை கண்டான். இது பற்றி அவன் தன் தேரோட்டி சன்னாவிடம் கேட்கிறபோது அவன் எதையோ சொல்லி மழுப்புவதை கவனித்தான். பல வேளைகளில் யாருமற்ற பொழுதுகளில் அவன் அந்த சுற்று சுவரின் பக்கத்தில் நின்று கூர்ந்து கவனித்த போது அதற்கு அப்பாலும் மனித குரல்கள் ஒலித்ததை கேட்டான்.
ஒரு நாள் தன் தேரோட்டியை மடக்கினான் சித்தார்த்தன். "சென்னா, நீ எங்கே அடிக்கடி காணமல் போய் விடுகிறாய்? நேற்றுக் கூட உன்னைத் தேடினேனே,எங்கே போய் விடுகிறாய், சொல்" என்றான். அதற்கு தேரோட்டியோ, " நான் எங்கே போய் விட போகிறேன், இங்கே தான் இருக்கிறேன்" என்றான். " இல்லை நீ பொய் சொல்லாதே, நான் சின்ன குழந்தையல்ல, நீ சொல்வதை கேட்டுக் கொள்ள, எனக்கு தெரியும், நீ எங்கோ இந்த உலகுக்கு அப்பால் போய் வருகிறாய்." என்றான். "உலகுக்கு அப்பாலா!" தேரோட்டிக்கு ஆச்சரியமான ஆச்சர்யம். இளவரசர் இந்த அரண்மனையும் இந்த சின்ன வெளியையுமா உலகம் என நம்பிக் கொண்டு இருக்கிறார், கடவுளே, சித்தார்த்தன் விடவில்லை, "சென்னா, அதோ அந்த பறவைகளை பார், அவை எங்கோ அந்த சுவருக்கு பின்னால் சென்று மறைகின்றன, அங்கே என்ன இருக்கிறது, நீயும் அங்கே தான் சென்று வருகிறாய், சொல், அங்கே என்ன இருக்கிறது, என்னையும் அங்கே கூட்டி செல்" என்றான். சென்னாவும் சம்மதித்தான்.
மறுநாள் சித்தார்த்தன் தேரோட்டி சின்னாவின் உதவியுடன் அரண்மனைக்கு வெளியே வந்தான். வந்தவன் எங்கெங்கும் விரவிக் கிடந்த பெருநிலத்தை கண்டான். தேங்காமல் ஓடி வந்த தென்றற்காற்றை உணர்ந்தான். விரைந்து சென்றுக் கொண்டு இருக்கும் மக்கள் கூட்டம். விரிந்து கிடக்கும் பச்சை பசேல் வயல்கள், நெடுநெடு ஏரிகள், வாத்துக் கூட்டங்களை, வானத்தை முகர்ந்து நிற்கும் மலை முகடுகள். திறந்த கண்ணும் வாயும் மூடாமல் பார்த்தது பார்த்தப்படி தேரில் முனையில் நின்றுக் கொண்டு 'ஆ' என்று பார்த்துக் கொண்டு வந்தான். தேரோட்டி சென்னா சொன்னான். " போதுமா இளவரசே, திரும்பி விடலாமா?", "இல்லை, இன்னும் போ, அந்த கடைசி மரத்தை வரை பாப்போம்." தேர் விரைந்தது. அந்த கடைசி மரம் கடைசியில்லை, அதற்கு அப்பாலும் மரங்கள் வந்துக் கொண்டே இருந்தன. சித்தார்த்தன் வியந்தான். "இன்னும் போ, இன்னும் போ, " என்றான். தேரோட்டி "போதும் இளவரசே, குதிரைகள் களைத்து விட்டன, திரும்புவோம்." என்றான். அப்படியானால் குதிரைகளை கொஞ்சம் களைப்பாற்று. நான் சிறிது தூரம் நடந்து செல்கிறேன்" என்று சொல்லி தேரை விட்டு இறங்கியே விட்டான் சித்தார்த்தன். குதிரைகளை அவிழ்த்து விட்டு புல் மேய விட்ட சின்னா பின்னாலையே ஓடி வந்தான். சிறிது தூரத்தில்;. ஒருவர் மரத்தடியே அமர்ந்துக் கொண்டு பிட்சைக்காக கை ஏந்திக் கொண்டு இருந்தார். அதுக கண்ட சித்தார்த்தன் சின்னாவிடம் கேட்டான், "இவர் யார், இங்கே ஏன் அமர்ந்துக் கொண்டு ஏதோ கேட்பவர் போல் இருக்கிறார்?", "இளவரசே, இவன் ஒரு பிச்சைக் காரன், சிலர் இவனை ஞானி என்றும் சொல்கிறார்கள், இவன் மற்றவர் தருவதை உண்டு உயிர் வாழ்கிறார்" என்றான். அந்த உலகம் அறிய இளவரசு, மேலும் கேட்டான், "இவர் சொந்தங்கள், சொத்துக்கள் மாளிகைகள் எல்லாம் எங்கே இருக்கின்றன, இவர் இங்கு இருக்க காரணம் என்ன?" , இவனுக்கு அப்படியெல்லாம் ஏதும் இல்லை, இளவரசே, இவன் ஒரு தனிக்கட்டை" ,.
" இவர் எங்கே தங்குவார்?" , "இவன் இங்கேயே தங்குவான் இளவரசே" என்றான் சென்னார். சித்தார்த்தன் தன வாழ்க்கையில் முதல் முறையாக முகம்மாறி விழிக்க ஆரம்பித்தான்.
இவ்வாறு சித்தார்த்தன் வெளியே அடிக்கடி வர ஆரம்பித்தான். தந்தைக்கும் விசயம் தெரிந்தது. ஆனால் ஜோசியர்கள் குறித்த காலம் தாண்டிவிட்டதே என்று அவரே அனுமதித்தார். ஓரு நாள் தன் தேரோட்டி சின்னாவுடன் பக்கத்து கிராமத்துக்கு ஒரு விழாவுக்கு சென்று கொண்டிருந்தனர்.
ஆப்போது அவ்வழியே ஒரு மிகவும் முதியவர் கம்பு ஊன்றிக்கொண்டு சென்றார், அதை பார்த்த சித்தார்த்தன் யார் இவர்? இப்படியும் மனிதர்கள் உண்டா? என்று கேட்டான். அதற்க்கு சின்னா, இளவரசே, இவர் ஒரு முதியவர் வயது தொண்ணூற்றுக்கு மேல் என்றான்? இதே போல் நாமும் ஒரு நாள் முதுமை அடைவோம் என்றான். உடனே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே முதுமை அடைந்துவிட்டேன் என்றான். இல்லை அரசே நமக்காக விழாவில் பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.
மேலும் சிறிது தூரம் சென்றவுடன் ஒருவரை படுக்கவைத்து நான்கு பேர் தூக்கிகொண்டு செல்வதை பார்த்தார். யார் அது? ஏன் ஒரு மனிதரை படுக்கவைத்து தூக்கி செல்கின்றனர் என்று கேட்டார்? அதற்க்கு சின்னா, இளவரசே, இது ஒரு சவம், உயிர் பிரிந்த பின் இந்த உடலுக்கு பெயர் சவம். இயங்காது இதே போல் நாமும் ஒரு நாள் மரணமடைவோம் என்றான். உடனே சின்னா தேரை திருப்பு அரண்மணைக்கு நான் இப்போதே மரணமடைந்துவிட்டேன் என்றான். இல்லை அரசே நமக்காக விழாவில் பலர் காத்துக்கொண்டு இருக்கிறார்கள் நாம் போய்விட்டு திரும்புவோம் என்று கூறி அழைத்து சென்றான்.
கடைசியில் அந்த விழாவுக்கு சென்று திரும்பினர். திரும்பி வந்தபின் அரண்மணையில் உள்ள மற்றும் நாட்டிலுள்ள அனைத்து மகான்களிடமும் அறிவாளிகளிடமும் அந்த சில கேள்விகளை சித்தார்த்தன் கேட்டான் யாரும் அவருக்கு திருப்தியாக பதிள் அளிக்கவில்லை. ஓரு நாள் அரண்மணையை விட்டு அந்த கேள்விகளுடன் புறப்பட்டான், காடு, மேடெல்லாம் அலைந்தான். தீட்சை பெற்றான், போதி மரத்தடியில் அமர்ந்து அந்த கேள்விகளுக்கு விடைகண்டுபிடித்தான். ஞானம் பிறந்தது.............. அந்த கேள்விகள்
1) உயிர் என்பது என்ன? அல்லது எது?
2) முதுமை ஏன் வருகிறது?
3) மரணம் ஏன் வருகிறது? அல்லது என்ன?
4? கடவுள் என்பது யார்? அல்லது எது?