Wednesday, September 19, 2012

தியானம் நேரத்தை வீணடிக்கும் வேலை! ஆனந்தம்


   
 "நான் தியானம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்கிற இந்த ஒரு கணக்கை மட்டும் விட்டுவிட வேண்டும். அதிலிருந்து நீங்கள் பலன் பெறவோ அல்லது வேறு எதோ பெறவோ வேண்டாம். ஒவ்வொரு நாளும் 20, 30 நிமிடங்களை வீணாக்குங்கள், நேரத்தை எப்படி வீணாக்குவது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
      தியானத்தை ஆரொக்கியமாக இருப்பதற்கோ, ஞானியவதற்கோ, சொர்க்கத்தை அடைவதற்கோ செய்யத்தேவை இல்லை. இது நேரத்தை வீணடிக்கும் வேலை அவ்வளவுதான். "இன்றைய தின நிகழ்வுகளில் நாம் என்ன கொண்டு செல்லப்போகிறோம்?" என்று கேட்பதெல்லாம் நவீன காலத்து சொல் துஷ்பிரயோகங்கள் ஆகும். நீங்கள் எதையாவது எதிபார்த்தீர்கள், என்றால் அர்ப்ப விசயங்கள் மட்டுமே கிடைக்கலாம். உண்மையானது எதுவோ அது உங்களுடன் வராது. உங்களுக்கு உண்மை மட்டும் வேண்டுமென்றால் இந்த கொண்டு செல்லும் பழக்கத்தை விட்டு விடுங்கள். நீங்களாக மட்டும் இருங்கள் வேறெதுவும் செய்ய வேண்டாம்.
      உங்கள் வாழ்க்கையில் "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வியை மட்டும் விட்டு விட்டால், உங்களுக்கு எல்லைகளே இருக்காது. நீங்கள் கருணையின் வடிவமாகவே மாறி விடுவீர்கள். இதற்கு மாற்று வழியே இல்லை. இந்த ஒரு சிறு கணக்கை மட்டும் விட்டு விட்டால், அது தான் உங்கள் முழுமனதிற்கும், அதன் செயல் பாடுகளுக்கும் இருக்கும் ஒரே சாவி. அது தான் மனதில் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் திறவுகோல்.
ஆனால் மக்களுக்கு சும்மா இருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு இல்லாததால். மாற்று வழி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது எப்போதுமே அன்பாக இருப்பது. ஏனெனில் இந்த வழி ஒன்றில் தான் இந்த கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லாமல் இருக்க முடியும். உங்களுக்குள் ஆழமான அன்பையோ கருணையையோ வளர்த்துக்கொள்ளுதல் பற்றிய பேச்சுக்கள் எல்லாம், உங்களுக்குள் உள்ள எதிர்பார்ப்புகளை நீக்கிவிடுவதற்கே. யாருடனாவது தீவிர உணர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம், " எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வியை அகற்றி விடலாம்.
      வாழ்க்கையில் இந்த ஒரு கணக்கை நீங்கள் விட்டு விட்டால் 90 சதவிகித செயல்கள் முடிந்தார்போல் தான். மீதமுல்ல 10 சதவிகித வேலைகள் தானாகவே நிகழ்ந்து விடும். உங்களுக்கு பரமபத விளையாட்டு தெரியுமா? ஆரம்ப கட்டங்களில் அதில் பல ஏணிகளும், பல பாம்புகளும் இருக்கும். அவற்றில் ஏறி இரங்கிக்கொண்டே இருப்போம். ஆனால் விளையாட்ட்டின் கடைசிக்கட்டத்தை நெருங்கிவிட்டால் அதன் பிரகு பாம்புகளே இருக்காது. தாயம் தாயமாகப் போட்டு பரமபதத்தை அடைய வேண்டியதுதான், அங்கு உங்கலை விழுங்குவதற்கு எந்த பாம்புகளும் இருக்காது. இதுவும் அது போலத்தான் நீங்கள் "என‌க்கு என்ன கிடைக்கும்?" என்ற கணக்கை விட்டு விட்டால், பிறகு பாம்புகளே இருக்காது, அவ்விடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பது தான் கேள்வி...........வாழ்க வளமுடன்!.......

Monday, September 17, 2012

கால நிர்வாகம்(Time Management) ஒரு பார்வை! ஆனந்தம்


      அதை கால நிர்வாகம்(Time Management) என்று பார்கக் கூடாது. முன்னுரிமை நிர்வாகமாக(Priority Management) தான் பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக காலத்தை பூமியே நிவகித்துக் கொள்கிறது. 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் இந்த கணக்குகளை எல்லாம் பூமியே பார்த்துக் கொள்கிறது. அதை நாம் கணக்கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
      கால நிர்வாகம் என்று சொல்லும் போது, எவ்வெளவு நேரம் துங்குவது, எவ்வளவு நேரம் பணிபுரிவது, எவ்வளவு நேரம் குடும்பத்துடன் செலவிடுவது போன்ற பலவிதமான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குவதைப் பற்றி சொல்கிறீர்கள். இவற்றைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட முறை என்று எதுவும் இல்லை. ஏனென்றால் முன்னுரிமைகள் ஒவ்வுருவருக்கும் மாறுபடும். உங்களுடைய முன்னுரிமைகள் தெளிவாக இருந்தால், நேரம் தானாகவே சரியாக பொருந்திவிடும்.
      காலத்தை நிர்வகிப்பதற்கு பதிலாக, வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உங்களுக்கு எத்தனை தூரம் முக்கியமானது என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், காலம் அதுவாகவே உங்களுடன் அனுசரித்து செல்லும்.
      ஆனால் மக்களுக்கு எது எதை விட முக்கியம் என்பதில் எப்போதும் சந்தேகங்கள் தான் அதிகம். ஏனென்றால் அவர்கள் தாங்கள் செய்ய விரும்புவதை செய்வதில்லை, பதிலாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களையே செய்கிறார்கள். எது தேவையோ அதை அவர்கள் செய்வதில்லை. உங்கள் வாழ்க்கையிலும், உங்களைச் சுற்றியும் நிகழ வேண்டிய முக்கியமானவை எது என்று கணித்து விட்டால், பிறகு எதைச் செய்ய வேண்டும், எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பமே இருக்காது.
...........................................வாழ்க வளமுடன்!.................................................

Wednesday, September 5, 2012

"கடவுளைத் தொலைத்துவிட்டார்கள்?" ஆனந்தம்


      ஓர் ஊரில் குறும்புக்கு பெயர் போன இரண்டு சிறுவர்கள் இருந்தனர். வம்பை விலைக்கு வாங்குவது அவர்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. பெற்றோர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் கேட்டபாடில்லை. எனவே பெற்றோர் அவர்களை ஒரு மதகுருவிடம் அழைத்துச் சென்றனர். முதலில் இளையவனை மட்டும் அழைத்துச் சென்று மதகுருவிடம் விட்டுவிட்டு வந்தனர்.
      குறும்பு கார‌ச் சிறுவனை மேலும் கீழும் பார்த்த மதகுரு, நாடக பாணியில் அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தார். "எப்படியாவது கடவுள் அவனுள் தான் இருக்கிறார் என்று உணர்த்திவிட்டால், அவன் குறும்புத்தனம் எல்லாம் அடங்கிவிடும்!" என்று நினைத்தார்.
      பாதி நடையில் நின்று விட்டு கணீர் குரலில், "எங்கே கடவுள்?" என்று கேட்டார். அந்த சிறுவன் மொத்தமாக குழம்பிப்போய் கடவுள் அந்த இடத்தில் தான் எங்கோ இருக்கிறார் போலும் என்று நினைத்து அங்கும் இங்கும் கண்களால் தேடினான்.
      "அவர் உண்ணுள் தான் இருக்கிறார் என்று சிறுவனுக்கு உணர்த்த, மேஜையின் குறுக்கே சாய்ந்து கொண்டு, "கடவுள் எங்கே?" என்று மறுபடியும் கேட்டார் மதகுரு. சிறுவன் இன்னும் குழம்பிப்போய் மேஜைக்கு கீழே குணிந்து கடவுளைத் தேடினான். ஆனால் மதகுரு அவனுடைய இதயத்தை சுட்டிக்காட்டி, "கடவுள் எங்கே?" என்று திரும்பக் கேட்டார். கடவுள் அங்கு தான் இருக்கிறார் என்பதை அந்த பையனுக்கு புரிய வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார்.
      அவ்வளவு தான் அந்த சிறுவன் கதவு தாள்ப்பாளைத் திறந்து கொண்டு தன் அண்ணன் இருக்கும் இடத்திற்க்கு ஓட்டமாய் ஓடிவிட்டான். அங்கே அண்ணனிடம், "அண்ணா! நாம் பெரும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டுவிட்டோம்!, அவர்களுடைய கடவுளைத் தொலைத்து விட்டார்கள், அதை நாம் தான் திருடினோம் என்று நினைக்கிறார்கள்!" என்றான்.

பாக்கெட் மணி விபரீதம்! ஆனந்தம்


      என் மகனுக்கு நான் நிறைய பாக்கெட் மணி கொடுத்தேன். அவன் அதை வைத்துக் கொண்டு நிறைய தீய பழக்கங்களுக்கு ஆகிவிட்டான். என்ன செய்ய?
      நீங்கள் முதலில் உங்கள் மகனுடன் ஒரு நண்பராகப் பழகுங்கள்! அவனுடன் ப்யணம் செய்யுங்கள். அவன் உங்களுடன் பயணம் செய்ய வேண்டும். அவனுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவனுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரவேண்டும். அப்போது தான் உங்களால் அவனுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியில் கை வைக்க முடியும்!
      மாறாக இப்போது நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால், அவன் உங்களை உதைத்தாலும் உதைப்பான். இன்னும் சொல்லப்போனால் மேலும் சில அற்பமான விஷயங்களைத் தேடிச்செல்வான்.
      பிள்ளைகளை வளர்ப்பது என்றால், வெறும் பணத்தை வீசிஅடிப்பது மட்டுமல்ல. அதற்கு ஈடுபாடு தேவை. ஒரு குழந்தையை ஈடுபாடு இல்லாமல் வளர்ப்பது ஒருபோதும் வேலை செய்யாது?
      இப்போது பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் திருந்துவான் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு பணம் தான் கட் செய்வீர்கள்? நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் வேறு எதையோ பணத்துகாக செய்வான். செய்வானா இல்லையா? அதனால் அவனிடம் நட்புறவுடன் பழகுங்கள்! அவனுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். அப்போது, நீங்களே தெளிவான பாதைக்கு மெல்ல மெல்ல அழைத்துச் செல்லுங்கள். வாழ்க வளமுடன்!
....................................சத்குரு ஜக்கிவாசுதேவ்.........................................

Tuesday, September 4, 2012

ஆண் - பெண் நட்பு! ஆனந்தம்


      பொருளாதாரம், ஆண் - பெண் உடலுறவு இன்பம் என்ற இருவகைக்குள் மனிதனின் வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அடங்கிவிடும். சமுதாய அமைப்பில் நிலவி வரும் பலவித சூழ்நிலைகளால் ஏற்படும் வாழ்க்கைத் தொல்லைகளைச் சமாளித்து வெற்றி பெறுவதில் தம்பதிகளுக்கிடையே நட்பு என்பது மிகவும் சக்தி வாய்ந்ததும், அவசியமானதும், பொறுப்பு வாய்ந்ததும் ஆகும்.
      தம்பதிகளின் மனம் ஒத்த நட்பின் மூலம் கைடைக்கும் பலதரப்பட்ட வாழ்க்கையின் இன்பங்களை வேறு எவ்வழியில் பெற முடியும்? வாழ்க்கைச் செல்வங்களுள் மிகவும் சிறப்பானது அன்றோ தம்பதிகளுக்கிடையே நட்பு?
      அறியாமை, அலட்சியம், முரட்டுத்தனம், வரட்டு கெளரவம் ஆகியவற்றால் ஒரு சிறந்த விசயமான நட்பை ஒரு ஆணோ, பெண்ணோ, குலைத்துக் கொள்கிறார்கள் என்றால்? இந்த நட்ப்பில் களங்கத்தை ஏற்ப்படுத்திக் கொள்கிறார்கள் என்றால்? அவர்கள் அறிவின் நிலையை, திற‌மையை என்னெவென்று சொல்வது?
      பிறந்து விட்டதனால் வாழ்ந்தேயாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் உள்ள நாம் ஒவ்வொருவரும், ஆணும், பெண்ணும் ஆழ்ந்து சிந்தித்து தம்பதிகள் நட்பினிலே உள்ள  களங்கத்தை போக்கிக் கொண்டு, நல்ல நட்பு கொண்டு உறுதியான ஒரு நட்பான நிலை பாட்டில் வாழ முயற்சி செய்ய வேண்டும்.
      1. ஒருவர் உள்ளத்தை ஒருவர் புரிந்து கொண்டு செயலாற்றுவது.
      2. தவறான போக்கு எனில் ஒருவருக்கொருவர் அன்போடும் அளவோடும் கண்டித்து திருத்துவது.
      3. கோபம் என்ற விஷம் ஏறாமல் ஒவ்வொருவரும் த‌ங்களை பாதுகாத்துக் கொள்வது.
      4. சிக்கனமாகவும், பிறர்பழிகஞ்சியும் செலவு செய்து வருவதும்.
      5. நேர்மையான வழியில் மட்டுமே முயற்ச்சித்து பொருளீட்டுவது.
      6. உயிரை விடவும் மேலாக கற்பொழுக்கத்தை பாதுகாத்துக் கொள்வது.
      7. பெற்றோர்களையும், குழைந்தைகளையும், பராமரிப்பதிலும், விருந்துபசரிப்பதிலும் சமமான பொறுப்பை ஏற்றுக் கொள்வது
      8. சமுதாயம், சந்தர்ப்பம், அஜாக்கிரதை அகிய மூவகையில் ஏற்ப்படும் கஷ்ட நஷ்டங்களை காரணங்களை உணர்ந்து சகித்துக் கொள்வதும்.
      என்ற எட்டு வழிகளை சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப நுட்பத்தோடு பின்பற்ற பழகிக்கொண்டால் இவைகள் தம்பதிகளின் நட்பை பாதுகாக்கும் பலம் வாய்ந்த கோட்டையாகிவிடும்.

      ......................................................வாழ்க வளமுடன்!........................................................

Thursday, July 5, 2012

உலகைக் காப்பாற்றும் சோம்பேறிகள்? Real Story-ஆனந்தம்


      
      உங்கள் மகிழ்ச்சி என்பது உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் இருந்து கடனாகப் பெறப்படும் ஒரு பொருள் போல கருதுகிறீர்கள்! நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் வெளியில் என்ன நடக்கிறது என்பதற்கும் சம்பந்தம் இல்லை என்ப‌தை புரிந்து கொள்ளுங்கள்.
      இப்போதைக்கு உங்களுடைய சக்திகள் அனைத்தும் வெளிபுற சூழ்நிலைகளுக்கு அடிமைப்பட்டு கிடப்பதால், அந்த வெளியுலகம் தான் உங்கள் உள் நிலை மகிழ்ச்சியைத் தீர்மானிக்கிறது. இது போன்ற சூழ்நிலைகளில் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது. இந்த உலகில் போராட்டம் என்பதே ஒருவர் சந்தோசத்திற்கும் மற்றவர் சந்தோசத்திற்கும் இடையே தான் நடக்கிறது. என் சந்தோசம் சிவன், உங்கள் சந்தோசம் அல்லா, இப்படி இருந்தால் இருவரும் சண்டை போட்டே ஆக வேண்டும்.
      நம்முடைய இயல்பிலேயே நாம் சந்தோசமாக இருப்பதற்கு முடியாவிட்டால், மகிழ்ச்சியாக இருப்பதற்கு நாம் வெளியில் எதையாவது செய்து தான் ஆகவேண்டும். இந்த உலகத்தில் சந்தோசமாக இருப்பதற்கு நாம் எதையாவது செய்து தான் ஆகவேண்டும் என்றால் பின் மற்றவர்களும் சந்தோசமாக இருப்பதற்கு வேறு எதையாவது ஒன்றைச் செய்வார்கள்.
      நாளையோ அல்லது நாளை மறுநாளோ நம்முடைய பாதைகள் ஒன்றோடு ஒன்று குறுக்கிட்டு, நாம் சண்டையில் இறங்குவோம். நாம் அனைவரும் சகோதரர்கள் என்று பாவனை செய்தாலும், நம் சந்தோசத்திற்கு ஏதாவது தடை வந்து விட்டால் அடுத்தவரை அடித்து வீழ்த்துவதற்கு தயங்கவே மாட்டோம்.
      இந்த கம்பத்தில் ஏறுவது தான் உங்களுடைய‌ இப்போதைய சந்தோசம் என்று வைத்துக் கொள்ளுவோம். இப்போது யாரோ ஒருவர் அந்த கம்பத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, இது புனிதமான கம்பம் இதன் மீது நீங்கள் ஏறக் கூடாது என்று தடுக்கிறார் என்னும் போதே உங்கள் மகிழ்ச்சி அனைத்தையும் தொலைத்து விடுவீர்கள்.
      ஒரு வேளை தடுப்பவர் பலமானவராக இருந்தால், அங்கிருந்து நீங்கள் போய்விடுவீர்கள், அவர் உங்களை விட பல‌கீனமானவராக இருந்தால் அவரை இழுத்து கீழே தள்ளி விட்டு கம்பத்தின் மீது நீங்கள் ஏறி விடுவீர்கள். ஏனெனால் அந்த கம்பத்தின் மீது ஏறுவதில் தான் உங்கள் சந்தோசம் இருக்கிறது என்பதால் அதில் எப்படியாவது ஏறிவிட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். ஆனால் நீங்கள் ஏற்கனவே சந்தோசமாக இருந்தால் அந்த கம்பத்தில் ஏற வேண்டாம் என்று தடுத்தால், நீங்கள் வேறு விசயத்தை நாடி போய்விடுவீர்கள் அல்லது வேறு கம்பத்தில் ஏறிக் கொள்வீர்கள்.
      உங்கள் இயல்பில் நீங்கள் மகிழ்ச்சியானவராக இருந்தால், மகிழ்ச்சியே உங்கள் வெளிப்பாடாக‌ இருந்தால், பிறகு இந்த உலகத்தில் எந்த விதமான சச்சரவுகளும் இருக்காது. ஆனால் உங்கள் வாழ்க்கையை நீங்கள் மமகிழ்ச்சியைத் தேடி ஓடுவதில் செலவழித்தால், இந்த உலகத்தில் எப்பொழுதும் போராட்டங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். மக்களுக்கு நீங்கள் எவ்வளவு தான் கலிவி அறிவு புகட்டினாலும், நாகரீகத்தைக் கற்றுக் கொடுத்தாலும், அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
      நாம் இயல்பிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் நம்முடைய சக்திகளை ஒழுங்கு படுத்திக் கொண்டால், பிறகு நம்வாழ்வில் எது நடந்தாலும், நம் மகிழ்ச்சி மட்டும் குறையவே குறையாது. அப்போது நாம் வாழும் சூழ்நிலைக்கு என்னெ தேவையோ அதை மட்டும் செய்வோம். எதையாவது செய்ய வேன்டும் என்ற கட்டாயம் நம‌க்கு இருக்காது. எதையுமே செய்யாமல் கூட நாம் வெறுமனே அமர்ந்திருக்க முடியும்.
      ஆனால் தற்போது நிறைய பேர் மகிழ்ச்சியைத் தேடிச் செல்லும் பயணத்தில் இந்த பூமியையே கொளுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக இந்த உலகத்தில் 50% பேருக்கு மேல் சோம்பேறிகளாக உள்ளனர். உலகில் இருக்கும் 700 கோடி பேரும் கடும் உழைப்பாளிகளாக இருந்தால், இந்த உலகம் இன்னும் 10 வருடங்களுக்கு கூட நீடிக்காது; அழிந்துவிடும். இந்த உலகம் இன்னும் நீடிப்பதற்கு காரணம் உழைப்பாளிகள் அல்ல; சோம்பேறிகள் தான் காரணம். அவர்கள் தான் உண்மையிலேயே இந்த உலகத்தைக் காப்பாற்றி வருகிறார்கள்.
      உழைப்பாளிகள் எனப்படும் பிரிவினர் நல்ல நோகங்களுடனும், அதே நேரம் முழு முட்டாள் தனத்துடனும் இந்த பூமியை சிதைத்து வருகிறார்கள். மக்களுக்கு நன்மை செய்வதைப் பற்றி அவர்களுக்கு நல்ல நோக்கங்கள் இருக்கலாம்.ஆனால் அவர்களுடைய நோக்கங்கள் அனைத்தும் நிறைவேறி விட்டால் இந்த உலகம் மிஞ்சியிருக்காது.
      எனவே மகிழ்ச்சியைத் தேடி ஓடாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் தற்ப்போதையை வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால் மகிழ்ச்சியை தேடியதைவிட, மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கணங்கள் தான் அழகானவை என்பதை உணர்வீர்கள்!
..............................வாழ்க வளமுடன்!.........................

Sunday, June 17, 2012

குட்டிக்கதை! கடவுளுக்கு ஓய்வு? ஆனந்தம்


      தாங்களே கடவுளாக மாற விரும்பிய சில விஞ்ஞானிகள் ஒன்றாக சேர்ந்து கடவுளை சந்தித்து. 'முதியவரே, இதுவரை நீங்கள் நன்றாக படைப்புத்தொழிலை செய்து வந்தீர்கள், நாங்களும் உயிரை உருவாக்க முடியும், எதை விரும்புகிறோமோ, எதை விரும்புகிறோமோ அதை எங்களால் உருவாக்க முடியும், எனவே நீங்கள் ஓய்வு பெறுவதற்க்கு இது தான் சரியான நேரம்' என்றார்கள்.
      அதற்கு கடவுள், 'அப்படியா, உங்களால் எதை வேண்டுமானாலும் உருவாக்க முடியுமா? எங்கே ஒரு உயிரை உருவாக்கிக் காட்டுங்கள் பார்க்கலாம்' என்றார். விஞ்ஞானிகள் கொஞ்சம் மண்ணை எடுத்து, எதேதோ செய்து அந்த மண்ணை ஒரு சிறு குழந்தையாக மாற்றி விட்டார்கள். உடனே கடவுள் சொன்னார் 'இதெல்லாம் சரி தான், முதலில் உங்களுடைய சொந்த மண்ணை உருவாக்குங்கள்!