Showing posts with label மக்கள். Show all posts
Showing posts with label மக்கள். Show all posts

Monday, September 17, 2012

கால நிர்வாகம்(Time Management) ஒரு பார்வை! ஆனந்தம்


      அதை கால நிர்வாகம்(Time Management) என்று பார்கக் கூடாது. முன்னுரிமை நிர்வாகமாக(Priority Management) தான் பார்க்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக காலத்தை பூமியே நிவகித்துக் கொள்கிறது. 24 மணி நேரம், 30 நாட்கள், 365 நாட்கள் இந்த கணக்குகளை எல்லாம் பூமியே பார்த்துக் கொள்கிறது. அதை நாம் கணக்கெடுத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
      கால நிர்வாகம் என்று சொல்லும் போது, எவ்வெளவு நேரம் துங்குவது, எவ்வளவு நேரம் பணிபுரிவது, எவ்வளவு நேரம் குடும்பத்துடன் செலவிடுவது போன்ற பலவிதமான செயல்பாடுகளுக்கு நேரம் ஒதுக்குவதைப் பற்றி சொல்கிறீர்கள். இவற்றைச் செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட முறை என்று எதுவும் இல்லை. ஏனென்றால் முன்னுரிமைகள் ஒவ்வுருவருக்கும் மாறுபடும். உங்களுடைய முன்னுரிமைகள் தெளிவாக இருந்தால், நேரம் தானாகவே சரியாக பொருந்திவிடும்.
      காலத்தை நிர்வகிப்பதற்கு பதிலாக, வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உங்களுக்கு எத்தனை தூரம் முக்கியமானது என்பதில் நீங்கள் தெளிவாக இருந்தால், காலம் அதுவாகவே உங்களுடன் அனுசரித்து செல்லும்.
      ஆனால் மக்களுக்கு எது எதை விட முக்கியம் என்பதில் எப்போதும் சந்தேகங்கள் தான் அதிகம். ஏனென்றால் அவர்கள் தாங்கள் செய்ய விரும்புவதை செய்வதில்லை, பதிலாக சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட செயல்களையே செய்கிறார்கள். எது தேவையோ அதை அவர்கள் செய்வதில்லை. உங்கள் வாழ்க்கையிலும், உங்களைச் சுற்றியும் நிகழ வேண்டிய முக்கியமானவை எது என்று கணித்து விட்டால், பிறகு எதைச் செய்ய வேண்டும், எதற்கு முக்கியதுவம் கொடுக்க வேண்டும் என்பதில் குழப்பமே இருக்காது.
...........................................வாழ்க வளமுடன்!.................................................

Friday, June 15, 2012

ஒரு குட்டிக் கதை! தவறான திசையில் தேடாதீர்கள்? ஆனந்தம்


      ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர், தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார். மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.
      ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார். காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து விட்டார்.
      அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர். சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப் புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார், கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
      ஆன்மீகமும் இப்படித்தான். பலரும் தவறான திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சனை. உண்மையில் உங்களுக்குள்ளேயே உங்களுக்குத் தேவையானது எல்லாமே இருகின்றது.
..........................வாழ்க வளமுடன்!.............................

Tuesday, May 22, 2012

தலைவராக விரும்புகிறீர்களா? ஆனந்தம்



      இந்த உலகில் இரண்டு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவிதமான மக்கள் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்பவர்கள். இன்னொரு விதமான மக்கள் இருக்கிறார்கள் இவர்களை  வேறு யாராவது தள்ளி விட்டுக்க்கொண்டே இருக்க வேண்டும். இவர்கள் எப்பொழுதும் அடிமைகளாகவும், வேலையாள் போலவும் தான் இருப்பார்கள். ஆனால் தங்களைத் தாங்களே இயக்கிக் கொள்ளும் மக்கள் எப்பொழுதும் தலைவர்களாக இருப்பார்கள்.
      நீங்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையை கையாள வேண்டும் என்று விரும்பினால், அது வீடோ அல்லது அலுவலகமோ, அந்த சூழ்நிலைக்கு முழுமையாக பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய எல்லைகளைக் கடந்து அந்த சூழ்நிலைக்கான தீர்வுக்காக பணி புரியத்தயாராக இருக்க வேண்டும். இப்படித் தயாராகும் போது உங்களை வேறு யாரும் இயக்கத் தேவையில்லை. உங்களை நீங்களே இயக்கிக் கொள்வீர்கள். தேவையான சுதந்திரமும் உங்களுக்குக் கிடைக்கும். ஒரு தாலைவராக ஏற்றுக் கொள்ளபடுவீர்கள்.
      எனக்கு அது வராது, என்னால் அது முடியாது, நான் இவ்வளவு தான் செய்யமுடியும் என்று எப்பொழுதும் தன்னைத் தானே குறுக்கிக் கொள்பவர்கள் என்றென்றும் அடிமைகளாகவும், மற்றவர்களால் விரட்டப்படும் நிலையில் தான் இருப்பார்கள். எனவே தலைவராக விரும்புகிறீர்களா? அல்லது அடிமையாகவே காலத்தை கழிக்க விரும்புகிறீர்களா? என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்

.....................................................வாழ்க வளமுடன்...........................................................................