"நான் தியானம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?" என்கிற இந்த ஒரு கணக்கை மட்டும் விட்டுவிட வேண்டும். அதிலிருந்து நீங்கள் பலன் பெறவோ அல்லது வேறு எதோ பெறவோ வேண்டாம். ஒவ்வொரு நாளும் 20, 30 நிமிடங்களை வீணாக்குங்கள், நேரத்தை எப்படி வீணாக்குவது என்று கற்றுக்கொள்ளுங்கள்.
தியானத்தை ஆரொக்கியமாக இருப்பதற்கோ, ஞானியவதற்கோ, சொர்க்கத்தை அடைவதற்கோ செய்யத்தேவை இல்லை. இது நேரத்தை வீணடிக்கும் வேலை அவ்வளவுதான். "இன்றைய தின நிகழ்வுகளில் நாம் என்ன கொண்டு செல்லப்போகிறோம்?" என்று கேட்பதெல்லாம் நவீன காலத்து சொல் துஷ்பிரயோகங்கள் ஆகும். நீங்கள் எதையாவது எதிபார்த்தீர்கள், என்றால் அர்ப்ப விசயங்கள் மட்டுமே கிடைக்கலாம். உண்மையானது எதுவோ அது உங்களுடன் வராது. உங்களுக்கு உண்மை மட்டும் வேண்டுமென்றால் இந்த கொண்டு செல்லும் பழக்கத்தை விட்டு விடுங்கள். நீங்களாக மட்டும் இருங்கள் வேறெதுவும் செய்ய வேண்டாம்.
உங்கள் வாழ்க்கையில் "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வியை மட்டும் விட்டு விட்டால், உங்களுக்கு எல்லைகளே இருக்காது. நீங்கள் கருணையின் வடிவமாகவே மாறி விடுவீர்கள். இதற்கு மாற்று வழியே இல்லை. இந்த ஒரு சிறு கணக்கை மட்டும் விட்டு விட்டால், அது தான் உங்கள் முழுமனதிற்கும், அதன் செயல் பாடுகளுக்கும் இருக்கும் ஒரே சாவி. அது தான் மனதில் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் திறவுகோல்.
ஆனால் மக்களுக்கு சும்மா இருப்பது எப்படி என்ற விழிப்புணர்வு இல்லாததால். மாற்று வழி ஒன்று கூறப்பட்டுள்ளது. அது எப்போதுமே அன்பாக இருப்பது. ஏனெனில் இந்த வழி ஒன்றில் தான் இந்த கொடுக்கல் வாங்கல் கணக்குகள் இல்லாமல் இருக்க முடியும். உங்களுக்குள் ஆழமான அன்பையோ கருணையையோ வளர்த்துக்கொள்ளுதல் பற்றிய பேச்சுக்கள் எல்லாம், உங்களுக்குள் உள்ள எதிர்பார்ப்புகளை நீக்கிவிடுவதற்கே. யாருடனாவது தீவிர உணர்ச்சிகளை உருவாக்குவதன் மூலம், " எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கேள்வியை அகற்றி விடலாம்.
வாழ்க்கையில் இந்த ஒரு கணக்கை நீங்கள் விட்டு விட்டால் 90 சதவிகித செயல்கள் முடிந்தார்போல் தான். மீதமுல்ல 10 சதவிகித வேலைகள் தானாகவே நிகழ்ந்து விடும். உங்களுக்கு பரமபத விளையாட்டு தெரியுமா? ஆரம்ப கட்டங்களில் அதில் பல ஏணிகளும், பல பாம்புகளும் இருக்கும். அவற்றில் ஏறி இரங்கிக்கொண்டே இருப்போம். ஆனால் விளையாட்ட்டின் கடைசிக்கட்டத்தை நெருங்கிவிட்டால் அதன் பிரகு பாம்புகளே இருக்காது. தாயம் தாயமாகப் போட்டு பரமபதத்தை அடைய வேண்டியதுதான், அங்கு உங்கலை விழுங்குவதற்கு எந்த பாம்புகளும் இருக்காது. இதுவும் அது போலத்தான் நீங்கள் "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற கணக்கை விட்டு விட்டால், பிறகு பாம்புகளே இருக்காது, அவ்விடத்தை அடைய எவ்வளவு நேரம் ஆகும் என்பது தான் கேள்வி...........வாழ்க வளமுடன்!.......
1 comment:
எவ்வளவு ஆழமான கருத்துக்கள் அடங்கிய உரை
தொடர்ந்து பதிவாக்கித் தருவதற்கு
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment