ஒருமுறை ஒரு சன்னியாசி ஒருவர் காட்டுக்குள் சென்றார். அங்கு ஒரு வேடனின் பொறியில் ஏற்க்கனவே சிக்கி , தன் முன்னங்கால்கள் இரண்டையும் இழந்திருந்த ஒரு நரியைப் பார்த்தார். நடக்கவே முடியாத அந்த நரி எப்போதும் ஒரு மரத்தின் அடியிலேயே படுத்திருந்தாலும், ஓரளவு கொழுத்திருந்தது. இதை அந்த சன்னியாசி பார்த்தபோது அவரால் இதை நம்ப முடியவில்லை. அதே நேரத்திலேயே ஒரு சிங்கம் தான் வேட்டையாடிய மிருகத்தின் மாமிசத்தை அந்த நரியின் முன்னால் கொண்டுவந்து போட அதை அந்த நரியும் சாப்பிட்டது.
சன்னியாசியால் தன் கண்களை நம்ப முடியவில்லை. உடனே அந்த சன்னியாசி 'ஓ, இது கடவுள் எனக்கு அனுப்பியிருக்கும் சேதி, ஊனமுற்று, முடங்கிப் போன நரிக்கு அது உட்கார்ந்து இருக்கும் இடத்திற்க்கும் இடத்திற்கே உணவு தேடி வருகிறதென்றால், தெய்வீகத்தின் பாதையில் நடக்கும் சன்னியாசியான எனக்கு, உணவு ஏன் தானாக கிடைக்காது? இனி நானும் ஒரே இடத்தில் உட்கார்ந்து தியானம் செய்யப் போகிறேன்' என நினைத்து ஒரே இடத்தில் உட்கார்ந்து விட்டார்.
மூன்று நாட்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. நான்காவது நாளில் இருந்து பசியின் மிகுதியால், தியானம் செய்ய முடியாமல், வயிற்றைப் பிடித்துக்கொண்டே காதிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு யோகியிடம், அந்த சன்னியாசி நடந்ததைக்கூறி இது தெய்வீகத்தின் செய்தி தானே? எனக்கு மட்டும் ஏன் உணவு தானாக வரவில்லை?' என்று கேட்டார். அதற்க்கு அந்த யோகி,'இது நீச்சயம் தெய்வீகத்தின் செய்தி தான். ஆனால் நீங்கள் ஏன் ஊணமுற்ற அந்த நரியைப் போல் நடந்து கொண்டீர்கள்? தாராள மனப்பாண்மை கொண்ட அந்த சிங்கத்தைப் போல் நடந்து கொள்ளலாமே? என்று கேட்டார்.
பல நேரங்களில் தொடர்ந்து நாம் எதிர்மறையான விசங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். அல்லது நமக்கு சாதகமாக எது விளங்கும் என்று மட்டுமே யோசிக்கிறோம், இது மனித இனத்திற்கே நாம் இழைக்கும் மிகப் பெரிய அநீதி.
...............................................................வாழ்க வளமுடன்!...............................................................
3 comments:
இது நீச்சயம் தெய்வீகத்தின் செய்தி தான். ஆனால் நீங்கள் ஏன் ஊணமுற்ற அந்த நரியைப் போல் நடந்து கொண்டீர்கள்? தாராள மனப்பாண்மை கொண்ட அந்த சிங்கத்தைப் போல் நடந்து கொள்ளலாமே?
கம்பீரமான ஆக்கம் !
நம்மால் முடிந்தவரை அடுத்தவர்க்கு உதவும் எண்ணம
வரவேண்டும் ,இறைவன் நமக்கு உதவுவான்
ஆக்கம் தெயவிகதன்மையை உணர்த்துகிறது
பல நேரங்களில் தொடர்ந்து நாம் எதிர்மறையான விசங்களில் மட்டுமே நாம் கவனம் செலுத்துகிறோம். அல்லது நமக்கு சாதகமாக எது விளங்கும் என்று மட்டுமே யோசிக்கிறோம்//
ஆம்!
Post a Comment