எது சரி? எது தப்பு? என்கிற போதனை வழங்குவது......
முக்கியமாக வீட்டில் குழந்தைகளுக்கு பெற்றோரின் போதனை இது சரி, இது தப்பு, என்று கூறும் விசயங்கள் அனைத்தும் ஒரு மிகப்பெரிய பட்டியலாக இருக்கிறதே? ஏன்? அதனால் குழப்பம் தான் மிஞ்கிறது! எதுவெல்லாம் சரி? எதுவெல்லாம் தப்பு?
மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க குற்றவுணர்ச்சி மிகச் சிறந்த வழி. பயமும், குற்றவுணர்ச்சியும் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும் சிறந்த இரண்டு வழிகள். சில மதங்கள் பயம் மூலம் மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயலுகின்றன. சில மதங்கள் குற்றவுணர்ச்சி மூலம் அவர்களை கட்டுப்படுத்த நினைக்கின்றன. இந்த உலகில் பாவம் புண்ணியம் எல்லாம் எதற்கு உருவாக்கப்பட்டன? மக்களை குற்றவுணர்ச்சியில் தள்ளி அவர்களை அமைதிப்படுத்தத்தான். குற்றவுணர்ச்சியில் இருப்பவர்கள் எப்படி அமைதியாக, ஆனந்தமாக இருப்பார்கள்? அவர்கள் எப்போதும் துயரப்படும் மனிதர்கள் தான் இல்லையா? உங்களைப் பொருத்தமட்டில் ஒழுக்கத்தோடு இருப்பது தான் சிறந்த மனிதனாக இருக்கும் வழியல்லவா?
பெரும்பாலான பெற்றோர்களுக்கு தனது பிள்ளைகள் புத்திசாலியாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, ஒழுக்கத்தோடு இருக்கவேண்டும். இது துரதிருஷ்டம் இல்லையா? பெற்றோர் சொல்லும் அத்தனை முட்டாள் தனங்களையும் அவன் கேட்டுக்கொண்டிருந்தால், அவர்களைப் போலவே அவனும் துயரம் மிகுந்த மனிதாகத்தான் அவான் இல்லையா? இன்னொரு துயர மிக்க மனிதன் உருவாக வேண்டுமா? அல்லது முட்டாள் தனங்களிலிருந்து விடுதலை பெற்ற மனிதன் உருவாக வேண்டுமா? துயரமா? ஆனந்தமா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
..........................வாழ்க வளமுடன்!.............................
No comments:
Post a Comment