Saturday, June 9, 2012

மாற்றங்கள் மாறும்! ஆனந்தம்

      வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் மக்களை எப்போதும் தடுமாற வைக்கின்றன. நவீனவாழ்க்கை எனச் சொல்லப்படும் தற்ப்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு மாற்றத்தின் போதும் மக்கள் துன்பப்படுகின்றனர். பள்ளிப் பருவம் ஒரே பதற்றம், விடலைப்பருவமோ பெரும் பாதிப்பு, நடு வயதோ தாங்கமுடியவில்லை, முதுமைப் பருவம் ஒரே வெறுப்பு, இறப்போ கடும் பயம். வாழ்க்கையின் ஒவ்வொறு கட்டமுமே மக்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில் வாழ்க்கையின் மாற்றத்திற்க்கேற்ப்ப தங்களை மாற்றிக் கொள்ள கஷ்டப்படுகின்றனர். வாழ்க்கையின் இயைபே மாற்றம் தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
      அசைவின்மையை(stillness) நீங்கள் அனுபவித்திருந்தால், பின்  மாற்றம்  என்பது உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருக்கும். அந்த அசைவின்மையோடு உங்களுக்கு தொடர்பே இல்லாமல் இருப்பதால் தான், ஒவ்வொரு மாற்றமும் உங்களுக்கு துன்பத்தை தருவதாக இருக்கிறது.
      வாழ்க்கையின்  மாற்றங்களை கண்டு பயப்படுவதால் தான், அதை முன்னதாகவே கண்டு கொள்ள மக்கள் தற்ப்போது வானத்து நட்சத்திரங்களை பார்க்கின்றனர், குனிந்து கைரேகைகளை பார்கின்றனர். உங்களிலேயே உள்ள அசைவின்மையை ஒருமுறை நீங்கள் சுவைத்து விட்டால், பிறகு மாற்றங்கள் உங்களைத் துன்புறுத்தாது. மாற்றம் என்பது மாறும் தன்மை கொண்டது. அசைவின்மை என்பது நிலைத்த தன்மை கொண்டது, விழிப்புணர்வைச் சார்ந்தது.
      எனவே அந்த அசைவின்மையை, விழிப்புணர்வை நீங்கள் சுவைக்க முடிந்தால் பிறகு மாற்றம் நிகழும் போதும் அதை உங்களால் கொண்டாட முடியும். எனவே அந்த விழிபுணர்வை சுவைக்க இன்றே இப்பொழுதே நீங்கள் தயராகுங்கள். ஆனந்தமான வாழ்வுக்காக!
...........................................................வாழ்க வளமுடன்!...................................................................

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
சுருக்கமாகவும் மிகத் தெளிவாகவும்
மனத்தின் ஆழத்தில் நேர்த்தியாய் பதியும் வண்ணமும்...
மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

Never give up said...

asaivinmai (Stillness) patri konjam sollungalen...

Post a Comment