Friday, June 15, 2012

ஒரு குட்டிக் கதை! தவறான திசையில் தேடாதீர்கள்? ஆனந்தம்


      ஒரு ஊரில் ஒரு பிச்சைக்காரர், தினசரி ஒரு மரத்தடியில் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருப்பார். மக்களும் அவர் மேல் பரிதாபப்பட்டு சில்லறைகளை வீசுவார்கள்.
      ஒவ்வொரு நாளும் வானத்தை அண்ணாந்து பாத்து, "கடவுளே, என்னை ஏன் ஒரு பிச்சைக்காரனாக வைத்திருக்கிறாய்? என்னை ஒரு கோடீஸ்வரனாக படைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே? என்று புலம்பிக் கொண்டே பிரார்த்திப்பார். காலம் சென்றது. அவருக்கும் வயதானது. ஒரு நாள் திடீரென இறந்து விட்டார்.
      அவருடைய உடலைச் சுமந்து சென்று ஈமக்கிரியைகளை யாரும் செய்ய விரும்பவில்லை. அதனால் அந்த மரத்தடியிலேயே புதைத்துவிட அங்கேயே ஒரு சவக்குழியை தோண்ட ஆரம்பித்தனர். சில அடிகள் தோண்டியவுடன் மிகப்பெரிய ஒரு வைரப் புதையலை கண்டெடுத்தனர். இந்த பிச்சைக்காரர் வாழ் நாள் முழுவதும் அந்தப் புதையலின் மேலே உட்கார்ந்திருந்தாலும், அவர் தவறான திசையை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தார், கொஞ்சம் கீழே தோண்டிப் பார்த்திருந்தால், என்னவெல்லாம் வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதையல்லாம் அவர் அடைந்திருப்பார்.
      ஆன்மீகமும் இப்படித்தான். பலரும் தவறான திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சனை. உண்மையில் உங்களுக்குள்ளேயே உங்களுக்குத் தேவையானது எல்லாமே இருகின்றது.
..........................வாழ்க வளமுடன்!.............................

1 comment:

Yaathoramani.blogspot.com said...

ஆன்மீகமும் இப்படித்தான். பலரும் தவறான திசையையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அது தான் உங்கள் பிரச்சனை. உண்மையில் உங்களுக்குள்ளேயே உங்களுக்குத் தேவையானது எல்லாமே இருகின்றது.

அருமையான கருத்துடன் கூடிய கதை
மனம் கவர்ந்த ப்திவு
தொடர வாழ்த்துக்கள்

Post a Comment