ஒரு சாலையில் இரு துறவிகள் ஒரு அட்டையை பிடித்துக்க்கொண்டு நின்று கொண்டிருந்தனர். அந்த அட்டையில், "கவனம், முடிவு வந்துவிட்டது, திரும்பிச் செல்லவும்" என்று எழுதியிருந்தது.
அப்போது வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் அருகில், கிறீச்சிட்டு நின்றது. வண்டி முழுவதும் இளைஞர்கள். வண்டி ஓட்டி வந்த இளைஞன் வெளியே எட்டிப் பார்த்து. உங்களை மாதிரி சாமியார்களுக்கு நல்ல வார்த்தையே சொல்லத் தெரியாதே! எப்பப் பார்த்தாலும் கவனமாக இரு, அப்படிச்செய், இப்படிச்செய், நிதானமாக நட என ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பீங்களே, உங்களோட ஒரே தலைவலி! என்று சொல்லிக்கொண்டே வேகமாக வண்டியை ஸ்டார்ட் செய்து மேலே சென்றான். சில நிமிடங்களில் அந்த வண்டி எதிலோ மோதி எங்கோ விழுந்த சப்தம் கேட்டது.
அப்போது முதல் துறவி மற்ற துறவியிடம் மெதுவாகச் சொன்னார், "ம், பாலம் பழுதடைந்து விட்டது என்று மட்டும் நாம் சொல்லியிருக்கலாம்".
1 comment:
அப்போது முதல் துறவி மற்ற துறவியிடம் மெதுவாகச் சொன்னார், "ம், பாலம் பழுதடைந்து விட்டது என்று மட்டும் நாம் சொல்லியிருக்கலாம்".//
அருமையான கதை
எதையும் பொதுமைப் படுத்திக் கொண்டே போகாமல்
மிகச் சரியாக சொல்ல முயலலாமோ ?
தெளிவூட்டிப்போகும் அருமையான பதிவு
பகிர்வுக்கு நன்றி
Post a Comment