Tuesday, May 29, 2012

பரிட்சையில் தோல்வியா? ஆனந்தம்!


      பரிட்சையில் தோல்வியா? அதனால் விரக்தியா? விரக்தி என்பது மிகவும் மோசமான ஆரம்பம். முதலில் விரக்தி வரும், அப்புறம் மனச்சோர்வு வரும், அப்புறம் மனத்தளர்வு வரும்.
      உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். ஒருமுறை சாத்தான், தன் வியாபாரத்தை நிறுத்திவிட நினைத்தார். எனவே தான் இதுவரை உபயோகித்து வந்த அத்தனை கருவிகளையும் விற்று விட விற்பனைக்கு வைத்தார். கோபம், காமம், பேராசை, பொறாமை, அகங்காரம் ஆகிய அனைத்தையும் அவர் விற்பனைக்கு வைத்தார்.  மக்கள் அவை அனைத்தையும் வாங்கிவிட்டனர். அப்படியும், அவருடைய பையில் ஏதோ கொஞ்சம் மிச்சமிருப்பதை ஒருவர் பார்த்துவிட்டார். எனவே பையில் இன்னும் என்ன இருக்கிறது என்று கேட்டனர்?' அதற்க்கு சாத்தான் 'இவையெல்லாம் மிகத்திறமையான கருவிகள். ஒருவேளை நான் மீண்டும் வியாபாரத்தில் இறங்கினால், இவை எனக்குத் தேவைப்படும். எனவே இவற்றை விற்ப்பனைக்கு வைக்கப் போவதில்லை. அனைத்திற்க்கும் மேலே இவை மிகவும் விலை உயர்ந்தவை.  ஏனென்றால் இவை உயிரை அழிப்பதற்க்கான மிகச்சிறந்த கருவிகள் என்றார்.' அவை என்ன என்று கேட்டனர் மக்கள். அதற்க்கு சாத்தான் அவைகள் " மனத்தளர்வு மற்றும் மன அழுத்தம்" என்றார்.
      உங்களுக்குள் உற்ச்சாகம் இல்லாமல் போனால், மன அழுத்தம் வந்து விட்டால், நீங்கள் உயிரோட்டத்தையே இழந்து விடுவீர்கள். விரக்தி தான் மனாழுத்ததிற்க்கும், மனச்சோர்வுக்கும் முதல் படி.
      சரி எப்படி விரக்தியை எப்படி விரட்டி அடிப்பது? அதை நீங்கள் விலைக்கு வாங்காமல் இருந்தாலே போதும்! விரக்தி தானக உங்களுக்குள் வராது. ஏனென்றால் உயிர் என்பதும் உற்ச்சாகம் என்பதும் வேறு வேறு அல்ல. ஒரு எறும்பு எப்படி செயல் படுகிறது என்று பாருங்கள்! அதை நீங்கள் நிறுத்த முயற்ச்சி செய்தால் அது எப்பொதாவது விரக்தி அடைகிறதா? அல்லது நம்பிக்கை இழக்கிறதா? அது சாகும் வரை தன்னுடைய முயற்ச்சியை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
      ஒரு கூரையில் வளரும் சிறு செடியை பாருங்கள்! கூரையில் கொஞ்ம் மண் மட்டும் கிடைத்தால் போது சில சமயம் 25அடி வரை கூட தன்ன்னுடைய கிளையை நீட்டிக்கிறது. அந்தச் செடி எபோதாவது விரக்தி அடைகிறதா? ஏனெனில் விரக்தி என்பது உயிருக்கு கிடையாது. மனதிற்க்கு மட்டும் தான்.
      வரயரைகளுக்கு உட்பட்ட மனம் எப்பொழுதும் பொய்யான எதிர்பார்ப்புகளுடன் வேலை செய்கிறது. உங்கள் எதிர்பார்ப்புகள் வாழ்க்கை நிஜங்களுடன் ஒத்துப்போகாதபோது, உங்கள் எதிர்பார்ப்புகள் வெறும் ஆடம்பர ரீதியாக அமையும் போது, பின்னர் அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகும் போது, உலகத்தின் முடிவுக்கே வந்து விட்டதை போன்று உங்கள் மனம் உணர்கிறது.
      மாணவர்கள் பலர் தேர்வுகளில் தோல்வி அடையும் போது தற்கொலை செய்து கொள்கிறார்கள் இல்லையா? ஏனென்றால் தன் வாழ்க்கையே அந்த தேர்வுகளில் தான் அடங்கியிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள், நீங்கள் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்க்காக வழிபடும் ராமர், கிருஷ்ணர், புத்தர், ஏசு ஆகியோர் எந்தத் தேர்விலும் வெற்றி பெறவில்லை. தெரியுமா உங்களுக்கு? ஒரு பரிட்சையில் தேர்வு பெறக்கூட அவர்கள் ஆர்வம் காட்டியதில்லை தெரியுமா?
      ஆகவே பரிட்சையில் தேர்வு என்பது ஒரு பெரிய விசயமே இல்லை இல்லையா? சமூக சூழ்னிலைகளுக்காக ஒரு தேர்வில் தேர்வு பெற விரும்புகிறீர்கள் என்பது சரிதான். ஆனால் அதற்க்காக தெர்ச்சி பெறாமல் போனால் விரக்திஅடைவது என்பது முழுக்க மனம் சம்பத்தபட்ட விசயம். உயிர் சம்பத்தப்பட்டதல்ல. நீங்கள் விரக்தியில் இருக்கும் போது உங்கள் மனம் "இது என்ன வாழ்க்கை? செத்துவிடு' என்று உங்க‌ள் மனம் தான் சொல்லும், உயிர் சொல்லாது."  உங்கள் வாயையும், மூக்கையும் இரண்டு நிமிடங்களுக்கு பிடித்து வைத்து இருந்து அடைத்துப் பாருங்கள்? உங்களுக்குள் இருக்கும் உயிர் அய்யோ என்னை வாழவிடு என்று சொல்லும்.
      நீங்கள் விரக்தியில் ஏதாவது செய்கிறீர்கள் என்றால் அது அறியாமை, முட்டாள்த்தனம். ஒரு முட்டாள் தான் தன்னௌடைய உயிருக்கு எதிராக செயல்படுவான். ஆனால் உங்களுக்கு வரும் விரக்தி, மனச்சோர்வு, மனாழுத்தம் எல்லாம் நீங்கள் உங்கள் உயிருக்கு எதிரான வேலைதான். ந்னிங்கள் முட்டாளாக இருந்தால் மட்டுமே இப்படி செய்வீர்கள். புத்திசாலியாக இருந்தால் எப்படி விரக்தி வரும்? உங்கள் புத்திசாலித்தனத்தை செயல்படாமல் தடுத்து விட்டீர்கள். உற்ச்சாகமாக இருங்கள்! பிடித்ததை மட்டுமே செய்யுங்கள், ஒவ்வொரு செயலிலும் ஆனந்தத்தை மட்டுமே நாடுங்கள்! உங்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
...........................வாழ்க வளமுடன்!............................

4 comments:

rajamelaiyur said...

//வ்வொரு செயலிலும் ஆனந்தத்தை மட்டுமே நாடுங்கள்! உங்கள் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
//
நல்ல கருத்து .. அனைவரும் பின்பற்ற வேண்டிய கருத்து

rajamelaiyur said...

இன்று
நடிகர் விஜய்யை கிண்டல் செய்து வம்பில் மாட்டிய விஜய் டிவி

ammuthalib said...

யாரும் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது என்ற உங்கள் தவிப்பிற்கும் ஆர்வத்துக்கும் அன்புகள்.
பல்வேறு காரணங்களுக்காக தற்கொலை செய்யப்படுகிறது. இதில் நீங்கள் விவாதித்த தேர்வில் தோல்வியை எடுத்துக்கொள்வோம். நாம் சிறு வயதில் இருந்தே வெற்றிக்காக மட்டுமே தயார் செய்யப்படுகிறோம். தோல்வியை கையாளுவது எப்படி என்று எவருக்கும் கற்றுத்தரப்படுவது இல்லை.
அதிலும் +2 மற்றும் 10 ஆம் வகுப்பிற்கு இரு வருடங்களாக மாணவர்கள் தயார் செய்யப்படுகின்றனர். அதனால் தெரிந்தோ தெரியாமலோ, மாணவர் subconscious மனதில் தோல்வி அடைந்து விடக்கூடாது என்ற அச்ச உணர்வு விதைக்கப்படுகிறது. பப்ளிக் பரீட்சைக்கு செல்லும் எதாவது ஒரு மாணவருக்கு "தோல்வி அடைந்தாலும் பரவா இல்லை, உன்னால் ஆனா முயற்சியை கொடு" என்று கூறிப்பாருங்கள். "அபசகுனமா பேசாதீங்க பாஸ்" என்று சுற்றி இருப்பவர்களால் வசையப்படுவீர்கள்.
peer பிரஷர், சமூகம் தோல்வி அடைந்தவர்களை பார்க்கும் கண்ணோட்டமும் இந்த தற்கொலைகளுக்கு ஒரு காரணம். தெருவில் சும்மா சுத்திட்டு இருக்கும் ஜந்துக்கள் வீடு ஏறி வந்து அட்வைஸ் கொடுத்து செல்லும். இதெல்லாம் மாறும் காலம் வரணும். வரும்.

நீண்ட கமெண்டுக்கு மன்னிக்கவும். your article is crispy and touching

The Tamil Language said...

நல்ல பதிவு

Post a Comment