குழந்தையின் எதிர்காலத்தை நீங்கள் தீர்மானிக்காதீர்கள். முதலில் உங்களுடைய எண்ணங்களை உங்கள் குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். அவர்களுக்கு உங்கள் அன்பை மட்டும் கொடுங்கள். உங்கள் எண்ணங்கள் இறந்தகாலம் சார்ந்தவை. உங்களுடைய முட்டாள் தனமான எண்ணங்களை குழந்தைகளின் மேல் திணிக்காதீர்கள். குழந்தையே தன்னுடைய வாழ்க்கையை அதன் சொந்த வழியில், சொந்தப் புரிதலில், சொந்த அறிவுணர்ச்சியோடு உணர்ந்து, உள்வாங்கிக் கொள்ளட்டும்.
குழந்தை பிறந்த நாள் முதல் நம்முடைய மதம், ஒழுக்க விதிகள், கோட்பாடுகள், தத்துவங்கள், சிந்தனைகள் என்று எல்லா முட்டாள்தனங்களையும் அதன் மீது சுமத்தி வருகிறோம். இல்லையா? குழந்தை மலர ஆரம்பிப்பத்ற்கு முன்பாகவே அதை அழித்து விட முனைகிறீர்கள். இந்த உலகில் மிக அதிகமாக சுரண்டப்படுபவர்கள், தொழிலாளிகளோ, பெண்களோ அல்லது விலங்குகளோ அல்ல. குழந்தைகள் தான் மிகவும் சுரண்டப்படுபவர்கள்.
நீங்கள் தான் தனக்கு மிகவும் நம்பகமானவர் என்று நினைத்து குழந்தை உங்களிடமிருந்தே ஒவ்வொன்றையும் எதிர்பார்க்கிறது. ஆனால் நீங்களோ அதன் வாழ்க்கையை மிக மோசமாக சீர்குலைக்கிறீர்கள். உங்களைப் போலவே உங்கள் குழந்தையும் துன்பப்படுமாறு எப்படியும் பார்த்துக் கொள்கிறீர்கள்.
அன்பை மட்டும் கொடுங்கள்....போதும்..... வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment