சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முந்தைதொரு தினம், இன்றைக்கு மத்தியபிரதேசம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதி. அங்கு பில்வா என்று ஒரு தீவிரமான ஒரு பக்தன் இருந்தான். அவன் அழைத்தால் பாம்புகள் அவனைச் சுற்றிக்கூடும் அந்த அளவுக்கு பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்த இனத்தைச் சேர்ந்தவன்.
அன்றைய சமூகத்தின் சில முட்டாள்த் தனமான சில கட்டுபாடுகளுக்கு கட்டுப்படாததால் அவன் பலமுறை தண்டிக்கப் பட்டான். அவனுடைய ஒரு செயலை அச்ச்மூகம் அன்று மன்னிக்கத் தயாராக இல்லை. உச்சபட்ச தண்டனையாக அவனுக்கு மரணதண்டனை என்று அன்று தீர்மானிக்கப்பட்டது. அவன் எந்த பாம்புகளுக்கு நெருக்கமாக இருந்தானோ, அந்த பாம்புகளாலேயே அவனுக்கு மரண தண்டனை என்று அப்போது தீர்மாணிக்கப்பட்டது.
அசைய முடியாதபடி அவனை ஒரு மரத்துடன் பினைத்தார்கள். கருநாகம் ஒன்றை உசுப்பி அவனைக் கடிக்க வைத்தார்கள். அவனை சாகவிட்டு விலகிப்போனார்கள். உடலில் விஷம் பாய்ந்ததால், அவன் ரத்தம் அடர்த்தியாகிக் கொண்டேபோனது. ரத்தத்தை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பம்ப் செய்ய முடியாமல் இதயம் திணறியது. மூச்சு முட்டியது.
அதற்க்கு முன்பாக அவன் சுவாசத்தைக் கவணித்ததில்லை. தன்னிச்சையாக நடந்தேரும் எந்த விசயத்தையும் மனிதன் கவனிப்பதில்லை. அதில் தடுமாற்றம் ஏற்ப்பட்டால் தான் அதன் முக்கியத்துவம் அவனுக்கு புரிகிறது.
மரணத்தின் வாயிலில் இருந்த பில்வா, வேறு ஏதும் செய்ய இயலாததால் தனது திணறும் முச்சை கவணிக்கத் தொடங்கினான். உள்ளே போவதும் வருவதுமாக இருந்த காற்று, அந்த உடலுடன் உயிரை பிணைத்து வைதிருந்ததை அப்போதுதான் அவன் கவனித்தான்.
அது ஒருவகை தியானம் என்று தெரியாமலேயே அவன் அதில் ஈடுபட்டான். அடங்கும் மூச்சை அவன் இடைவிடாமல் மிகவும் விழிப்புணர்வுடன் கவனித்தான். அவனுள் பெரும் மாற்றம் நிகழ்ந்தது, முக்தியின் பாதையில், ஆனந்தத்தின் திசையில் செலுத்தப்பட்டுவிட்டான். விஷம் என்று நினைத்து அவனுக்கு செலுத்தப்பட்டது பேரமிர்தமாக மாறிற்று.
2 comments:
கதை அருமை நண்பா ........
ஒட்டு போட்டுட்டு தான் வந்தேன் .........
நன்றி நண்பரே! வாழ்க வளமுடன்
Post a Comment