என் மகனுக்கு நான் நிறைய பாக்கெட் மணி கொடுத்தேன். அவன் அதை வைத்துக் கொண்டு நிறைய தீய பழக்கங்களுக்கு ஆகிவிட்டான். என்ன செய்ய?
நீங்கள் முதலில் உங்கள் மகனுடன் ஒரு நண்பராகப் பழகுங்கள்! அவனுடன் ப்யணம் செய்யுங்கள். அவன் உங்களுடன் பயணம் செய்ய வேண்டும். அவனுடன் அதிக நேரம் செலவிடுங்கள். அவனுக்கு உங்கள் மேல் நம்பிக்கை வரவேண்டும். அப்போது தான் உங்களால் அவனுக்கு கொடுக்கும் பாக்கெட் மணியில் கை வைக்க முடியும்!
மாறாக இப்போது நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால், அவன் உங்களை உதைத்தாலும் உதைப்பான். இன்னும் சொல்லப்போனால் மேலும் சில அற்பமான விஷயங்களைத் தேடிச்செல்வான்.
பிள்ளைகளை வளர்ப்பது என்றால், வெறும் பணத்தை வீசிஅடிப்பது மட்டுமல்ல. அதற்கு ஈடுபாடு தேவை. ஒரு குழந்தையை ஈடுபாடு இல்லாமல் வளர்ப்பது ஒருபோதும் வேலை செய்யாது?
இப்போது பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் திருந்துவான் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு பணம் தான் கட் செய்வீர்கள்? நீங்கள் பணம் கொடுப்பதை நிறுத்தினால் அவன் வேறு எதையோ பணத்துகாக செய்வான். செய்வானா இல்லையா? அதனால் அவனிடம் நட்புறவுடன் பழகுங்கள்! அவனுக்கு உங்கள் மீது நம்பிக்கை வரவேண்டும். அப்போது, நீங்களே தெளிவான பாதைக்கு மெல்ல மெல்ல அழைத்துச் செல்லுங்கள். வாழ்க வளமுடன்!
....................................சத்குரு ஜக்கிவாசுதேவ்.........................................
2 comments:
நல்ல கருத்துக்கள்... பகிர்வுக்கு நன்றி...
பிள்ளைகளை வளர்ப்பது என்றால், வெறும் பணத்தை வீசிஅடிப்பது மட்டுமல்ல. அதற்கு ஈடுபாடு தேவை. ஒரு குழந்தையை ஈடுபாடு இல்லாமல் வளர்ப்பது ஒருபோதும் வேலை செய்யாது
Post a Comment