பொதுவாக, பழங்குடியினர் சமுதாயங்களில் தற்கொலைகள் மிகக்குறைவாகவே நிகழ்கின்றன. உங்களுடைய பிழைப்புக்கே நீங்கள் கஷ்டப்படும் போது, வாழ்க்கையை எப்படி முடித்துக் கொள்வது என்று சிந்தனை செய்யமாட்டீகள். வளர்ச்சியடைந்த சமூகங்களில் தான் தற்கொலைகள் அதிகம் நிகழ்கின்றன. அல்லது சமூகத்தின் ஒருபகுதி வளமாக இருந்து ஒருபகுதி வறுமையில் இருக்கும் போது தற்கொலைகள் நிகழ்கின்றன. முழுசமூகமே ஏழ்மையில் இருக்கும் போதோ அல்லது வளம் குறைவாக இருக்கும் போதோ அங்கு தற்கொலைகள் நிகழ வாய்பில்லை ஏனென்றால் அவர்களுடைய முழுநோக்கமும் உயிர் வாழ்வதைப் பற்றி தான் இருக்கும்.
நீங்கள் ஏழ்மையில் இருக்கும் போது நம்பிக்கை என்பது அங்கே பெரிய விசயமாக இருக்கின்றது. தெருவில் வசிக்கும் ஏழை மனிதர் ஒருபரிசுச் சீட்டை வாங்கினால், அதனால் அவருக்கு ஒரு நம்பிக்கை வந்து விடுகின்றது. அந்த பரிசு விழுந்தால் அதை வைத்து என்ன செய்ய வேண்டும் என்று சிந்திக்க ஆரம்பித்து விடுகின்றார். பரிசு முடிவுகள் வெளிவந்து கிடைக்க வில்லைஎன்றால் இருக்கவே இருக்கின்றது அடுத்த பரிசுச்சீட்டு என்று அடுத்ததின் மேல் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துவிடுகின்றார். இதனால் அவர்கள் தொடர்ந்து பரிசுச்சீட்டு வாங்கிக் கொண்டே இருக்கின்றனர். பரிசு முடிவுகள் வரும் முன்பே கூட இன்னொன்றை அவர்கள் வாங்கிவிடுவர்.
ஆனால் ஒரு பணக்காரருக்கு அவர் வாழ்வில் அந்த பரிசுத்தொகை ஏற்கனவே கிடைத்துவிட்டது. அது அவருக்குள் எந்த ஒரு பெரிய மற்றத்தையும் ஏற்ப்படுத்தவில்லை என்று அவருக்குத் தெரியும். எனவே அவருக்கு ஆழமான அவநம்பிக்கை உணர்வு தான் இருக்கும். உங்களுக்கு அவனம்பிக்கை தோன்றிவிட்டால் ஒன்று தற்கொலை எண்ணம் தோன்றிவிடும் அல்லது ஆன்மீகவாதிகள் ஆகிவிடுவீர்கள். இரண்டே வாய்புகள் தான்.
ஆன்மீகம் என்பது உங்களுக்குள் இருக்கும் "நான்" என்கிற எண்ணத்தை, உங்கள் அகங்காரத்தை அழிப்பது. இதுவும் ஒருவகை தற்கொலை தான். ஆனால் இதில் பொருள் தன்மையை தாண்டிய பரிமாணங்களைப் பற்றிய விழிப்புணர்வு வந்துவிட்டது. ஆகவே நீங்கள் வேறு தளத்தில் தற்கொலை செய்ய முயர்ச்சிக்கிறீர்கள். உடலை நன்றாக வைத்துக் கொண்டு முற்ரிலும் வேறொறு தளத்தில் தற்கொலை செய்ய முயல்கிறீர்கள். உங்களுக்கு அவநம்பிக்கை ஏற்ப்படும் சமயம், உங்கள் அறிவுக்கு உடலைத் தவிர வேறொன்றும் தெரியாதபோது உடலை அழித்துக் கொள்ள முற்படுகிறீர்கள். உங்கள் அறிவு மேல்நிலை அறிவானால் ஆன்மீகத்தின் மூலமாக தற்கொலைக்கு முயல்கிறீர்கள். அப்படியானால் ஆன்மீகம் என்பது ஓர் உயர்ந்த நிலை தற்கொலை.
பழங்குயினர் சமூகம் போலவே மிருக இனங்களில் தற்கொலைகள் மிகக்குறைவு. உதாரணமாக பாம்புகள் தற்கொலை செய்து கொள்கின்றன. தற்கொலை என்றால் விரக்தியின் காரணமாக தற்கொலை அல்ல, பாம்புகளுக்கு தங்களுடைய சக்தி நிலை பற்றிய விழிப்புணர்வு உண்டு. இந்த விழிப்புணர்வு "வியான பிராணா" என்னும் பரிணாமத்திலிருந்து வருகிறது. எனவே பாம்புகளுக்கு தம் உடலைப் பற்றியும், உடலின் செயல்படுகளைப் பற்றியும் விழிப்புநிலை மிகாதிகமாக இருக்கிறது.
யோகாவில் பாம்புகளைப் பலவிதமான குறியீடுகளாக பயன்படுத்தக் காரணம், அதற்குத் தன் உடலைப் பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் தான். அதனுடைய சக்தி வடிந்து மிகக்குறைந்த நிலைக்கு வரும்போது, அவை ஓரிடத்தை தேர்ந்தெடுத்து அங்கு உணவருந்தாமல் அமர்ந்துவிடும். உணவு தேடுவதாலோ அல்லது வேறு வழிமுறைகளிலோ அதன் உடல் போஷாக்கு பெறப்போவதில்லை என்று அதற்க்குத் தெரியும். எனவே உணவு உண்ணாமல் அங்கேயே உட்கார்ந்து 7 முதல் 12 நாட்களுக்குள் அதுதன் உயிரை விட்டுவிடுகிறது. தன் வாழ்க்கையை அது நீட்டிப்பதற்கு அது முயர்சிக்கவில்லை. வாழ்க்கை முழுதும் அது உயிர் வாழ்ப் போராடினாலும். தன் சக்தி ஒருகுறிப்பிட்ட நிலையை அடைந்து விட்டன என்று தெரிந்துவிட்டால், பிறகு அது உண்ணமறுத்து உயிரை விடுகின்றது. இப்படித்தான் மனிதர்களும் உயரிய நிலைக்கு வரவேண்டும். வாழ்க வளமுடன்!
