Tuesday, March 29, 2011

பற்று வாழ்வின் வலை ஆனந்தம்


      எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.
      “இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்.... உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? - பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே.
      ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”.
      ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை.
      அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார்.
      ஒருவர்,“அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார்.
      அந்த குரு,“சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார்.
      பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது.
      அந்த குரு திரும்பவும் வந்து,“இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லைவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார்.
      அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.
      அவர் பசுவை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார்.
      மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர்.
      அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார்.
      “பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார்.
      மக்கள்,“இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி ...... அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.”
      ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார்.
       அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர்.
      அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார்.
      அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள்.
       அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர்.
      இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள். அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார்.
      அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள்.
      அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார். கதகதப்பாகத்தானே இருக்கும்.
      இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார்.
      வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம்,“அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.

Monday, March 28, 2011

மிகச்சரியானவர் என்பதே இல்லை ஆனந்தம்


      ஒவ்வொருவரும் தான் முக்கியமானவராக இருக்கும்படிதான் வளர்க்கப்பட்டிருக்கிறார். இங்கு யாரும் உண்மையானவராக இருக்க முடியாது. முக்கியமானவராக மாறுவது மனித இனத்தின் பொதுவான வியாதியாக இருக்கிறது.
      ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் எங்காவது, எதாவதொன்றில் முக்கியமானவராக ஆக வேண்டும் என்பதற்காக அதன்படிதான் வளர்க்கப்படுகிறார்கள். ஒரு மாடல் கொடுக்கப்படுகிறது, நீ அதுபோல மாற வேண்டும். அது உனக்கு ஒரு இறுக்கத்தைக் கொடுக்கிறது, ஏனெனில் நீ அதுபோல இல்லை. நீ வேறுமாதிரி இருக்கிறாய், இருப்பினும் நீ அதுபோல ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாய்.
      அதற்காக உண்மையானதை உண்மையற்றதற்க்காக கண்டனம் செய்கிறாய் – உண்மையற்றது உண்மையற்றதுதான். எதிர்காலத்திற்கான வடிவமைப்பு உன்னை நிகழ்காலத்திலிருந்து வெளியே இழுக்கிறது.
      மாடல் ஒரு பயங்கர கனவாக துரத்துகிறது, அது தொடர்ந்து உன்னைத் துரத்துகிறது. நீ எதை செய்தாலும் அது சரியானதாக இருக்கப் போவதில்லை. ஏனெனில் சரியானது என்பதை குறித்து உனக்கு ஏற்கனவே ஒரு கருத்து உள்ளது. நீ ஏற்படுத்துவது எதுவாக இருந்தாலும் அது நிறைவாக இருக்கப் போவதில்லை, ஏனெனில் நிறைவடைய முடியாத ஒரு மடத்தனமான எதிர்பார்ப்பை நீ கொண்டிருக்கிறாய்.
      நீ ஒரு மனிதன். ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட காலநிலையில் ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்கிறாய். அவற்றை ஒத்துக் கொள். மிகச்சரியாக செயல்களை செய்ய வேண்டுமென நினைப்பவர்கள் பைத்தியகாரத்தனத்தின் எல்லையில் இருக்கிறார்கள். அவர்கள் மடத்தனமானவர்கள் – அவர்கள் செய்வது எதுவாக இருந்தாலும் அது நல்லதல்ல. எதையும் மிகச்சரியாக செய்வதற்கு வழியேயில்லை. மிகச்சரியானது மனித இனத்திற்கு சாத்தியமில்லை. உண்மையில் சரியில்லாமல் இருப்பதுதான் ஒரே வழி. அதனால் நான் சொல்வது என்னவென்றால், நான் உனக்கு மிகச்சரியானதை சொல்லித்தரப் போவதில்லை. நான் உனக்கு முழுமையை, ஆனந்தத்தை சொல்லித் தருகிறேன். அது முற்றிலும் வேறு விதமான ஒரு விஷயம். முழுமையாக, ஆனந்தமாக‌ இரு. சரியாக இருப்பதை பற்றி கவலைப்படாதே.
      நான் முழுமை என்று கூறும்போது, நான் உண்மையானதைத்தான், நிகழ்காலத்தைத்தான் கூறுகிறேன். நீ எதைச் செய்தாலும் முழுமையாக செய். ஆனந்தமாக செய். நீ மிகச்சரியானவனாக இருக்கமுடியாது, ஆனால் உன் சரியற்ற தன்மை முற்றிலும் அழகானதாக, அது உனது முழுமையில், ஆனந்தத்தில் நிரம்பி இருக்க முடியும்.
      மிகச்சரியானவனாக இருக்க ஒருபோதும் முயற்சி செய்யாதே, இல்லாவிடில் நீ மேலும் மேலும் வேதனையைதான் உருவாக்குகிறாய். இங்கு ஏற்கனவே ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன. மேலும் உனக்கு பிரச்னைகளை உருவாக்கிக் கொள்ளாதே. முழுமையாக இரு. நீ எங்கே இருந்தாலும் என்ன செய்தாலும் முழுமையாக, ஆனந்தமாக‌ செய். அதனுள் செல். அது உனது தியானமாகட்டும். அது சரியானதா இல்லையா என்று கவலை படாதே. அது சரியானதாக இருக்காது. அது முழுமையானதாக, ஆனந்தமான விசயமாக‌ இருந்தால் போதுமானது. அது முழுமையானதாக இருந்தால் நீ அதை செய்யும்போது விருப்பபட்டு செய்யலாம். நீ அதன்மூலம் ஒரு நிறைவை உணரலாம், நீ அதனுள் செல்லலாம். நீ அதனுள் ஆழ்ந்து விடலாம், நீ அதிலிருந்து வெளியே வரும்போது புதிதாக இளமையாக புத்துணர்வோடு, ஆனந்தத்தோடு வரலாம்.
      ஆனந்தத்தோடு முழுமையாக செய்யப்படும் எல்லா செயல்களும் முழுமையோடு செய்யப்படும் எந்த செயலும் தளைகளை கொண்டு வருவதில்லை. முழுமையாக அன்பு செய்யும்போது அங்கு பந்தம் எழுவதில்லை. அன்பு அரைகுறையாகும் போதுதான் அங்கு பந்தம் உருவாகிறது. முழுமையாக வாழ், சாவைக் கண்டு பயப்பட மாட்டாய். வாழ்வை பிளந்தால் அங்கே சாவை கண்டு பயம் வரும். ஆகவே மிகச்சரியாக என்ற சொல்லை மறந்து விடு. அது மிகவும் வன்முறையான சொற்களில் ஒன்று. இந்த சொல் உலகத்திலுள்ள அத்தனை மொழிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டிய ஒன்று. இது மனித மனத்திலிருந்து எடுக்கப்பட வேண்டிய ஒரு சொல். இதுவரை யாரும் அப்படி இருக்க முடிந்ததில்லை, அப்படி யாரும் இருக்கவும் முடியாது.
      எல்லாமும் சரியானதாக இருக்கும் ஒரு ஓமாகா பாயிண்ட் உண்டு என்று டெலிஹார்ட் டீ சார்ட்டின் கூறுவார். அப்படி ஒரு ஓமாகா பாயிண்ட் கிடையாது. அப்படி இருக்கவே முடியாது. உலகம் நகர்ந்து கொண்டே இருக்கிறது, பரிணாம வளர்ச்சி நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் நெருங்கிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அடையவேயில்லை. ஏனெனில் நாம் அடைந்து விட்டால் முடிந்தது. ஆனால் கடவுள் இன்னும் வேறுபட்ட விதங்களில் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
      ஒரு விஷயம் உறுதி. அவர் தனது வேலையில் ஆனந்தமாக இருக்கிறார். இல்லாவிடில் அவர் இதை எப்போதோ கைகழுவி விட்டிருப்பார். அவர் இன்னும் தனது சக்தியை இதில் செலுத்திக் கொண்டே இருக்கிறார். கடவுள் உன்னால் மகிழ்ச்சி அடையும்போது நீ உன்னைப் பற்றி மகிழ்ச்சியற்று இருப்பது மடத்தனமானது. நீ மகிழ்வோடு இரு. மகிழ்ச்சியே, ஆனந்தமே நிறைவான எல்லையாக இருக்கட்டும். நான் புலன் உணர்ச்சியை ஆதரிப்பவன். அதுதான் மகிழ்ச்சியின் வெளிப்பாடு என்பதை நினைவில் கொள். நீ என்ன செய்தாலும் மகிழ்வோடு, ஆனந்தமாக‌ இரு. அவ்வளவுதான். அது சரியானதா இல்லையா என்பதைப்பற்றி கவலைப்படாதே!
      சரியானதாக இருக்க வேண்டும் என்ற முனைப்பு எதற்கு? அந்த முனைப்பினால் நீ இறுக்கமாக, வேதனையோடு, தவிப்போடு இருக்கிறாய். அதனால் நீ எப்போதும் பிளவுபட்டவனாக, தளர்வாக இல்லாமல் சிக்கலில் சிக்கி தவிக்கிறாய்.
      வேதனை என்ற பொருள் தரும் ஆங்கில வார்த்தை ஆகோனி (Agony) பிளவுபட்டிருப்பது என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். எப்போதும் தொடர்ந்து தன்னுடன் மல்யுத்தம் செய்துகொண்டே இருப்பது. இதுதான் ஆகோனி என்ற ஆங்கில வார்த்தையின் பொருள். நீ உன்னில் திருப்தியாக இல்லையென்றால் நீ வேதனையில்தான் இருப்பாய் – நடக்க முடியாததை கேட்காதே. உன்னை நேசி. அடுத்தவர்களையும் நேசி, இயல்பாக இரு. ஓய்வாக இரு. ஆனந்தமாக இரு.
      மிகச்சரியாக செயலை செய்ய நினைப்பவன் ஒரு பைத்தியக்காரன். அவன் தன்னை சுற்றிலும் அந்த பைத்தியக்காரத்தனத்தை உருவாக்குவான். அதனால் மிகச்சரியான முறையை கடை பிடிப்பவனாக இருக்காதே. யாராவது உன்னைச் சுற்றி அப்படி இருந்தால், அவர்கள் உனது மனதையும் கெடுப்பதற்கு முன் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களிடமிருந்து தப்பி போய் விடு.
      எல்லோரும் ஒருவிதமான ஆழமான ஆணவத்தில் சிக்கி விடுகின்றனர். உனது கருத்துகளும் உனது செயல்கள் சரியானவை எனக் கூறுவதும் நீதான் சிறந்தவன் எனக் கூறும் ஒரு வகையான ஆணவம்தான். ஒரு தாழ்மையான மனிதன், தன் வாழ்க்கை மிகச்சரியானதாக இருக்காது என்பதை ஏற்றுக் கொள்வான். ஒரு உண்மையான ஆன்மீகவாதி நாம் எல்லைகுட்பட்டவர்கள், நமக்கு வரையறைகள் உண்டு என்பதை உணர்ந்து கொள்வான்.
      மிகச்சரியானவனாக இருக்க முயற்சி செய்யாதவனே அடக்கமானவன் என்பதே என்னுடைய வரையறை. ஒரு அடக்கமானவன் மேலும் மேலும் முழுமையானவனாக, ஆனந்தமானவனாக‌ மாறுவான். ஏனெனில் மறுப்பதற்க்கோ, தவிர்ப்பதற்க்கோ எதுவும் இல்லை. அவன் எப்படியோ அதை அப்படியே அவன் ஏற்றுக் கொள்வான். நல்லதோ, கெட்டதோ... ஒரு அடக்கமான மனிதன் மிகவும் செழிப்பானவன், ஏனெனில் அவன் அவனை முழுமையாக ஏற்றுக் கொண்டவன். அவனது கோபம், செக்ஸ், பேராசை, எல்லாமும் ஒத்துக் கொள்ளப்படுகிறது. அந்த ஆழ்ந்த ஏற்றுக் கொள்தலில் ஒரு ரசாயன மாறுதல் நிகழ்கிறது. எல்லா அசிங்கங்ளும் தானாகவே மறையத் தொடங்கும். மேலும் மேலும் முழுமையாக, மேலும் மேலும் லயப்படுதல் நிகழ்கிறது.
      உன்னுடைய கருத்துக்களால் உன்னுடைய துயரத்தை நீயே உற்பத்தி செய்து கொள்கிறாய் என்பதை நீ புரிந்து கொள்ளும் நாளில் எல்லா கருத்துக்களையும் உடைத்து விடுவாய். அப்போது நீ அது என்னவாக இருந்தாலும் அதன்படியே உண்மையாகவும் இயல்பானவனாகவும், ஆனந்தமானவனாக‌ இருக்க ஆரம்பிப்பாய் – அதுதான் மிகச் சிறந்த நிலைமாறுதலாகும்.

--------------------------------- ஓஷோ --------------------------------------

Thursday, March 17, 2011

உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன்? ஆனந்தம்

மனிதர்களுக்கு உறவுகள் வழியே சிக்கல்கள் ஏன் ஏற்படுகின்றன? அவர்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள உறவுகளைப் பயன்படுத்துவதில்லை. மாறாக, வாழ்க்கையிலிருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கே உறவுகளைப் பயன்படுத்துகிறார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும், அதனை யாருடனாவது பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
      வீதிமுனைகளில் நின்று கவனிப்பீர்களேயானால் நிமிடத்திற்கு நூற்றுக் கணக்கானவர்கள் உங்களை கடந்து செல்வார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் வாடிய முகங்களுடந்தான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு என்னாயிற்று? இத்தனைக்கும் உங்கள் முன்னோர்களைக் காட்டிலும் ஆடம்பரமான வாழ்க்கையத்தான் வாழ்கிறீர்கள்.
      இந்தியாவில் மட்டுமல்ல; ஒருமுறை பிரான்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் பேசுகிறபோது கூட இதே கேள்வியைத்தான் கேட்டேன். ‘முப்பது வயதைக் கடந்தவர்களெல்லாம் தொங்கிய முகத்துடன் திரிந்து கொண்டிருக்கிறார்களே ஏன்?’ என்று கேட்டேன். ஒரு பெண் எழுந்து பதில் சொன்னாள் – “அவர்களுக்கெல்லாம் திருமணமாகி இருக்கும்’ என்று.
      மனிதர்கள் தங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கிக் கொள்ளத் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அது மிகவும் நல்ல விஷயம். மாறாக, தங்கள் துயரங்களைப் பெருக்கிக்கொள்ள திருமணம் செய்துகொள்வது மிகவும் மோசமான சூழ்நிலை. உறவுகள் என்பவை மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் வழிமுறைகளாக விளங்கும்வரை சிக்கல் இல்லை. பிறரிடம் இருந்து எதையாவது பிடுங்கிக் கொள்வது என்பதாக இருக்கும் என்றால் எப்போதும் சிக்கல்தான். அந்தச் சூழலை நீங்கள் எவ்வளவுதான் திறன்பட நிர்வகித்தாலும் தொல்லைகள் இருந்து கொண்டுதான் இருக்கும். நீங்கள் எம்.பி.ஏ. படித்திருக்கலாம். தொழிலில் பெரிய நிர்வாகியாக விளங்கலாம். ஆனால் உங்கள் உறவுகளை நிர்வகிக்க அது உதவுவதில்லை. உங்கள் உறவு என்பது பக்கத்திலிருக்கும் மனிதருக்கான ஓர் அர்ப்பணிப்பாக விளங்கும் என்றால் அது மிகவும் அற்புதமாக இருக்கும்.
      உலகியல் சார்ந்த தேவைகளைப் பொறுத்த வரையில் அனைவருமே ஒருவரை ஒருவர் சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது. ஆனால் உங்கள் அனுபவத்தின் தன்மையைப் பொறுத்தவரை நீங்கள் யாரையும் சார்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் அனுபவம் உங்கள் அளவில் முழுமையானதாக இருக்கலாம். உலகமே துன்பமயமாக இருந்தாலும், உள்நிலை அனுபவத்தில் ஆனந்தமாய் இருக்கிற வாய்ப்பு சூழலுக்கு அடிமையாக்கப்பட்டோ, அடகு வைக்கப்பட்டோ இருந்தால் தான் அது சாத்தியமில்லை. 1940-களில் நீங்கள் ஒரு கார் வாங்கினால் கூடவே நீங்கள் இரண்டு வேலைக்காரர்களை நியமிக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் தள்ளி விட்டால்தான் கார் கிளம்பும். 1950-களில் வந்த கார்களுக்கு ஒரு வேலைக்காரர் போதும். அவர் முடுக்கி விட்டாலே கார் கிளம்பும். இப்போது வருகிற கார்களெல்லாம் விசையைப் பொருத்தியதும் தாமாகவே கிளம்புகின்றன. உங்கள் மகிழ்ச்சி என்கிற வாகனத்திற்கோ யாராவது வந்து தள்ளிவிட வேண்டிய தேவை இருக்கிறது. உங்கள் மகிழ்ச்சியைத் தானியங்கியாக நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையென்றால், தள்ளிவிட யாருமில்லாத போது நீங்கள் தவித்துப் போவீர்கள்.
      உங்கள் மகிழ்ச்சியும், ஆனந்தமும் உங்களைச் சார்ந்தே இருக்கும்போது உங்களைச் சுற்றியிருப்பவ்ர்களுடன் அருமையான உறவுகளை உங்களால் வளர்த்துக்கொள்ள முடியும். உங்கள் வாழ்க்கையைப் பார்த்தே சொல்லுங்கள். எப்போதும் மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா? அல்லது எப்போதும் சோகமாக இருக்கிறவர்களோடு வாழ விரும்புவீர்களா?
      மகிழ்ச்சியாக இருப்பவர்களோடுதான் வாழ விரும்புவீர்கள். மறந்து விடாதீர்கள்! அனைவருமே அதைத்தான் விரும்புகிறார்கள். நீங்கள் எப்போதும் ஆனந்தமாக இருந்தால் எல்லோரும் உங்களோடு உறவு கொள்ளத்தான் விரும்புவார்கள். யாரிடமிருந்தாவது எதையாவது கசக்கிப் பிழிய வேண்டும் என்று நீங்கள் கருதினால், நேற்று உங்களை மிகவும் நேசிப்பதாகச் சொன்னவர்கள்கூட இன்று உங்களிடமிருந்து விலகியிருக்கவே விரும்புவார்கள்.
      எனவே, உங்களை முதலில் மகிழ்ச்சியாக வைக்கப் பழகிக்கொள்ளுங்கள்.
..........................‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍..........................சத்குரு...............................................................

Monday, March 14, 2011

வலிகூட பரவசமாகும் ஆனந்தம்

      தமிழ்மேதை மீனாட்சி சுந்தரம்பிள்ளை, தண்டியலங்காரம் என்ற பழந்தமிழ் இலக்கியத்தைப் பயில ஆசைப்பட்டார்.ஆனால் முறையாகப் பயிற்றுவிக்கக் கூடிய தகுதி வாய்ந்த புலவர் யாரும் இல்லை.அச்சமயம் ஊர் ஊராக அலைந்து கொண்டிருந்த ஒரு பரதேசி, இதில் நல்ல தேர்ச்சி பெற்றவர் என அறிந்து கொண்டார். பின், அவர் செல்லுமிடம் எல்லாம் பின் தொடர்ந்து சென்றார்.அவர் தேவைகள் ஒவ்வொன்றையும் பூர்த்தி செய்து கொண்டே தண்டியலங்காரம் முழுவதையும் பாடம் கேட்டதுடன், மூல நூலை முற்றிலும் பிரதி எடுத்தார்.எடுத்த காரியத்தில் ஜெயிக்க, எந்த எல்லை வரை வேண்டுமானாலும் செல்லத் தயாராய் இருந்தால் மட்டுமே ஜெயம் உங்களுக்குச்
சொந்தமாகும்.
      "இது சரி" "இது நல்லது" என்ற தெளிவு பிறந்துவிட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் விலையாகக் கொடுக்கலாம்.
      தியானம் எவ்வளவு நல்லது என்பது புரிந்து விட்டால், அதற்காக எதை வேண்டுமானாலும் கொடுக்க முடியும். அது புரியாத வரை "எங்கப்பா! நமக்கெல்லாம் தியானம் செய்ய நேரம் இருக்கு" என்ற சாக்குபோக்கு மட்டுமே சொல்ல முடியும்.ஜி.டி. நாயுடு ஒரு முறை தன் அலுவலகத்தின், தலைமை நிர்வாகி அறைக்குள் பிரவேசித்தார்.அங்கு சிதறிக் கிடந்த பொருட்களை அடுக்கி, குப்பைக் கூளங்களை அகற்றி, பின் ஒரு கடிதம் எழுதி,
மேஜையின் மேல் வைத்தார். அதில், "உம்முடைய அறையை ஒழுங்குபடுத்தி வைக்க, ஒரு வாய்ப்பளித்ததற்கு மிகவும் நன்றி" என்று எழுதியிருந்தார்.
      அந்த அதிகாரி, கடிதம் கண்டவுடன் ஓடோடிச் சென்று நாயுடுவிடம் மன்னிப்பு கோரினார். அதற்கு ஜி.டி. நாயுடு..."உமது வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் வேலையை விட்டுவிட்டு என்னிடம் மன்னிப்புக் கேட்டு வரவேண்டியிருக்காதல்லவா?" என்றார்.
      எளிமையும், புதுமையும், புத்திசாலித்தனத்தின் அங்கங்கள்.சாதாரண மனிதனால் யோசித்துக்கூட பார்க்க முடியாத ஒரு கோணத்திலிருந்து வெளிவரும் புத்திசாலியின் புதுமைகள் சாதாரண மனிதனுக்கு... புதிர்! ஆச்சர்யம்!!எளிமையாக இருக்கும் புத்திசாலிகளின் மனமும் லேசாகவே இருக்கும். அதனால்தான், அவர்களின் ஒவ்வொரு செயலிலும் புதுமை தெரிகிறது. அவை புகழ் பெறுகிறது. ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்,
நிலக்கடலை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு அதில் மாபெரும் சாதனைகளையும் படைத்தார். சாதனைகளின் ரகசியம் பற்றி விசாரித்தனர்... அவர், சாதனைக்கான நுணுக்கங்களை பைபிளிலிலிருந்து கற்றதாகத் தெரிவித்தார்.
      மேலும், செனட் விசாரணை கமிட்டியாளர்களின் கேள்விக்கு, அவர் அளித்த பதில் புதுமையானதாக இருந்தது. "பைபிளில் நேரடியாக நிலக்கடலை பற்றி ஒன்றும் கூறப்படவில்லை.ஆனால், நிலக்கடலையைப் படைத்த கடவுளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. நிலக்கடலை பற்றிய முழு உண்மைகளையும், எனக்கு அருளும்படி கடவுளிடம் வேண்டிக் கொண்டு, என் ஆராய்ச்சியினைத் தொடங்கினேன். மெல்ல மெல்ல நிலக்கடலை சம்பந்தமான புதிர்கள் மறைந்து உண்மைகள் எனக்கு விளங்கின" என்றார்.
      எல்லாவற்றையும் அறிவுபூர்வமாக விளக்கிவிட முடியாது. எல்லாவற்றிற்கும் ஆதாரங்கள் காட்ட முடியாது. மனித உணர்வு, மனிதவாழ்வு, கடவுள் சக்தி போன்ற எதற்குமே ஆதாரங்கள் கிடையாது. ஆனால் ஆதாரமற்ற அந்த அருவங்கள் தான், உங்களையும் உலகையும் இயக்குகிறது. இந்த உண்மைகளை உலகிற்கு உணர்த்த ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் ஒரு நடைமுறை வாழ்வியல் சாட்சி.
      வலிகூட பரவசமாகும்;விழிப்புணர்வை சேர்த்துவிட்டால்! - ஜென் தத்துவம் உடலில் வலி ஏற்படும் காலங்களில் 'வலி எங்கிருந்து வருகிறது' என உணர்வால் ஊடுருவுங்கள்.ஊடுருவ, ஊடுருவ வலி அதிகமாகும். அதே நேரத்தில் வலி ஏற்படும் பரப்பளவு சுருங்கிக் கொண்டே செல்லும். வலி ஒடுங்கிக்கொண்டே செல்லும். ஒரு சிறு புள்ளியாய் வலி ஒடுங்கிய பின் அந்த எதிர்பாராத அனுபவம் நிகழும். ஒடுங்கிய வலி பரவசமாய் வெடிக்கும். உடலுக்குள் ஆனந்தம் பரவும்.

Saturday, March 5, 2011

திருமணம் ஆனந்தம்

      மற்றவர்களை பார்த்து, அவர்களை போலவே வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. உங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை விருப்பமாக இருக்கிறதோ, வசதியாக இருக்கிறதோ அதுதான் உங்களுக்கு உகந்தது
      எங்கே கலவரம் வெடித்தாலும், பெண்கள் தாமாகவே பாதுகாப்பான பின்னணிக்கு ஒதுங்கிவிடுவார்கள். போர் என்று வந்தால், ஆண்கள்தான் முன்னணிக்கு வருவார்கள். சுய பாதுகாப்புக்கு உடல் பலம் முக்கியமாக இருந்த ஆதிகாலத்தில், ஒரு பெண் அவள் குடும்பத்தை சேர்ந்த ஆண்களால் பாதுகாக்கப்பட்டு வந்தாள்
      ஒரு தகப்பன் தனக்கு பின் தன் மகள் பாதுகாப்பின்றி போய்விடக்கூடாதென்று வேற்றோரு நம்பிக்கைக்குரிய இளைஞனிடம் அவளை ஒப்படைத்த காரண்த்தால் தான் அது கன்னிகாதானம் என்று அழைக்கப்பட்டது. பெண் பாதுகாப்பாக இருக்க அவளுக்கு கல்யாணம் அவசியம் என்று சமூகம் நினைத்ததன் காரணம் அது தான்.
      ஒரு பெண்ணுக்கு குறிப்பிட்ட வயதில் திருமணம் நடக்கவில்லை என்றால் அது அந்த குடும்பத்துகே ஒரு அவமானமாக கருதப்பட்டது. முக்கியமான நிகழ்ச்சிகளில் திருமணம் ஆகாத முதிர் கன்னிகள் பங்கு பெறுவது கடினமானது. அவளுடைய குணநலனே கேலிக்குரியதாக பேசப்பட்டது.
      திருமணம் என்பது ஒருவரது வாழ்க்கையில் நிகழக்கூடிய மிக அற்புதமான விஷயம் என்று சமூகம் காலங்காலமாக நம்பவைக்கப்பட்டு இருக்கிறது.இதனால்தான் எப்பாடு பட்டாவது தங்கள் மகளுக்கு திருமணம் செய்து கொடுத்துவிட வேண்டும் என்ற அச்சம் பெற்றோர்களிடம் உருவானது.இன்றைக்கும் சிலருக்கு திருமணம் என்பது முக்கியமான ஒன்றாக இருக்கலாம். அதுவே வசதியாக இருக்கலாம்.சந்தோஷம் தருவதாக இருக்கலாம். அவரவர் மனப்பாங்கை பொருத்தது.ஆனால் அதுவே பொதுவான விதி அல்ல.
      ஒரு வாழ்க்கை முழுமை பெற திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை புதிய உறவுகளை கவனமாக கையாளத் தெரியாதவர்களும் திருமணத்துக்கு வற்புறுத்தப்பட்டு, அதில் தள்ளப் படுவது பரிதாபமானது. திருமணத்தால் வாழ்க்கை அர்த்தமற்று போனவர்களும் கூட அடுத்தவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துவதுதான் இந்த சமூகத்தில் நடக்கிறது.
      மகளை உடைமை என்று நினைத்த காலம் மலையேறிவிட்டது. தான் சாவதற்குள் யாரிடமாவது அவளை பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என்ற அவசியம் இப்போது இல்லை.சொல்லப் போனால் பெண் யாருடைய உடைமையும் அல்ல.அவள் ஒரு தனி உயிர். சுதந்திரமான உயிர். அவளுக்கு தேவையான கல்வியும் சமூக தளமும் அமைத்து கொடுத்தால் போதும் அவளெ தன்னை பாதுகாத்துக் கொள்வாள்.தன் வாழ்க்கையை எப்படி நடத்திக்கொள்ள வேண்டும் என்று அவளுக்கு தெரியும்.
      உங்களுக்கு தனிமை பாதை பிடித்திருக்கிறதா? அதையே தேர்ந்தெடுங்கள். திருமணப்பாதையில் நடந்துதான் ஆகவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. உங்கள் மகிழ்ச்சிதான் முக்கியம். ஆனந்தமாக வாழ வேண்டும் அது தான் முக்கியம். த‌னிமையில் தான் ஆனந்தம் உள்ளது என்றால் தனிமையையே தேர்ந்தெடுக்கலாம்....
      ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை என்றால், அவரைக் குறை உள்ளவராக பார்க்கும் மனநிலை முன்காலம் அளவுக்கு இப்போது இல்லை. சிறிது சிறிதாக மாறி வருகிறது. எனவே, திருமணம் என்பது உங்களை பொறுத்தவரை அமுதமா, விஷமா?

யோசித்து முடிவெடுங்கள்......

Thursday, March 3, 2011

யோகா‍-தியானம் ஆனந்தம்

      எப்பொழுதும் இவ்வுலகம் மிகச்சிறந்த இடமாகத்தான் இருந்திருக்கிறது. இந்த உலகத்தைப் பற்றியோ, மற்ற கிரகங்களைப் பற்றியோ நமக்குத் தெரிந்த வகையில் மற்றா எல்லா கிரகங்களைக் காட்டிலும் இவ்வுலகமே மிகச்சிறந்த இடமாக இருக்கிறது.
      பேராசை கொண்டு இந்த முட்டாள்கள் தான் சிறிதும் விழிப்புணர்வில்லாமல், மனிதகுலத்திற்கு நன்மை பயக்கும் என எண்ணிக் கொண்டு, மற்ற அனைத்து உயிர்களையும் கொன்று குவித்துக் கொண்டேயிருந்தார்கள். ஆனாலும், அந்த மனித குல நன்மை என்பது இன்றளவும் ஒரு கனவாகவே இருக்கிறது.
      ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மற்ற உயிர்களைப் படுகொலை செய்த பிறகும், பல மனிதப் படுகொலைகளுக்குப் பிறகும் மனிதகுல நன்மை என்பது இன்னும் தொலைதூரத்திலேயே உள்ளது. மனிதன் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுபிட்சமாக இருந்த அளவுக்கு இப்பொழுது இல்லை. விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் மூலம் நம் வெளிப்புறச் சூழ்நிலையை மிக அதிகமாக மாற்றியிருக்கிறோம். இருந்தும் மனிதகுல நன்மை அல்லது சுபிட்சத்தின் அருகில் நாம் இல்லை.
      ஆகவே, மனிதகுல நன்மைக்கு என்ன செய்யவேண்டும் எனக் கண்டுகொள்ள நமக்குள் பார்த்து கட்டாயமாக்க இதுவே சரியான நேரம். உங்கள் உள்தன்மை மாறினால்தான் உண்மையான நலம் ஏற்படும் என்பதை உங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்து நீங்கள் உணர முடியும்.
      தற்பொழுது உங்கள் வாழ்க்கையின் தரத்தை, நீங்கள் அணியும் உடையோ, உங்களின் கல்வித் தகுதியோ அல்லது உங்கள் குடும்பப் பின்னணியோ, வங்கிக் கையிருப்போ நிர்ணயிப்பதில்லை. இந்தக் கணத்தில் நீங்கள் உங்களுக்குள் எந்த அளவுக்கு அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கிறீர்களோ அது மட்டும்தான் உங்காள் வாழ்க்கையின் தரத்தை நிர்ணயிக்கிறது.
      ஆகவே, யோகாவும், தியானமும் உங்கள் உள்தன்மையைக் கையாளுகிற அறிவியலின் ஒரு பரிமாணம் ஆகும். இங்கு நீங்கள் வாழ்க்கையை அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ்வதற்குரிய சரியான உட்புறச்சூழலை உருவாக்குவதே அதன் முக்கிய நோக்கம்.
      வேறுவிதமாகச் சொன்னால் நீங்கள் மிகவும் நன்றாக வாழமுடியும். நீங்கள் அன்பாகவும், ஆனந்தமாகவும் மாறிவிட்டால் சுபிட்சமடைந்து விட்டதாக கருதுவீர்களா? ஆகவே, யோகா மற்றும் தியானம் என்று சொல்வது சரியல்ல. யோகா என எதைச் சொல்கிறீர்களோ அதில் தியானமும் அடங்கியுள்ளது.
      முன்பு எப்போதும் இருந்ததைவிட இந்தக் காலகட்டத்தில் யோகா அதிகமான முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முந்தைய காலத்தில் முக்கியமாக இல்லையென நான் கூறவில்லை. ஏன் இதைக் கூறுகிறேனென்றால், இன்று உலகில் பல செயல்கள் செய்வதற்குச் சக்திவாய்ந்த கருவிகளைக் கொண்டுள்ளோம். நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் நீங்கள் விரும்பினால் மலையை நாளையே தரைமட்டமாக்க முடியும்.
      இந்த மாதிரியான ஒரு சக்தி நம் கையில் இருக்கும்பொழுது, உள்நிலை புத்திசாலித்தனமும் வாழ்க்கையைப் பற்றிய விழிப்புணர்வும் மற்ற உயிரினங்களை நமக்குள் ஒரு பாகமாக உணருகின்ற தன்மையும் நமக்கு இருப்பது மிக மிக அவசியமாகிறது. இல்லையெனில் உங்களுக்கே நீங்கள் மிகப்பெரிய சேதத்தை விளைவித்துக் கொள்வீர்கள். அந்த மாதிரியான ஒரு நேரத்தில்தான் இப்பொழுதும் இருக்கிறீர்கள்.
      சுவாசிப்பதே பிரச்சினையாகும் அளவிற்கு நீங்கள் தேசத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கு எந்த உலகத்தில் உயிர்வாழ்வதே பிரச்சினையாக ஆகிக்கொண்டு வருகிறது. வெளிப்புற அறிவியலைச் செயல்படுத்தியதால் மட்டுமே இந்த மாதிரி நடந்திருக்கிறது. சரியான உள்சூழலை உருவாக்கக் கூடிய உள்நிலை அறிவியலை நீங்காள் கவனிக்கவேயில்லை.
      ஆகவே, நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பதால் யோக அறிவியல்தான் உன்பு எப்போதையும்விட இக்காலகட்டத்திற்கு மிகவும் தேவையாக இருக்கிறது. நீங்கள் சக்தியுடன் இருப்பதால், நீங்கள் புத்திசாலித்தனமாக இருப்பது மிகவும் முக்கியமாகிறது.
      இது எனக்கு இக்கிரகத்தில் வாழ்ந்த மிகவும் சக்தி வாய்ந்த மனிதர்களைப் பற்றி நினைவூட்டுகிறது. சர்வாதிகாரிகள் எல்லாம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்கள் நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகத் திகழ்ந்தார்கள்.
      ஒருநாள், முசோலினி அனைத்து இத்தாலிய புகைவண்டிகளையும் குறித்த நேரத்தில் ஓடும்படிச் செய்தார். ஒருசில புகைவண்டி ஓட்டுநர்களைச் சுட்டதன் மூலம் இதை அவர் நடத்திக் காட்டினார். இத்தாலியில் அனைத்து புகைவண்டிகளும் குறித்த நேரத்தில் ஓடத் தொடங்கின. அவர்கள் வரலாற்றில் அதுபோல இதற்கு முன்பு நடந்ததேயில்லை.
      ஆனால் திடீரென்று நடக்கத் தொடங்கியது. இதனால் முசோலினி புளகாங்கிதம் அடைந்து அவர் உருவம் பொறித்த தபால்தலை வெளியிட்டபொழுது ஒரு புதுபிரச்சினை உருவானது. தபால் தலைகளெல்லாம் அஞ்சல் உறையின் மீது இல்லாமல் கீழே விழுவதும், தபால் பைகளில் சேர்வதுமாக நடந்தது. இது முசோலினியின் கவனத்திற்கு வந்த பொழுது தபால்துறைத் தலைவரை அழைத்து " நீங்கள் ஏன் உயர்ந்த ரக பசையை உபயோகிப்பதில்லை" எனக் கேட்டார். அதற்குத் தபால் துறைத் தலைவர் மிகுந்த பயத்துடனும், தயக்கத்துடனும் "உயர்ந்த ரக பசையைத்தான் உபயோகிக்கிறோம், ஆனால் மக்கள் தபால்தலையின் முன்பக்கத்தில் தான் எச்சிலைத் தடவுகிறார்கள்." என்று கூறினார்.
      ஆகவே, நீங்கள் சரியான திசையில் செல்ல இதுவே தருணம். நவீன விஞ்ஞானம் உங்களுக்களித்திருக்கும் வசதிகளைப் பயன்படுத்தியே உண்மையான மனிதகுல நன்மையை அடைவதற் கேதுவான பரிமாணத்தை யோக அறிவியல் உங்களுக்குள் திறக்கச் செய்யும்.