ஒரு மனிதன் தன்னை உணரும் போது தான் உள்நிலையிலும் வெளிநிலையிலும் முழுமையடைகிறான். அதுவரை அது வேண்டும், இது வேண்டும் என்று பிச்சைக்காரனைப் போல ஏங்கிக் கொண்டிருக்கின்றான். நினைத்தது கிடைத்தாலும் பின் வேறொன்றுகாக ஏங்க ஆரம்பித்து விடுகின்றான். அவனுடைய ஏக்கம் மூச்சு நிற்கும் போது கூட பூர்த்தியாவது இல்லை. நாளை என்வாழ்க்கை முழுமையடையும் என்ற நினைவிலேயே இறந்துவிடுகின்றன்.
16 வயதில் ஆரம்பித்து 32 வயதிற்குள் பாதி உலகை வென்ற பிறகும் கூட, அலெக்ஸாண்டர், இன்னமும் பாதி உலகை வெல்லவில்லையே என்ற ஏக்கத்தோடு தான் இறந்தான். தன் ஆசைக்காக அப்பாவி மக்களை 16 ஆண்டுகளாக கொன்று குவித்த பிறகும் அவனிடம் அறிவு வெளிப்படவில்லை.
அவனை நீங்கள் "அலெக்ஸாண்டர் தி கிரேட்" என்று அழைக்கிறீர்கள். பாடப்புத்தகங்கள் மூலமாக உங்கள் குழந்தைகளுக்கும் அப்படி போதிக்கிறீர்கள். மக்களின் நலனுக்கு அவன் என்ன செய்தான் சொல்லுங்கள்! துரதிர்ஷ்டவசமாக உங்கள் சிந்தனை அந்த வழியில் தான் செல்லுகிறது.
ஒவ்வொருவரும் மனதளவில் அலெக்ஸாண்டராக தான் இருகிறீர்கள். ஆனால் நிறைவேற்றிக் கொள்ளும் தைரியம் இல்லாமல் இருக்கிறீர்கள். இப்படி நீங்கள் அலெக்ஸாண்டராக இருக்கும் வரை ஒவ்வொருவரையும் ஏதாவது துன்பப்படுத்தி தான் ஏதாவது அடையவேண்டும் என்ற நோக்கம் இருக்கும் வரை, வலியும் துன்பமும் தான் இந்த உலகத்தின் வழியாக இருக்கும். இப்படித் தான் உங்கள் சிந்தனை இருக்குமென்றால், உங்கள் செயல்கள் இருக்குமென்றால், இந்த உலகம் அழகானதாக இருக்க முடியாது.
உங்கள் வரலாற்றுப் புத்தகங்களில் கூட அலெக்ஸாண்டருக்கு பல பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் மனிதனலனுக்காக பாடுபட்ட ஞானமடைந்த புத்தருகோ சில வரிகள் மட்டுமே. அதுவும் கூட அவன் அரசனாக இருந்தான் என்பதற்காக மட்டும் தான்.
உண்மையில் உங்கள் நோக்கம் மற்றும் விழிப்புணர்வு, மனிதநலனை நோக்கிதான் முழுமையாக இருக்க வேண்டும். எப்போது உங்களை முழுமையாக உணர்கிறீர்களோ அப்போது உங்கள் நோக்கம் மற்றவர்களின் நலன் குறித்தே இருக்கும். எனவே உங்களின் எண்ணமும் செயலும் முழு உணர்தலை நோக்கியே மாற வேண்டும் என்று விரும்புகிறேன். வாழ்க வளமுடன்!
4 comments:
sirappaana karuththukkal
/* வரலாற்றுப் புத்தகங்களில் கூட அலெக்ஸாண்டருக்கு பல பக்கங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் மனிதனலனுக்காக பாடுபட்ட ஞானமடைந்த புத்தருகோ சில வரிகள் மட்டுமே. அதுவும் கூட அவன் அரசனாக இருந்தான் என்பதற்காக மட்டும் தான். */
Bitter Truth...
வரலாற்றில் அலேக்சாண்டரைபோல சிறிய வயதில் முக்கால்வாசி உலகை வெற்றி கொண்டவர்கள் வேறு யாரும் கிடையாது என்பதே உண்மை. கிறிஸ்து பிறப்பிற்கு முன் (ஏன் அதை தாண்டியும் கூட) போர் என்பது அந்த கால வாழ்க்கைமுறையில் ஒன்றாக இருந்து வந்தது.எனவே போர் என்பதை நாம் அந்த கால நியாயங்களோடு பார்க்கவேண்டும். அது தவறு என்றால் எல்லா போர்களுமே தவறுதான். போர் தவறு என்பதும் அது மனித குலத்தின் தீமை என்பதும் 1950 களுக்கு பிறகு மனித எண்ணவோட்டத்தில் ஏற்பட்ட மாறுதல். அதுவரை போர் என்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட ஒரு மா பெரும் வாய்ப்பு என்றே எல்லோரும் கருத்து கொண்டிருந்தனர். விதிவிலக்காக புத்தர், ஏசு போன்ற தலைவர்கள் போரின் அநியாயங்களை சாடியதும் உண்டு. இருந்தும் இரண்டாம் உலக போருக்கு பின்னர்தான் மக்களிடம் இந்த எண்ணம் வெகுவாக எழுந்து போர் என்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய மனித இனத்தின் எதிரி என்ற புதிய பார்வை வந்தது. நீங்கள் சொல்லியபடி அலெக்சாண்டரை போர் குற்றவாளி என்று அறிவிப்பதில் தவறில்லைதான். அவரே அப்படிஎன்றால் எத்தனை அரசர்களை நாம் குற்றவாளிகளாக நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதை நான் உங்கள் கணிப்புக்கே விட்டுவிடுகிறேன். அலெக்சாண்டர் தன் போர் செய்யும் நாடுகளில் முடிந்தவரை குறைந்த அளவுக்கு மனித பலி இருக்கும் படி பார்த்துக்கொள்ளவார் என்று கூட ஒரு கருத்து உண்டு.(இதை ஒரு கருத்தாகவே சொல்கிறேனே தவிர போர் என்பது ஒரு என்றைக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத தீமையானது என்பதையும் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.)
ஒரு அர்த்தமுள்ள கருத்து பரிமாறப்பட்டுள்ளது.
மிகவும் நன்றி.
Tamil News Service
Post a Comment