எடை குறைப்பிற்க்கான வழிமுறைகள் இன்று படு வேகமாக விற்பனை ஆகிக் கொண்டிருக்கின்றன. யோகம் முதல் தெய்வீகம் வரை அனைத்துமே எடை குறைப்பிற்கானவை தான் என்று சந்தையில் விலை பேசிக்கொண்டிருக்கும் இக்காலத்தில் யோகாவினால் ஏற்படும் இரட்டிப்பு பலன்கள் என்னவென்றால்......
நீங்கள் யோகா செய்யும் போது அதிகப்படியான எடை தானாகவே கண்டிப்பாக குறைந்துவிடும். யோகா ஒரு உடற்பயிற்ச்சியாக மட்டும் செயல்படுவதில்லை, அது உங்கள் அமைப்பிற்க்கு ஒரு புத்துணர்வு ஊட்டி, நீங்கள் அதிகமாக சாப்பிடும் இருக்கும் ஒரு விழிப்பினை உங்களுக்குள் கொண்டுவருகிறது. உங்கள் உடலுக்குள் ஓரளவு விழிப்புணர்வு வந்துவிட்டால், அதற்கு எது தேவையோ அதை மட்டும் தான் உண்ணும். அதற்கு மேல் அது எதையும் உண்ணாது. மற்ற உடற்ப்பயிர்ச்சிகளையோ அல்லது உணவுத்திட்டங்களையோ நீங்கள் கடைப்பிடித்தால், எப்போதும் உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள முயற்ச்சிப்பீர்கள். ஆனால் யோகப்பயிற்சிகள் செய்து வரும்போது உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது.
நீங்கள் பயிற்சிகளை மட்டும் செய்து வந்தால் போதும், நீங்கள் அதிகமாக உண்ணாத அளவு உங்கள் அமைப்புகளை யோகா கவனித்துக்கொள்ளும். இது தான் யோகாவில் மிகப்பெரிய வித்தியாசமும் நன்மையும்.
கிரியா யோகப் பயிற்சிகளை செய்ய ஆரம்பிக்கும்போது, சிலர் எடை இழக்கத்துவங்குவார்கள். சிலர் எடை கூடத்துவங்கும். உங்கள் ஜீரணசக்தி, மோசமாக, அதாவது உணவை உடலை மாற்றும் திறமை மோசமாக இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கும் போது, ஜீரண நெருப்புக்கள் தூண்டப்பட்டு, ஜீரணசக்தி மேம்பட்டு, உணவு உடலாக மாறும் திறன் அதுகரித்து, உங்கள் எடை கூடத்துவங்கும்.
உங்கள் ஜீரணசக்தி ஏற்கனவே நன்றாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும் நிலையில் நீங்கள் கிரியாக்கள் செய்யத் துவங்கினால், ஜீரணசக்தி மேலும் தூண்டப்படும் இருந்தாலும், உணவு உடலாக மாறாமல் சக்திநிலையில் சூட்சுமப் பரிணாமமாக மாற்றிவிடும். இப்போது நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்கள் எடை குறைந்து கொண்டே போவதை காண்பீர்கள்.
கிரியாக்களை செய்யும் போது அதிகப்படியான உணவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் இருப்பதை காண்பீர்கள் அல்லது உங்கள் எடை குறையவும் கூடும். அல்லது உங்கள் சாப்பாடு குறைந்தாலும் எடை இழக்க மாட்டீர்கள். உணவு உருமாறும் விதம் மாறி விடுவதால் இப்படி ஆகிறது.
எடையை குறைப்பதற்காக யோகா இல்லை, உங்களை ஒல்லி ஆக்குவதற்க்கோ, தலைவலிக்கோ, முதுகுவலிக்கோ அல்ல யோகா. நீங்கள் அன்பாக ஆனந்தமாக மாறவே யோகா. ஆனால் இவ்விளைவுகள் எல்லாம் யோகாவின் கூடுதல் பலன்கள்.
உடலைத் தாண்டி உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணர வைப்பதே யோகாவின் நோக்கம். அந்த பரிணாமம் உயிர்ப்புடன் இருக்கும் போது தான் இந்த பிரபஞ்சம் எண்ணிலடங்கா வழிகளில் மெதுவாக உங்களுக்காக திறக்கத் துவங்கும். நீங்கள் உடலைத் தாண்டிய உள்ளுக்குள் இருக்கும் பரிணாமத்தை உணரத்துவங்கிவிட்டால், பிறகு இவை எல்லாம் இருக்கின்றனவா என்று நீங்கள் கற்பணை செய்து பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உங்களுக்கு நடைமுறையில் சாத்தியப்படும்.
..........................வாழ்க வளமுடன்!............................
3 comments:
பார்க்க யோகாசனம் பற்றிய சில சர்ச்சைகளும் பதிலும் உள்ள என்னுடைய இந்தப் பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்களும் நன்றியும்...
Post a Comment