Showing posts with label சீடன். Show all posts
Showing posts with label சீடன். Show all posts

Thursday, November 17, 2011

தியானம்‍-கவனித்தல் ஆனந்தம்


      ஒரு மிகப் பெரிய துறவி தன்னுடைய சீடன் ஒருவனிடம் அவனுடைய பாடத்தின் கடைசி அத்தியாயத்தை படிப்பதற்காக அரசவைக்கு போகச் சொன்னார். சீடன் தேர்வு பெற்று விட்டதை அறிவிப்பதற்கு முன் அவன் அரசவைக்கு சென்று அங்கு சில நாட்கள் தங்கி இருக்க வேண்டுமென்று சொன்னார்.
      இதுதான் குருவின் விருப்பமா என்று எண்ணிய சீடன் சென்றான். ஆச்சரியம்தான், எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவி தன்னுடைய சீடர்களை எதையும் துறக்காத, பதவி வெறி பிடித்த, அடுத்த நாடுகளை வெற்றி கொள்ளும் வெறி பிடித்த சாதாரண ஒரு அரசனிடம், ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாத, பொருட்களிடம் பற்றுக் கொண்ட மனிதனிடம் எதற்காக அனுப்புகிறார் அதில் ஏதாவது ரகசியம் இருக்க வேண்டும் நானும் எதற்காக அனுப்பப்படுகிறேன் தெரியவில்லையே என்று நினைத்தவாறே சென்றான்.
      அவன் சென்ற நேரம் மாலை நேரம். அவன் உடனடியாக அரசவைக்கு அழைத்துச் செல்லப் பட்டான். அது அரசர் மதுவருந்தும் நேரம், மேலும் ஒரு அழகான நடன மாது நடனமாட வந்திருந்தாள். அரசவை அந்த மாலை நேரத்தை அனுபவிக்க ஆரம்பித்திருந்தது.
     இது எல்லாவற்றையும் பார்த்த அந்த இளம் துறவி அதிர்ச்சியடைந்து, திகிலடைந்து போனான். அவன் அரசரிடம் நான் இங்கே சில நாட்கள் தங்க வந்தேன். ஆனால் என்னால் இங்கே ஒரு மணி நேரம்கூட தங்க முடியாது. என்னை என் குருநாதர் எதற்காக இந்த நரகத்திற்கு அனுப்பினார் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. என்றான்.
     அரசர், உன்னை உன் குருநாதர் இங்கே அனுப்பினார் என்றால் அதற்கு ஏதாவது காரணம் இருக்கும். இவ்வளவு சீக்கிரமாக தீர்மானித்துவிடாதே. இரண்டு மூன்று நாட்களில் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது மேலும் நினைவில் கொள், இது உனது இறுதி கட்ட பரீட்சை. என்னுடைய அங்கீகாரம் இல்லாமல் நீ தேர்வடைந்தவன் என்று ஒரு போதும் அறிவிக்கப்படமாட்டாய். நீ உன்னுடைய குருலத்திலேயேதான் உன் வாழ்நாள் பூராவும் இருக்கவேண்டி வரும். அதனால் நீ உணர்வுடன் பேசு. இங்கே மூன்று நாட்கள் இரு. நீ இங்கே என்னை மதிப்பிட வரவில்லை, நான் உன்னை மதிப்பிடவே நீ இங்கே வந்திருக்கிறாய் என்பதை நினைவில் கொள்.
      இது மிகவும் அதிகம். எல்லாவற்றையும் துறந்த ஒரு துறவியை ஒரு அரசன் மதிப்பிடுவதா ஆத்திரமடைந்தாலும் என்ன செய்வது திரும்பி போனால் குருநாதர் மகிழ்ச்சியடையமாட்டார். எப்படி இருந்தாலும் இங்கே இருந்துதான் தீர வேண்டும் என்பது உறுதி என்றால் எப்படியோ இந்த மூன்று நாட்களை இங்கேயே கடத்திவிட்டு இந்த தலைகனம் பிடித்த மனிதனிடமிருந்து வேண்டியதை சாதித்து சென்று விடலாம்.
     அரசர் கூறினார், அமைதியடைந்து சுயஉணர்வு கொள். முதலில் குளி, நீ வரப் போகும் செய்தி முதலிலேயே எனக்கு வந்துவிட்டது. அதனால் நான் உனக்காக எல்லாம் தயார் நிலையில் வைத்திருக்கிறேன். கவலைப்படாதே. இளமை அப்படித்தான். எதையும் சீக்கிரமே தீர்மானம் செய்யச் சொல்லும். தீர்மானம் செய்யாமல் இருக்க, அல்லது உடனடியாக மதிப்பீடு செய்யாமல் இருக்க ஒரு சிறிதளவு அனுபவம் வேண்டும். நீ இதுவரை எதையும் பார்த்ததில்லை.
      இங்கே மூன்று நாட்கள் இரு, கவனி, பார். நீ மதிப்பீடு என்பதை உன் வாழ்நாள் முழுவதும் செய்யலாம். அதில் எந்த பிரச்னையும் இல்லை. முதலில் என்னுடைய ஒப்புதல் பெற்றுக் கொள். என்னுடைய மதிப்பீட்டை கவனித்து அதன்படி நடந்து கொள்ள முயற்சி செய். அப்போதுதான் நீ என்னிடமிருந்து சாதகமான தீர்ப்பை பெறலாம். இல்லாவிடில் நீ திரும்ப திரும்ப உனது வாழ்க்கை முழுவதும் இங்கே வர வேண்டியிருக்கும். அதனால் போய் குளி. நான் சகல ஏற்பாடும் செய்து வைத்திருக்கிறேன்.
      இந்த இளம் துறவி இதுவரை அரசனின் குளியலறையை பார்த்ததேயில்லை. அது போன்ற அழகான ஒரு இடத்தில் அவன் இருந்ததேயில்லை. நிர்வாணமான பெண்கள் மசாஜ் செய்ய அங்கே இருந்தனர்.....அவன், கடவுளே, இந்த பரீட்சை என்னை முடித்துவிடும் போலிருக்கிறதே. இந்த மூன்று நாட்களில் இவர் என்னை கொன்று விடப் போகிறார். என்றான். அவன் எதுவும் சொல்வதற்கு முன், உண்மையில் அவன் பதட்டத்தின் உச்சியில் இருந்தான். அவன் எப்போதும் பெண்களிடமிருந்து தப்பித்து வந்திருந்தான், இப்போது இங்கே நிர்வாணமான பெண்கள்.... அவன் இதற்கு முன் இவ்வளவு அழகான பெண்களை பார்த்ததேயில்லை, அதுவும் அவர்கள் மசாஜ் செய்யப் போகிறார்கள்.
      ஆனால் அவன் எதுவும் சொல்வதற்கு முன் உண்மையில் அவனால் எதுவும் பேச முடியவில்லை, அவன் பேசும் சக்தியை இழந்திருந்தான். அவனால் ஆஹாஹாஹா என்று மட்டுமே சொல்ல முடிந்தது. வேறு எதுவும் சொல்ல முடியவில்லை. அவர்கள் அவன் ஆடைகளை கழற்ற ஆரம்பித்தனர். அவன் எதையும் செய்யும்முன், அவன் நிர்வாணமாக நின்றிருந்தான். அந்த நான்கு பெண்களும் அவனை முழுமையாக தங்கள் வசம் எடுத்துக் கொண்டு அவனை குளியல்அறையின் தொட்டியில் அமிழ்த்தினர். அதில் முழுமையாக பன்னீர் இருந்தது.
      அரசர்களும் மிகப் பெரும் பணக்காரர்களும் பன்னீரில்தான் குளிப்பர். இரவில் குளியல்தொட்டியில் நூற்றுக்கணக்கான ரோஜாக்களை போட்டு வைத்தனர். அதனால் அந்த வாசம் தண்ணீரில் ஊறி விடும். காலையில் அந்த இதழ்களை எடுத்து விட்டால் நீ அந்த ரோஜாக்களை பார்க்காவிட்டாலும் ரோஜாவாசம் உன்னை சூழ்ந்திருக்கும்.
      அவன் இதுவரை தன் வாழ்நாளில் அது போன்ற ஆடம்பரமான எதையும் பார்த்ததேயில்லை. அந்த குளியல் தொட்டி முழுவதும் தங்கத்தால் ஆனது. அரிய வகை எண்ணெய் ஊற்றி அவன் மசாஜ் செய்யப்பட்டான். அதிலிருந்து தப்பிப்பதற்குள் அவனுக்கு போதும் போதுமென்றாகி விட்டது. அதற்குள் அவன் உறைந்தவன் போலாகி விட்டான்.
     பின் அரசர் அவனை விருந்துக்கு அழைத்தார். அவன் இதுவரை இது போன்ற உணவு வகைகளை ருசித்ததேயில்லை. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்றுதான் அவன் இதுவரை படித்துள்ளான். இங்கோ, ருசியான, சுவையான அற்புதமான உணவு. அதன் வாசனையே மணமே உனக்கு பசியெடுக்க வைத்துவிடும்.
      அரசர், உட்கார், உட்காரந்து சாப்பிடு. ருசிக்காமல் சாப்பிட வேண்டும் என்ற உனது ஒழுங்கை நினைவில் கொள். உனது குருநாதரின் இல்லத்தில் உள்ள சுவையில்லாத உணவை சாப்பிடும்போது அதை நினைவில் கொள்வதில் என்ன சிரமம் ஒரு ஒழுங்கினால்தான் அதை அங்கே நினைவில் வைத்துக் கொள்ள வேண்டுமா அங்கே சுவையில்லை. எந்த முட்டாளும் ஒழுங்காக இருப்பான். இங்கே அதை நினைவில் கொள்.
      இளைஞன் அதில் உள்ள கஷ்டத்தை பார்த்தாலும் அதில் உள்ள நியாயத்தையும் பார்த்தான். அரசர், குளியல் எப்படி இருந்தது சொல்லவே இல்லையே, அந்த பெண்கள் நன்றாக இருந்தார்களா ஏனெனில் அவர்கள்தான் மசாஜ் செய்வதில் சிறந்தவர்கள் நீ திருப்தியடைந்திருப்பாய் என நினைக்கிறேன்.
      அவன் திருப்தியா, நான் மூன்று நாட்களை எப்படியோ கடத்த நினைக்கிறேன். எனக்கு நம்பிக்கை இல்லை, அப்படி கடந்து விட்டால்..... இதுதான் முதல் மாலை. இந்த மூன்று நாட்களும் எனக்கு மூன்று வாழ்க்கை போல இருக்கிறது. இந்த உணவு அதை என் வாழ்நாள் முழுவதும் என்னால் மறக்க முடியாது. நான் துறவி, மேலும் இந்த அழகான பெண்களை என்னால் மறக்கமுடியாது. இது என்ன வகையான பரீட்சை நான் இத்தனை வருடங்களாக என்னை தயார் செய்து வைத்திருப்பதற்கு நேர் எதிரான அனுபவங்களை நீங்கள் எனக்கு கொடுக்கிறீர்கள் என்றான்.
      பின் மது வந்தது. அரசர் அவனுக்கு சிறிது ஊற்றிக் கொடுத்தார். இளைஞன், இது அதிகப்படியானது. ஏனெனில் மது எனது குருநாதரின் இல்லத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று. என்றான்.
      அரசர், இது உனது குருவின் இல்லம் அல்ல. இது உனது பரிசோதகரின் இல்லம். உனக்கு ஒப்புதல் வழங்கும் பரிட்சை. கவனமாக இரு, நான் சொல்வதை செய். உனது குருநாதர் சுயஉணர்வின்றி இருக்காதே என்று தான் கூறியிருக்கிறார். சுயஉணர்வின்றி இருக்காதே. குடி, சுயஉணர்வை இழக்காமல் இரு. குடிக்காமல் சுயஉணர்வோடு இருப்பதில் என்ன பிரச்னை யாரும் அதை செய்யலாம், எல்லோரும் அப்படித்தான் இருக்கின்றனர்.
      அவன் குடிக்க வேண்டி வந்தது. பின் என்ன நடக்கிறது என்றே அவனுக்கு தெரியாது. என்ற அளவுக்கு அவன் சுயஉணர்வை இழந்து விட்டான். மது, மாது, அழகான உடை, யாவும் அவனை மயக்கி விட்டன. அவன் தங்க வேண்டிய இடத்திற்கு அரசர் அவனை தூக்கிச் சென்றார். அவனால் நம்பவே முடியவில்லை. அவன் தான் சொர்க்கத்திற்கு வந்து விட்டதாக எண்ணினான். மது பலருக்கு சொர்க்கத்தை பற்றிய நினைப்பை கொடுத்து விடும்.
      அவன் தான் சொர்க்கத்தில் இருப்பதாக எண்ணினான். அவன் தான் தேர்வடைய வந்திருப்பதை சுத்தமாக மறந்து விட்டான். அரசர் அவனுக்கு அவனுடைய படுக்கையை காண்பித்தார். அவன் படுத்த மறுகணம் அவன் தன் தலைக்கு மேல் நூலில் ஒரு வாள் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்தான். எல்லா மயக்கங்களும் காணாமல் போய் விட்டது. திடீரென அவன் தான் சொர்க்கத்தில் இல்லையென கண்டான். அந்த வாள்... யாரையும் எங்கிருந்தாலும் - சாவு - உடனே பூமிக்கு கொண்டு வந்து விடும்.
      அவன் அரசரிடம் எதற்காக இந்த வாள் இங்கே தொங்கிக் கொண்டிருக்கிறதென்று கேட்டான். அரசர், இது உன்னை சுயஉணர்வில் வைத்திருப்பதற்காக அங்கே தொங்கிக் கொண்டிருக்கிறது என்று கூறினார். இதுதான் உனது அறை. இப்போது தூங்கு. கடவுளின் கருணையிருந்தால் நாள் இருவரும் உயிரோடிருந்தால் சந்திப்போம். என்றார்.
     அவன், உங்களுக்கு எதுவும் நடக்காது. நீங்கள் உயிரோடிருப்பீர்கள். பிரச்னை எனக்குத்தான். கடவுளின் கருணையிருந்தால்கூட எனது தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் இந்த கூரான வாளை தாங்கிப் பிடிக்கும் சக்தி இந்த நூலுக்கு இருக்குமா என்பது எனக்கு சந்தேகம்தான். ஒரு தென்றல் காற்று போதும், அது எந்த வினாடியும் அறுந்து விழுந்துவிடும். நான் செத்தேன். என்றான்.
      அரசர், கவலைப்படாதே. நீ இறந்து விட்டால்கூட உனது குரு சொல்லிருப்பாரே மறுபிறப்பு பற்றி – நீ மறுபிறப்பு எடுப்பாய் – மறுபடியும் பிறப்பாய். நீ கற்றது அனைத்தும் உன்னுடன் வரும். அதனால் இந்த கடைசி கணங்களை தவற விட்டு விடாதே. அது விழலாம், அதற்கு நான் உறுதிமொழி கொடுக்கமுடியாது. நீ இந்த கணங்களை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறாய் என்பது உன்னை பொறுத்தது. தன்னுணர்வோடு இரு, நீ தன்னுணர்வோடு இறந்தால் அதை விட சிறப்பானது எதுவும் கிடையாது. என்றார்.
      இளைஞன், நான் இறக்க விரும்பவில்லை. நான் இங்கே ஒப்புதல் பெறவே வந்தேன். ஆனால் நீங்கள் என்னை வாழ்விலிருந்தே காலி செய்கிறீர்கள். என்றான்.
      அரசர், இதுதான் ஒருவர் ஒப்புதல் பெறும் வழி. நீ தூங்கு. என்ன நிகழ்கிறதோ அதுவே நிகழும். அதுதான் உனது குரு சொல்லிக் கொடுத்தது. இதைதான் இந்துக்கள் சொல்கிறார்கள் அவனின்றி அணுவும் அசையாது, ஒரு இலை கூட அவனது விருப்பமின்றி அசையாது, பின் எப்படி ஒரு வாள் உன்னை கொன்று விடும். அதுதான் அவன் விருப்பம் என்றால் வாளோ, வாளின்றியோ நீ கொல்லப்படுவாய்.
      அதனால் தூங்கு, நான் அப்படித்தான் தூங்கப் போகிறேன். உன்மேல் ஒரே ஒரு வாள்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. அங்கே என்மேல் ஆயிரக்கணக்கான வாட்கள் தொங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிரமே என் குறட்டை சத்தத்தை அடுத்த அறையில் இருந்து நீ கேட்கலாம். என்றார்.
      இளைஞனால் இரவு முழுவதும் தூங்க முடியவில்லை. இரவு முழுவதும் அடுத்த அறையில் அரசர் விடும் குறட்டை சத்தம் அவனுக்கு கேட்டது. காலையில் அரசர் அவனது அறைக்கு வந்தார். இளைஞன் விழிப்புடன் வாளை பார்த்தவாறே படுத்திருந்தான். இந்த முழு உலகத்திலும் வாளைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      அரசர், நான் குளிக்கப் போகிறேன். அவரது அரண்மனைக்கு பின் புனித கங்கை ஆறு ஓடிக் கொண்டிருந்தது. என்னுடன் வா, சிறிது தூரம் நடந்து விட்டு ஆற்றில் நீச்சல் அடித்து வரலாம். வா என அழைத்தார். அவர்கள் சென்றனர். அந்த துறவியிடம் கோவணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
      பிச்சை பாத்திரம், கோவணம், ஒரு குச்சி ஆகிய இவையே அந்த இளைஞன் தன்னுடன் கொண்டு வந்த பொருட்கள். காலையில் அவன் அந்த மூன்று பொருட்களை திரும்பவும் எடுத்துக் கொண்டான். ஏனெனில் அரசர் கொடுத்த மிக மதிப்பு வாய்ந்த ஆடைகளோடு, உடையோடு வெளியே வர அவனுக்கு மிகவும் தர்மசங்கடமாக இருந்தது.
      அவன், அரண்மனையில் இருக்கும்போது நான் அவற்றை அணிந்து கொள்கிறேன். ஆனால் வெளியே வரும்போது அவற்றை நான் போட்டிருப்பதை யாராவது பார்த்துவிட்டால் அது எனக்கும் உங்களுக்கும் சங்கடமாகி விடும். அதனால் நான் என் கோவணத்தை கட்டிக் கொள்கிறேன் என்றான்.
      அரசர், அது உன் பிரச்னை என்று கூறி விட்டார். ஆகவே அரசர் தனது ராஜ ஆடையிலும் இவன் தனது கோவணத்தோடும் சென்றனர். இருவரும் தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளிக்க நதியில் இறங்கினர். அவர்கள் குளித்துக் கொண்டிருக்கும்போது துறவி அரசரிடம் உங்களது அரண்மனையில் தீ பிடித்திருக்கிறது என்று கத்தினான்.
      அரசர், நீ பார்ப்பதற்க்கு முன்பே நான் பார்த்துவிட்டேன். ஆனால் கவலைப்பட ஏதுமில்லை. இப்போது என்ன செய்ய முடியும் அது தீப்பிடித்துவிட்டது. கடவுளின் விருப்பமின்றி எதுவும் நடவாது. அதனால் கவலைப்படாதே. நீ குளி. என்றார்.
      துறவி, என்ன சொல்கிறீர்கள், நான் என் துணிகளை காப்பாற்றிக் கொள்கிறேன். அது அரண்மனைக்கு அருகில் இருக்கிறது என்று கூறியவாறே ஓடிப் போய் தன் ஆடைகளை எடுத்துக் கொண்டான். அரண்மனை பற்றி எரிகிறது அரசரின் ஆடைகள் அங்கே இருந்தன. ஆனால் அவன் தனது ஆடைகளை பற்றி மட்டும் கவலைப்பட்டான். அரசர் குளித்துமுடித்தார். அரண்மனை எரிந்து முடிந்தது. அது அவரது ஆணையின்மேல் பற்ற வைக்கப்பட்டிருந்தது. துறவி, அதிர்ச்சியில் நடுக்கத்தில் இருந்தான். கோடிக்கணக்கான ரூபாய்கள்........ எத்தனை நஷ்டம் என்றான்.
      ஆனால் அரசர், கவலைப்படாதே அது உன்னுடையது அல்லவே உன்னுடைய பொருட்கள் பாதுகாப்பாக உள்ளதா என்றார்.
      அவன் எனது பொருட்கள் பாதுகாப்பாக இருக்கிறது என்றான்.
அரசர், அது உனக்கு போதும் – நீ உன் பொருட்களை பற்றி மட்டுமே கவலைப்பட வேண்டும். இவைதான் உன் செல்வம், உனது ராஜாங்கம். ஆனால் எனது முழு ராஜாங்கமும் பற்றி எரிந்து போனாலும் நான் கவலைப்பட மாட்டேன். அது பிரச்னையே அல்ல. ஏனெனில் நான் இங்கில்லாத போதும் உலகம் இருந்தது, அரசாங்கம் இருந்தது. ஒரு நாள் நான் இல்லாமல் போவேன், அப்போதும் உலகம் இங்கிருக்கும். இங்கே நான் ஒரு சாட்சியாளன், பார்வையாளன் மட்டுமே. இதில் நான் ஏன் ஒன்றி போக வேண்டும்
      ஆனால் நீ எதையும் துறக்கவில்லை என்பதை நீ நினைவில் கொள்ள வேண்டும். நீ இன்னும் பார்வையாளனாகவில்லை. உன்னால் எனது வீடு பற்றி எரிவதைக்கூட பார்க்கமுடியவில்லை. உனது துணி எரிந்துபோயிருந்தால் உனக்கு பயித்தியம் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய இழப்பை பார்த்த்திலேயே உனக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. ஆனால் அதற்க்கும் உனக்கும் என்ன சம்பந்தம். நான் குடித்ததை பார்த்ததிலேயே நீ அதிர்ச்சியடைந்துவிட்டாய், ஆனால் நான் குடிக்கும்போதுகூட நான் ஒரு சாட்சியாளன்தான். என்னைச் சுற்றி அழகான பெண்கள் இருந்ததை பார்த்த போது அதிர்ச்சியடைந்து விட்டாய். ஆனால் அப்போதும் நான் பார்வையாளன்தான். ஆனால் நீ சாட்சியாளனாக இல்லை. இந்த இரண்டு நாட்களில் விழித்துக் கொள். காலம் அதிகமில்லை. மிகவும் குறைவாகவே உள்ளது. சாட்சியாளனாக இரு. நான் உனக்கு சான்றிதழ் கொடுப்பதற்கு முன் நீ தேர்வடையவேண்டும். நீ ஒரு பார்வையாளன் என்பதை நீ நிரூபிக்க வேண்டும்.
      அவன் நான் எப்படி நிரூபிப்பது என்று கேட்டான்.
      அரசர், இன்று எல்லாவற்றையும் முயற்சி செய். அது எதுவாக இருந்தாலும் அது நீ கவனிப்பதற்கு உதவி செய்வதாக மாற வேண்டும். வெறுமனே கவனி, தப்பிக்க முயற்சி செய்யாதே. அமுக்காதே, சண்டையிடாதே. தவிர்க்காதே. கவனி, விஷயங்கள் நிகழட்டும். என்றார்.
      மூன்றாவது நாளில் இறுதி பரீட்சை ஒரு அழகிய நடனம். இந்த துறவியின் கையில் எண்ணெய் நிரம்பிய ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. ஒரு சிறிதளவு அசைந்தால்கூட எண்ணெய் சிந்திவிடும். நடனமாதர்கள் – அனைவரும் நிர்வாணமாக - சுற்றிலும் வட்டமாக நடனமாடுவர். அரசர் நடுவில் அமர்ந்திருப்பார். அந்த இளைஞன் அந்த அரிய வகை எண்ணெய் நிரம்பிய கோப்பையை கையில் வைத்துக் கொண்டு சுற்றி வர வேண்டும். ஒரு சிறிதளவு எண்ணெய் சிந்தினாலும் போச்சு, நீ தேர்வடையவில்லை. என்று கூறப்பட்டிருந்தது.
      அவ்வளவு அழகான மாதர்கள் நடனமாடும்போது அக்கம் பக்கம் திரும்பி என்ன நடக்கிறதென்று பார்க்கும் ஆசை யாருக்குத்தான் வராது தூண்டுதல் இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த கோப்பையிலிருந்து ஒரு சொட்டு எண்ணெய்..... ஒரே ஒரு கணம் கவனமில்லாமை...... பெண்களை அவன் சுற்றி வந்தான். அவர்களை அவன் கடந்து வந்தான். அவன் சுற்றி வர வர, அவனுள் சாட்சிபாவம் மெதுமெதுவே படிந்தது. அவன் நடனத்தை மறந்தான், இக்கணம், எண்ணெய், கவனம் மட்டுமே இருந்தது.
      கவனித்தல் ஒரு சிறிய விஷயம்.ஆனால் அதில் ஏதும் ஆணவத்தை பூர்த்தி செய்யக் கூடியதில்லை. தியானமும் அப்படித்தான்.
      பல்வேறு பெயர்கள் – கவனித்தல், சாட்சி, தியானம், விழிப்போடு இருத்தல் – ஒரே விஷயத்துக்கு பலப் பெயர்கள். இவை யாவும் நீ ஏதும் செய்யாத போதுதான் நிகழும். இப்போது இதுதான் கேள்வி செய்யாமல் இருப்பது என்பது என்ன
      நீ எப்படி என்று கேள்வி கேட்கும்போது நீ அதை தவற விட்டு விடுகிறாய் ஏனெனில் எப்படி என்றாலே செய்வதுதான்
      நீ - செய்யாமல் இருப்பதை அடைவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று கேட்கிறாய்.
      செய்யாமல் இருப்பது என்பதை நீ வெறுமனே புரிந்து கொள்ள வேண்டும்.
மடத்தனமான கேள்வியை கேட்காதே. செயல் மூலம் உனது ஆணவம் நிறைவடைவதை புரிந்துகொள்ள முயற்சி செய். நீ எதை செய்தாலும் – பிரார்த்தனை, பட்டினி, கோவிலுக்கு போவது, துறவியாவது – நீ எதை செய்தாலும் அது உன் ஆணவத்திற்கு தீனிதான். உனது ஆணவம் உனக்கும், பிரபஞசத்திற்க்கும், உனக்கும், உண்மைக்கும் இடையே தடை.
      எதையும் செய்யாதே.
      நீ இந்த மடத்தனம் எதையும் செய்யாமல் ஏன் வாழக்கூடாது
      பசிக்கும்போது சாப்பிடு.
      தாகம் எடுக்கும்போது தண்ணீர் குடி
      தூக்கம் வரும்போது தூங்கு
      விழிப்பு வரும்போது எழுந்து கொள்.
      மற்ற எல்லாவற்றையும் மறந்துவிடு.
      தேவையான சிறிய விஷயங்களை செய்.
      சாதாரண வாழ்க்கையை வாழ்.
      நீ கண்டுபிடிப்பாய். அது தான் தியானம், உன்னை புத்தனாக்கும், இயேசுவக்கும், கிருஷ்ணனாக்கும். வாழ்க வளமுடன்!

Friday, September 23, 2011

நம்மை பற்றிய நமது கருத்து ஆனந்தம்


      ஓ-நமி – மாபெரும் அலைகள் என்று பொருள் – என்ற பெயர்கொண்ட ஒரு குத்துச் சண்டை வீரன் ஜப்பானில் இருந்தான். அவன் மிகவும் வலிமையானவன். மேலும் குத்துச்சண்டையில் மிகவும் ஆற்றல் படைத்தவனாக இருந்தான். தனிப்பட்ட முறையில், பள்ளியில் பயிலுகையில் அவன் தனது ஆசிரியரைக் கூட வீழ்த்திவிடுவான். ஆனால் பொதுமேடையில் அவனைவிடச் சிறியவர்கள் கூட அவனை தூக்கி வீசி விடுவர்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது.
      ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள். உன்னை அந்த கடலின் அலை என நினைத்துக்கொள். நீ ஒரு குத்துச்சண்டை வீரன் என்பதை மறந்துவிட்டு அந்த கடலலை என எண்ணிக்கொள். அது எப்படி எது எதிரே வந்தாலும் அதை மூழ்கடிக்கிறதோ அது போல உன்னையும் நீ பெரும் அலை என எண்ணிக்கொள். என்றார்.
      ஓ-நமி அங்கே தங்கினான். அவன் அந்த அலையை நினைத்துப்பார்க்க முயன்றான். அவனுக்கு பல்வேறு விஷயங்கள் நினைவுக்கு வந்ததே தவிர அலையை மட்டும் அவனால் நினைக்க முடியவில்லை. பிறகு மெதுமெதுவாக அவன் அந்த அலைகளை மட்டுமே நினைத்தான். இரவு ஏறஏற அலைகள் மேலும் அளவில் பெரிதாகிக் கொண்டே வந்தன. முதலில் புத்தர் சிலைக்கு முன்னே இருந்த பாத்திரத்திலிருந்து பூக்களை கொண்டு சென்றது. பின் அந்த பாத்திரத்தையே கொண்டு சென்றது. பின் புத்தர் சிலையையே கொண்டு சென்றது. அதிகாலையில் அந்த குருகுலம் முழுமையும் நீரால் சூழப்பட்டு இருந்தது. ஓ-நமி முகத்தில் புன்னகையுடன் அங்கே அமர்ந்திருந்தான்.
      அன்று அவன் பொதுமேடையில் குத்துச்சண்டைக்கு சென்றான், வென்றான். அன்றிலிருந்து ஜப்பானில் யாராலும் அவனை வெல்ல முடிந்ததில்லை.
      இது நம்மை பற்றிய நமது கருத்தை எப்படி இழப்பது, எப்படி விடுவது, எப்படி அதிலிருந்து வெளியே வருவது என்பதைப் பற்றிய கதை.
      ஒவ்வொருவரும் அளவற்ற ஆற்றல் படைத்தவர்கள்தாம். உனக்கு உன் பலம் தெரியாது. அது வேறு விஷயம். ஒவ்வொருவரும் பலம் பொருந்தியவர்கள்தாம். அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனெனில் எல்லோரும் கடவுளிலிருந்து வந்தவர்கள்தான். ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிறந்தவர்கள்தான். நீ பார்ப்பதற்கு எவ்வளவு சிறியவனாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நீ சிறியவனல்ல. இருக்கவும் முடியாது. இயல்புப்படி அது அப்படி இருக்கமுடியாது. இப்போது பௌதீக விஞ்ஞானம் சின்னஞ்சிறு அணுவிற்குள் அதீத அளவு சக்தி இருக்கிறது என்று கூறுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய இரு நகரங்களும் அணுசக்தியால்தான் அழிக்கப்பட்டன. அணு மிகவும் சிறியது. யாராலும் அதைப்பார்க்க முடியாது. அது மிகச்சிறிய புள்ளி போன்றது. மிகவும் கடுகளவானது. இன்றைய விஞ்ஞானத்தால் கூட மிகப்பெரிதாக்கிக் காட்டும் கருவிகளின் உதவியால்தான் அதைப் பார்க்க முடிகிறது. ஆனால் அந்த அளவு சிறிய அணுவிற்கே அளவற்ற ஆற்றல் இருக்குமானால் மனிதனைப்பற்றி என்ன சொல்ல. மனிதனுக்குள்ளே உள்ள தன்ணுணர்வுச் சுடரைப்பற்றி என்ன சொல்ல. என்றாவது ஒருநாள் அந்தச்சுடர் மிகப் பெரிதாகி வெடிக்கும். அப்போது அளவற்ற ஆற்றலும் ஒளியும் வெளிப்பட்டே தீரும். அதுதான் ஒரு புத்தருக்கும், ஒரு ஜீஸஸூக்கும் நிகழ்ந்தது.
      இந்த சூத்திரத்தை நினைவில் கொள். நீ உன்னை நினைவில் கொள்ளும்போது கடவுளை மறந்து விடுகிறாய். நீ உன்னை மறந்துவிடும்போது நீ கடவுளை நினைவில் கொள்கிறாய். உன்னால் இரண்டையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. அலை தன்னை அலை என்று நினைவில் வைத்துக்கொள்ளும்போது, அது தான் கடல் என்பதை மறந்து விடுகிறது. அலை தன்னைக் கடலாக உணரும்போது, அது தான் அலை என்பதை எப்படி நினைவில்கொள்ள முடியும். ஏதாவது ஒன்றுதான் சாத்தியம். அலை தன்னை அலை அல்லது கடல் என ஏதாவது ஒன்றைத்தான் நினைவில் கொள்ள முடியும். அது ஒரு கண்கட்டி வித்தை. உன்னால் இரண்டையும் நினைவு கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை.
      தனிப்பட்ட முறையில் அவனால் தனது அகங்காரத்தை, தன்னை முழுமையாக மறந்துவிட முடியும். அப்போது அவன் மிகவும் ஆற்றல் உள்ளவனாய் இருக்கிறான். ஆனால் பொது மேடையில் அவன் தன்னை மிகவும் நினைவில் வைத்துக் கொள்கிறான். அப்போது அவன் பலவீனமடைந்து விடுகிறான். நான் – என்பதை நினைவில் வைத்துக் கொள்வது பலவீனம். நான் – என்று நினைவில் கொள்ளாமல் இருப்பது பலம்.
      அவனது இந்த பிரச்சனைக்காக அவன் ஒரு ஜென் குருவிடம் சென்றான். அவரது குருகுலம் கடற்கரையோரம் இருந்தது. ஜென் குரு அவனிடம், மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      ஒரு குரு என்பவர் ஒவ்வொருவருக்கும் ஏற்ற வழிமுறையை உருவாக்குபவர். ஒரு குரு என்பவர் குறிப்பிட்ட வழிமுறை ஏதும் இல்லாதவர். அவர் இந்த ஓ-நமி – மாபெரும் அலைகள் – என்ற மனிதனைப் பார்த்தார். அவனது பெயரிலிருந்தே அவனுக்கு ஒரு வழிமுறையை உருவாக்கிக் கொடுத்தார்.
      மாபெரும் அலைகள் என்பது உனது பெயர். ஆகவே இந்த குருகுலத்தில் இன்றிரவு தங்கி கடலின் அலையோசையை கேள்.....................
      கடவுளின் கோவிலுக்குள் நுழைவதற்கான அடிப்படை ரகசியங்களில் ஒன்று கவனிப்பது.கவனிப்பது என்றால் ஒன்றுவது. கவனிப்பது என்றால் உன்னை முற்றிலுமாக மறந்து விடுவது. அப்போது மட்டுமே உன்னால் கவனிக்க முடியும். யாரையாவது நீ கவனித்தால் அப்போது உன்னை நீ மறந்து விடுவாய். உன்னை உன்னால் மறக்கமுடியாவிட்டால் நீ கவனிக்கமாட்டாய். நீ உன்னைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தால் நீ கவனிப்பது போல பாசாங்குதான் செய்து கொண்டிருப்பாய். கவனிக்க மாட்டாய். நீ உனது தலையை ஆட்டிக் கொண்டிருப்பாய். ஆம் என்றோ இல்லை என்றோ சிறிது நேரத்திற்கொருமுறை சொல்லிக் கொண்டிருப்பாய். ஆனால் நீ கவனிக்கமாட்டாய்.
      கவனிக்கும்போது நீ வெறும் வழி போல, கருவறை போல, பெற்றுக் கொள்ளுதல் போல மாறி விடுகிறாய். ஒரு பெண்மை போலாகிவிடுகிறாய். மேலும் சென்றடைய ஒருவர் பெண்மைதன்மை அடைந்தாக வேண்டும். போராடிக்கொண்டு, சண்டையிட்டுக் கொண்டு நீ கடவுளை சென்றடைய முடியாது. நீ கடவுளை சென்றடைய வேண்டுமானால்.......அல்லது இப்படி சொன்னால் சரியாக இருக்கும். நீ பெற்றுக் கொள்பவனாக, பெண்மை தன்மையுடன் இருக்கும்போதுதான் கடவுள் உன்னை வந்தடைவார். நீ‍இன் என்பது போல, ஒரு பெறுபவனாக மாறும்போது கதவு திறக்கிறது. நீ காத்திருக்கிறாய்.
      பொறுமையாளனாக மாற கவனிப்பது உதவும். புத்தர் கவனிப்பதை மிகவும் வலியுறித்தினார். மகாவீரர் கவனிப்பதை மிகவும் வலியுறுத்தினார். கிருஷ்ணமூர்த்தி சரியான கவனித்தல் என்பதை திரும்ப திரும்ப கூறினார். காதுதள் அதன் சின்னம் போல உள்ளதை நீ கவனித்திருக்கிறாயா. உன்னுடைய காதுகள் வெறுமனே ஓட்டைகள் மட்டுமே. வழிதான். வேறெதுவும் இல்லை. உனது காதுகள் உனது கண்களை விட அதிகம் பெண்மையானவை. கண்கள் அதிக ஆண்மையானவை. காதுகள் – இன் – பாகம். கண்கள் – யாங் – பாகம். யாரையாவது பார்க்கும்போது நீ ஆக்கிரமிக்கிறாய். கேட்கும்போது நீ பெறுபவனாகிறாய்.
      அதனால்தான் யாரையாவது உற்றுப்பார்ப்பது நாகரீகமற்றதாக, வன்முறையானதாக மாறுகிறது. அதற்கு அளவு உள்ளது. மனோவியலார் மூன்று நிமிடங்கள் என்று கூறுகின்றனர். மூன்று நிமிடங்கள் ஒருவரை உற்று பார்த்தால் சரி, அதை தாங்கி கொள்ள முடியும். அதற்கு மேல் என்றால் நீ பார்க்கவில்லை. நீ உறுத்துகிறாய். அவரை நீ தண்டிக்கிறாய். நீ அத்துமீறுகிறாய்.
      ஆனால் கவனிப்பதற்கு எல்லை இல்லை. ஏனெனில் காதுகள் அத்து மீறுவதில்லை. அவை எங்கே உள்ளனவோ அங்கேயே இருக்கின்றன. கணகளுக்கு ஓய்வு தேவைப்படுகிறது. இரவில் கவனித்திருக்கிறாயா, கண்களுக்கு ஓய்வு தேவை. காதுகளுக்கு ஓய்வு தேவையில்லை. அவை 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன – வருடம் பூராவும். கண்கள் சில நிமிடங்கள் கூட திறந்திருப்பதில்லை. தொடர்ந்து சிமிட்டிக் கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து களைப்படைந்து கொண்டே இருக்கின்றன. ஆக்கிரமித்தல் களைப்படைய செய்யும். ஏனெனில் ஆக்கிரமித்தல் உனது சக்தியை வெளியே எடுக்கிறது. இதனால் கண்கள் ஓய்வெடுப்பதற்காக தொடர்ந்து சமிட்டிக் கொண்டே இருக்கின்றன. அது ஒரு தொடர் செயல். ஆனால் காதுகள் ஓய்வில்தான் இருக்கின்றன.
      அதனால்தான் பல மதங்களும் இசையை பிராத்தனைக்கு உபயோகிக்கின்றன. ஏனெனில் இசை உனது காதுகளை மேலும் துடிப்புள்ளதாக, மேலும் உணர்வுள்ளதாக ஆக்குகிறது. ஒருவர் காதுகளாக அதிக அளவிலும் கண்களாக குறைந்த அளவிலும் இருக்க வேண்டும்.
நீ உன்னுடைய அகங்காரத்தை விட்டுவிட்டால் எல்லா தோல்விகளையும் எல்லா விரக்திகளையும் எல்லா அவமானங்களையும் விட்டுவிட்டாய். அதை சுமந்து சென்றால் நீ தோல்வியில்தான் முட்டிக் கொள்ள வேண்டும். அந்த அகங்காரத்தை விட்டுவிடு. முடிவற்ற ஆற்றல் உன் மூலம் பெருகியோட ஆரம்பிக்கும். அந்த அகங்காரத்தை விடுவதன் மூலம் நீ நதியாகிறாய், நீ ஓட ஆரம்பிக்கிறாய், நீ கரைகிறாய், நீ பெருகியோடுகிறாய். – நீ உயிர் துடிப்புள்ளவனாகிறாய்.
      நீ உன் முயற்சிப்படி வாழ ஆரம்பத்தால் நீ மடத்தனம் செய்கிறாய். அது ஒரு மரத்தில் உள்ள இலை அதன் முயற்சிப்படி வாழ ஆரமபிப்பதை போன்றது. அது மட்டுமல்ல, அது மரத்துடன் சண்டையிடும், வேருடன் சண்டையிடும். இவை யாவும் அதற்கு கெடுதல் செய்வதாக நினைக்கும். நாம் ஒரு மிகப் பெரிய மரத்தில் உள்ள இலைகள்தான். அதை கடவுள் என்றோ, இயற்கை என்றோ, முழுமை என்றோ எப்படி வேண்டுமானாலும் அழை. ஆனால் நாம் அடிமுடியற்ற வாழ்வெனும் மரத்தில் இருக்கும் சிறிய இலைகள்தான். போராட வேண்டிய அவசியம் இல்லை.
      உயிர் துடிபுள்ளவனாகும் போது உன்னிடம் இருந்து அகங்காரம் மறைகிறது. அகங்காரம் மரையும் போது நீ கடவுள் தன்மை உள்ளவனாகிறாய். கடவுள் தன்மை வரும்போது அளவற்ற ஆற்றலும் நிதானமும் சரியாக சிந்திக்கும் திறனும் வரும். வெற்றிக்காக உழைக்க வேண்டாம். அது உன் செயலிலேயே ஒளிந்துள்ளது, தானாக் கிடைக்கும். அப்போது மகிழ்ச்சியாக உண‌ர்வாய். இந்த மாதிரி வெற்றியே உனக்கு முழுமை கொடுக்கும்.

Sunday, August 7, 2011

சாதாரணமான வாழ்க்கை ஆனந்தம்


      இரண்டு ஜென் மாஸ்டரின் சிஷ்யர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

      அகிரா என்ற சீடன் தனது மாஸ்டரின் அருமை பெருமைகளை எல்லாம் விளக்கினான்.

      "எங்கள் மாஸ்டர் மாயா ஜாலங்களின் மன்னன். ஆற்று நீரின் மேல் நடப்பார், காற்றிலே பறப்பார், தீயிலே குளிப்பார், புயலை எதிர்ப்பார். இப்படி பல அதிசயங்களை செய்வார். உங்கள் மாஸ்டர் என்ன செய்வார்?", என்று அகிரா, ஜிங்ஜுவிடம் கேட்டான்.

      ஜிங்ஜு "எனது மாஸ்டர் ஆற்று நீரில் குளிப்பார், காற்றை சுவாசிப்பார், தீயை பயன்படுத்தி சமைப்பார், புயலைக் கண்டால் மடத்தில் ஒளிந்து கொள்வார். நீ சொல்வது போல் எல்லாம் எதுவும் செய்ததில்லையே. எதற்கும் அவருக்கு என்ன மாயாஜாலம் தெரியும் என விசாரித்து விட்டு வருகிறேன்", என்றான்.

      அடுத்த நாள் அகிராவும், ஜிங்ஜுவும் சந்தித்து கொண்டனர். `எங்கள் மாஸ்டரிடம் உங்களுக்கு என்ன மாயாஜால அதிசயங்கள் செய்ய தெரியும்? என்று கேட்டான்.

      "அதிசயங்கள் எதுவும் நிகழ்த்தாமல் சாதாரணமாக இருப்பதுதான் எனது அதிசயம்" என்று மாஸ்டர் சொன்னார் என்றான் ஜிங்ஜு.

      சாதாரண மனிதனாகவே இரு. அதுவே உன்னை அசாதாரணமானவனாக மாற்றும்.

Wednesday, July 27, 2011

வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள்


      ஒரு ஜென் துறவியின் குடிலுக்குள் புகுந்துவிட்ட திருடனைச் சீடர்கள் பிடித்து இழுத்து வந்தனர். திருடுவதற்கு தங்கமோ, வெள்ளியோ, பணமோ எதுவும் கிடைக்காமல், ஏற்கெனவே அவன் வெறுப்பில் இருந்தான்.
      ''திருட வந்து வெறுங் கையுடன் போகாதே. இந்தா...'' என்று துறவி தன் அங்கியைக் கழற்றிக் கொடுத்தார். அவன் அதைப் பறித்துக்கொண்டு ஓடினான். தாங்கள் பிடித்து வந்தவனை துறவி தப்பிக்க விட்டுவிட்டாரே என்று சீடர்கள் வெகுண்டு பார்த்தனர்.
      துறவி வானத்தை அண்ணாந்து பார்த்தார். ''ஐயோ பாவம்! அந்த நிலவை மட்டும் என்னால் அவனுக்கு வழங்க முடிந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!'' என்றார்.
      வாழ்க்கையின் மகத்தான அற்புதங்கள் எப்போதுமே மனிதனுக்குக் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. ஆனால், அவற்றைவிட அவனுக்கு சிறு சிறு விஷயங்களிலேயே ஆர்வம் எழுகிறது.
      அடுத்தவரை, உலகத்தை, ஏன் பிரபஞ்சத்தையே உங்களில் ஒரு பகுதியாக உணர முடியும். மனிதனுக்கு மட்டும்தான் இந்த உணர்வு வரமாகக் கிடைத்திருக்கிறது. இதை விழிப்பு உணர்வுடன் அனுபவிக்கத் தவறிவிட்டு, களவாடுவதில் கவனம்வைக்கிறோம். மனிதர்களிடம்
இருந்து மட்டுமல்ல, இந்தப் பூமியில் இருந்தும் களவாடிக்கொண்டுதான் இருக்கிறோம்.
      யார் அதிகமாகக் களவாடுகிறாரோ, அவரை வெற்றிகொண்டவராக அறிவித்து மகிழ்கிறோம். பிரபஞ்சத்தையே உங்களுடையதாக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அதைக் கவனிக்காமல் தங்கம், வைரம் என்றெல்லாம் பெயர் வைத்து, சிறு கற்களைச் சேகரிப்பதிலும், சிறு உலோகங்களைக் கைப்பற்றுவதிலுமே உங்கள் கவனம் போகிறது. எல்லை அற்றதையே
உங்களுடையதாக்கிக்கொள்வதை விடுத்து, நிலப் பகுதியின் சிறு சதுரங்களைக் கையகப்படுத்திக்கொள்வதில் சந்தோஷப்படுகிறீர்கள்.
      இந்தப் பூமிக்கு வந்திருப்பது முழுமையாக வாழ்வதற்காக. வாழ்க்கையின் ஆழத்தையும் அர்த்தத்தையும் அனுபவித்து உணர்வதற்காக. இப்படி அற்பமான அம்சங்களில் ஆர்வத்தையும் கவனத்தையும் சிக்கவைத்துவிட்டு, அற்புதங்களையும் மகத்தான விஷயங்களையும் தவறவிடுகிறோம்.
      வாழ்க்கையை எந்த அளவு தீவிரத்துடன் நீங்கள் அணுகுகிறீர்கள் என்பதுதான் அதை மேன்மைமிக்கதாக, மகத்துவம்மிக்கதாக ஆக்க முடியும். இதைச் சீடர்களுக்கு அடையாளம் காட்டுவதுபோல் நிலவே இருக்க, சிறு பொருட்களில் திருடன் சந்தோஷப்பட்டதை ஜென் துறவி சுட்டிக்காட்டுகிறார்!

Sunday, July 3, 2011

ஆனந்தத்தின் ஊற்று


      எல்லா உறவுகளையுமே மனிதர்கள் பற்றுகளாகத் தான் பார்க்கிறார்கள். பற்று என்பது அறியாமையின் வெளிப்பாடு. இதற்கு அடிப்படைக்காரணம், உங்கள் உடலோடு <உங்களை நீங்கள் ஆழமாக அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதுதான். குறிப்பாக, இரண்டு மனிதர்களின் உடல் சார்ந்து ஓர் உறவு அமைகிறபோது, அந்தப்பற்று இன்னும் ஆழமாகிறது.
      ஆன்மிகம் உறவுகளுக்கோ, உடல் சார்ந்த இன்பங்களுக்கோ எதிரானதல்ல. ஆனால், இவையெல்லாம் பற்றினை ஆழப்படுத்தும் என்பது தான் விஷயம். ஒன்றை நீங்கள்புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பற்று இன்னொருவர் மீதல்ல. உங்கள் உடலின் மேல் உங்களுக்கு இருக்கும் ஆழமான பற்று உங்களை இன்னொருவர் மீது பற்று வைக்கச் செய்கிறது. உங்கள் உடல் மீது உங்களுக்கு பற்று இல்லாத பட்சத்தில் இன்னொருவர் மேல் உங்களால் பற்று வைக்க முடியாது. எனவே, மற்றவர்கள் மீதிருக்கும் பற்றை அகற்ற நீங்கள் போராட வேண்டியதில்லை. உங்கள் உடல்மீது உங்களுக்கு இருக்கும் பற்றை அகற்றினாலே போதும்.
      இளமைப்பருவத்தில் உடல்மீது உங்கள் பற்று ஆழமாக இருக்கிறது. வயதாக வயதாக அது மனதுக்கோ, உணர்வுக்கோ தாவுகிறது. ஏனெனில், வயது ஏறஏற உடல் மரணத்தை நோக்கிச் செல்கிறது. அப்போது தான், உடல் இன்பத்தை விட நேசம், அன்பு போன்ற உணர்வுகள் முக்கியம் என்று கருதுகிறீர்கள்.
      உணர்வுகளோடு உங்களைப் பிணைக்கத் தொடங்கும்போது, கடவுள் மீது கவனம் செலுத்தத் தொடங்குகிறீர்கள். ஏனென்றால், மனிதர்கள் உங்களை கைவிட்டு விட்டார்கள்.
      எப்படியாவது வாழவேண்டும் என்ற வேட்கை, உங்களுக்குள் இருக்கிறது. முதலில் ஒன்றைப் பற்றுகிறீர்கள். அது பலவீனம் அடைகிறபோது, இன்னொன்றைப் பற்றுகிறீர்கள். அதுவும் பலவீனமாகிற போது, எதைப் பற்றுவது என்று தெரியாத அச்சத்திலேயே மரணம் வந்து சேர்கிறது. அப்போது அச்சம் ஒன்றே மிச்சமாய் இருக்கிறது. அதுவரை, கடவுளின் பெயரை உச்சரித்து வந்தவர்கள், அச்சம் வரும் போது கடவுளையும் மறந்து விடுகிறார்கள்.
      வாழ்வில், வசதி குறைவுகளைத் தவிர்ப்பதற்கான வழிமுறையாகத் தான் பலரும் கடவுளை பயன்படுத்துகிறார்களே தவிர, ஆன்மிகத் தேடல் காரணமாக கடவுளை நாடுவதிலலை. சொர்க்கம் என்பது, சந்தோஷம் என்று சொல்லப்பட்டதால் அங்கு போக விரும்புகிறீர்கள். அது துன்பமயமாக இருக்கும் என்று சொல்லி இருந்தால் அந்த சொர்க்கத்திற்கு போகவே விரும்ப மாட்டீர்கள். எனவே, கடவுளைத் தேடுவதாகச் சொல்லிக் கொண்டு பலரும் மகிழ்ச்சியைத் தான் தேடுகிறார்கள்.
      ஒரு காலத்தில் 70 சதவீதம் பேர், 30 சதவீதம்பேர் துறவு வாழ்விலும் புகுந்தார்கள். எப்போதுமே, சமூகத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை பாலியல் தேடல் இல்லாமல் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சிலருக்கு தீவிரமான பாலியல் வேட்கை இருப்பது போலவே, சிலருக்கு அத்தகைய தேவைகள் இல்லாமல் போகின்றன. எனவே, உறவு வாழ்க்கையோ, துறவு வாழ்க்கையோ நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமேதவிர, சமூக நியதிகள் சார்ந்து முடிவெடுக்கக் கூடாது. உணர்வு ரீதியாக,யாரையாவது சார்ந்திரா விட்டால், உங்கள் வாழ்க்கை அர்த்தமற்றது என்கிற தவறான போதனை உங்கள் மனதிற்குள் திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே, நிர்ப்பந்தங் களால் அத்தகைய உறவுகளை பலரும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.
      திருமண வாழ்வை விரும்பி ஏற்றுக் கொண்டு காலம் முழுவதும், மோதலிலேயே சிலர் தங்கள் வாழ்வைக் கழிக்கிறார்கள். திருமணத்தில் ஏதோ தவறு என்று பொருளல்ல. மனமுதிர்ச்சி இல்லாமல் இருப்பது தான் இந்த மோதலுக்குக் காரணம். உங்கள் உடல், மனம், உணர்வுகள் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுகிற முறையில் தான் திருமணம் என்ற அமைப்பே உருவானது. மேற்கண்ட தேவைகள் இல்லை என்றால், திருமணத்தை நீங்கள் தவிர்த்து விடலாம். தங்களுக்கு திருமணம் தேவையா இல்லையா என்பதை பலரும் யோசிப்பதில்லை. ஆட்டு மந்தைகள் போல் நடந்து கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு மணமாகிறது, அதனால் நானும் மணம் செய்து கொள்கிறேன் என்கிறார்கள். மூன்று நாட்களுக்கு மேல், அவர்களால் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கமுடிவதில்லை.
      காதலர்களாக இருக்கின்ற காலகட்டங்களில், ஒருவருக்கொருவர் மிகுந்த நேசத்தோடு பழகுகிறார்கள். பெற்றோரையே எதிர்த்து கொண்டு திருமணம் செய்கிறார்கள். ஆனால், திருமணமாகி நான்கைந்து ஆண்டுகளுக்குள் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. ஒருகாலத்தில் அற்புதமான மனிதராகத் தெரிந்தவர், இப்போது மிகவும் மோசமான மனிதராகத் தெரிகிறார். எந்தச் செயல் செய்தாலும், அதற்குரிய பின்விளைவுகளையும் யோசிக்கின்ற மனிதராக இருந்தால் இத்தகைய இடர்ப்பாடுகள் ஏற்படாது.
      பலரும் மகிழ்ச்சியான மணவாழ்வு குறித்து கேட்பதுண்டு. உங்கள் உடல் உங்கள் முழுக்கட்டுப்பாட்டில் இருக்குமேயானால், வாழ்வின் 30 சதவீதம் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். உடலோடு மனமும் உங்கள் கட்டுப் பாட்டில் இருந்தால், உங்கள் வாழ்வு மற்றும் விதியின் 60 சதவீதத்தை நீங்களே நிர்ணயிக்க முடியும். உங்கள் சக்திநிலையும் கட்டுப்பாட்டில் இருந்தால் 100 சதவீதமும் உங்கள் கட்டுப்பாட்டில் வந்துவிடும். உங்கள் பிறப்பையும் இறப்பையும் கூட நீங்களே முடிவு செய்ய முடியும்.
      ஒரு முனிவர் இருந்தார். அவர் நதியில் நீராடியபோது, நீரில் மிதந்து வந்த தேளை எடுத்து கரையில் விட்டார் அப்போது அந்தத்தேள் அவரைக் கொட்டியது. அது மீண்டும் நீரில் விழுந்தது. திரும்பவும் எடுத்துப் போட்டார். அது கொட்டிக் கொண்டே இருந்தது." அதை விட்டு விட வேண்டியது தானே' என்று சீடர்கள் சொன்னார்கள். அதற்கு முனிவர், ""தேள் தன்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறது. நான் என்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறேன்'' . வெளிச்சூழல்களில் பாதிக்கப்படாத தன்மையில் இருப்பவர்களுக்குத் தான் இது சாத்தியம். எனவே, உங்கள் ஆனந்தம் அடுத்தவர் தருவதாக இருக்கக்கூடாது. வெளியே ஆனந்தத்தை தேடுவதை விட்டு, உங்களையே ஆனந்தத்தின் ஊற்றாக உருவாக்கிக் கொள்வீர்களேயானால், வாழ்வில் எவ்விதமான நிர்ப்பந்தங்களும் இருக்காது.

Monday, April 25, 2011

கடைசி தீட்சை: ஆனந்தம்


      கடைசி தீட்சை சீடனுக்கு அளிக்கப்படவுள்ளது. குரு, உன்னுடைய கடைசி தீட்சை மிகவும் மறைமுகமான ஒரு வழியிலேயே அளிக்கப்படும், என கூறினார். குரு அவனுடைய வழியில் வைத்த எல்லா கஷ்டங்களிலும் சீடன் தேறிவிட்டான், அவன் தன்னை நிரூபித்துவிட்டான். இப்போது கடைசி தீட்சை . . . மற்றும் அவன் கடைசி தீட்சையிலும் தேறிவிட்டால், அவன் ஞானமடைந்தவன் என அறிவிக்கப்படுவான் சீடன் குருவின் காலை தொட்டு, நான் தயாராக இருக்கிறேன். வெறுமனே எனக்கு கட்டளையிடுங்கள் மற்றும் எது செய்யப்படவேண்டுமோ அதை நான் செய்வேன், என கூறினான்.
      குரு ,நீ அரசரிடம் செல்லவேண்டும், மற்றும் அதிகாலையில் செல்லவேண்டும், அரசரை பார்க்கும் முதல் ஆளாய் நீ இருக்கவேண்டும். ஏனெனில் அரசருக்கு ஒரு பழக்கம் உள்ளது, முதலில் வருபவர்கள் யாராக இருந்தாலும், வருபவர் எதை கேட்டாலும், அரசர் கொடுத்துவிடுவார். ஆனால் நாடு செல்வ செழிப்போடு இருப்பதால் யாராவது செல்வது மிகவும் அபூர்வம். வருடங்கள் கடந்துவிட்டன, எதை கேட்டும் யாரும் போவதில்லை. ஆனால் தவறவிட்டுவிடாதே – மிகவும் சீக்கிரமாகவே அங்கு இரு. அரசர் காலையில் அவருடைய தோட்டத்திற்குள் நுழைவார், சூரியன் உதயமாகும்போது, அரசர் தோட்டத்திற்குள் நுழைவார் – அங்கு இரு. மற்றும் அவர் உன்னை உனக்கு என்ன வேண்டும் ? என்று கேட்பார் மற்றும் உனக்கு என்ன வேண்டுமோ, அதை அவரிடம் கேள், என கூறினார்.  
      இந்த கடைசி தீட்சை எந்த விதமானது என்பதை சீடனால் புரிந்துகொள்ள முடியவில்லை, ஆனால் கட்டளை பின்பற்றப்படவேண்டும், அவன் சென்றான். அவன் தவறவிடவில்லை, அதிகாலை மூன்று மணிக்கு அவன் அரசருக்காக காத்திருந்தான்.
      சூரியன் உதயமாகும் சமயத்தில், அரசர் தோட்டத்தில் நுழைந்தார் அந்த இளைஞன் அரசரை வணங்கினான். அரசர் ,நீ எதையாவது கேட்பதற்காக வந்திருக்கிறாயா ? நீ எதை வேண்டுமானாலும் கேட்கலாம்! நீ என்ன கேட்டாலும், நான் அதனை உனக்கு தருவேன், என கூறினார்.
      மிகப்பெரிய ஆசை இளைஞனை ஆட்கொண்டது. அவன் ஒரு ஏழை, மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவன், மற்றும் அரசர் எதுவாக இருந்தாலும் என்று கூறுகிறார் ? நிச்சயமாக தெரிந்துகொள்வதற்காக, அவன் திரும்பவும் கேட்டான்.
      எது வேண்டுமானாலும் என்று சொல்வதன் மூலம் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ? அரசர் சரியாக அதைத்தான் சொல்கிறேன் – எதுவாக இருந்தாலும் நீ என்னுடைய இராஜ்ஜியத்தை கேட்டால் கூட நான் அதனை உனக்கு தந்துவிடுவேன். நீ உனக்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அவ்வளவு கேட்கலாம். . . . ,என கூறினார்.
      ஏழை இளைஞனால் அதிகமாக யோசிக்கமுடியவில்லை. அவன் ஒருவேளை பத்தாயிரம் ரூபாய் போதுமானது என எண்ணினான். ஆனால் ஓர் ஆசை, ஏன் பத்தாயிரம் ? உனக்கு ஒருவேளை இப்படி ஒரு வாய்ப்பு திரும்பவும் கிடைக்காமலேயே போகலாம் –ஏன் ஒரு இலட்சம் கேட்கக்கூடாது?
      மற்றும் பிறகு மற்றொரு ஆசை, மற்றும் ஆசை மேலும் ஆசை. . . ஏனெனில் மனம் தொடர்ந்து இன்னும் இன்னும் என கேட்டுகொண்டேயிருக்கிறது. எனவே அவன் என்ன முடிவு செய்தாலும், மனம் இன்னும் அதிகமாக என்று கேட்டுகொண்டேயிருந்தது.
      அரசர் நீ கேட்பதற்கு இன்னும் தயாராகவில்லை போல தெரிகிறது, நான் எனது காலை நடைப்பயிற்சிக்கு செல்கிறேன், அந்த நேரத்தில் நீ முடிவு செய். மற்றும் நான் திரும்ப வரும்போது, நீ என்ன கேட்டாலும் அது உனக்கு தரப்படும், என கூறினார்.
      அந்த அரை மணிநேரம் சித்ரவதையாக இருந்தது, அவன் போய்கொண்டேயிருந்தான், நான் இதை கேட்கலாம் மற்றும் அதையும் கேட்கலாம், ஒரு தங்க ரதம், மற்றும் பல கோடி ரூபாய் பணம், மற்றும் மிக அதிக அளவிலான நிலம் – நான் எனக்கே உரிய ஒரு சிறிய இராஜ்ஜியத்தை உருவாக்குவேன்.
      ஆசைகள் மற்றும் கனவுகள். . . மற்றும் அரசர் வந்தார். அந்த அரை மணி நேரம் மிகவும் வேகமாக போய்விட்டது. அரசர் அங்கு நின்றுகொண்டிருந்தார் மற்றும் அரசர் , இளைஞனே நீ இன்னும் முடிவு செய்யவில்லையா ? என கேட்டார்.
      பிறகு திடீரென இளைஞன் , நான் எதை கேட்டாலும் அது அரசர் வைத்திருப்பதை விட குறைவாகவே இருக்கும், எனவே ஏன் எல்லாவற்றையும் கேட்ககூடாது ? எண்ணிக்கைக்கு முடிவு கட்டிவிடலாம் என எண்ணினான் !
      எனவே அவன் ,ஐயா, நீங்கள் தர விரும்பினால், நான் எல்லாவற்றையும் உங்களிடம் இருப்பது அனைத்தையும் கேட்கிறேன். உங்களுடைய முழு இராஜ்ஜியம், உங்களுடைய அனைத்து செல்வங்களும், உங்களுடைய மாளிகைகள் - - அனைத்தும் வேண்டும். நீங்கள் வெறுமனே அரண்மனையை விட்டு வெளியேறிவிடுங்கள் ! மற்றும் நீங்கள் திரும்பவும் அரண்மனைக்குள் செல்லக்கூடாது. நீங்கள் ஏதையும் எடுத்துகொள்ளக் கூடாது. நீங்கள் வெறுமனே வெளியேறிவிடுங்கள் - - இராஜ்ஜியத்தைப்பற்றி எல்லாவற்றையும் மறந்துவிடுங்கள். நான் உங்களுக்கு நீங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே அனுமதிக்கமுடியும்.
      அதைக்கூட அவன் எதிர்ப்போடுதான் செய்தான், அதுகூட அவனுக்கு குறைவதாக தோன்றியது.
      அரசர் மண்டியிட்டு, கடவுளிடம் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார், அவருடைய கண்களில் ஆனந்த கண்ணீர் உருண்டோடியது, பரவச கண்ணீர் ! மற்றும் அவர் கடவுளிடம் நான் இப்படிப்பட்ட ஒரு மனிதனுக்காகத்தான் முப்பது வருடங்களாக‌ காத்துகொண்டிருந்தேன் ! ஆனால் முடிவில் என்னுடைய பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், இப்போது அவன் வந்துவிட்டான், நான் இந்த எல்லா முட்டாள் தனங்களில் இருந்தும் விடுபட்டுவிட்டேன். நன்றி நீங்கள் என் பிரார்த்தனைக்கு செவி சாய்த்துவிட்டீர்கள், நான் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருந்தது இருந்தாலும், நீங்கள் எனது பிரார்த்தனைக்கு செவிசாய்த்துவிட்டீர்கள், நான் நன்றியால் நிறைந்துள்ளேன் என நன்றி கூறிக்கொண்டிருந்தார்.
      அரசர் இந்த விஷயங்களை கடவுளிடம் கூறிக்கொண்டிருக்கும்பொழுது இளைஞன் அங்கு நின்றுகொண்டிருந்தவன் என்ன விஷயம் ? இராஜ்ஜியத்தை துறப்பது குறித்து இந்த மனிதன் அதிக மகிழ்ச்சியை உணர்கிறான் என்றால், நான் எதற்கு இதற்குள்  நுழைகிறேன் ? இந்த மனிதன் சொல்வதைப்போல் 30 வருடங்களாக என்னுடைய முழு இராஜ்ஜியத்தை ஏற்றுகொள்ளும் ஒருவனை அனுப்பு, என்னுடைய முழு இராஜ்ஜியத்தையும் கேட்கும் ஒருவனை அனுப்பு என இந்த மனிதன் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான் என்றால், பிறகு இவை எதுவும், எந்த மதிப்பும் உடையது அல்ல. நான் தேவையற்ற பிரச்சனைக்குள் நுழைகிறேன் என யோசிக்க தொடங்கினான், யோசித்துக்கொண்டே இருக்கிறான்.
      இளைஞனும் மண்டியிட்டான், அரசரின் கால்களை தொட்டு சார் நான் ஒரு இளைஞன் . . ஓர் இளைய முட்டாள். தயவுசெய்து மன்னித்துவிடுங்கள். எனக்கு எதுவும் வேண்டாம். கடவுளிடம் உங்களுடைய பிரார்த்தனை, கடவுளிடம் உங்களுடைய நன்றியுணர்வு என்னுடைய முழு மனதையும் திறந்துவிட்டது. நான் காட்டிற்கு என்னுடைய குருவிடம் திரும்பி செல்கிறேன், என கூறினான்.
      அரசர் அவனிடம் சம்மதிக்க வைக்க முயன்றார். போகாதே, வெறுமனே பார். அரண்மனைக்குள் வா ! நான் என்னுடைய அரண்மனை, என்னுடைய இராஜ்ஜியம், என்னுடைய செல்வங்கள் மட்டுமல்ல, அதோடு என்னுடைய அழகான பெண்ணையும் உனக்கு தருகிறேன், வந்து வெறுமனே பார் ! என்றார்.
      ஆனால் இளைஞன் நான் இங்கு ஒரு நொடிகூட இருக்கமுடியாது - - ஏனெனில் மனம் என்னை ஏமாற்றிவிடலாம். ஒரு உள்ளார்ந்த புரிதல் நிகழ்ந்துவிட்டது, மற்றும் நீங்கள் கடவுளிடம் நன்றியுணர்வு கொண்டதைபோல நான் உங்களிடம் நன்றியுணர்வோடு இருக்கிறேன். நான் தெளிந்துவிட்டேன் ! என கூறினான்.
      மற்றும் இளைஞன் தன்னுடைய குருவிடம் சென்று நடந்த முழு கதையையும் சொன்னபோது, குரு உன்னுடைய கடைசி தீட்சை முடிந்துவிட்டது. இப்போது எதுவும் எப்போதும் உன்னை ஒரு அடிமையாக்காது. இப்போது நீ கவனமாக, உணர்வோடு, சுதந்திரமானவனாக‌ இருக்கிறாய், நீ தேறிவிட்டாய் - - நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் இங்கிருந்து கவனித்துகொண்டிருந்தேன், நீ முழு இராஜ்ஜியத்தையும் கேட்டபோது, என்னுடைய இதயம் அழுதது. நான் ,எனவே இந்த முட்டாளிடம் 15 வருட உழைத்தது, எல்லாம் முடிந்தது என நினைத்துகொண்டிருந்தேன். ஆனால் நீ எடுத்த முடிவால் நான் அடைந்த மகிழ்ச்சியை நீ கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது, என கூறினார். நீ திரும்பவும் வந்துவிட்டாய். என குரு கூறினார்.
      கவனி, வெறுமனே கவனி. . . . மக்களிடம் பணம் உள்ளது, மக்களிடம் மாளிகைகள் உள்ளன, மக்களிடம் நீ ஆசைப்படும் அனைத்தும் உள்ளன - - வெறுமனே கவனி, வெறுமனே பார். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா ? அவர்கள் நிறைவாக இருக்கிறார்களா ? அவர்கள் உன்னைவிட மகிழ்ச்சியற்று இருக்கலாம் மற்றும் உன்னைவிட அதிகமாக நிறைவற்று உணரலாம் - - பிறகு அவர்களை பின்தொடராதே. அவர்கள் குருடர்கள் ! அவர்கள் மற்ற குருட்டு மக்களை பின்தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களை பின் தொடராதே................ பிந்தொடர்ந்தால் ஆனந்தத்தை இழப்பாய்...... ஆனந்தமே குறிக்கோள்...... ஆன்ந்தமே வாழ்க்கை...... ஆனந்தமே நிறைவு........ஆனந்தமே ஞானம்....

Tuesday, March 29, 2011

பற்று வாழ்வின் வலை ஆனந்தம்


      எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார். அப்போது அவர் தனது தலைமை சீடரை அருகில் கூப்பிட்டு அவரது காதில் மெதுவாக “ஒரு விஷயத்தை நன்றாக நினைவில் கொள், ஒரு போதும் பூனையை வீட்டிற்குள் அனுமதிக்காதே.” என்று சொல்லி விட்டு இறந்து விட்டார்.
      “இது என்ன? எதற்காக அவர் என்னை கூப்பிட்டு வீட்டிற்க்குள் பூனையை அனுமதிக்காதே” என்றார் என்று புரியவில்லை அந்த தலைமை சீடருக்கு. அவர் வயது முதிர்ந்த கிழவர்களிடம் கேட்டுப்பார்த்தார். இதில் ஏதோ ஒரு செய்தி இருக்க வேண்டும் என அவர் நினைத்தார். இது ஏதோ ஒரு குறியீடாக இருக்கலாம், இல்லாவிடில் அவர் இதை ஏன் சொல்ல வேண்டும் இதற்கு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவர் இறந்து போய் விட்டார். ஏன் நீங்கள் பூனைகளுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்று நான் கேட்டிருப்பேன். உங்களது வாழ்க்கை முழுவதும்.... உங்களது ஒழுக்கம் வழிமுறை நெறிமுறை விளக்கம் வரையறை அனைத்தும் இதற்குத்தானா? - பூனையை வீட்டினுள் அனுமதிக்காதே.
      ஒரு வயதான மனிதர் கூறினார், “எனக்கு அது என்ன என்று தெரியும். இது அவரது குருவால் அவருக்கு கொடுக்கப்பட்ட செய்தி. ஏனெனில் அவர் ஒரு பூனையால் அவதிக்குள்ளானார். அந்த குரு கிராமத்துக்கு வெளியே ஒரு குடிசையில் வசித்து வந்தார். அவரிடம் இரண்டே இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்தன”.
      ஒரு துறவிக்கு அது மட்டுமே உடை. உங்களுக்கு அது உள்ளாடை ஆனால் அவருக்கு அது மட்டுமே ஆடை.
      அவரிடம் இரண்டு கோவணங்கள் மட்டுமே இருந்ததில் பிரச்னை என்னவென்றால் அங்கிருந்த எலிகள் அவருடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. அவர் கிராமத்திலுள்ளவர்களிடம் “இந்த எலிகள் மிகவும் தந்திரமானவை. அவை என்னுடைய கோவணத்தை கடித்து விடுகின்றன. என்ன செய்வது?” என்று கேட்டார்.
      ஒருவர்,“அது மிகவும் சுலபம். நாங்கள் கிராமத்தில் பூனையை வைத்துக் கொள்வோம். நீங்களும் ஒரு பூனையை வைத்துக் கொள்ளுங்கள். நான் ஒரு பூனையை பிடித்துவந்து தருகிறேன்.” என்றார்.
      அந்த குரு,“சரி, இது ஒரு எளிய வழிதான்.” என்று ஒத்துக் கொண்டார்.
      பூனை வந்தது. அது அதன் வேலையை மிகச் சரியாக செய்தது. எல்லா எலிகளையும் தின்று முடித்து விட்டது. இப்போது பிரச்னை துவங்கி விட்டது. எலிகள் தீர்ந்துவிட்டன. பூனைக்கு பசி வந்துவிட்டது. அது எனக்கு பால் வேண்டும் எனக் கேட்டது. அது எப்போதும் துறவி எதிரே வந்து பசியோடு உட்கார்ந்து கொண்டிருந்தது. பூனைகள் பசியோடிருக்கும்போது பார்த்தால் மிகவும் பாவமாக தோன்றும். அது அதன் வேலையை முடித்து விட்டது. ‘நான் உனக்கு என்னாலான எல்லா உதவிகளையும் செய்து விட்டேன், எல்லா எலிகளையும் தின்று விட்டேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது’ என்று சொல்லாமல் சொல்லியது.
      அந்த குரு திரும்பவும் வந்து,“இப்போது என்ன செய்வது அந்த பூனை என் முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டு பசியோடு என்னை பார்க்கிறது. எனக்கு உணவு கொடு இல்லைவிடில் நான் போகிறேன். நான் போய் விட்டால் எலிகள் திரும்பவும் வந்து விடும். என்பது போல பார்க்கிறது. அதை அது சொல்லவில்லை, ஆனால் நான் அதை அதன் கண்களில் பார்க்கிறேன். அதற்கு பால் கொடுப்பதற்கு எனக்கு பால் வேண்டும். “ என்று கேட்டார்.
      அந்த மனிதன், “ஒவ்வொரு நாளும் நீங்கள் பாலுக்கு வர வேண்டியிருக்கும். என்னிடம் பல பசுக்கள் உள்ளன. அதில் ஒன்றை கொடுக்கிறேன். அதை வைத்துக் கொள்ளுங்கள்.” என்றான்.
      அவர் பசுவை எடுத்துக் கொண்டு சென்றார். ஆனால் அதனால் பிரச்னைகள்தான் அதிகமாயின. இப்போது பசுவுக்கு புல் தேவை பட்டது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்துக்குச் சென்றார்.
      மக்கள், “நீ ஒரு கிறுக்கன், பிரச்னை பிரச்னை. நீங்கள் ஏன் உங்கள் குடிசையை சுற்றி உள்ள இடத்தில் புல் வளர்த்துக் கொள்ளக் கூடாது?. அங்கே ஏகப்பட்ட இடம் சும்மா தரிசாக கிடக்கிறது. நாங்கள் விதை தருகிறோம். இந்த விதைகளை வைத்து எதையாவது விதைத்து வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் உதவும். நீங்களும் சாப்பிட்டு பசுவுக்கும் எதையாவது கொடுங்கள்.” என்றனர்.
      அதனால் அந்த குரு, விதை விதைத்து வளர்க்க ஆரம்பித்தார். ஆனால் திரும்பவும் பிரச்னை வந்தது. இப்போது அந்த பயிரை அறுவடை செய்ய வேண்டும். ஆனால் அவரோ ஒரு துறவி, அவர் இந்த வேலைகளை செய்ய கூடாது. ஆனால் ஒரு விஷயம் மற்றொரு விஷயத்திற்கு கொண்டு செல்கிறது. அதனால் அவர் திரும்பவும் கிராமத்திற்கு சென்றார்.
      “பயிர் அறுவடைக்கு தயாராகி விட்டது. ஆனால் அதை செய்ய என்னிடம் கருவிகள் எதுவும் கிடையாது. அதனால் எனக்கு உதவி வேண்டும்.” என்று கேட்டார்.
      மக்கள்,“இங்கே பாருங்கள் உங்களோடு மிகவும் தொந்தரவாகி விட்டது. உங்களால் எந்த பயனும் இல்லை. எதற்கும் உங்களால் தீர்வு காண முடியாது. நாங்கள் தான் எதற்கும் தீர்வு காண வேண்டும். இது மிகவும் எளிது. இங்கே ஒரு விதவை பெண் இருக்கிறாள். அவள் உங்களை, உங்கள் பசுவை, உங்கள் பயிரை, உங்கள் உணவை, எல்லாவற்றையும் – எல்லாவற்றையும் என்றால் பூனை. எலி ...... அவள் மிகவும் அனுபவம் வாய்ந்த பெண்.”
      ஆனால்! என்ற துறவி நான் ஒரு துறவி. என்றார்.
       அவர்கள், இந்த துறவு எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். என்ன வகையான துறவி நீங்கள்.! உங்களிடம் பசு, பூனை, நிலம். பயிர் ஆகிய எல்லாமும் உள்ளன. ஆனால் நீங்கள் நான் ஒரு துறவி என்று சொல்லிக் கொள்கிறீர்கள். எல்லாவற்றையும் மறந்து விடுங்கள். மேலும் இந்த திருமணம் போலியான ஒன்று. உங்களுக்கு அந்த பெண்ணிடம் எந்த உறவும் கிடையாது. அவள் வறுமையில் கஷ்டத்தில் இருக்கிறாள். நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள். இருவரும் சேர்ந்து இருந்தால் உங்களுக்கு நல்லது.” என்றனர்.
      அவர், “அப்படியானால் சரி, அது சட்டபூர்வமானதாக இல்லாவிடில் சரி. அதில் எந்த சிரமமும் இல்லை. ஏனெனில் எனது குரு திருமணம் செய்து கொள்ளாதே என்று தான் கூறியுள்ளார். இதற்கு எதிராக எதுவுமே சொல்லவில்லை. நான் தான் திருமணம் செய்யவில்லையே. நான் அந்த பெண்ணுடன் வாழ்வதைப் பற்றி இந்த கிராமம் எதுவும் சொல்லாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு என்பதால் இது எனக்கு சரிதான். நான் அவளை எனது மனைவி என்று சொல்லிகொள்ளலாம், ஆனால் உண்மையில் நான் அவளது கணவனாக எதுவும் செய்யவேண்டியதில்லை, அவளும் எனது மனைவியாக உண்மையில் எதுவும் செய்யவேண்டியதில்லை.” என்று ஒத்துக் கொண்டார்.
      அவர் அந்த பெண்ணுடன் பேசினார். அவள், எனக்கு மறுபடியும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. ஒருமுறை செய்ததே போதும். ஆனால் நீங்களும் சிரமத்தில் இருக்கிறீர்கள், நானும் சிரமத்தில் இருக்கிறீர்கள். அதனால் ஒருவருக்கொருவர் ஒத்தாசை செய்து கொள்வோம். அந்த விதத்தில் இது எனக்கு சரிதான்.” என்றாள்.
       அதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இப்போது எல்லாமும் நன்றாக போய்க் கொண்டிருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போகும் சில நாட்களில் அவள் அவருக்கு சிசுரிஷை செய்தாள். மெதுமெதுவாக அவர் அந்த பெண்ணை விரும்ப ஆரம்பித்தார். ஒரு ஆண் ஆண்தான், ஒரு பெண் பெண்தான். பெண்ணும் அவரை விரும்ப ஆரம்பித்தாள். அவர்கள் இருவருமே தனிமையை உணர்ந்தனர். ஒரு குளிர்கால இரவில் இங்கே குளிராக இருக்கிறது நாம் ஏன் நெருங்கி இருக்கக் கூடாது என மற்றவர் கேட்கவேண்டும் என இருவருமே விரும்பினர்.
      இறுதியில் அந்த பெண், இங்கே மிகவும் குளிராக இருக்கிறது என்று கூறினாள். அந்த துறவியும் இங்கேயும் குளிராக இருக்கிறது என்றார்.
      அப்போது அந்த பெண், உங்களுக்கு தைரியம் இல்லைபோல தோன்றுகிறதே என்றாள்.
      அவர், அதுசரிதான். நீ இங்கே வா, எனக்கு தைரியம் இல்லை. நான் ஒரு துறவி, நீ ஒரு அனுபவமுள்ள பெண்மணி. நீ இங்கே வா. இருவரும் சேர்ந்திருந்தால் கதகதப்பாக இருக்கும். என்றார். கதகதப்பாகத்தானே இருக்கும்.
      இப்படித்தான் அவரது முழு துறவறமும் வீணாகிப்போனது. அவர் இறக்கும்போது அவர் தனது சீடர்களிடம் உங்களுடன் எந்த பூனையையும் தங்க விடாதீர்கள். என்று கூறி விட்டு இறந்தார்.
      வயதான மனிதன் அந்த தலைமை சீடரிடம்,“அதிலிருந்து உங்களது பாதையில் ஒவ்வொரு குருவும் தனது சீடர்களிடம் பூனையைப் பற்றி கவனமாக இருங்கள் என்று கூறுவது வழக்கமாகிப் போனது. பூனையைப் பற்றி கவனமாக இருப்பது மிகவும் கடினம். எப்படியோ பூனை உள்ளே வந்து விடும் – வாழ்க்கை மிகவும் விசித்திரமானது”. என்றார்.

Thursday, January 27, 2011

வேரும் இறக்கையும் ஆனந்தம்:

ஓரு முறை பணக்கார கெளரவமான குடும்பத்தை சேர்ந்த ஓரு இளைஞன், ஓரு ஜென் குருவிடம் வந்தான். அவன் எல்லாவற்றையும் அனுபவித்தவன். எல்லா ஆசைகளிலும் ஈடுபட்டவன். அவனிடம் போதுமான பணம் இருந்தது. எனவே பிரச்சனை இல்லை.
        ஆனால் பிறகு அவனுக்கு சலித்து விட்டது. காமத்துடன், பெண்களுடன், மதுவுடன் சலித்துவிட்டது. அவன் ஜென்குருவிடம் வந்து, எனக்கு உலகம் சலித்து போய்விட்டது. நான் யார் என்பதை நான் அறிந்து கொள்ள ஏதாவது வழி உள்ளதா என கேட்டான்.
        தெரடர்ந்து அந்த இளைஞன் ஆனால் நீங்கள் ஏதும் சொல்வதற்க்கு முன்னால் நான் என்னைப் பற்றி ஓன்றை சொல்லி விடுகிறேன். என்னால் முடிவெடுக்க இயலாது. என்னால் எதையும் நீண்டகாலம் செய்ய முடியாது. எனவே நீங்கள் எனக்கு ஏதாவது முறையை கொடுத்தால் அல்லது என்னை தியானிக்கும் படி கூறினால் நான் ஓரு சில நாட்கள் செய்யக் கூடும். அதன் பின் நான் உலகில் ஓன்றுமில்லை என நன்றாக தெரிந்திருந்தும், அங்கு துன்பம், மரணம் மட்டுமே காத்திருக்கிறது என நன்றாக தெரிந்திருந்தாலும், தப்பித்துக் கொள்வேன். இதுதான் என் மனதின் வழி. என்னால் தொடர்ந்து செய்யமுடியாது, என்னால் எந்த காரியத்திலும் ஆழ்ந்து ஈடுபட முடியாது, எனவே நீங்கள் எதையாவது தேர்ந்தெடுப்பதற்க்கு முன், இதனை நினைவில் கொள்ளுங்கள். எனக் கூறினான்.
        குரு, நீ ஆழமாக ஈடுபடாவிட்டால் பிறகு அது மிகவும் கடினம். ஏனெனில் நீ கடந்த காலத்தில் செய்த அனைத்தையும் அழிப்பதற்க்கு நீண்ட முயற்சி தேவைப்படும். நீ பின்புறமாக பயணிக்க வேண்டும். அது திரும்பி செல்லுதலாக இருக்கும். நீ புதிதாக, இளமையாக, பிறந்த கணத்திற்கு செல்ல வேண்டும். அந்த புத்துணர்வை மீண்டும் அடைய வேண்டும். அது முன்னால் செல்வதல்ல, நீ பின்னால் செல்ல வேண்டும். திரும்பவும் குழந்தையாக வேண்டும். ஆனால் நீ என்னால் எதிலும் ஆழமாக ஈடுபட முடியாது எனக் கூறினால் சில நாட்களுக்குள் நீ தப்பி சென்று விடுவாய். அது கஷ்டமாக இருக்கும். ஆனால் நான் உன்னை ஓரு கேள்வி கேட்கிறேன், எப்போதாவது நீ உன்னை முழுமையாக மறந்து போகும் அளவிற்க்கு ஆர்வத்துடன் ஆழமாக எதையாவது செய்ததுண்டா?  
        இளைஞன் சிந்தித்து பார்த்துவிட்டு, ஆமாம், சதுரங்கத்தில் மட்டுமே அது நடந்துள்ளது. சதுரங்க விளையாட்டில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. எனக்கு அது மிகவும் பிடிக்கும். அது மட்டுமே என்னை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. மற்றவை அனைத்தும் வீழ்ந்து விட்டன. சதுரங்கம் மட்டுமே இன்னும் என்னுடன் உள்ளது. அதன்மூலம் நான் எப்படியோ என்னுடைய நேரத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன், எனக் கூறினான்.
        குரு அப்படியென்றால் ஏதாவது செய்யலாம். நீ காத்திரு எனக் கூறிவிட்டு அவர் தன் உதவியாளனை அழைத்து பணிரெண்டு வருடங்களாக மடாலயத்தில் தியானம் செய்து கொண்டிருக்கும் ஓரு துறவியை சதுரங்க அட்டையோடு அழைத்து வரும்படி கூறினார். சதுரங்க அட்டை கொண்டு வரப் பட்டது. துறவி வந்தார். அவருக்கு சிறிது சதுரங்கம் தெரியும், ஆனால் பணிரெண்டு வருடங்களாக அவர் ஓரே அறையில் தியானித்துக் கொண்டிருந்தார். அவர் உலகம், சதுரங்கம் அனைத்தையும் மறந்து விட்டார்.
        குரு அவரை பார்த்து துறவியே கேள், இது ஓரு ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது. நீ இந்த இளைஞனால் தோற்கடிக்கப் பட்டால், இதோ இந்த வாளால் நான் உனது தலையை வெட்டி விடுவேன். ஏனெனில் நான் தியானதன்மையுள்ள ஓரு துறவி, பணிரெண்டு வருடங்களாக தியானித்துக் கொண்டிருக்கும் ஓருவர், ஓரு சாதாரண இளைஞனிடம் தோற்றுப்போவதை விரும்பமாட்டேன். ஆனால் நீ என்னுடைய கையால் இறந்தால் பிறகு நீ மிக உயர்ந்த சொர்க்கத்தை அடைவாய். எனவே கவலைப் படாதே, எனக் கூறினார்.  
        இளைஞன் சிறிது சங்கடமடைந்தான். பிறகு குரு அவனிடம் திரும்பி, இதோ பார், நீ சதுரங்கத்துள் மூழ்கி விடுவாய் என நீ கூறியுள்ளாய். எனவே இப்போது முழுமையாக முழ்கிவிடு – ஏனெனில் இது வாழ்வா சாவா என்பதற்க்கான கேள்வி. நீ தோற்றுவிட்டால் நான் உன்னுடைய தலையை வெட்டிவிடுவேன். நினைவில் கொள். ஆனால் நான் உனக்கு சொர்க்கத்தை பற்றி உறுதியளிக்க முடியாது. அந்த துறவி எப்படியிருந்தாலும் போய்விடுவார். ஆனால் நான் உனக்கு எந்த சொர்க்கத்தைப் பற்றியும் உறுதியளிக்க முடியாது. நீ இறந்தால் நரகம்தான்.- உடனடியாக நீ ஏழாவது நரகம் சென்று விடுவாய் எனக் கூறினார்.
        ஓரு நொடி இளைஞன் தப்பி செல்ல நினைத்தான். இது ஆபத்தான விளையாட்டாக இருக்கப் போகிறது, இதற்காக அவன் இங்கு வரவில்லை. ஆனால் பிறகு அது கெளரவ குறைச்சலாக தெரிந்தது. அவன் ஓரு சாமுராய், ஓரு வீரனின் மகன். மரணத்தின் காரணமாக தப்பிச் செல்வது அவன் இரத்தத்தில் இல்லை. எனவே அவன் சரி எனக் கூறினான்.     
        விளையாட்டு தொடங்கியது. இளைஞன் வேகமான காற்றினால் ஆடும் இலையைப் போல நடுங்கத் தொடங்கினான். முழு உடலும் நடுங்கியது. அவனுக்கு வியர்க்க, விறுவிறுக்க தொடங்கியது. அவனுக்கு தலைமுதல் பாதம் வரை வியர்த்துக் கொட்டியது. அது வாழ்வா, சாவா என்பதற்குரிய கேள்வியல்லவா?
        சிந்தனை நின்றுவிட்டது. ஏனெனில் இப்படிப் பட்ட ஓரு அவசரத்தில் நீ சிந்திக்க முடியாது. சிந்தனை ஓய்வு நேரத்திற்கு உரியது. எந்த பிரச்னையும் இல்லாத போது நீ சிந்திக்கலாம். உண்மையிலேயே ஓரு பிரச்னை எழும்போது சிந்தனை நின்றுவிடுகிறது. ஏனெனில் மனதிற்கு நேரம் தேவை. அபாயம் உள்ளபோது நேரம் இருப்பதில்லை. உடனடியாக நீ ஏதாவது செய்தாக வேண்டும்.
        ஓவ்வொரு நொடியும் இறப்பு அருகில் வந்து கொண்டிருக்கிறது. துறவி விளையாடத் தொடங்கினார். அவர் சாந்தமாகவும் அமைதியாகவும் காட்சியளித்தார். இளைஞன், தனது சாவு நிச்சயம் என நினைத்துக் கொண்டான். ஆனால் எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் அந்த நொடியில் முழுமையாக முழ்கி விட்டான். எண்ணங்கள் மறைந்த பிறகு, அவன் இறப்பு காத்திருக்கிறது என்பதையும் மறந்து விட்டான். ஏனெனில் மரணம் கூட ஓரு எண்ணமே. அவன் மரணத்தை மறந்து விட்டான். அவன் வாழ்க்கையை பற்றி மறந்துவிட்டான். அவன் விளையாட்டின் ஓரு பகுதியாகி விட்டான். ஆட்கொள்ளப் பட்டு அதில் முழுமையாக முழ்கி விட்டான்.  
         போக, போக மனம் முழுமையாக மறைய, மறைய அவன் அருமையாக விளையாடத் தொடங்கினான். அவன் அதுபோல இதுவரை விளையாடியதேயில்லை. ஆரம்பத்தில் துறவி வெற்றி பெற்றுக் கொண்டிருந்தார். ஆனால் இளைஞன் அதில் முழ்கிய ஓரு சில நிமிடங்களில் அருமையாக காய்களை நகர்த்த தொடங்கினான். துறவி தோற்றுப் போக ஆரம்பித்தார். அந்த நொடி மட்டுமே இருந்தது. நிகழ்காலம் மட்டுமே இருந்ததால் அங்கு எந்த பிரச்னையும் இல்லை. உடல் சரியாகி விட்டது, நடுக்கம் நின்றுவிட்டது. வியர்வை ஆவியாகி விட்டது. லேசானவனாக, இறக்கை போல எடையற்றவனாக உணர்ந்தான். வியர்வை கூட உதவியது. அவன் எடையற்றவனானான். அவனுடைய முழு உடலும் பறந்துவிடலாம் போல இருந்தது. அவனுடைய மனம் இல்லை. பார்வை தெளிவடைந்தது. மிகவும் தெளிவடைந்தது. அவனால் முன்னால் பார்க்க முடிந்தது. ஐந்து நகர்தல் முன்பே பார்க்க முடிந்தது. அவன் இதுவரை இவ்வளவு அழகாக விளையாடியதேயில்லை. மற்றவரின் விளையாட்டு குலையத் தொடங்கியது. ஓரு சில நிமிடங்களில் துறவி தோற்றுவிடுவார். அவனுடைய வெற்றி நிச்சயமாகி விட்டது.
        அப்போது திடீரென அவனுடைய கண்கள் தெளிவாக இருந்த போது, கண்ணாடி போல பார்வை கச்சிதமாக, ஆழமாக இருந்தபோது, அவன் அந்த துறவியை பார்த்தான். அவர் மிகவும் வெகுளித்தனமாய் இருந்தார். பணிரெண்டு வருட தியானம் அவரை மலர் போல ஆக்கியிருந்தது.
        பணிரெண்டு வருட எளிமை – அவர் மிகவும் தூய்மையடைந்திருந்தார். ஆசைகளற்று, எண்ணங்களற்று, இலக்கற்று, காரணமற்று இருந்தார். அவர் எவ்வளவு வெகுளியாக இருக்கமுடியுமோ அவ்வளவு வெகுளியாக இருந்தார்......ஓரு குழந்தை கூட அவ்வளவு வெகுளியாக இல்லை. அவருடைய அழகிய முகம், அவருடைய தெளிந்த வான்நீலம் கொண்ட கண்கள்.......இந்த இளைஞன் அவரிடம் கருணை கொண்டான். இப்போதோ, பிறகோ அவருடைய தலை வெட்டப்படும். அவன் இந்த கருணையை உணர்ந்த அந்த நொடியில், தெரியாத கதவுகள் திறந்தன. தெரியவே தெரியாத ஏதோ ஓன்று அவனுடைய இதயத்தை நிரப்பத் தொடங்கியது. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவனுடைய உள்ளிருப்பு முழுவதிலும் மலர்கள் கொட்டத் தொடங்கின. அவன் மிகவும் பரவசமாக உணர்ந்தான். அவன் இதுவரை இந்த பரவசத்தை, இந்த அழகை, இந்த ஆசீர்வாதத்தை அறிந்ததேயில்லை.
        பிறகு அவன் தெரிந்தே காய்களை தவறாக நகர்த்தினான். ஏனெனில் நான் இறந்தால் எதுவும் இழப்படையப் போவதில்லை. என்னிடம் மதிப்புக்குரியது ஏதுமில்லை. ஆனால் இந்த துறவி கொலை செய்யப் பட்டால் அழகான ஓன்று அழிந்துவிடும். ஆனால் நான் பயனற்றவன். துறவியை வெற்றி பெறச் செய்வதற்க்காக தெரிந்தே அவன் தவறாக காய்களை நகர்த்தத் தொடங்கினான். அந்த நொடியில் குரு மேசையை தலைகீழாக கவிழ்த்துவிட்டு சிரிக்கத் தொடங்கினார். அவர், இங்கு யாரும் தோற்கவில்லை. நீங்கள் இருவரும் வென்று விட்டீர்கள். எனக் கூறினார்
       இந்த துறவி ஏற்கனவே சொர்க்கத்தில் இருக்கிறார். அவர் செழிப்பாக இருக்கிறார். அவருடைய தலையை வெட்ட வேண்டிய தேவை இல்லை. “உன்னுடைய தலை வெட்டப் படும்” என குரு கூறிய போது அவர் கவலைப் படவே இல்லை. ஓரு எண்ணம் கூட அவர் மனதில் உதயமாகவே இல்லை. தேர்ந்தெடுக்கும் கேள்வியே இல்லை.- குரு இது இப்படித்தான் எனக் கூறினால் அது சரி. துறவி அவருடைய முழு இதயத்துடன் “சரி“ எனக் கூறிவிட்டார். அதனால்தான் வியர்வையோ, நடுக்கமோ இல்லை. துறவி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார். இறப்பு ஓரு பிரச்சனையே அல்ல.
        குரு நீ வெற்றி பெற்றுவிட்டாய். உன்னுடைய வெற்றி இந்த துறவியின் வெற்றியை விடவும் பெரியது. நான் இப்போது உன்னை சீடனாக்கி கொள்கிறேன். நீ இங்கு இருக்கலாம். விரைவில் நீ ஞானமடைவாய் எனக் கூறினார்.     
        இரண்டு அடிப்படையான விஷயங்களும் நடந்து விட்டன, தியானம் மற்றும் கருணை. இவை இரண்டையும் புத்தர் அடிப்படையானவை எனக் கூறியுள்ளார். பிரக்ஞை, கருணை. தியானம் மற்றும் கருணை.
        இளைஞன் எனக்கு விளக்கமளியுங்கள் எனக் கேட்டான். எனக்கு தெரியாத ஏதோ ஓன்று நடந்துள்ளது. நான் ஏற்கனவே நிலைமாற்றம் அடைந்துவிட்டேன். நான் ஓரு சில மணி நேரங்களுக்கு முன்னால் உங்களிடம் வந்த அதே இளைஞன் அல்ல. அந்த மனிதன் ஏற்கனவே இறந்துவிட்டான். ஏதோ ஓன்று நடந்தது. நீங்கள் அதிசயம் நிகழ்த்தி விட்டீர்கள். எனக் கூறினான்.
        குரு, இறப்பு மிக விரைவில் நேரிடக்கூடியதாக இருந்ததால், உன்னால் சிந்தனை செய்ய முடியவில்லை. எண்ணங்கள் நின்றுவிட்டன. இறப்பு மிகவும் பக்கத்தில் இருந்ததால் சிந்தனை இயலாத காரியமாகி விட்டது. இறப்பு மிக அருகில் இருந்ததால் உனக்கும் இறப்புக்கும் இடையே இடைவெளி இல்லை. எண்ணங்கள் நகர இடம் தேவை. இடம் இல்லை, எனவே சிந்தனை நின்றுவிட்டது. தியானம் தன்னிச்சையாக நிகழ்ந்தது. ஆனால் அது போதுமானதல்ல. ஏனெனில் அபாயத்தில் நடைபெறும் இந்த வகையான தியானம் தொலைந்து விடும். அபாயம் போனவுடன் தியானமும் போய்விடும். எனவே நான் சதுரங்க அட்டையை எறிய முடியாது. நான் காத்திருக்க வேண்டியிருந்தது. எனக் கூறினார்.
        உண்மையிலேயே தியானம் நிகழ்ந்தால் காரணம் என்னவாக இருந்தாலும் கருணை பின் தொடர வேண்டும். தியானத்தின் மலர்ச்சி கருணை. கருணை வரவில்லை எனில் உனது தியானம் ஏதோ ஓரு இடத்தில் தவறாகவே உள்ளது.
        பிறகு நான் உனது முகத்தை பார்த்தேன். நீ பரவசத்தில் திளைத்திருந்தாய். உன்னுடைய கண்கள் புத்தரைப் போல இருந்தன. நீ துறவியை பார்த்து இந்த துறவிக்காக என்னை தியாகம் செய்வது சிறந்தது. இந்த துறவி என்னை விட மதிப்பு வாய்ந்தவர். என உணர்ந்து நினைத்துக் கொண்டாய்.  
        இதுதான் கருணை. உன்னை விட மற்றவர் முக்கியமாக படும்போது, நீ மற்றவருக்காக உன்னை தியாகம் செய்யும் பொழுது அது அன்பு. நீ வழியாகவும், மற்றவர் குறிக்கோளாகவும் ஆகும்போது அது அன்பு. நீ குறிக்கோளாகவும், மற்றவர் வழியாகவும் ஆகும்போது அது காமஇச்சை. காமஇச்சை எப்போதும் தந்திரமானது. அன்பு எப்போதும் கருணை மயமானது.
        பிறகு நான் உனது கண்களில் கருணை எழுவதை கண்டேன். பிறகு நீ தோற்றுப் போவதற்க்காகவே காய்களை தவறாக நகர்த்தினாய். எனவே நீ கொல்லப்பட்டு இந்த துறவி காப்பாற்றப்படுவார். அந்த வினாடியில் நான் சதுரங்க அட்டையை கவிழ்த்தாக வேண்டும். நீ வெற்றி பெற்றுவிட்டாய். இப்போது நீ இங்கே இருக்கலாம். நான் உனக்கு தியானம் கருணை இரண்டையும் கற்றுக் கொடுத்துவிட்டேன். இப்போது இந்த வழித் தடங்களை பின் தொடர். அவை உனது தன்னிச்சையான நிலையாகட்டும். – சூழ்நிலையை பொறுத்தோ, எந்த அபாயத்தையும் சார்ந்தோ அல்ல. அவை உனது இருப்பின் ஓரு இயல்பாகட்டும்.
        இந்த கதையை உனக்குள் சுமந்து கொள். உனது இதயத்தில் சுமந்திரு. அது உனது இதயத்தின் துடிப்பாகட்டும். நீ தியானத்தில் வேர் கொண்டு கருணையின் இறக்கைகளை கொண்டிருப்பாய். அதனால்தான் நான் உனக்கு இரண்டு விஷயங்களை கொடுக்க விரும்புகிறேன் எனக் கூறுகிறேன். இந்த பூமியில் வேர்களும் அந்த சொர்க்கத்தில் இறக்கைகளும். தியானம் இந்த பூமி, இது இப்போது இங்கே, இந்த நொடியில் நீ உனது வேர்களைப் பரப்பலாம் அதனைச் செய். வேர்கள் இருக்குமானால் உனது இறக்கைகள் உயர்ந்த வானத்தை அடையும். கருணை என்பது வானம், தியானம் என்பது பூமி. தியானமும், கருணையும் சந்திக்கும்பொழுது ஓரு ஞானி பிறக்கிறார்.
        தியானத்திற்குள் மிக மிக ஆழமாக செல், அப்போதுதான் நீ கருணையில் மிக மிக உயரமாக செல்லமுடியும். எவ்வளவு ஆழமாக மரத்தின் வேர் இருக்கிறதோ, அந்த அளவிற்கு உயரமான சிகரங்களை மரம் அடையும். நீ மரத்தை பார்க்கமுடியும், நீ வேர்களை பார்க்க இயலாது, ஆனால் அவை எப்போதும் ஓரே விகிதத்திலேயே இருக்கும். மரம் வானத்தை அடைந்தால் வேர்கள் கண்டிப்பாக பூமியின் இறுதிவரைச் சென்றிருக்கும். விகிதாச்சாரம் ஓன்றே. உன்னுடைய தியானம் எவ்வளவு ஆழமாக உள்ளதோ, அதே ஆழத்தை உனது கருணையும் கொண்டிருக்கும். எனவே கருணைதான் அளவுகோல். உன்னிடம் கருணை இல்லை, ஆனால் நீ தியானத்தன்மையுடன் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருந்தால் பிறகு நீ உன்னையே ஏமாற்றிக்கொள்கிறாய். கருணை கண்டிப்பாக நடைபெறவேண்டும், ஏனெனில் அதுவே மரத்தின் மலர்தல்.
        தியானம் கருணையை அடைவதற்குரிய வழிமுறை. கருணைதான் வாழும்வழி. ..................................ஓஷோ

Monday, December 13, 2010

தன்ன‌ம்பிக்கையே ஆனந்தம்:

       ஒரு போலிச்சாமியார் இருந்தார். அவரிடம், ஒரு உண்மையான தேடலுள்ள சீடன் ஒருவன் வந்தான். "சுவாமி எனக்கு மந்திர உபதேசம் செய்யுங்கள்" என்று கேட்டான். "என் பெயர்தான் மந்திரம் அதனை உளமார உச்சரித்தாலே நன்மைகள் நடைபெறும்" என்றார் சாமியார்.
       கொஞ்சநாள் கழித்து நதிக்கரை பக்கமாகப் போனார் சாமியார். அங்கே ஒரே கூட்டம், ஒருவர் வந்து "சுவாமி உங்கள் சீடன் தண்ணீர் மீது நடக்கிறான்", என்றார். ஓடிப்போய் பார்த்தார் சாமியார்.
       சமீபத்தில் வந்த அதே சீடன் தான்! இவருக்கு ஆச்சரியம் தாங்க வில்லை. அவன் கரைக்கு வந்ததும் தனியாக அழைத்துப் போய், "அதன் ரகசியம் என்ன? எனக்குக் கற்றுத்தரக் கூடாதா?" என்றார் சாமியார்.
       சீடன் சொன்னான், "உங்கள் பெயரை உச்சரித்துக் கொண்டே நடந்தேன் சுவாமி! வேறேதும் ரகசியமில்லை" என்றான். அதற்குள் கூடியிருந்தவர்கள், "சீடனுக்கே இவ்வளவு சக்தி என்றால், உங்களுக்கு எவ்வளவு சக்தியிருக்கும்! நீங்களும் நதியில் நடந்து செல்லுங்கள் சுவாமி" என்று வற்புறுத்தி இழுத்துச் சென்றார்கள். தண்ணீரில் நடக்க முயன்று "தொப்" என்று விழுந்தார் சாமியார்.
       சீடனை அழைத்துச் சொன்னார், "ஐயா! நான் ஒரு போலி! இத்தனை காலம் உண்ணை இந்த ஊரை ஏமாற்றியிருந்தேன். நீ தண்ணீரில் நடக்கக் காரணம் நானல்ல! உன் நம்பிக்கை" என்றார்.
    
       ஒவ்வொரு மனிதனும் தன்னை முழுமையாக நம்பினால் புத்தனாய் மலர முடியும். மற்றவர்களை நம்புவது என்பது பழக்கத்தின் காரணமாகத்தான். உனக்கு உதவி நீதான்.
       ஒவ்வொரு சின்ன விஷயத்திலிருந்து, பெரிய சாதனைகள் வரையிலான அனைத்திற்குமே ஆனந்தமாய், அமைதியாய், தன்நம்பிக்கையுடன் இருந்தால் உங்கள் உள்சக்தியே உங்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும்.
       வெற்றி பெற விரும்புகிறவர்கள், முதலில் தன்னை முழுமையாக உணர்ந்து கொள்ள வேண்டும் என்பது காலங்காலமாய் வலியுறுத்தப்படும் கருத்து.
       "தன்னுடன் பொருந்திவாழ முடியாதவனால் பிறருடன் பொருந்தி வாழ முடியாது. தன்னை நேசிக்காதவனால் பிறரை நேசிக்க முடியாது. அத்தகைய மனிதர்கள் பிறரை ஏமாற்றுவதும் பிறரிடம் ஏமாறுவதும் தொடர்ந்து நடைபெறும். இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறவை எல்லாம் முகமூடிகளே தவிர முகங்களல்ல. தன்னை முகமூடிகளுக்குப் பின்னால் ஒளித்துக் கொள்கிற மனிதர்கள் தங்களையே தொலைத்து விடுவார்கள்"
       "வாழ்க்கை ஒரு கொண்டாட்டம்" என்ப‌தன் உட்பொருள், மனிதன் சோகங்களுக்குள்ளும், குற்ற உணர்வுகளுக்குள்ளும் அழுந்திவிடாமல், தன்னை உணர்ந்து, தன் இயல்பான தன்மையான ஆனந்தத்தோடு வாழ‌ வேண்டும் என்பதற்காகத்தான். ஆனந்தமாக வாழுங்கள்..........