ஆனந்தத்தைத் தேடும் இளைஞர்கள், மதுவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையிலோ தலைவலியும் சேர்ந்து வந்துவிடுகிறது.இங்கே, பக்க விளைவில்லாத போதைப் பொருள் பற்றி..... சிலவகை தியானங்கள் மது அருந்தியது போன்ற போதையைத் தருகின்றனவே?
பொதுவாக போதை தரும் பானங்களைக் குடித்தால், உடலும், மனமும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். தியானங்கள் தரும் போதை அப்படியல்ல. வெளியேயிருந்து எதையோ எடுத்து நீங்கள் அருந்துவதில்லை. உங்கள் உள்ளேயிருக்கும் உயிர்ச் சக்தியை நீங்கள் விரும்பி, அருந்துகிறீர்கள்.
தியானத்தினால் உள்ளே போதையாகவும் வெளியே உறுதியாகவும் இருக்க முடியும். இன்னும் சில தியானங்கள் மூலம் உள்ளுக்குள் உயிர்ச் சக்திக்கு முழு போதையும் வெளியே பாறை போன்ற அமைதியும்கூட ஏற்படுத்த முடியும். பாறை என்றால், உறைந்துபோன பாறை அல்ல. நினைத்த மாத்திரத்தில், உயிர்த்து எழுந்திருக்கக்கூடிய பாறை!
4 comments:
அருமையான விளக்கம்
பதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
நம்ம ஜனங்களுக்கு உடலுக்கு நல்லதை தரும் போதையை விட தீயதை தரும் போதைக்குத்தான் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்...
தியானம் அனைவரின் வாழ்க்கையையும் மாற்ற வல்லது...!
நன்றி! வாழ்க வளமுடன்!
Post a Comment