Saturday, October 12, 2013

இறந்தபின் கட்டை விரல்களைக் கட்டுவது ஏன்? ஆனந்தம்




ஒருவர் மரணமடைந்தவுடன், அந்த உடலை வடக்கு தெற்காக வைப்பது, கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டுவது போன்ற சடங்குகளை எதற்காகச் செய்கிறார்கள்?

      இறப்பு நேர்கிற நொடியில் இருந்து அல்லது இறப்பு நேர்வதற்கு முன்பிருந்தே ஒரு மனிதன் பயனுள்ள வகையில் இறந்து போவதற்கு என்னென்ன செய்யலாம் என்று இந்தக் கலாசாரத்தில் பல வழிகள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவருக்கு மரணம் நெருங்குகிற வினாடியில், அது குறித்து தெரிந்தவர்கள் ஒருவித சுலபத்துடன் மரணம் நிகழ வேண்டுமென்பதற்காக, அந்த மனிதரை வீட்டுக்கு வெளியே கொண்டுபோய், வடக்கு தெற்காக உடலைக் கிடத்துவார்கள். ஏனெனில், ஒரு கட்டடத்துக்குள் இருக்கிறபோது அவ்வளவு சுலபமாக உயிர் பிரியாது. தலை வடக்கு நோக்கி வைக்கப்படும்போது காந்த ஈர்ப்பு காரணமாக அந்த உயிர் உடலைவிட்டு எளிதாகப் பிரியும்.
      மரணம் நிகழ்ந்த பிறகுகூட பிராண சக்தி ஸ்தூல உடலை விட்டு முழுவதும் அகன்றுவிடுவதில்லை. எனவே, அந்த உயிர் உடலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. ஆனால், உடல் வடக்கு தெற்காக வைக்கப்பட்டு உயிர் பிரியும்போது அந்த உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. எனவே, அந்த உடலைச் சுற்றிக்கொண்டு இருப்பது பயன் தராது என்று அந்த உயிருக்குத் தெரிந்துவிடுகிறது. மற்ற சூழ்நிலைகளில் உயிரானது தொடர்ந்து உடலுக்குள் நுழைய முயற்சிக்கும். இந்தப் போராட்டம் அந்த இடத்தில் ஒருவிதமான சக்தியை ஏற்படுத்தும். இது இறந்துபோன மனிதருக்கும் நல்லதல்ல, வாழ்கிறவர்களுக்கும் நல்லதல்ல.
      இன்னொரு முக்கிய சடங்கு, இறந்த மனிதரின் இரண்டு கால் கட்டை விரல்களும் ஒன்றாகக் கட்டப்படுவது. பொதுவாகவே மரணம் நிகழ்கிறபோது கால்கள் அகலமாகத் திறந்துகொள்கின்றன. அந்த நிலையில் பின்புறத் துவாரம் திறந்திருக்கும். எனவே பிரிந்து போன உயிர் அந்த மூலாதாரம் வழியே உள்ளே நுழைய முயலும். அது அந்த உயிருக்கும் அந்தச் சூழலுக்கும் நல்லதல்ல.
      எனவே, கால் கட்டை விரல்களைக் கட்டுவதன் மூலம் மூலாதாரம் மூடப்படுகிறது. யோகக் கிரியைகள் செய்வதற்காக நீங்கள் கால்கட்டை விரல்களை ஒன்று சேர்க்கும்போது பின்புறத் துவாரம் இயல்பாகவே மூடிக்கொள்ளும். இதையேதான் இறந்தவர்களுக்கும் செய்கிறார்கள். எனவே உடலை கைக்கொள்ளலாம் என்கிற அந்த உயிரின் முயற்சி இப்போது பலிக்காது.
      மூலாதாரம் திறந்திருக்கிறபோது அந்த உடலின் உள்ளே நுழைய வேறு சில ஆவிகளும் முயலக்கூடும். மாந்திரீகப் பயிற்சி மேற்கொள்பவர்களும் அந்த உடலைப் பயன்படுத்தக்கூடும். அப்படி அந்த உடல் வேறு விதத்தில் பயன்படுத்தப்பட்டால், அது பிரிந்து சென்ற ஆன்மாவைப் பலவிதங்களில் துன்புறுத்துவதாக இருக்கும். அதனால்தான் ஒரு மனிதர் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும் அவரின் கால் கட்டைவிரல்கள் ஒன்று சேர்த்துக் கட்டப்படுகின்றன!

7 comments:

Anonymous said...

வணக்கம்
ஒருவர் இறந்த பின் ஏன் கட்டை விரல்களை கட்டுவது என்ற விடயத்தை உங்கள் பதிவின் மூலம் அறிந்தேன் பதிவு அருமை வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி said...

தெரியாத விசயம். தெரிந்து கொண்டேன்

Yaathoramani.blogspot.com said...

இதுவரை அறியாத அரிய தகவல்
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Balamanian said...

payanulla thagaval.

Balamanian

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவற்றை நீங்கள் எங்கள் இந்திய அடிப்படையை ஆதாரமாகக் கொண்ட சமூகத்தில் நிலவிய சடங்குகளை
வைத்து கூறியுள்ளீர்கள்.
உலகில் ஏனைய இடங்களில் இந்தச் சடங்கெதுவும் பின்பற்றப்படுபவையல்ல.
இவை நம் சமுதாயத்திடம் நிலவிய ஆதாரமற்ற மிகப் பழைய நம்பிக்கைகள்.
உலகில் பெருவிரலைக் கட்டாத இறந்த உடளுள் இதுவரை எத்தனை உயிர் திரும்பிப் போயுள்ளது.
இப்படியான நம்பிக்கைகளும் சடங்குகளும், நம் சமுதாயத்திலும், உலக சமுதாயத்திலும் நிறைய
உண்டு.
இன்னும் பல சொல்கிறேன்.
அன்றைய நாட்களில் மரணமடைந்தவரின் பிணத்தை வீட்டில் இருந்து எடுத்துச் செல்லும் போது, அந்த வீட்டின் காணியின் வெளிக் கதவு எவ்வளவு பெரிதாக இருந்தாலும், வேலியை வெட்டி புதிய வழி ஒன்றை ஆக்கியே பிணத்தைக் கொண்டு செல்வார்கள்.பின் அடைத்து விடுவார்கள். ஏனெனில் இறந்தவரின் ஆவி போன வழியால் திரும்பி வருமாம், வெட்டிய வேலியை அடைத்ததால் அது பாதை இல்லாமல் திரும்பி விடுமாம்.
அடுத்தது. பிணத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கையில் அரிசிபொரி, தேங்காய் சொட்டு தூவிச் செல்வார்கள். இது திரும்பிப் பசியில் வரும் ஆவி எடுத்து
சாப்பிட்டுப் பசியாற எனக் கூறுவார்கள்.
இப்படி இன்னும் பல ...
ஆனால் இன்று கொத்துக் கொத்தாக போரில் இறந்தவர்கள் ஆவிகள் எங்கே?



ஏனெனில் அந்த

கவியாழி said...

தெரியாத தகவலை அறிந்துகொண்டேன் நன்றி

Unknown said...

இன்று கொத்துக் கொத்தாக போரில் இறந்தவர்கள் ஆவிகள் எங்கே?

Post a Comment