Sunday, November 4, 2012

செல்போன்கள் என்ன செய்துவிடும்? ஆனந்தம்


     
      எலெக்ட்ரானிக் சாதனங்கள் உங்களைச் சுற்றியுள்ள விசயங்களில் இருந்து உங்களை தனிமைப் படுத்திவிடுகின்றன. . எப்போது பார்த்தாலும் நீங்கள் அந்த‌ எலெக்ட்ரானிக் இசையை உங்கள் காதுகளில் கேட்டுக் கொண்டே இருப்பீர்கள். இங்கு வீசும் தென்றலை, பறவையை, உள்ள உங்களைச் சுற்றி நடக்கும் விசயங்களை கவனிக்கத் தவறிவிடுவீர்கள். எலெக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் நீங்கள் வாழ்கையின் உயிர்ப்பினை கூட‌ முழுமையாகத் தொலைத்துவிட நேரிடலாம்.
      தொழில்நுட்பங்கள் எல்லாம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்க்காக உருவாக்கப்பட்டவை தான். ஆனால் நாம் துரதிருஷ்டவசமாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நம்மை நாமே மந்தப்படுத்திக் கொள்கிறோம். இபோதெல்லாம் எதையுமே உள்வாங்கிக்கொள்ளும் திறன் பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை. இயற்கையான சூழலில் உள்ளவர்கள் இயற்கையை ரசிக்கிறீர்களா? ரசித்துப்பாருங்கள். நீங்கள் சென்னைக்கோ அல்லது மும்பைக்கோ போகும் போதுதான் நீங்கள் எதை இழக்கிறீர்கள் என்பது தெரியவரும்.
      இயற்கையில் ரசிப்பதற்கு பல விசயங்கள் உங்களைச் சுற்றி இருக்கின்றன. நீங்கள் நன்றாக கவனித்துப் பார்த்தால் பல்லாயிரம் விசயங்கள் நடப்பதைப் பார்க்க முடியும். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்களை உங்கள் மடியிலோ, காதுகளில் சொருகியோ வைத்துக் கொண்டு இருந்தால். நீங்கள் சுற்றி நடப்பவை அனைத்தையும் தவற விட்டுக்விடுவீர்கள். . கம்ப்யூட்டரை பார்க்கும் போது உங்கள் கண்கள் கம்ப்யூட்டருடன் ஒட்டிக் கொண்டு விடுகின்றன.
      இந்த உலகத்தைப் பாருங்கள்! அதைக் கவனியுங்கள்! இயற்கையைப் பார்ப்பதும், அதைக் கவனிப்பதும்,அதை இன்னும் கூர்மையாக கவனிப்பது எப்படி என்றும் கற்றுக் கொள்வது மிக முக்கியம்.
      எலெக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துபவர்களால் காட்டில் ஒரு நாள்கூட உயிர் பிழைத்திருப்பது மிகக்கஷ்டம். ஆனால் நீங்கள் பக்கத்தில் உள்ள ஏதேனும் கிரமத்திற்கு சென்று பாருங்கள். அங்கே உள்ள மிக வயதான கிராமவாசி கூட உங்கள் கண்களால் நீங்கள் பார்க்க முடியாத விசயங்களைக் கூடப் பார்பார். உங்கள் காதுகளால் நீங்கள் கேட்கமுடியததைக் கூட கேட்பார். அவருடைய புலன்கள் அத்தனை கூர்மையாக உள்ளன.
      இப்போது நீங்கள் தெரிந்துகொள்வது (perception) அனைத்தும் ஐந்து புலன்களின் மூலம் தான் நடக்கிறது. அவற்றை மந்தமாக்கிக் கொள்ளாதீர்கள். எலெக்ட்ரானிக் பொருட்களை அதிகம் பயன் படுத்தினால், அது பாதிப்பை ஏற்படுத்தும்  என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் அலைபேசியை பயன்படுத்தினால் மூளையில் கட்டி ஏற்படலாம் என்று உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது.
      அலைபேசிகளின் அதிக பயன்பாடு குருவிகளின் இனத்தைக் கொல்ல‌ முடியும் என்றால் அது உங்களுக்கு மட்டும் பாதிப்பு ஏற்ப்படுத்தாமல் இருக்க முடியுமா? ஆனால் அலைபேசிகள் இல்லாமல் இப்போது மனிதனால் வாழமுடியாது. நாவீன வாழ்க்கை அப்படி ஆகிவிட்டது. ஆனால் அதன் பயன்பாட்டைக் குறைக்க முடியுமா? என்றால் முடியும்!
      எனவே உங்களின் எலெக்ட்ரானிக் பொருட்களால் உங்களின் புலன் திறன்களை மந்தப்படுத்திக் கொள்ளாமல், உங்களின் உள்வாங்கும் திறனுக்கு நீங்களே தடை விதித்துக்கொள்ளாமல் எலெக்ட்ரானிக் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்து, மேம்பட்ட திறனுடன் வாழவேண்டும் என்பது தான் எங்களின் விருப்பம்!
.................................................வாழ்க வளமுடன்!.......................................................................

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை... எதுவும் அளவோடு இருந்தால் நலமே... நல்லதொரு கருத்துள்ள பகிர்வுக்கு நன்றி...

ARUNMOZHI DEVAN said...

தொழில்நுட்பங்கள் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவை தான். ஆனால் நாம் துரதிருஷ்டவசமாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நம்மை நாமே மந்தப்படுத்திக் கொள்கிறோம். இபோதெல்லாம் எதையுமே உள்வாங்கிக்கொள்ளும் திறன் பெரும்பாலான மனிதர்களுக்கு இருப்பதில்லை. It is a True Statement.

Post a Comment